Thursday, January 31, 2013

வாஸ்து தோஷம் விலக சில வழிகள்

வாஸ்து படம் ஒன்றை வாங்கி வீட்டின் சுவற்றில் மாட்டி வைக்கலாம்.

* மணி பிளானட் அல்லது மூங்கில் செடியை ஹாலில் வைக்க வேண்டும் அல்லது சிரிக்கின்ற குபேர பொம்மையை வீட்டின் ஹாலில் உள்ள டிவியின் மீது வைக்க வேண்டும்.


* ஓர் டம்ளரில் தண்ணீர் ஊற்றி அதில் ஓர் எலுமிச்சம் பழம் போட்டு வைத்தால் திருஷ்டி தோஷம் விலகும்.( மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை கண்டிப்பாக மாற்றி விட வேண்டும்

கிரக தோஷம் நீங்க

1. கந்தரலங்காரம் (38-வது திருப்பாடல்)


நானென் செயும் வினை தானென் செயுமெனை நாடி வந்த

கோளென் செயுங் கொடுங் கூற்றென் செயுங்கும் ரேசரிரு

தாளுஞ் சிலம்பஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகர்

தோளுங் கடம்பு மெனக்குமுன்னேவந்து தோன்றிடினே.


- இந்த பாடல் கிரக தோஷம் நீங்க, கோளாறு பதிகம் போன்று பயன் அளிக்க வல்லது.

சகட தோஷம் விலக

சந்திரனுக்கு 6-8-12-ல் குருவீற்றிருக்கப் பெற்ற ஜாதகர்களுக்கு சகடயோகம் உண்டாகிறது. இவர்கள் நிலையான வாழ்வு வாழ்வதில்லை. மேடு பள்ளமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.


இத்தகைய ஜாதக அமைப்புப் பெற்றவர்கள் ராஜராஜேஸ்வரி யந்திரம் வாங்கி பூஜை செய்யலாம்.அல்லது யானைமுடி மோதிரம் அணியலாம். இதனால் இத்தோஷம் நீங்கி வளம் பெறலாம்.

மாங்கல்ய தோஷம் நீங்க

வன்னி மரத்தடியில் அமர்ந்துள்ள விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களன்று வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் நீங்கி உடனே திருமணம் நிறைவேறும்.

பாலாரிஷ்ட தோஷ பரிகாரம்

பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எண்ண வரும் 6,8,12-ம் இடங்களில் குரு கிரகம் நின்றாலும் (அல்லது) சூரியன் (ஆத்மகாரகன்),சந்திரன் (உடல் காரகன்) நின்றாலும் 8-ம் இடமான ஆயுள் தானத்தில் ஆயுள் காரகன் சனி நின்றாலும் அது பாலாரிஷ்ட தோஷமாகும். இந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகளே பிறந்த காலத்திலிருந்து ஒன்று (அல்லது) இரண்டு ஆண்டுகள் வரை தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.


பரிகாரம்...


இந்த தோஷம் நீங்க மிருத்யுஞ் ஹோமம் செய்யலாம். (அல்லது) பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு இயற்றலாம். (அல்லது) ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டு வரலாம். விஷ்ணு சகஸ்வரநாமம் லலிதா நாமம் பாராயணம் செய்து வரலாம். இந்த மந்திரத்தை வழிபட்டு விபூதியை குழந்தையின் நெற்றியில் பூசலாம்.

கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம்

கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கும் வருவார்கள்.


ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும். அத்தகைய கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.

பாவங்கள் போக்கும் விபூதி

விபூதியை எந்த இடத்தில் பூசினால் என்ன பாவம் விலகும் என்று திருமுருக கிருபானந்த வாரியார் தெரிவித்துள்ளார், அதன் படி திருநீறு பூசுவதால் கண்டத்திற்கு மேல் செய்த பாவம் நீங்கும். நெற்றியில் பூசுவதால் பிரம்மனால் எழுதப்பட்ட கெட்ட எழுத்துகளின் தோஷம் நீங்கும்.


கண்டத்தில் பூசுவதால் விலக்கப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் குற்றம் நீங்கும், நாபியில் பூசுவதால் பீஜத்தினால் செய்த தோஷம் நீங்கும், முழந்தாள்களில் பூசுவதால் கால்களால் செய்த பாவம் நீங்கும் என்று கூறி உள்ளார்.

பிறவிப்பிணியை போக்கும் மந்திரம்

பிறவிப்பெருங்கடலை நீந்தி இறைவனின் திருவடியை சரண் அடைய வேண்டும் என்பது தான் மனித வாழ்க்கையின் லட்சியமாகும். இறைவனுடன் நாம் ஒன்று கலக்க வேண்டும் என்றால் அதற்கு உதவ ஒரு மந்திரம் உள்ளது. அந்த மந்திரம் தான் `சிவாயநம'. இது சிவ நாமங்களில் உயர்ந்தது.

பிறவிப்பிணியைத் தீர்க்கும் அருமருந்து இந்த மந்திரம். இந்த மந்திரத்தின் மகிமையை விளக்கும் கதை ஒன்று உள்ளது. அதை அறிந்து கொள்வோமா... நாரதர் தனது தந்தையான பிரம்மாவிடம் சென்று `தந்தையே, சிவநாமங்களில் உயர்ந்தது `சிவாயநம' என்று கூறுகிறார்களே. இதன் பொருள் என்ன என்பதை எனக்கு விளக்கி கூறுங்கள்' என்றார்.

பிரம்மா நாரதரிடம், `நாரதா, அதோ அங்கே வண்டு ஒன்று அமர்ந்துள்ளது. அதனிடம் போய் உன் சந்தேகத்தைக்கேள்', என்றார். நாரதரும் அதன்படியே அந்த வண்டு அருகில் சென்று தனது சந்தேகத்தை கேட்டார். நாரதர் இதைக்கேட்டதும், அந்த வண்டு சுருண்டு விழுந்து இறந்தது.

இதைப்பார்த்த நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிச்சென்று, `தந்தையே, சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,' என்றார். `நாரதா, நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ, அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,' என்று சிரித்தபடியே கூறினார் பிரம்மா.

இதன்படி நாரதரும் ஆந்தையிடம் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார். பிரம்மாவிடம், `என்ன இது சோதனை' என்று கேட்டார். பிரம்மா, `நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ, அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும், என்றார். `தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம்,' என்று பயந்து நடுங்கினார் நாரதர்.

பயம் வேண்டாம்' என்று பிரம்மா தைரியம் கூறி நாரதரை அனுப்பி வைத்தார். நாரதரும், கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அப்போது தான் பிறந்த கன்று இதைக்கேட்ட உடனே உயிரை விட்டது. நாரதர் அதிர்ச்சியில் உறைந்து போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது. பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி என்றால் இதைக்கேட்கும் மனிதனின் கதி என்ன ஆகும், என நினைத்தார் நாரதர்.

அப்போது, அங்கு வந்த பிரம்மா அவரிடம், `கன்றும் இறந்து விட்டதா. சரி பரவாயில்லை. இந்நாட்டு மன்னனுக்கு இப்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,' என்றார். இதைக்கேட்ட நாரதர் அலறிவிட்டார், பிரம்ம தேவா என்ன இது? அந்தக்குழந்தைக்கு எதுவும் ஆபத்து வந்தால் மன்னன் என்னைக் கொன்றே விடுவான், என்றார் நாரதர். இருந்தாலும் பிரம்மா விடவில்லை. இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும், என்றார்.

நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார். அந்தக் குழந்தை பேசியது. `நாரதரே, இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன். பிறவியில் உயர்ந்த மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இதுவே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்' என்று குழந்தை கூறியது.

அந்தக்குழந்தை மேலும் கூறியது, `சிவாயநம என்பதை `சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். சி என்றால் சிவம்; வ என்றால் திருவருள், ய என்றால் ஆன்மா, ந என்றால் திரோதமலம், ம என்றால் ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள்.

நான் என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து, சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சிவாயநம' என்று உள்ளம் உருக கூறினால், இந்த பிறவியில் இருந்து அவர் விடுபடுவார் என்றது குழந்தை.

இதைக்கேட்டு நாரதரும் சந்தேகம் தெளிந்தார். பிறவிப்பிணியில் இருந்து விடுபட `சிவாயநம' என்போம், இறைவனின் திருவடிகளை அடைவோம்.

தோஷம் நிறைந்த சந்தியா காலத்தில் தவிர்க்க வேண்டியவை

பகலும், இரவும் கலக்கும் நேரம் சந்தியாகாலம் எனப்படும். சூரிய அஸ்தமன நேரம், தோஷம் நிறைந்த சமயமாக இது கருதப்படுகிறது. அசுரர், பூதம், பேய், பிசாசு போன்ற தீய சக்திகள் வலிமை பெரும் நேரமிது. ஆகவே இவ்வேளையில் உண்பதையும், உறங்குவதையும் தவிர்க்கவேண்டும்.


தோஷம் நிறைந்த இந்த நேரத்தில் உணவு உண்டால் அந்த உணவு விஷமாக மாறும். எனவே இந்த நேரத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது

கண் திருஷ்டிக்குப் பரிகாரம்

கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அதனால் அந்தத் தெருக்காரர்கள் எல்லாம் போகும் போதெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள்.


அப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம். சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும்.


அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம்.


இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது. சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள்.


இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.


ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.


வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது

நாகதோஷம்

ஆண்,பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12-வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.

லக்னம் அல்லது சந்திரனுக்கு 2-ல் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம். இதனால் கணவன்-மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து உண்டாகலாம்.

லக்னம் அல்லது சந்திரனுக்கு 4-ல் ராகு அல்லது கேது உள்ளதும் நாகதோஷம். இதனால் இருதய சம்பந்தமான நோய், சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு நோய், குடும்ப வாழ்க்கையில் அதிருப்தி, முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது.

லக்னம் அல்லது சந்திரனுக்கு 5-ல் ராகு அல்லது கேது இருந்தால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும். ஆனால் 5-ம் இடம் சுபச்சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும்.

லக்னம் அல்லது சந்திரனுக்கு 7-ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படலாம். தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும். சில தம்பதிகளிடையே பிரிவினை காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும்.

லக்னம்,அல்லது சந்திரனுக்கு 8-வது இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் நாகதோஷமாகும். இதனால் விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டை சச்சரவு, பிரிவினை ஏற்பட வாய்ப்புண்டு, ஆனால் 8-வது வீட்டை சுப கிரகம் பார்த்தாலோ அல்லது 8-ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.

லக்னம் அல்லது சந்திரனுக்கு 12-ம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் நாகதோஷம். இதனால் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு. பண விரயமும் ஏற்படும். 12-ம் அதிபதி பலமாக இருந்தால் தோஷ நிவர்த்தி ஏற்படும்.

பாம்பு புற்றை இடித்தாலோ அல்லது பாம்பினை அடித்து கொன்றாலோ நாகதோஷம் ஏற்படும். இதன் காரணமாக விந்து சக்தி நீர்த்துப்போய் குழந்தை தாமதம் அல்லது குழந்தை இல்லாத நிலையும் ஏற்படும்.

நாகப்பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும், பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப்பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறதாம்.

ஆகவே தோஷமுள்ளவர்கள் கீழுள்ள ஆலயங்களில் ஏதாவது ஒன்றில் நாகப்பிரதிஷ்டை செய்தால் தோஷம் நீங்கும் என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர்.

