Tuesday, December 25, 2012

வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது

வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது. இண்டர்நெட்டிலும் பரமபதம் இருப்பது நம் சம்பிரதாயத்தின் தனிச்சிறப்பு. விளையாட்டின் ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அடிப்பகுதிக்கே வரநேரிடும்.ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடுவர். பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் வலியுறுத்தும் ஆன்மிக கேம் இது!

ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. அந்த நாளில் நாமும் நம்முடைய கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று- ஆக இந்தப் பதினொன்றையும் பகவானோடு ஒன்றச் செய்ய வேண்டும். இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பது தான் இந்த ஏகாதசி விரதத்தின் உட்பொருள்.

அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும்! சரணாகதி மனோபாவத்தோடு, ஏகாதசி விரதத்தை மேற்கொள்வோம். பூஜைகளைச் செய்வோம். அந்த பரந்தாமன் நம் எண்ணங்கள் அனைத்தையும் நலமுடன் நிறைவேற்றுவான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

திருப்பாவை விமானம்..........

மார்கழி நோன்பிருந்த ஆண்டாள், திருப்பாவை எனும் பிரபந்தம் பாடினாள். 30 பாசுரங்கள் உடையது இது. கண்ணனை தரிசிக்க தோழியர்களை எழுப்புவது போன்ற பொருளில் இப்பாசுரம் பாடப்பட்டிருக்கும். தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஸ்ரீவில்லிப்புதூர் கோவில், ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன. இதற்கு, `திருப்பாவை விமானம்' என்றே பெயர். ஆண்டாளை தரிசிப்பவர்கள் இந்த விமானத்தை அவசியம் தரிசிக்க வேண்டும்.

முக்கோடி ஏகாதசி......

ஸ்ரீமந் நாராயணன் அசுர சம்ஹாரத்திற்கு வேண்டி பூலோகத்திற்கு மூன்று கோடி தேவர்களுடன் எழுந்தருளினார். இது காரணம் பற்றியே, வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்று பெயர் ஏற்பட்டது

No comments:

Post a Comment