Saturday, February 11, 2012

மனிதனின் உருவ அமைப்பிற்கும், நடராஜர் சன்னதிக்கும் ஆன ஒற்று



மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை இது. பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது. கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான "சிவாயநம' என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6சாஸ்திரங்கள், பஞ்ச (5)பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.


சிதம்பரத்தில் இருப்பதை "நடராஜர் கோயில்' என்று நாம் சொன்னாலும், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் <உள்ள ஆதிமூலநாதரே ஆவார். பதஞ்சலி, வியாக்ர பாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். இத்தலம் வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். வேண்டுதலை ஏற்ற சிவன், "திரிசகஸ்ர முனீஸ்வரர்கள்' என்போரை கயிலையிலிருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தைப்பூசம் நட்சத்திரத்தில், உச்சிப்பொழுதில் (பகல் 12 மணி) நாட்டிய தரிசனம் தந்தார். திரிசகஸ்ர முனிவர்களையே "தில்லை மூவாயிரவர்' என்பர்.

1 comment:

  1. 4 வேதத்தில் ஒன்றான யசுரில் தான் (32:3) உருவ வழிபாடு கூடாது என்று உள்ளது இதை நாம் எப்போ பின்பற்ற போறோம்

    ReplyDelete