ராமநாதர்-ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), முத்தால பரமேஸ்வரியம்மன் -பரமக்குடி (ராமநாதபுரம்), மகுடேஸ்வரர்-கொடுமுடி (ஈரோடு), அனந்தீஷ்வரர்-சிதம்பரம் (கடலூர்), முத்துக்குமரர் -பரங்கிப்பேட்டை (கடலூர்), நாகராஜா சுவாமி -நாகர்கோவில் (கன்னியாகுமரி),குமரக்கோட்ட முருகன்- காஞ்சீபுரம் (காஞ்சீபுரம்).

பச்சைவண்ணப் பெருமாள் -காஞ்சீபுரம் (காஞ்சீபுரம்), பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்-அமிர்தபுரி (காஞ்சீபுரம்), ஆதிகேசவப்பெருமாள் -ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சீபுரம்), நஞ்சுண்டேஸ்வரர்- காரமடை(கோவை), திருவேட்டீஸ்வரர்-திருவல்லிக்கேணி (சென்னை),தேனுபுரீஸ்வரர் -மாடம்பாக்கம் (சென்னை), இரவீஸ்வரர் -வியாசர்பாடி (சென்னை).

அருணஜடேசுவரர்-திருப்பனந்தாள் (தஞ்சாவூர்), சுப்பிரமணிய சுவாமி -குமாரவயலூர் (திருச்சி),தொண்டர்கள் நயினார்சுவாமி -திருநெல்வேலி (திருநெல்வேலி), பக்தவச்சலப்பெருமாள்-திருநின்றவூர் (திருவள்ளூர்), சாமாண்டியம்மன்-சாமாண்டிபுரம், கம்பம் (தேனி), விருப்பாச்சி ஆறுமுகநயினார்-தீர்த்ததொட்டி (தேனி).

சிவலோகநாதர்-திருப்புன்கூர் (நாகப்பட்டினம்), நாகநாதசுவாமி -நாகநாதர் சன்னதி (நாகப்பட்டினம்),அர்த்தநாரீஸ்வரர் -திருச்செங்கோடு (நாமக்கல்), அரங்குளநாதர் -திருவரங்குளம்(புதுக்கோட்டை), கல்யாணராமர்-மீமிசல் (புதுக்கோட்டை).

காசிவிஸ்வநாதர்-இரும்பாடி சோழவந்தான் (மதுரை),அய்யனார்சுவாமி -கோச்சடை (மதுரை),செல்லத்தம்மன்,கண்ணகி -சிம்மக்கல்(மதுரை), அங்காளஈசுவரி-மாந்தோப்பு (விருதுநகர்), நாகேஸ்வரசுவாì -பூவரசன்குப்பம் (விழுப்புரம்).

செய்வினை தோஷம்

செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.


ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:-


முதலில் குலதெய் வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும்.


அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறதோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.

வாஸ்து தோஷம்

உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பதாக உறுதியாக தெரிய வந்தால், அதை தீர்க்க எளிய வழி உள்ளது. உங்கள் வீட்டுத் தலைவாசல் நிலையின் நீளம், அகலத்தை அளந்து கொள்ளுங்கள். அந்த அளவிற்கு அறுகம்புல் மாலையை நிலையில் மாட்டுங்கள் அதே போல மகாலட்சுமி உங்கள் வீட்டில் குடியிருக்க, நீள அளவுக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.


நிலையில் சூட்டப்பட்ட அறுகம்புல் மாலையும், மகாலட்சுமிக்காகச் சூட்டப்பட்ட வெற்றிலை மாலையையும் மறுநாள் காலை கழற்றி மூன்றுபடி தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அறுகம்புல் மாலை மற்றும் வெற்றிலை மாலையில் பட்ட தண்ணீரை உங்கள் விட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தெளித்துவிடுங்கள்.


வீட்டின் வெளிப்புறத்திலும் தெளியுங்கள். பிறகு, அறுகம்புல் மாலையையும், வெற்றிலை மாலையையும் ஒரு வெள்ளைத்துணியில் முடித்து ஆற்றில் போட்டு விடுங்கள். வாஸ்து தோஷம் விலகிவிடும். வாஸ்து தோஷத்துக்கு செவலூர் ஆலயத்தில் ஒரே ஒரு கல் வாங்கி மனை போட்டால் போதும் என்கிறார்கள்.


வீட்டின் ஈசான்ய மூலையில் ஒரு சொம்பில் நீர் ஊற்றி, அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து கலசம் ஏற்றி வைக்க வாஸ்து குறைபாடுகளை கலச அமைப்பு நீக்கி விடும். ஜாதகத்தில் குரு 3,6,8,12-ல் மறைந்திருந்தால் வளர்பிறை அல்லது தேய்பிறை பஞ்சமி திதியில் நவகிரகக் குருவுக்கு பால், பன்னீர், அபிஷேகம் செய்து, கஸ்தூரி பொட்டிட்டு மஞ்சள் பட்டுத்துணி சாற்றி, தாமரை பூ மாலை போட்டு, நெய், தீபம் அர்ச்சனை செய்ய வாஸ்து தோஷத்தால் தடைபட்ட தொழில், திருமணம் நடக்கும்.

6 வகை தானங்கள்

தானம் செய்யும் போது உங்களை அறியாமல் ஒரு கர்வம் ஒட்டிக்கொள்ளும். எப்பாடுபட்டாவது அதை துடைத்து எறியுங்கள். நடக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் கண்டிப்பாக ஒரு பின்னணி இருக்கும். நீங்கள் ஒரு சிறு கருவி மட்டுமே. ஆட்டுபவனும், ஆடுபவனும் அந்த சிவமே. உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் என்ற விவரம் வருமாறு:-


ஆடைகள் : ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்து விடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடை தானம் செய்வது மிக நல்லது. வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.


தேன் : புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று (இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.


நெய் : பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6, 8, 12-ம் அதிபதியின் திசை) நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கல கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகலவிதமான நோய்களும் தீரும்.


தீபம் : இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். அல்லது ஏழைகளுக்கும், கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.


அரிசி : பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக ஏழைகளுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.


கம்பளி - பருத்தி : வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்தி தானம் (பருத்தி உடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

நூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா?

அதிக மாதம் என்பது சுமார் இரண்டரை (33 மாதங்களுக்கு ஒரு முறை) வருடத்திற்கு ஒரு முறை வரும். அதிக மாதம் என்பது எந்த மாதத்தில் வேண்டுமானாலும் வரும். ஒரு முறை சிராவணத்தில் வரும் ஒரு முறை வைசாகத்தில் வரும். இந்த மாதத்தில் தான் அதிக மாதம் என்று குறிப்பிட்டு வராது.

அதிக மாதத்தில் எது ஒரு முறை தானம் செய்தாலும் 100 முறை தானம் செய்த பலன் கிடைக்கும். அதிக மாதத்தில் செய்ய வேண்டிய தான வகைகளின் விவரம் வருமாறு:-

அதிக மாதத்தில் இப்படி தானங்கள் கொடுப்பது நல்லது. அதிக மாதத்தை முடிந்த மட்டில் மிகவும் நல்ல விதமாக உபயோகித்துக் கொள்ள வேண்டும். துளசி பூஜை திரவயங்களுடன்+ துளசி பூஜை பாத்திர சாமான்கள் நிறைவான தானம் போல் கொடுக்கலாம் அல்லது துளசி பூஜை திரவியங்களை மட்டும் கொடுக்கலாம்.

சாலிக்ராம பூஜை சாமான்களுடன்+ சாலிக்ராம பூஜை பாத்திர சாமான்களும் வைத்து நிறைவான தானமாகக் கொடுக்கலாம் அல்லது சாலிக்ராம பூஜை த்ரவ்யங்கள் மட்டும் கொடுக்கலாம். பஞ்சாமிருத சாமான்கள் களிம்பு ஏறாத வெண்கல கிண்ணங்களில் அல்லது தொன்னையில் கொடுக்கலாம். பஞ்சாம்ருத சாமான்கள் களிம்பு ஏறாத வெண்கல கிண்ணங்களில் அல்லது தொன்னையில் கொடுக்கலாம்.

அதிக மாதத்தில் ரவை உருண்டையும், அருளுருண்டையும் தானமாகக் கொடுக்கும் பொழுது 33 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். வஸ்தர தானம் என்பது புடவை+ரவிக்கை+ ஜதை வேஸ்டி என்றும் கொடுக்கலாம் அல்லது வேஷ்டியும், ரவிக்கையும் கொடுக்கலாம் அல்லது புடவை, ரவிக்கை மட்டும் கொடுக்கலாம்.

தேன்+நெய் தானம் களிம்பு ஏறாத கிண்ணத்திலும் கொடுக்கலாம் அல்லது தொன்னையில் கொடுக்கலாம். சையாதானம் என்பது சௌகரியம் போல் கொடுக்கலாம். ஜமுக்காளம்+தலையணை+போர்வை கொடுக்கலாம். வசதி உள்ளவர்கள் மெத்தையும் சேர்த்து கொடுக்கலாம்.

காய்கறிகள் தானத்தில் கசப்பு, துவர்ப்பு, காரம் போன்றவைகளை ஒதுக்கிவிட்டு மற்ற காய்கறிகள் கொடுக்கலாம். போஜன சாமான்கள் இருவர் சாப்பிடக்கூடிய அளவுக்கு எல்லாமே வைத்து கொடுக்கலாம். போஜனம் என்பது சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதினால் சமைப்பதற்கு உண்டான எல்லா சாமான்களும் கொடுக்கலாம்.

யதா சக்தியான கோ தானம் என்பது பசு மாடு வைத்து இருப்பவர்கள் வீட்டில் நம்மால் முடிந்த தொகையை கொடுத்து பசுமாட்டை விலைக்கு வாங்கியதாக பாவித்து மறுபடியும் அதை அவர்களுக்கே தானமாகக் கொடுப்பதுடன் பசுமாட்டிற்கு வஸ்த்ரம், கால் சலங்கை, கொம்புகளுக்கு சலங்கை, பால் கறக்கும் பாத்திரம், கோக்ரஸம் வைக்க தட்டு எல்லாம் கொடுக்க வேண்டும்.

கோக்ரஸம் என்பது அரிசி+வெல்லம்+பருத்திக் கொட்டை, பழம் எல்லாம் ஒரு தட்டில் அல்லது இலையில் வைத்து பசுமாட்டிற்கு கொடுப்பதாகும். ஆகையால் பசு மாடு வைத்திருக்கும் மாத்வர்களிடமிருந்து அதை விலைக்கு வாங்கியதாக பாவித்து தானம் கொடுக்க வேண்டும். புஸ்தக தானம் என்பது விஷ்ணு சம்பந்தப்பட்ட புராண புத்தகங்கள் அதிலும் ஸ்ரீமத் பாகவதம் மிகவும் நல்லது.

ஆசன தானம் என்பது உட்காரும் பலகை, நாற்காலியும் கொடுக்கலாம். பாய் தானம் ஒத்தையாக கொடுப்பது கூடாது. ஜோடியாக கொடுக்க வேண்டும். நாணய தானம் என்பது நாணயங்களை வைத்து தானம் கொடுப்பது. நாணயம் கொடுத்திருப்பதினால் தட்சணை வைக்காமல் இருக்கக்கூடாது. தட்சணை வைத்து தான் தானம் கொடுக்க வேண்டும்.

