Friday, December 21, 2012

பரிகார பூஜை செய்தால் துன்பத்தை அடியோடு தவிர்க்க முடியுமா?

பரிகார பூஜை செய்தால் துன்பத்தை அடியோடு தவிர்க்க முடியுமா?
ஒருவருக்குக் கடுமையான தலைவலி வந்துவிட்டது. சாதாரண டாக்டர்களை நம்பாமல் மிகப்பெரிய மருத்துவமனையில் உள்ள டாக்டரிடம் காண்பித்தார். அவரும் மருந்து மாத்திரை கொடுத்தார். தலைவலி தீருமோ, தீராதோ என்ற அவநம்பிக்கையுடன் மருந்தைச் சாப்பிட்டதால் தலைவலி தீரவில்லை. பிறகு இதைப்போலவே நம்பிக்கையில்லாமல் பல டாக்டர்களிடமும் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. கடைசியாக அமெரிக்காவில் வைத்தியம் செய்து கொள்ள முடிவெடுத்தார். அங்கு ஒரு டாக்டரைப் பார்த்து தன் கதையை ஆரம்பத்திலிருந்து எடுத்துச் சொன்னார். பலவகையான டெஸ்டுகளை செய்தபின் ஒரு மருந்துப்பொடியைக் கொடுத்தார். அவரும் அதை சாப்பிட்டார். சிறிது நேரத்திலேயே குணம் தெரிந்தது. ""தீராத என் தலைவலியை ஒரு பொட்டல மருந்திலேயே குணப்படுத்தி விட்டீர்களே!'' என்று ஆச்சரியம் கொண்டார். டாக்டர் அவரிடம்,""உங்கள் நம்பிக்கை குறைவினால் தான் தலைவலி தொடர்ந்தது. இப்போது தான் நம்பிக்கையுடன் சாப்பிட்டதும் தலைவலி தீர்ந்து விட்டது,'' என்றார். இந்த கதைபோலத் தான் உள்ளது உங்களின் கேள்வி. எதையும் நம்பிக்கையில்லாமல் செய்யாதீர்கள். நம்பிக்கை முழுமையாக இருந்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

* சாலையோர கோயில்களுக்கு காணிக்கையை வாகனத்தில் அமர்ந்தபடியே வீசிச் செல்வது சரிதானா
வண்டியை நிறுத்தி சற்றுநேரம் இறங்கி அந்த தெய்வத்தை வணங்கிவிட்டு, உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு சென்றால், தெய்வத்திற்கு மரியாதை செய்வதாக இருக்கும். சில நேரங்களில், உங்கள் காணிக்கை அங்கு நிற்கும் வேறு யாரோ சிலர் கையில் சிக்கவும் வாய்ப்புண்டு. என்ன அவசரம்! இறங்கியே காணிக்கை செலுத்தி விட்டு செல்லுங்கள்.

* கோயில் குளத்தில் உப்பு மிளகு இடுவதன் நோக்கம் என்ன?
உடலில் பருக்கள், கட்டிகள், தீப்புண்கள், தழும்பு ஏற்பட்டால் கோயிலுக்கு உப்பு, மிளகு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ள வேண்டும். இறைவன் அருளால் அவை மறைந்துவிடும். நேர்த்திக்கடனாகிய உப்பு மிளகை வாங்கி கோயிலில் செலுத்த வேண்டும். குளத்தில் போடக்கூடாது. உப்பைப் போடுவதால் குளத்து நீர் மாசுபடுவதுடன் நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும். குளத்துக்குள் பாலிதீன் பேப்பர்களும் மிதக்கும்.

*


No comments:

Post a Comment