Wednesday, April 18, 2012

கடவுளையும் விலைக்கு வாங்க மனிதன் முயற்சிக்கிறான்.

ஒரு அரசாங்க அலுவலகத்துக்கு ஏதாவது வேலையாகப் போனால், ஊழியர்கள் அவரவர் தகுதிக்கேற்ப லஞ்சம் கேட்கிறார்கள் இல்லையா! அதே, மனநிலையில் தான், கடவுளையும் விலைக்கு வாங்க மனிதன் முயற்சிக்கிறான்.
ஒருவன் ஒரு வைரக்கல்லுடன் காய்கறி கடைக்கு வந்தான்.
""ஐயா! இந்தக் கல்லுக்கு எவ்வளவு காய்கறி தருவீர்கள்?'' என்றான். வியாபாரி, ""பதினைந்து கிலோ தருகிறேன்'' என்றார்.
அவன் ஜவுளிக்கடைக்கு போனான்.
""வேண்டுமானால் ஐநூறு ரூபாய்க்கு துணி எடுத்துக் கொள்,'' என்றார்கள்.
அடுத்து, நகைக்கடை ஒன்றில் நுழைந்து விலை கேட்டான்.
""ஆகா! இப்படி ஒரு வைரக்கல்லை பார்த்ததே இல்லையே! ஐந்து லட்சம் தருகிறோம்,'' என்றனர்.
அவரவர் பார்வையில், வைரக்கல்லின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. இப்படித்தான் மனிதனும், இறைவனைப் பார்க்கிறான்.
ஒருவன், கடவுளிடம் எனக்கு, கார் வாங்கி கொடு, அப்படி செஞ்சா...அடுத்த வாரம் 1001 உண்டியலில் போடுகிறேன்'' என்று அவரை 1001 ரூபாய்க்கு விலை பேசுகிறான்.
இன்னொருவன்,""ஏதோ தேவலை! பத்து கோரிக்கையை இந்த மாசம் வச்சிட்டு வந்தா, ஒன்றையாவது நிறைவேற்றி வைக்கிறார். இந்தக் கடவுள் தேவலே! சரி...சரி... கும்பாபிஷேகத்துக்கு 10001 நன்கொடைதர்றேன்''என்கிறான்.
எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல், ""அப்பனே! பிறவிக்கணக்கை சீக்கிரம் தீர்த்து வை. என்னையே தருகிறேன்,''என்று உயர்தர பக்தி செலுத்துகிறான்'' .எல்@லாரையும் பார்த்து சிரித்துக் கொண்டு, "அவன்' ஏதுமறியாதவன் போல், உலகப் பந்தை சுழற்றிக் கொண்டிருக்கிறான். 

No comments:

Post a Comment