Friday, December 28, 2012

லட்சுமிதேவி எங்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வருவாள்.

ஒருசமயம் லட்சுமிதேவி எந்த வீட்டிலும் வாசம் செய்யலாம் என்று பார்க்க வந்தாள். ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருந்தது. மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து அந்த இல்லத்தரசி ஸ்லோகங்களாக சொல்லிக் கொண்டு இருந்தாள். வாசலில் நின்ற வரலட்சுமியை பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள்.

மனையை போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அந்த சுமங்கலி இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடந்தது. அதாவது லட்சுமிதேவி எங்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வருவாள்.

No comments:

Post a Comment