Tuesday, April 10, 2012

ஷட்திலா ஏகாதசி-


ஷட்திலா ஏகாதசி- 

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியையே ஷட்திலா ஏகாதசி என்பர். திருமாலை வழிபடுவதுதான் இந்த நாளின் முக்கியமான நோக்கம். இந்த நாளில் விரதம் மேற்கொள்வோர் எள்ளை ஐந்து விதமாகப் பயன்படுத்துவார்கள்.

✷ எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொண்டு நீராடுவது.

✷ எள் தானம் செய்வது.

✷ எள்ளால் ஹோமம் செய்வது.

✷ எள்ளுடன் நீரும் சேர்த்து தானம் செய்வது.

✷ எள் அன்னம் உண்பது.

பல தர்மங்கள் செய்த பெண் ணொருத்தி இறந்தபின் சொர்க்கம் சென்றாள். சொர்க்கத்தின் எல்லா வசதிகளும் அவளுக்குக் கிடைத் தாலும் உணவு மட்டும் கிடைக்க வில்லை. ஏனெனில் பூவுலகில் இருக் கும்போது அவள் அன்னதானம் செய்யவில்லை. பின்னர் ஒரு துறவி யின் ஆலோசனைப்படி, தேவலோகப் பெண்ணொருத்தியின் ஷட்திலா ஏகாதசி விரதப் பலனை இவள் பெற்றாள். அதன்பின் அவளுக்கு உணவு கிடைத்தது. எனவே, இந்த விரதத்தைக் கடைப்பிடிப்போருக்கு பசி என்னும் வேதனையே உண்டாகாது.

No comments:

Post a Comment