க்ருஹ தானம், பூ தானம் என்பது நம் பெண்களுக்கு வீடு, நிலம் போன்று கொடுப்பதாக இருந்தால் தானமாக கொடுக்கலாம். இலந்த பழம், நெல்லிக்காய் தானம் என்பது கார்த்திகையில் அதிக மாதமாக அமையும் பொழுது கொடுக்கலாம். மற்ற மாதங்களில் கிடைத்தாலும் கொடுக்கலாம். விக்ரஹ தானம் என்பது சாதாரண சமயங்களில் கிருஷ்ணன் மற்றும் வேறு ஏதாவது பெருமாள் சிலை தானம் கொடுக்கலாம்.

ஆனால் அதிக மாதத்தில் அதிக மாத தெய்வமான ராதா சமேத ஸ்ரீகிருஷ்ண சிலை தானம் கொடுப்பது மிகவும் நல்லது. பஞ்சகர்ஜுர தானம் என்பது உலர்ந்த பழவகைகளான, பாதாம், முந்திரி, பேரீச்சம் பழம், திராட்சை, சர்க்கரை பாதாம், அத்திப்பழம், அக்ரோட் போன்றவைகளை வகைக்கு 33 வைத்து எல்லாம் சேர்த்து தானமாக கொடுப்பதாகும்.

சாதுர் மாதம் அதிக மாதமாக அமைந்தால் முதலிலும், கடைசியிலும் வரும் இரண்டு மாதங்களில் பஞ்சகர்ஜீர தானம் கொடுப்பது கூடாது. வியாச பீட தானம் என்பது வியாச பீடத்தில் விஷ்ணு சம்பந்தமான புராண புத்தகம் அல்லது ஸ்தோத்திர புத்தகம் வைத்து தானமாகக் கொடுப்பது.

விதை தானம் என்பது நல்ல பக்குவமான விதையாக உள் நெல் அல்லது அருளு நெல் தானமாக கொடுப்பது. இது வம்ச விருத்தியை தரும். வாத்ய தானம் என்பது நம் பெண் குழந்தைக்கு வாத்ய வகை ஏதாவது கற்று கொடுத்திருந்தால் திருமணம் ஆன பிறகு அந்த வாத்யத்தை நம் பெண்ணிற்கே தானமாக கொடுக்கலாம். வெளி நபர்களுக்கும் கொடுக்கலாம். மேற்கூறிய தானங்கள் எல்லாவற்றிற்கும் தேங்காய் வைத்துக் கொடுப்பது மிகவும் நல்லது.*

கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்?

கங்கையில் நீராடினால் கடின பாவமும் கரைந்தோடும் என்பது நம்பிக்கை. ஆனால் அந்த கங்கை நீராடல் என்ற புனிதமான செயலை எப்படி செய்ய வேண்டும்? கங்கைக்கு சென்று நீராடினால் நாம் இதுவரை செய்த அனைத்து பாவங்களும் நீங்கி விடும் என்று பலரும் நினைக்கிறார்கள். அவர்களின் நினைப்பு உண்மைதான்.

ஆனால் அதன்பிறகும் பலரின் பாவங்கள் நீங்குவதில்லையே அது ஏன்?. சிவபெருமானும், பார்வதியும், ஒரு முறை ஹரித்துவார் நகரை வலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆயிரக் கணக்கான மக்கள், கங்கை நதியில் `ஸ்நானம்' செய்து திரும்பிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் பார்வதிதேவி, சிவபெருமானை பார்த்து கேட்டார். `சுவாமி! கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கி விடும் என்கிறார்கள்.

ஆனாலும் இங்கு வந்து நீராடும் பக்தர்களின் பாவங்கள் நீங்கியது போன்றே தெரியவில்லையே? அதற்கான காரணம் என்ன?' என்றார். அதற்கு சிவபெருமான், `கங்கையில் நீராடினால் தானே பாவம் நீங்கும். இவர்கள் யாரும் ஸ்நானம் செய்யவில்லை. மாறாக, கங்கையில் தங்கள் உடலை நனைத்துக் கொண்டுதான் வருகிறார்கள்' என்று கூறினார்.

சிவனின் பேச்சால் வெகுவாக குழம்பி போனார் பார்வதிதேவி. ஆகையால் அந்த பேச்சின் அர்த்தம் புரியாமல், `என்ன சுவாமி சொல்கிறீர்கள்! உடலை நனைத்துக் கொள்வது என்பது நீராடுவது தானே?' என்று கேட்டார். `உனக்கு சரியாக விளங்க வில்லை தேவி. நாளை, நான் நடத்தும் விளையாட்டை பார்த்து நீயே புரிந்து கொள்வாய்' என்றார் சிவபெருமான்.

அன்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் கங்கைக்கு செல்லும் பாதை சேரும், சகதியுமாக காணப்பட்டது. மேலும் அந்த வழியில் ஒரு பெரிய பள்ளமும் இருந்தது. மறுநாள் காலை, சிவபெருமான் ஒரு முதியவர் வேடம் பூண்டு அந்த பள்ளத்தில் விழுந்து வெளியேற முடியாமல் தவிப்பது போல் பாவனை செய்தார்.

பார்வதி தேவியும், மூதாட்டி வேடத்தில் பள்ளத்தின் அருகில் நின்று `ஐயோ! என்னவர் குழியில் விழுந்து விட்டாரே! யாராவது கைகொடுத்து இவரை தூக்கி விடுங்களேன்?' என்று பொய்யாக பரிதவித்து கொண்டிருந்தார். கங்கையில் மூழ்கி விட்டு வந்தவர்களில் பலர், இப்போதுதான் குளித்து விட்டு வருகிறோம். இவரை காப்பாற்றி, சேற்றை பூசிக் கொள்ள வேண்டுமா? என்ற எண்ணத்தில் சென்று கொண்டிருந்தனர். ஒரு சிலர் காப்பற்ற முன்வந்தனர்.

அவர்களிடம் மூதாட்டி உருவில் இருந்த பார்வதி, `என் கணவர் எந்த பாவமும் அறியாதவர். ஆகையால் பாவம் அற்றவர்கள் தாம் இவரை தொட வேண்டும். பாவம் செய்தவர் யாரேனும் தொட்டால் அவர்கள் அக்கணமே சாம்பலாகி விடுவர்' என்று ஒரு குண்டையும் தூக்கிப் போட்டார். `அப்படியானால் நான் இவரைத் தொட லாயக்கில்லை' என்றபடி அனைவரும் சென்று விட்டனர்.

கங்கையில் நீராடியபடி சென்ற ஒருவர் கூட அந்த முதியவரை தூக்கி விட முன்வரவில்லை. கடைசியில் ஒரு வாலிபன் முன்வந்தான். அவனிடமும் பார்வதி, தன் கணவரை பாவம் செய்தவர்கள் தொட்டால் பஸ்பமாகி விடுவார்கள் என்றார். அதற்கு அந்த வாலிபன், `நான் பாவம் அற்றவன் என்பதில் என்ன சந்தேகம்.

இப்போது தானே கங்கை நதியில் நீராடி, எனது பாவங்களை நீக்கி விட்டு வருகிறேன். ஆகவே நான் பஸ்பமாக மாட்டேன்' என்று கூறியதுடன், அந்த முதியவரையும் தூக்கி விட்டான். அப்போது அவனுக்கு சிவபெருமானும், பார்வதியும் காட்சியளித்து அருளாசி வழங்கினர். பின்னர் பார்வதியை நோக்கி, `இப்போது உனக்கு புரிந்திருக்கும் தேவி. நம்பிக்கையுடன், கங்கையில் நீராடும் போது தான் ஒருவனின் பாவங்கள் விலகும்' என்றார் சிவபெருமான்

கர்ப்பப்பை கோளாறு நீங்க பரிகாரம்

பெண்களுக்கு வரும் பல பிரச்சினைகளில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட கோளாறுகள் மிக முக்கியமானது. அந்த கோளாறை தீர்க்க உதவும் தக்க பரிகாரம் வருமாறு:-

புதுப்பானை வாங்கி அதில் அரிசி, காய்கறிகள் பல சரக்குச் சாமான்கள் ஆகியவற்றைப்போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வெள்ளிக்கிழமையன்று ஏழைகள் சிலரை அழைத்து வந்து தக்க மரியாதை செய்து பின்னர் புதுப்பானையை அதில் போடப்பட்ட பொருட்களுடன் அவர்களுக்குத் தானமாக அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்

மூல நட்சத்திரத்தில் பிறந்த தோஷம் நீங்க...

மூல நட்சத்திரத்தில் பிறந்த தோஷம் நீங்க...
27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்திலும் பிறந்தவர்களுக்கு இல்லாத வகையில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தோஷங்கள் அதிகம் என்று சொல்வார்கள்.

பொதுவாக மூல நட்சத்திரம் உள்ளவர்களால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் அவ்வளவு சிறப்பு ஏற்படாது. மேலும் மூல நட்சத்திரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய கிழமைகளில் பிறந்தவர்கள் எல்லா வகையிலும் அதிர்ஷ்ட வாய்ப்பை இழப்பார்கள். மூல நட்சத்திரக்காரர்கள் காலை வேளையில் பிறந்தால் அவர்களுடன் பழகுபவர்களுக்கு கஷ்டம் வரலாம். மாலை வேளையில் பிறந்தால் அவரின் தாய் பிறந்த வீட்டிற்கு கஷ்டம் வரும்.

இதுபோன்ற தோஷங்கள் இருப்பதால் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திருமணம் ஒரு தடையாக மாறி விடுகிறது. பரிகாரம் வாயிலாக மேற்கண்ட தோஷத்தைச் சரி செய்யலாம் என்று அகத்தியர் உள்ளிட்ட சித்தர்கள் வழிகாட்டி உள்ளார்கள்.

பரிகாரங்கள் விவரம் வருமாறு:-
1. சிவன் கோவில் தல விருட்சத்தின் வேர்ப்பகுதியில் உள்ள மண் ஒரு கைப்பிடி, 2. யானை மிதித்த இடத்து மண் ஒரு கைப்பிடி, 3. பசுவின் கால் பட்ட இடத்து மண் ஒரு கைப்பிடி, 4. புற்று மண் ஒரு கைப்பிடி, 5. வயல்வெளியில் உள்ள நண்டு வளையின் புற்றுமண் ஒரு கைப்பிடி, 6. கண்மாயில் உள்ள மண் ஒரு கைப்பிடி, 7. கடற்கரை மண் ஒரு கைப்பிடி

மேற்கண்ட ஏழு வகையான மண்ணை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். மூல நட்சத்திரத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மேற்படி மண்ணை உடல் முழுக்கத் தடவி 45 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நிவர்த்தி ஆகி பரிகாரம் செய்த 90 நாட்களுக்குள் திருமணம் சுபமாக நடக்கும்.

பிரம்மகத்தி தோஷம்

பிரம்மகத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் பெரிதாகச் சொல்லப்படுகிறது. கொலை செய்தல், மாற்றான் மனைவியை கவர்தல், பண மோசடி செய்தல் போன்ற செயல்களால் பிரம்ம கத்தி தோஷம் ஏற்படும்.

