Saturday, December 22, 2012

உதவும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும், ஏழைகளுக்கு வாரி வழங்க வேண்டும்'

ஒரு கிராமத்தில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார் துறவி. "உதவும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும், ஏழைகளுக்கு வாரி வழங்க வேண்டும்' என்றெல்லாம் போதனை செய்தார்.
அவ்வூரில் கஞ்சப்பிரபு ஒருவர் வசித்தார். ஏழைகள் என்றால் அவருக்கு வேப்பங்காய். ஆனால், அவருக்கு துறவியை மிகவும் பிடித்து விட்டது. அவருக்கு ஏதாவது காணிக்கை கொடுத்தாக வேண்டுமென்ற ஆசையுடன் ஆயிரம் ரூபாய் கட்டுடன் வந்தார்.
""சுவாமி! இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
""சரி...அப்படியானால், இங்கே அமர்ந்திருக்கும் நூறு ஏழைகளுக்கு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடு,'' என உத்தரவிட்டார் துறவி.
""ஐயையோ! அதுமட்டும் மாட்டேன்! இதை இந்தப் பிச்øŒக்கார ஜென்மங்களுக்காகவா கொண்டு வந்தேன்! இவர்கள் என்னிடம் கைகட்டி சேவகம் செய்பவர்கள். இவர்களுக்கு கொடுக்க மாட்டேன்,'' என அடித்துச் சொல்லிவிட்டார்.
துறவி அவரிடம்,""நீ படுபாவி! உன் பணத்தை கையால் தொடுவதும் பாவம், ஏழைகளுக்கு உதவாத உன் பணம் உனக்கும் உதவாமல் போகட்டும்,'' என சாபமிட்டார்.சில ஆண்டுகள் கழித்து அந்த சாபம் பலித்தே விட்டது.
கொள்ளைக்காரர்கள் சிலர் பிரபுவின் வீட்டுக்குள் புகுந்து அவரது கை, காலை வெட்டி விட்டு பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டனர். எல்லாம் இழந்து, அந்த கிராமத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment