Tuesday, September 18, 2012

எனக்குப் பிடித்த திருமந்திரங்கள்

திரு மந்திரம். அன்பும் சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே தெளிவு குருவின் திருமேனி காண்டல், தெளிவு குருவின் திருநாமம் செப்பல், தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல், தெளிவு குரு உருச் சிந்தித்தல்தானே! சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிட தீவினை மாளும் சிவ சிவ என்றிட தேவரும் ஆவர் சிவ சிவ என்ன சிவகதி தானே" நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பம் சாத்தியே சுற்றிவந்து மொணமொணவென்று சொல்லும் மந்திரமேதடா? நட்டகல்லு பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில் சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான் பற்றிப்பற்றத் தலைப்படும் தானே யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை யாவார்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவாரக்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே. பொருள் : ஆன்மாவாகிய தன்னை அறிவுரு என்று அறிந்தால் கருவி கரணங்களோடு பொருந்தி மயங்க வேண்டிய கேடு வராது, தான் அறிவுரு என்பதை அறியாமல் ஆன்மா தனது அஞ்ஞானத்தால் கருவி கரணங்களோடு பொருந்திய பிறவியில் பட்டு உழல்கிறது. கருவி கரணமின்றித் தானே எல்லாவற்றையும் அறியவல்ல ஒளிவடிவு என்ற அறிவை ஞான சாதனத்தால் அறிந்தபின் தன்னை உலகோர் வணங்கும்படியான சிவ சொரூபமாகத்தான் இருந்தான். உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே 33. சுத்தா சுத்தம் 2551. ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூச மாம்இடம் ஆரும் அறிகிலார் ஆசூச மாம்இடம் ஆரும் அறிந்தபின் ஆசூச மானிடம் ஆசூச மாமே. பொருள் : ஆசூசமாகிய தீட்டுத் தீட்டு என்று செப்புவர் அதன் உண்மை உயர்வறியா எண்மையர். அத்தீட்டு உண்டாகும் இடத்தின் ஒண்மையினை உணரார். அது கருப்பையின்கண் உண்டாவதாகும். அதனை அறிந்தபின் அதுவே திருவடிப்பேற்றுக்கு நேர்வாயிலாக வகுத்த மானிடப் பிறவியின் உடம்புக்குக் காரணமுதலாகும் என்னும் உண்மை புலனாகும். (ஆசூசம் - தீண்டல், சூதகம். ஆமிடம் - உண்டாகும் இடம்.) 2552. ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்கு ஆசூசம் இல்லை அரனைஅர்ச் சிப்பவர்க்கு ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போருக்கு ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே. பொருள் : தத்துவ ஞானத்தால் தன்னை உணர்ந்தவருக்கு அசுத்தம் என்பது இல்லை. எல்லாத் தத்துவங்களையும் சங்கரிக்கும் அரனை வணங்குவார்க்கு அசுத்தம் இல்லை. மூலாக்கினியைத் தூண்டி ஒளிபெறச் செய்யும் அக்கினிகாரியம் செய்வார்க்கும் அசுத்தம் இல்லை. மேலான வேதத்தை உணர்ந்த ஞானிக்கு அசுத்தம் என்பதே இல்லை

No comments:

Post a Comment