கீழ்க்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை மனமுருக வேண்டிக் கொண்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆலந்துறையார், கீழப்பழுவூர் (அரியலூர்), திருநோக்கிய அழகிய நாதர், திருப்பாச்சேத்தி (சிவகங்கை), பிரம்ம சிரகண்டீஸ்வர், திருக்கண்டியூர் (தஞ்சாவூர்), ஸ்ரீ புவனேஸ்வர், திருப்பைஞ்ஞீலி (திருச்சி), கொழுந்தீஸ்வரர், கோட்டூர் (திருவாரூர்), திருமறைக்காடர், வேதாரண்யம் (நாகப்பட்டினம்).ஒவ்வொரு சிவன் கோவிலிலும், வடகிழக்கு பகுதியில் தனிச்சந்நிதியில் கால பைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. கால பைரவர் பாம்பை பூணூலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார்.

பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. எமபயம் தவிர்க்கப்படும். பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்பு பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்

வியாபார தோஷம்

சிலருக்கு என்ன வியாபாரம் செய்தாலும் விருத்தி அடையாதபடி தோஷம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினசரி காலை குளித்து விட்டு மகாலட்சுமி படத்திற்கு முன்பு பால், தேன், ஏலக்காய், கிஸ்மிஸ் பழம், முந்திரிப் பருப்பு ஆகிய ஐந்தையும் கலந்து, ஒரு புதிய கிண்ணத்தில் வைத்து காய்ச்சி எடுக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தை படைத்து வழிபட வேண்டும்.
அப்போது ஐந்து முகம் கொண்ட வெள்ளி விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு சிறிது பஞ்சாமிர்தத்தை எடுத்துச்சென்று உங்கள் வியாபார தலத்தில் உள்ள முக்கிய வேலையாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு தினசரி செய்து வந்தால் தொழிலில் நஷ்டம் வராது. அப்படி செய்ய இயலாவிட்டால், நவதானியங்களை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து உங்கள் கடைவாசலில் கட்டுங்கள். கல்லாவிலும் போட்டு வையுங்கள். உங்கள் வியாபாரம் பெருகும். பனம்பழத்துக் கடுக்காயில் மஞ்சள் தடவி கல்லாவில் வைத்தாலும் வியாபாரம் பெருகும்.

செவ்வாய் தோஷத்தை விரட்ட

செவ்வாய் தோஷத்தை விரட்ட, போலியாக ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆறு, குளம், கடல், கிணறு, ஏரி போன்றவற்றின் அருகில் ஒரு புரோகிதரைக் கொண்டு இந்த திருமணத்தை நடத்த வேண்டும்.

ஒரு வாழைக்கன்று, தர்ப்பைபுல், நவதான்யம், மஞ்சள் குங்குமம், பாக்கு வெற்றிலை, பூ-பழம்- தாலிக்கயிறு, இரு மாலைகள் இவற்றைக்கொண்டு உண்மையில் திருமணம் செய்விப்பது போல் திருமணம் செய்விக்க வேண்டும். தாலியை பல பேரிடம் ஆசி வாங்கி வாழை மரத்திற்குக் கட்ட வேண்டும்.

வாழை மரத்திற்கு மாலை அணிவித்து மூன்று முறை மாலை மாற்றிக்கொண்டு பிறகு நவதான்யம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பிறகு 5 நிமிடம் கழித்து ஒரு அரிவாளால் மணமகளைக் கொண்டு அவ்வாழைக் கன்றை எட்டு துண்டுகளாக வெட்டி நீர்நிலையில் எறிந்துவிட வேண்டும்.

இப்படி செய்யும் நாள் ஒரு திருமண நாளாக (சுபமுகூர்த்தம்) இருக்க வேண்டும். மணமகளாக இருப்பின் நாத்தனார் முறை உள்ளவர்கள் மூலம் தாலிகட்டிக்கொள்ள வேண்டும். வேறு ஆண்மகன் அல்லது நாத்தனார் முறை உள்ளவர்கள் மூலம் மூன்று துண்டுகளாக வெட்டச்செய்து நீர்நிலையில் எறிந்துவிட வேண்டும்.

பின்னர் அப்பெண்ணின் தாலியை எடுத்து விட்டு வந்துவிடவும். ஆண் மகனாயின் நல்லெண்ணெய் விட்டு குளித்து விட்டுவர வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் திருமணம் கூடும். சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று அங்கிருக்கும் செவ்வாய் பகவானைத் தரிசித்து வைத்தீஸ்வரனுக்கு உப்பு வாங்கிப் போடவும்.

விரைவில் திருமணம் கூடிவரும். அருகில் உள்ள ஈஸ்ëவரன் கோவிலில் இருக்கும் நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு இளம் சிவப்பு நிற துணியை அணிவித்து சிவப்பு மலர்களால் அர்ச்சித்து வரவேண்டும். இவ்வாறு 9 செவ்வாய்க்கிழமைகளில் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்.

புத்திர தோஷம் என்பது

சில தம்பதியருக்கு திருமணம் ஆகி, பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்கும். அதற்கு அந்த தம்பதியருக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
பொதுவாக குழந்தை இல்லாததற்கு எட்டுவிதமான புத்திர தோஷங்கள் காரணமாக இருக்கின்றன. இவை அனைத்தும் நம்மைச்சுற்றியுள்ள பலரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் அது தெரியும். அந்த 8 வகை தோஷங்கள் வருமாறு:-
1.சர்ப்ப சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்.
8.மந்திர சாபம், பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்.
இந்த புத்திர தோஷங்கள் எப்படி உருவாகின்றன தெரியுமா?
பெற்ற தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும், அவர்களை வேதனைப்படுத்தியதாலும், அவர்களின் கடைசிக் காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்படுவது பித்ரு சாபம்.
இதனால் இப்பிறவியில் தன் தந்தையரோடும் தன் பிள்ளைகளோடும் ஒத்துப்போக முடியாது. எப்போதும் ரத்த உறவுகளால் அவமானமும், வேதனையும் ஏற்படும்.
சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களை தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக்கொள்வது சகோதர சாபம். அந்த சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படுகிறது.
சாதுக்கள், மகான்கள் சிவனடியார்களை அவமானப்படுத்துவதால் பிராம்மண சாபம் உண்டாகும். இதனால் குறைகள் உடைய குழந்தைகள் பெற்றெடுக்கும் கடுமையான புத்திர தோஷம் ஏற்படலாம்.
மனைவியைக் கொடுமைப்படுத்துவதால் ஏற்படுவது பத்தினி சாபம். இதனால் மனைவி மக்களால் அவமானப்படுதலும், பண்டாரம், பரதேசியாகி பிச்சை எடுத்தலும், கடைசி காலத்தில் தன்னை கவனிக்க ஆளில்லையே என வருந்துதலும் ஏற்படும்.
மந்திர சாபம், பிரேத சாபம் இவற்றால் ஏற்படும் புத்திர தோஷம் என்பது மாந்தீரிகர்களை தேடிப்போய் நமக்கு வேண்டாதவர்களுக்கு பில்லி, சூனியம் வைப்பதும், குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருப்பதும் ஆகும்.
இந்த சாபத்தால் நோய்கள் உண்டாகி படாதபாடு படுத்திவிடும்.சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழிக்க நேரிடும். குடும்பம் விருத்தியில்லாமல் போய்விடும். இந்த புத்திர தோஷத்தை நீக்கிட குருபகவானுக்கு வியாழக் கிழமையன்று அர்ச்சனை செய்யலாம்.
எந்த கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்த கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம்.
குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் செய்து வரலாம்.

பித்ரு தோஷம்

ராகு, கேதுக்கள் தான் பித்ரு தோஷத்தை உண்டாக்குகின்றன. உங்களது பிறந்த ஜாதகத்தில் 1, 5, 7, 9-இவ்விடங்களில் ராகு அல்லது கேது நின்றால் உங்கள் வாழ்க்கை தினமும் போராட்டம் தான்!. இதுவே பித்ரு தோஷம் ஆகும்.பித்ரு தோஷம் உள்ளவர்கள் அதற்கான தோஷம் பரிகாரம் செய்த பின்னர்தான் வாழ்க்கை போராட்டம் இன்றி செல்லத்துவங்கும். பித்ரு தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும்.


நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன்-மனைவி பிரச்சினைகளை உருவாக்கும். குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும். மகாளய பட்சம் என்று ஒரு காலம் தமிழ் வருடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வரும். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்கள் மகாளய பட்சமாகும்.


இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள். அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணத்தை நேரடியாக நமது பித்ருக்கள் ஏற்றுக்கொள்வார்கள். முழுவதும் செய்ய முடியாதவர்கள் அமாவாசையன்று செய்தால் கூட போதும். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பித்ருகளுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.


மிகக்கடுமையான பித்ரு தோஷம் உடையவர்கள் ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம். திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். திலம் என்றால் எள் என்று அர்த்தம். திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு ராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.


சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும். ராமேஸ்வரம் கோவில் முன்புள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம். இது ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் மிக முக்கியமானது. மகாவிஷ்ணு ராம அவதாரம் எடுத்த பின்பு அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சீதை தீக்குளித்த போது அக்னி தேவன் சீதா தேவியை தீண்டிய பாவத்தை போக்க அக்னி தீர்த்தத்தில் நீராடியதால் இது அக்னி தீர்த்தம் எனப்படுகிறது.


அக்னி தீர்த்தத்தில் நீராடினால் கடுமையான பிதர் தோஷங்கள் நிவர்த்தியாகும். ராமேஸ்வரத்தில் மட்டும் எல்லா நாட்களிலும் பிதர் தோஷப் பரிகாரம் செய்யலாம்.

தீட்டு தோஷம்

சுபகாரியம் நடக்கும் வேளையில் அல்லது ஆலயத்தில் பெண்களுக்குத் தீட்டு ஏற்பட்டு விட்டால் அதனை ஒரு தோஷமாக நினைத்து இறைக்குற்றத்திற்கு ஆளாகி விட்டதாகப் பெண்கள் நிலை குலைந்து போவார்கள்.
தீட்டு ஏற்பட்டு விட்டால் அதனால் தோஷம் எதுவும் வராமல் இருக்க, கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து பெண்கள் நிம்மதி காணலாம். ஆலயத்துக்குள் இருக்கும் போது தீட்டு ஏற்பட்டு விட்டால், அந்த தோஷம் விலக ஆலயத்துக்கு வெளியில் வந்து ஆலய வாசலில் ஒரு கைப்பிடி மண் எடுத்து, வீட்டிற்குக் கொண்டு வந்து பசும்பாலில் போட வேண்டும். அதனைத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
தீட்டு முடிந்த மறுநாளே எந்த ஆலயத்தில் தீட்டு ஏற்பட்டதோ அந்த ஆலயத்துக்கு ஒரு லிட்டர் பசும்பாலை அபிஷேகத்துக்காக கொடுத்து விட்டு வரவேண்டும்.
இப்படிச் செய்வதால் ஆலயத்துக்குள் ஏற்பட்ட தீட்டு தோஷம் விலகும். ஆலயத்துக்குச் செல்ல முடியாதவர்கள் தீட்டு முடிந்த பிறகு ஒன்பது நாட்களுக்குத் தொடர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து வர தீட்டு தோஷம் விலகும்.

கிரக சர்ப்ப சாந்தி

பாம்பினை அடிப்பதால் வரும் தோசம் மற்றும் முன்னோர்களினால் வந்த நாக தோசம் நீங்க செம்பு அல்லது வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பிறகு அதை வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் வைத்து ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும்.

அன்று குறைந்தது 5 ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

1. ராகு கால பௌர்ணமி பூஜை பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.

2. ராகு கால கிருத்திகை பூஜை புகழ் தரும்.
3. ராகு கால சஷ்டி பூஜை புத்திரப்பேறு கிடைக்கும்.

4. ராகு கால ஏகாதசி பூஜை பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.

5. ராகு கால சதுர்த்தி பூஜை துன்பங்களிலிருந்து விடுதலை தரும். எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

கேது பகவான்..........

ராகுவின் உடல் பிரிவின் மறு அம்சம் கேதுவாகும். இதன் தலைப்பகுதி நாக வடிவும் உடற்பகுதி மனித வடிவும் உடையது. கேதுவின் அதிபதி சித்திரகுப்தர். கேது திசை, கேது புத்தி நடப்பவர்கள் வினாயகர் வழிபாடு செய்வது நலம் பயக்கும். கேது ஞானம், மோட்சம் தருபவர்.

ஜாதகத்தில் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் போது தீய நண்பர்கள் சேர்க்கை, சண்டை சச்சரவு, வெட்டுக்காயங்கள், விபத்துக்கள், வீண் வழக்குகள், பிரிவினைகளை ஏற்படுத்துவார். கேதுவின் நல்லருள் பெற காணப்பயறு(கொள்ளு) கலந்த அன்னம் படைத்து, தர்ப்பை புல் சாற்றி, பல வண்ண அல்லது சிகப்பு நிற ஆடை அணிவித்து, செவ்வல்லி அல்லது செந்நிற மலர்கள் கொண்டு வழிபட வேண்டும். வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால் சிறப்படைவர்.

இறந்தவருக்கான கர்மாக்கள் சரியாக செய்யப்படவில்லை என்றால்

இறந்தவருக்கான கர்மாக்கள் சரியாக செய்யப்படவில்லை என்றால் ஒரு சில கெட்ட கனவுகள் தோன்றும். இவ்வாறு கனவு ஏற்பட்டால் நாம் செய்த செயல்களில் ஏதாவது தவறு உள்ளதா என பெரியோர்களிடம் கலந்து ஆலோசிக்கலாம். மிகப்பெரிய தவறு ஏற்பட்டிருந்தால் அந்த கர்மாவை மறுபடி செய்யலாம்.

அதாவது கர்தா மாறுதல், பிண்டம் சமைக்கும் பாத்திரம் மாறிவிடுதல், பிண்டத்தை போடும் இடம் மாறுதல், பாஷாணங்கள் காணாமல் போய் விடுதல், தூய்மையில்லாத உறவினர்கள் கர்மாவில் கலந்து கொள்ளுதல் போன்ற சூழ்நிலைகளில் மறுபடியும் கர்மா செய்ய வேண்டி வரலாம். அல்லது மிகச்சிறிய தவறுதான் நேர்ந்துள்ளது என்றால் அதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை செய்வது மிகவும் உதவியாக இருக்கும்.

* தானாகவோ அல்லது நல்ல பாகவதர்கள் மூலமாகவோ, ஸ்ரீமத் ராமாயணத்தை ஒன்பது நாட்கள் நவாகமாக பாராயணம் செய்யலாம்.

* ஸ்ரீமத் பாகவதம் என்னும் புராணத்தை கடஸ்தாபனம் செய்து ஸ்நானத்துடன் சப்தாகமாக ஏழு நாட்களில் பாராயணம் செய்யலாம்.

* இறந்த வீட்டில் ஒரு வருடத்துக்குள்ளாக அவரவர்களின் வேதத்தை நல்ல வித்வான்களைக்கொண்டு முழுமையாக பாராயணமாக நடத்தலாம்.

* காவேரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகளுக்கு சென்று இறந்தவர்களுக்கு நல்ல கதி ஏற்பட வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு குளித்து செய்து தானங்கள் செய்யலாம்.

* தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு கறுப்பு எள்ளோ அல்லது எள்ளு கலந்த சாதமோ அல்லது கருப்பு முழு உளுந்தோ தானமாகத் தரலாம்.

* சிராத்தம் நடைபெறும் நாளன்று சிராத்தம் முடிந்த பிறகு ஏழைகளுக்கு நிறைய ஆடை தானம், அன்ன தானம் செய்யலாம்.

* தன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் வேலை செய்யும் ஏழைத்தொழிலாளிகளுக்கு உணவு, உடை ஆகியவற்றைத் தந்து உதவலாம் (தொழிலாளிகளுக்கு செய்யும் உதவியால் பித்ரு தோஷம் விலகும்).

* அமாவாசை மாதப்பிறப்பு போன்ற நாட்களில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணங்களை வில்வமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு செய்யலாம்

எல்லா தோஷங்களும் விலக மந்திரம்

கையில் ருத்திராட்சை மாலையை ஏந்தி சிவபெருமானை மனதில் கொண்டு, `நமசிவாய' என 108 முறை ஜெபித்து கற்பூர தூப தீபம் காட்டி வணங்க வேண்டும்.

கண்களை மூடியபடி மனதிற்குள் சிவபெருமான் உருவத்தை எண்ணியபடி கீழ்க்கண்ட மந்திரத்தை ஒரு லட்சம் முறை உருபோட வேண்டும். "ஓம்-ரீங்-நசி-நசி-மசி-சுவாஹ'' மந்திர சித்தி ஏற்பட்ட பின்பு, இந்த மந்திரத்தை பிரம்பில் உருவேற்றி தோஷமுடைய குழந்தைகள் மீது தடவினாலும், நீரில் உருவேற்றடி முகத்தில் தெளித்தாலும், விபூதியில் உருவேற்றி பூசினாலும் வேப்பிலையில் உருவேற்றி அடித்தாலும் குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருடைய தோஷங்களும் நிவர்த்தியாகும்.

சனிக்கிரகத் தொல்லைகளிலிருந்து விடுபட கோதானம்

சனிக்கிரக பீடை, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஏழரைச்சனி போன்ற சனிக்கிரகத் தொல்லைகளிலிருந்து விடுபட, கோபூஜையும், கோதானமும் செய்ய வேண்டும். இத்தகு அதிவிசேஷமான,மகத்துவம் நிறைந்த பூஜை கோபூஜையே ஆகும். கோதானம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை:-

*கோதானத்தை தத்தம் வாழ்நாளில் தத்தம் கைப்படவே செய்தல் வேண்டும்.

*நம்மால் பராமரிக்க இயலவில்லை என்று அடுத்தவருக்குக் கொடுப்பது தானமாகாது.

*தலை ஈற்றுப் பசுவை தானம் செய்வது மிகவும் சிறந்தது.

*கறவையுள்ள பசுவைத் தானம் கொடுப்பதே முறை.

*தாயையும்,பால் அருந்தும் கன்றையும் பிரித்து தானம் அளிக்க கூடாது.

*பசுவோடு காளையையும் சேர்த்து தானம் செய்வது மேன்மையாகும்.

*பால் கறப்பதற்கான பாத்திரமும் சேர்த்து கொடுத்தல் வேண்டும்.

*பசுவைத் தானம் செய்யும் போது, குறைந்தது ஒரு வருட உணவிற்கும் பராமரிப்புக்கும் பொருளாகவோ, பணமாகவோ வகை செய்வது-இன்னும் மேன்மை தரும்.

பசுவையும், நீரையும் விற்றல் கூடாது

கலியுகத்தில் வரும் கேடுகளிலிருந்து தப்பிக்கவும் அவை நம்மைத் தாக்காமல் இருக்கவும் இரண்டு வித செயல்களை விட்டு விட வேண்டுமாம். ஒன்று பசுவை அதிக விலைக்கு விற்பது அதில் கமிஷன், தரகு பெறுவது கூடாது.

மற்றொன்று தண்ணீரை விற்பது. இதனால் பலவித கொடிய நோய்கள் வரும் என்று சாஸ்திரம் கூறுகிறது. சித்திரை வைகாசி மாதத்தில் இதற்கு பரிகாரமாக, சிவாலயத்தில் பஞ்ச நதிகள் 5 புனித நதிகளின் தீர்த்தத்தை அபிஷேகம் செய்து பசும்பால், நீர்மோர், பானக தானம் செய்து தோஷ பரிகாரமாக அமையும்.

விநாயகருக்கு . அர்ச்சிக்கப்படும் ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு பலன்

விநாயகருக்கு பல்வேறு இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. அர்ச்சிக்கப்படும் ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகிறது.

கண்டங்கத்தரி இலை - லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

மாதுளை இலை - நற்புகழ் கிடைக்கப்பெறும்.

வெள்ளெருக்கு இலை - சகல பாக்கியங்களும் அருளப்படும்.

அரளி இலை - குடும்பத்தில் அன்பு ஓங்கி நிற்கும்.

அகத்தி இலை - துயரங்கள் களையப்படும்.

அரச இலை - எதிரிகளின் தொல்லை நீங்கும்.

எருக்கு இலை - குழந்தைப்பேறு கிடைக்கும்.

மரவு இலை - துன்பங்கள் விலகும்.

மருத இலை - மகப்பேறு கிடைக்கும்

Wednesday, January 30, 2013

ஜோதிட பழமொழிகள்


ஜோதிட பழமொழிகள்


ஜோதிட பழமொழிகள் • பத்தில் குரு பதவிக்கு இடர்
 • இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே
 • பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்
 • நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை
 • சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது.
 • வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான்
 • கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்
 • ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க
 • குரு பார்க்க கோடி நன்மை
 • கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்
 • மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்
 • பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,
 • மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்
 • துலா கேது தொல்லை தீர்க்கும்
 • சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்
 • சுவாதி சுக்ரன் ஓயா மழை
 • மறைந்த புதன் நிறைந்த கல்வி
 • சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்
 • சித்திரை அப்பன் தெருவிலே
 • பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்
 • விதி போகும் வழியே மதி போகும்.
 • அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்
 • குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?
 • சனி பார்த்த இடம் பாழ்
 • சனி நீராடு
 • விழுப்பு இருக்குமிடத்தில் வேப்பிலைக்காரி தங்க மாட்டாள்.
 • ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு
 • பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்
 • எட்டில் சனி நீண்ட ஆயுள்
 • சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை
 • அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி
 • குரு நின்ற இடம் பாழ்
 • சனி பார்க்கும் இடம் பாழ்

Tuesday, January 29, 2013

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி...

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி...

அறிந்த விளக்கம் :
யாரோ ஒரு புண்ணியவான்
போன போக்கில்
ஐந்தும் பெண்
பெற்றால்
அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட,
நாளடைவில்
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி
பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில்
புயல் அடிக்க செய்து விட்டனர்..


உண்மை அதுவல்ல..

அறியாத விளக்கம் :

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்..

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும்
செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்
என்பதாகும்..


இவர்களை கொண்டிருப்பவன்,
அரசனே ஆனாலும் கூட
அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற
அர்த்தத்திலேயே ஆண்டி என்ற பிரயோகம்
இங்கு பயன்படுகிறது...

நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

 

ஆசிரமங்களும் அதன் வகைகளும்...

இருப்பார்கள் என்றும் கூறுகிறார்.

ஆசிரமங்களும் அதன் வகைகளும்...சித்த மரபு என்றில்லாமல், இந்திய வேத மரபில் குரு சிஷ்ய பாரம்பர்யம் என்பது தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்த ஒன்று. கடந்த நூற்றாண்டு வரையில் உயிர்ப்புடன் இருந்த இந்த குருகுல கல்வி முறையானது இப்போது முற்றாக வழக்கொழிந்து விட்டதென்றே கூறலாம். இனி வரும் தலை முறையினருக்கு இப்படி ஒரு வழக்கு இருந்ததே கூடத் தெரியாமல் போகலாம்.

ஆசிரமங்கள் என்றால் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில், ஓலையால் வேய்ந்த குடில்களும், அதனைச் சுற்றியொரு நந்தவனமும் என்பதாகவே மனக் காட்சி விரியும். அங்கே ஒரு குருவும், அவரிடம் பயிலும் மாணவர்களும் இருப்பார்கள். ஏறத்தாழ எல்லா ஆசிரமங்களும் இப்படித்தான் நமக்கு காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது.

இவை மட்டும்தானா ஆசிரமம்?, அவற்றில் என்ன நடந்தது?, ஆசிரமங்களில் பிரிவுகள், வகைகள் என ஏதும் இருக்கின்றனவா?... இப்படி தொடரும் கேள்விகளுக்கு அகத்தியரின் “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் விளக்கங்கள் கிடைக்கின்றன. அவற்றை தொகுத்துப் பகிர்வதே இந்த தொடரின் நோக்கம்.

அகத்தியர் ஐந்து வகையான ஆசிரமங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

அவையாவன...


பிரமச்சாரி ஆச்சிரமம்


கிரகஸ்த ஆச்சிரமம்


சன்யாச ஆச்சிரமம்


வானப்பிரஸ்த ஆச்சிரமம்


அதிவர்ன ஆச்சிரமம்இவை ஒவ்வொன்றும் ஒரு படி நிலையாகக் கருதப் படுகிறது. ஒரு ஆசிரம நிலையில் கடைத்தேறியவர்கள் மட்டுமே அடுத்தடுத்த ஆசிரம நிலைகளுக்கு போக முடியும் என்பதாகத் தெரிகிறது. இது தற்போதைய ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேற்படிப்பு என்பது போல இருந்திருக்க வேண்டும்.

ஏனெனில் இந்த ஆசிரமங்களில் வாழ்ந்திருந்தவர்களை அகத்தியர் பின் வருமாறு உருவகித்துக் கூறுகிறார்.

பார்பிரமச் சாரியடா பிர்மாவாகும்
பதிவான கிரகஸ்தன் விஷ்ணுவாகும்
நேர்குருவாஞ் சன்யாசம் ருத்திரனாகும்
நிலைவானப் பிரஷ்தனடா மயேசனாகும்
சீர்பெருகும் ஆதிவர்னாச் சிரமமைந்தா
சிவசிவா சதாசிவனாய்த் தெளிந்துகொள்ளு
ஆரறிவா ரஞ்சுநிலை விரதம்பெற்று
அமர்ந்திருப்பான் கோடியிலே ஒருவன்றானே.

பிரமச்சாரி ஆசிரமத்தில் வசிப்பவர்களை பிரம்மனாகவும், கிரகஸ்த ஆசிரமத்தில் வசிப்பவர்களை விஷ்ணுவாகவும், சன்யாச ஆசிரமத்தில் வசிப்பவர்களை ருத்திரனாகவும், வானப்பிரஸ்த ஆசிரமத்தில் வசிப்பவர்கள் மகேஸ்வரனாகவும், அதிவர்ன ஆசிரமத்தில் வசிப்பவர்களை சதாசிவனாகவும் உருவகித்துக் கூறுகிறார். மேலும் இந்த ஐந்து நிலைகளையும் கடந்தவர்கள் கோடியில் ஒருவராகவே இருப்பார்கள் என்றும் கூறுகிறார்.

Monday, January 28, 2013

தியானம்

தியானம்

 • தியானத்தின் போது உன்மனம் எங்கெங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலில் உன்மனதை ஓடவிடு!
 • அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலைக்கு வந்து சேரும்.
 • அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்தால் தியானத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தருவேன்.
 • மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் ஈடுபடும் போது தியானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
 • குரு உபதேசம் பெற்றவர்கள் உபதேசம் பெற்றுக் கொண்ட பிறகும் தியானத்தை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
 • தெய்வ வழிபாடு, ஆன்மிக வழிபாடு, கல்வி, மருத்துவம், தியானம், மௌனம், மனக்கட்டுப்பாடு ஆகியவை நாளைய உலகத்திற்கு வழி வகுக்கும்.
 • இல்லறத்தில் ஈடுபட்டிருந்தாலும் தியானம், மௌனம், அர்ச்சனை, அபிடேகம் ஆகியவை தேவை.
 • ஆன்மிகத்தில் அமைதி தேவை. தியானம் பழகப் பழக மன அமைதியேற்படும்.
 • .
 • பெண்கள் பகல் 12 மணிக்கு தியானம் செய்ய வேண்டும்.மனக் கட்டுப்பாட்டுடன் தியானம் செய்ய வேண்டும்.மாதவிலக்கு இருந்தாலும் கூட 10 அல்லது 15 நிமிடங்கள் தியானம் கடைப்பிடிக்க வேண்டும்.
 • தியானம் நிதானத்திற்கு வழி வகுக்கும்.
 • தியானம் இருக்கும் போது இடுப்பு வலி, விலா வலி, முதுகு வலி, கழுத்து வலி முதலிய ஏற்படும்.படிப்படியாக 10,20,30,40 நிமிடங்கள் என்று நேரத்தைக் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.அதன் பின் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.இந்தத் தடைகளையெல்லாம் கடந்து தான் நீங்கள் முன்னேறி வரவேண்டும்.பிறகு கட்டுப்பாட்டுடன் 40 நிமிடங்களிலிருந்து மூன்று மணி நேரம் வரை பொறுமையாகத் தியானம் இருந்தால் நீங்கள் கால் பங்கு ஆன்மிக முன்னேற்றம் அடையலாம்.
 • மூக்கு, காது, வாய் எனும் மூன்றையும் அடக்கித் தியானப் பயிற்சி செய்வதால் மூன்று ஆபாசங்களும், மூன்று குணங்களும், ஜம்புலக் கட்டுப்பாடும் ஏற்படும். மூன்று குணங்களும் முக்கோண வடிவமாகும். தியானம், மௌனம் கடைப்பிடிப்பதால் அவை கட்டுப்படுகின்றன.மனக் கட்டுப்பாடு இல்லாததால் சில வார்த்தைகள் கட்டுப்பாட்டை மீறிப் போய்விடுகின்றன.
 • உடம்பிற்கும் மனதிற்கும் ஓய்வு தருவதற்காகவே தியானம். தியானம் செய்வதனால் சகிப்புத் தன்மை, பண்பு, கட்டுப்பாடு உண்டாகும்.
 •  
 • கிரகணத்தின் போது நீங்கள் தியானத்தில் அமர்ந்தால் பல ஆக்க விளைவு, பக்தி உணர்வு, மந்த புத்தி நீங்குதல் ஆகிய பலன்கள் உண்டாகும்.
 • மருவத்துார் வரும்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று நிமிட நேரம் தியானம் செய்து விட்டுச் செல்.
 • கண்களை திறந்து வைத்துக்கொண்டுதான் வெளியுலகத்தை பார்க்க முடியும் என்பதில்லை. தியானம் பழகி வந்தால் இந்த உண்மை புரியும்.
 • தியானத்தின் போது நீங்கள் சிறுவயதில் செய்த தவறுகள் துரோகங்கள் உங்கள்முன் வருகின்றன. அவற்றை அப்படியே விடு! பின்னால் அந்த எண்ணங்கள் மாறும்.
 • மற்றவா்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக மந்திரங்களை படிப்பதைக் காட்டிலும் இருட்டறையில் இருந்துகொண்டு தியானம் செய்வது சிறப்பு.
 • கஸ்டங்கள் வரும்போது தியானத்தை மேற்கொள்ள வேண்டும். ஜந்து நிமிடம் மௌனம் இருக்க வேண்டும்.
 • அறுகோணம் போல் கால்களை வைத்துக்கொண்டு சின் முத்திரையுடன் தியானம் செய்ய வேண்டும்.
 • தீ யானம் இருண்டும் கொண்டது தியானம் ஆகும். தீ என்பது தீய பழக்கங்களை குறிக்கும். யானம் என்பது பாத்திரங்களைக் குறிக்கும். உன் மனம்தான் அந்தப் பாத்திரம். உன் மனம் என்ற பாத்திரத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி நீ தெய்வ நிலைக்கு உயர வேண்டும் என்பதற்காகவே தியானம்!
 • எப்போதெல்லாம் உன்மனம் குழம்புகிறதோ அப்போதெல்லாம் ஒரு பத்து நிமிடம் மௌனமும் தியானமும் மேற்கொள்.
 •  
 • எவ்வளவுதான் ஓடியாடி அலைந்தாலும் சில நிமிட நேரமாவது தனிமையில் அமா்ந்து தியானம் பழகு. தியானத்தில் இரு.
 • தியானம் தான் மனக்கட்டுப்பாட்டிற்கு வழி!
 • தியானம் தான் எல்லாவற்றிற்கும் சிறந்தது!
 • தியானம் தான் ஒருவன் வளா்ச்சிக்கு அடையாளம்!
 • தியானம் தான் எல்லாவற்றிலும் மேலான பொருள்!
 • தியானம் தான் நிதானத்தைக் கொடுக்கும்!
 • தியானத்தால் எல்லாவற்றையும் அடையலாம்!

தியானம் –

தியானம் – வழிமுறைகள்

தியானம் என்றால் ஆழந்து சிந்தித்தல் என்ற பொருளாகும். தியானம் பழகி அதில் நிலைபெற்றவா்கள் பொருள்களைக் காட்சியாகக் கண்டு ஆராய்வதால் உண்மையான ஆனந்தத்தையும், இன்பத்தையும் பெறலாம். விலங்குகளிற்கு புலன்களில் இன்பம். மனிதனுக்கு அறிவில் இன்பம். தேவா்களுக்கு ஆழ்ந்த தியானத்தில் இன்பம். இந்த ஆழ்ந்த தியானத்தை அடையும் ஆன்மாக்களுக்கே இந்த உலகம் இன்பமாகத் தோன்றும். எதையும் விரும்பாது எதனிடமும் ஒட்டிக் கொள்ளாது இருக்கும் ஒருவனுக்கு இயற்கையில் ஏற்படும் மாறுதல்கள் அழகும், தெய்வீக அமைப்பும் கொண்டதாகத் திகழும். எண்ணங்கள் அலைகளாக இருக்கும் பொழுதே அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை மனம் பெறுகிறது. மனதின் எதிர்ச்செயலை மட்டும் புரிந்து கொள்ளும் தன்மையைப் பெறும்போது யோகிக்கு எல்லா அறிவும் கிடைக்கும். புலப்படுகின்ற பொருள்களோ அல்லது எண்ணங்களோ மனதில் உண்டாகும் எதிர்ச்சக்தியின் விளைவே ஆகும். இந்திலையில் அவன் தனது மனதின் அடித்தளத்தைக் காண்பான். அது அவனுடைய கட்டுப்பாட்டுக்கு வரும்போது யோகிக்குப் பல சித்திகள் கிடைக்கும். இச்சித்திகளில் ஏதாவது ஒன்றில் மனதைப் பறி கொடுத்தாலும் அவனுடைய முன்னேற்றம் தடைப்பட்டுவிடும்.
மனத்தை ஒரு பொருளின் மீது 12 நொடிகளுக்கு நிலைநிறுத்தினால் அது தாரணை எனப்படும். 12 தாரணைகள் ஒரு தியானம் ஆகும். 12 தியானங்கள் ஒரு சமாதி ஆகும்.
உங்களில் யாராவது நோயுற்றிருந்தால் அவரோ மற்றவரோ நோயுற்றவரைத் தன் மனதில் எண்ணி அவா் நலமாக உள்ளார் என்று மனதிற்குள் சொல்லித் தியானிக்கவும். இதனால் அவா் விரைவில் குணமாவார். உங்களிடையே பல ஆயிரம் மைல் தூரம் இருந்தாலும் இது பலனளிக்கும்.
நோயுற்றிருக்கும்போது “நாம் ஆன்மா எனக்கு நோய் ஏது?” என்று சொன்னால் நோய் பறந்து விடும்.
தியானத்துக்குரிய சில வழிமுறைகள்
தியானம் செய்யும் போது நிமிர்ந்து உட்காரவும். மூக்கின் நுனியைப் பார்க்கவும். காட்சி நரம்புகள் இரண்டையும் அடக்குவதால் எதிர்ச்செயலுக்குரிய வட்டத்தை வழிப்படுத்தி அதன் மூலம் சித்தத்தை வசப்படுத்தலாம்.
தலைக்கு உயரே சில அங்குலங்களுக்கு அப்பால் ஒரு தாமரை இருப்தாக நினைக்கவும். நற்குணங்களை அதன் மையமாகவும், ஞானத்தை அதன் காம்பாகவும் நினைக்கவும். தாமைரையின் எட்டு இதழ்களும் சாதகனின் அஷ்டமா சித்திகளைக் குறிக்கும். தாமரைப் பூவின் உள்ளே இருக்கும் கேசரங்களும், சூலகமும் தியானத்தைக் குறிப்பதாகக் கொள்ளுங்கள். புறத்தினின்று வருகின்ற சித்திகளைத் தியானம் செய்வதால் சாதகன் முத்தி அடைவான். அருள் திரு அடிகளார் அவா்களின் பொற்பாதங்கள், சுயம்பு அல்லது அன்னையின் திருமுகம் ஏதாவது ஒன்றினை ஆழ்மனதில் நிறுத்தித் தியானத்தில் ஈடுபடவேண்டும்.
உங்கள் இதயத்தில் ஒரு சிறு இடைவெளி இருப்பதாகவும், அதிலே ஒரு சுடா் எரிவதாகவும், அச்தச் சுடரை உங்கள் ஆன்மாவுக்கு ஆன்மாவாகிய கடவுளாகவும் நினைத்து அதனைத் தியானிக்கவும்.
சாதகா்களுக்கு
 1. சூரியன் உதிக்கும் காலை நேரம் (3.00 – 6.00) சூரியன் மறையும் மாலை நேரம், உச்சி வேளை (பகல் 12.00) என்று வகுத்துக்கொள்ள வேண்டும்.
 2. ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தியானத்திற்காக ஒதுக்கி வைத்து அந்த நேரம் வரும்போது தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். இவ்விதம் தொடா்ந்து செய்தால் மனம் அதற்கு ஏற்ப அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் சுலபமாக தியானத்திற்கு ஒத்துளைக்கும். அந்த நேரத்தை மனம் இயல்பாகவே அமைதியாக இருக்கும்.
 3. ஆரம்ப நிலையில் உள்ளவா்களுக்கு மனம் ஈடுபாடு கொள்ளவில்லை என்றாலும்கூட மனதை ஒரு குறிப்பிட்ட ஆன்மிக இலட்சியத்தை நோக்கி செலுத்துவதே கடினமாக இருந்தாலும் கூட தியானம் செய்ய வேண்டும். இத்தகைய பொறுமை நாளடைவில் திருப்திகரமான நல்ல ஆன்மீகப் பலன்களைத் தரும்.
 4. தியானம் செய்யும் போது ஒருவா் வேறு எந்த வேலையும் வைத்துக்கொள்ளக் கூடாது.
 5. தியானத்திற்கு முன்பும், பின்பும் தீவிரமான செயல்களில் ஈடுபடக்கூடாது.
 6. உணவு, வேலை, பொழுதுபோக்கு, களியாட்டங்கள் போன்ற விஷயங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளாவன
 • இயன்றவரையில் உணவு தூய்மையாக இருக்க வேண்டும். உண்பதற்கு முன்பு அன்னையை நினைக்க வேண்டும்.
 • எல்லாச் செயல்களும் மிதமாகவும், அளவுக்கு மீறாமலும் இருக்க வேண்டும்.
 • தியானம் செய்யும் போது நீண்ட நேரம் அசையாமல் அமர்ந்திருக்க வேண்டும். இதை உடல் நலம் நன்றாக இருந்தால் தான் செய்ய முடியும். நரம்புகள் இயல்பான அமைதி நிலையில் இல்லாவிட்டால் கழுத்திலும் தோட்பட்டடையிலும் சிறுசிறு அசைவு ஏற்படும். அசையாமல் இப்படி அமா்ந்திருக்கும் நிலை தியானத்திற்கு உகந்தது. இது உடல் அசௌகரியங்களிலிருந்து ஒருவரைப் பாதுகாக்கிறது.
 • தியானம் செய்வதற்கு முன்பு “ஏன் தியானம் செய்ய வேண்டும்?” என்பது குறித்து ஒருவா் வலுவான காரணம் கொண்டிருக்க வேண்டும். நல்ல உயா்ந்த இலட்சியத்தால் ஒருவா் ஈா்க்கப்படவில்லை என்றால் ஒருவா் செய்யும் தியானம் வலிமையற்றதாகவும், சாதாரணமானதாகவும் இருக்கும். நன்றாகத் தியானம் செய்வதற்குப் போதிய கவனம் ஒருவரால் செலுத்த முடியாமல் போகும்.
ஒருவா் ஆன்மிகத்தில் தீவிரமாக எதை விரும்புகிறாரோ அதைப்பற்றிய தியானமே அவருக்கு மிகவும் சிறந்த முறையில் அமையும்

மௌனம்

மௌனம்

மௌனம் ஒரு உன்னதமான வழிபாட்டு முறையாகும். இதை முடிந்த அளவிற்குத் தினமும் கடைப்பிடித்து வந்தால் மனம் ஒருநிலைப்படும். இல்லையேல் குரு நாளாகிய வியாழன், அமாவாசை, பெளா்ணமி நாட்களில் மௌனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆரம்பத்தில் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை மௌனத்தைக் கடைப்பிடித்து அது நாளாக நாளான சுமார் ஒரு மணி நேரம் வரை அதிகப் படுத்துவது மிகவும் நல்லது. மௌனம் மனத்தை ஒருநிலைப்படுத்த வல்லது. தொடா்ந்து மௌனத்தைக் கடைப்பிடிப்பவா்கள் எளிதில் சஞ்சலம் அடைய மாட்டார்கள். மனமும் வலமையடையும் அவா் எண்ணங்களும் உறுதி பெறும்.
மௌன விரதம் மேற்கொள்வதற்கு ஐந்து விடயங்கள் தேவை
 1. மௌன விரதம்
 2. பால், பழவகை போன்ற எளிய உணவு
 3. இயற்கை அழகு மிக்க இடத்தில் தனியாக இருத்தல்
 4. குருவின் நேரடித்தொடா்பு
 5. குளிச்சியான இடம்
தினமும் ஒருமணி நேரம். வாரத்திற்கு 3 மணி நேரம். மாதத்தில் ஒரு முழுநாள். இப்படி மௌன விரதம் பழகி வரவேண்டும். இதனால் கிடைக்கும் ஆனந்தம், அமைதி, புத்துணா்ச்சி ஆகியவற்றை அனுபவத்தில் உணர முடியும்.

திருவிளக்கின் தத்துவம்

திருவிளக்கின் தத்துவம்
குத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூா்த்திகளின் வடிவம். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா! நடுத்தண்டு விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் சிவன்! அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன்! சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன்! விளக்கின் சுடா் லட்சுமி! ஒளி சரஸ்வதி! வெப்பம் பார்வதி ஆகும்.
திரு விளக்கில் உள்ள ஐந்து முகங்களும் நமது ஐம்புலன்களையும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதங்களையும் குறிக்கும் என்பது சிலா் கூறும் விளக்கம்.
விளக்கின் ஐந்து முகங்களும், சூரியன், சந்திரன், அக்கினி, சொல், உயிர் என்ற ஐந்தைக் குறிக்கும். பஞ்ச முகங்களிலும் உள்ள திரிகளைச் சுடர்விடச் செய்தால் ஆத்ம ஒளி உண்டாகும் என்பது யக்ஞ வல்கியா் கூறும் விளக்கம்.
குத்து விளக்கும் பெண்மையும்
குத்து விளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களைக் குறிக்கும் என்பது சிலா் கூறும் விளக்கம். அவை: 1. அன்பு 2. மன உறுதி 3. நிதானம் 4. சமயோசித புத்தி 5. சகிப்புத் தன்மை ஆகியன.
விளக்கிற்கு ஏற்ற எண்ணெய்
 1. பசு நெய் – லட்சுமி வாசம் செய்வாள், புத்திர பாக்கியம் கிட்டும்.
 2. நல்லெண்ணெய் – சனியால் பீடிக்கப்பட்டோருக்குப் பரிகாரமாக அமையும். லட்சுமி அருள் கிட்டும்.
 3. தேங்காய் எண்ணெய் – பலவிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும். கணவன் மனைவியரிடையே பாசத்தை உண்டாக்கும். பழம்பாவங்கள் நீங்கும்.
 4. இலுப்பை எண்ணெய் – எல்லாப் பாவங்களும் போகும். மோட்சம் கிட்டும். நல்ல ஞானம் வரும். பிறவி நீங்கும்.
 5. விளக்கு எண்ணெய் – தெய்வ அருள், புகழ், சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவற்றை அதிகரிக்கச் செய்யும்.
 6. வேப்ப எண்ணெய் – குல தெய்வத்தின் அருள் கிட்டும்.
 7. முக்மூட்டு எண்ணெய் – நெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய் – ஆகிய மூன்றையும் கலந்து விளக்கேற்றி வர செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும், இறை வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.
விலக்க வேண்டியவை
கடலை எண்ணெய், பாமாயில், கடுகு எண்ணெய் முதலியனவை கூடாது.
விளக்கு ஏற்ற வேண்டிய திசைகள்
 1. கிழக்குத் திசை நோக்கி விளக்கேற்றுவது சிறப்பு, துன்பங்கள் நீங்கும், கிரகங்கட்கு மகிழ்ச்சி ஏற்படும்.
 2. மேற்குத் திசை நோக்கி விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கும். சனி கிரகத்திற்கு உவப்பு ஏற்படும், பகை நீங்கும்.
 3. வடக்குத் திசை நோக்கி விளக்கேற்றி வந்தால் திருமணத்தடை, சுபகாரியத்தடை, கல்வித்தடை, வேலைவாய்ப்புத் தடை நீங்கும்.
 4. தெற்குத் திசை நோக்கி எப்போதும் விளக்கேற்றக் கூடாது. அதனால் தீமைகளே ஏற்படும்.
விளக்குக்கு ஆசனம்
விளக்குகளை வெறும் தரையில் வைக்கக் கூடாது. அவற்றை வெள்ளி, செம்பு, பித்தளை, பஞ்ச லோகம் முதலியவற்றாலான ஒரு தாம்பாளத்தின் மீதே வைக்க வேண்டும். அல்லது மரத்தினாலான பலகையின் மீதாவது வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
விளக்கு ஏற்றும் நேரம்
காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் சா்வ மங்களயோகத்தைத் தரும்.
மாலை 6.00 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.
காலையில் விளக்கேற்றும் போது உடல், மனம் சுத்தத்துடன் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போட்ட பிறகே விளக்கேற்ற வேண்டும்.
மாலையில் விளக்கேற்றும் போது, வாசலில் தண்ணீா் தெளித்துக் கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.
காலை, மாலை விளக்கேற்றும் போது கொல்லைப் புறக் கதவைச் சாத்தி விட வேண்டும்.
விளக்கேற்றும்போது, விளக்கிற்குப் பால், கல்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட எல்லா நன்மைகளும் கிட்டும்.
எரியும் விளக்கைத் தூண்டும் முறை
விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த விளக்குக்குரிய தேவதை ஆவாகனமாகி விடுவதால், விளக்கு எரியும்போது அதன் திரியில் சிட்டத்தைத் தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. திரியைப் பெரிதாக்கி வெளிச்சத்தைக் கூட்டலாம்.
நேரம் ஆக, ஆக விக்கின் ஒளி மங்கிக் கொண்டேவந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரியில் அருகே புதுத்திரி ஒன்றை ஏற்றிப் பின்னர் பழைய திரியை எடுத்துவிட வேண்டும்.
விளக்கைக் குளிர வைக்கும் முறை
விளக்கேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து விளக்கு தானாகவே அணையும் வரை விட்டு விடுகின்றனா். அது தவறு! விளக்கு ஏற்றியதிலிருந்து அதனைக் குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
விளக்கை வாயால் ஊதியோ, வெறுங்கையாலோ அணைக்கக் கூடாது. விளக்கைக் குளிர வைக்க வேண்டுமானால் திரியில் அடிப்பகுதியை பின்புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடா் சிறிது சிறிதாகக் குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து விளக்கு குளிரும்.
எலுமிச்சம்பழ விளக்கு
எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்துவிட்டு, அதன் தோலை விளக்குகளாக்கி அதில் நெய் விட்டு ராகு நேரத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுவது உண்டு. இதனால் திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
விளக்கின் திரி
 • பருத்திப் பஞ்சினால் ஆன திரி நல்லவை அனைத்தும் செய்யும்.
 • இலவம் பஞ்சினால் திரிக்கப்பட்ட திரி சகல பாக்கியங்களையும் தரும்.
 • தாமரைத் தண்டின் நூலால் திரிக்கப்பட்ட திரியானது முற்பிறவியில் செய்த பாவத்தைப் போக்கும். செல்வம் நிலைத்து நிற்கும்.
 • வாழைத் தண்டின் நாரினால் உருவாக்கப்பட்ட திரியைப் பயன்படுத்துவதால் குழந்தைச் செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம் குடும்பசாபம் முதலியவை நீங்கிச் சாந்தி உண்டாக்கும். குலதெய்வக் குறைபாடு நீங்கும்.
 • வெள்ளை எருக்கன் பட்டையில் திரித்த திரியால் பெருத்த செல்வம் தரும். பேய் பிடித்தவர்கட்கு அதன் தொல்லைகள் நீங்கும்.
 • புது மஞ்சள் சேலைத் துண்டால் செய்யப்பட்ட திரி – அம்மன் அருள் கிட்டும். வியாதிகள் குணமாகும் காற்றுச் சேட்டைகள் நீங்கும்.
 • சிவப்பு நிறச் சேலைத் துண்டினால் திரிக்கப்பட் திரி திருமணத் தடை நீங்கும். மலட்டுத் தன்மை நீங்கும். பிசாசுத் தொல்லை செய்வினை தோஷங்கள் விலகும்.
 • பன்னீா் விட்டுக் காயவைத்த புது வெள்ளைத் துணியினால் திரிக்கப்பட்ட திரி – உத்தம பலன்கள் அத்தனையும் கிடைக்கும்.
 • விளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள்
 1. வெள்ளிக் கிழமை
 2. கார்த்திகை, திருவாதிரை, பூரம், விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள்
 3. பௌர்ணமி
 4. அமாவாசை
 5. சதுர்த்தி திதி
 6. பஞ்சமி திதி
 7. ஏகாதசி திதி
 8. நவராத்திரி
 9. சிவராத்திரி
10. ஆடிச் செவ்வாய்
11. ஆடி வெள்ளி
12. தைச் செவ்வாய்
13. தை வெள்ளி
ஆகிய நாட்கள் பூஜைக்கு ஏற்ற நாட்கள்
வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் கூட்டுவழிபாடாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையைத் தரும்.
விளக்கு பூஜையில் கவனிக்க வேண்டியவை
 1. விளக்கு பூஜையில், விளக்கிற்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் தாலியிலும், தரை உச்சி வடுகிலும் வைத்துவர அவா்களது கணவா்கள் நலமுடன் வாழ்வார்கள்
 2. திருவிளக்குப் பூஜை செய்யும் போது குத்து விளக்கைத் தலை வாழை இலை மீது வைத்துப் பூசை செய்ய வேண்டும். அதனால் அந்தக் குடும்பம் வாழையடி வாழையாகச் செழிப்புற்று ஓங்கும்.
 3. விளக்கின் சுடா் நிதானமாக எரிய வேண்டும். நடுங்கக் கூடாது. புகையக் கூடாது. மெல்லத் தணிந்து அடங்கக் கூடாது.
 4. விளக்கில் குளம் போல எண்ணையை ஊற்றித் தீபம் ஏற்ற வேண்டும்.
 5. விளக்கின் சுடரில் மகாலட்சுமி நிறைந்து நிலைத்து, நிற்கின்ற காரணத்தால், அச்சுடரைக் கையாலும், கையால் வீசிய காற்றாலும், வாயால் ஊதியும் குளிர வைப்பது குற்றமாகும்.
 6. அதிகாலையில் எழுந்ததும் பூஜை அறையில் குத்துவிளக்கு, அல்லது காமாட்சி விளக்கு ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும்.
 7. விளக்கு என்பது லட்சுமி வாசம் செய்யும் இடம். அது மங்கலச் சின்னம். உங்கள் வீடு பிரகாசமாக இருக்க வேண்டின் எப்போதும் விளக்கும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
அடுப்பேற்று முன்பாக
சுமங்கலிப் பெண்கள் காலையில் குறித்துவிட்டு, காமாட்சி விளக்கேற்றியோ, ஓம் சக்தி விளக்கேற்றியோ வழிபட்டு, அதிலிருக்கும் தீப ஒளியைக் கொண்டு அடுப்பேற்றி வர சகல நன்மைகள் ஏற்படும்.
விளக்கேற்றியவுடன் செய்யக் கூடாதவை
 1. விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.
 2. வீட்டைப் பெருக்கக் கூடாது.
 3. விளக்கேற்றியவுடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.
 4. விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது.
 5. விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது.
 6. விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.
 7. விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.
 8. விளக்கேற்றி விட்டு உடனே தலை குளிக்கக் கூடாது.
மேற்கண்டவாறு செய்தால் வீட்டில் லட்சுமி வாசம் செய்ய மாட்டாள். அதனால் தரித்திரமே குடிபுகும்.
விளக்குப் பூசை பற்றிப் புராணங்கள் சொல்வன, காலம் காலமாக நம்பிக்கையாக இருப்பன. சாத்திரங்களில் கூறப்படுவன இவை!

சில காலக் கணக்கீடுகள்

சில காலக் கணக்கீடுகள் கற்றுக் கொள்வோம்.

***********************

மனிதர்களின் ஒரு வருடம்(365 மனித நாட்கள்)= தேவர்களின் ஒரு நாள்.மனித வருடங்கள் 360=தேவர்களின் ஒரு வருடம்கிருதயுகம் – 4800 (தேவ வருடம்) =17. 28 இலட்சம் மனித வருடங்கள்திரேதாயுகம் – 3600 (தேவ வருடம்) =12.96 இலட்சம் மனித வருடங்கள்துவாபரயுகம் – 2400 (தேவ வருடம்) =8.64 இலட்சம் மனித வருடங்கள்கலியுகம் – 1200 (தேவ வருடம்) =4.32 இலட்சம் மனித வருடங்கள்ஒரு சதுர்யுகம்.=தேவ வருடம் 12,000=12,000 *360=43.2இலட்சம் மனித வருடங்கள்இரண்டாயிரம் சதுர்யுகங்கள் கொண்டது பிரம்மாவிற்கு ஒரு நாளாகும்.

யுகங்களின் பண்புகள்

ஸநாதன தர்மப்படி யுகங்கள் (கால அளவு) நான்கு ஆகும். அவை கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் எனப்படும். இவைகள் வரிசைக்கிரமமாக ஒன்று முடிந்து ஒவ்வொன்றாக தோன்றும். இவை வேத கருத்துகள்.
யுகங்களின் பண்புகளை இங்கே பார்ப்போம்.
கிருதயுகம்
இறைவனை நேருக்குநேர் நிற்பது போல காணமுடியும். பேசமுடியும்.
புண்ணியம் செய்ய வாய்ப்பே இல்லை, ரொம்ப கஷ்டம். ஏனென்றால் எல்லாரும் நல்லவர்களாகவே இருப்பார்கள்.
தர்மம் செய்ய வேண்டும் எனில் அதைப்பெற்றுக் கொள்வோர்கள் கிடைப்பது மிகக்கடினம்.
சிறுபாவமும் பெரிய துன்பத்தைக் கொடுக்கும்.
திரேதாயுகம்
இறைவனை கொஞ்சம் முயற்சி செய்தால் காணலாம். பேசலாம்.
மனிதர்களின் குணங்கள் 75 சதவிகிதம் நல்லவையாகவும் மீதி கெட்டவைகளாகவும் இருக்கும். தர்மம் பெற்றுக் கொள்வோர்களுக்கு அதை வாங்க உபதானங்கள் கொடுத்தால் தான் தர்மம் முழுமையடையும்.
துவாபரயுகம்
இறைவனைக்காண கடும் முயற்சி செய்ய வேண்டும். காண்பது அரிது, கடும் முயற்சியால் உணர முடியும்.
மனிதர்களின் குணங்கள் பாதி நல்லவையாகவும் மீதி கெட்டவைகளாகவும் இருக்கும். பாவ புண்ணியங்கள் சரிசமமாக இருக்கும்.
கலியுகம்
இறைவனை காண முடிவது சாத்தியமல்ல.
ஆனால் புண்ணியம் செய்ய அதிக வாய்ப்பு. சிறு நல்ல செயலும் பெரிய புண்ணியத்தைக்கொடுக்கும். ஆனால் எல்லாச் செயலிலும் பாவம் புண்ணியம் சேர்ந்தே இருக்கும். இது தவிர்க்க இயலாதது. நல்லவர்களைக் காண்பது மிக அரிது. அவ்வாறுக் கண்டாலும் அவர்களிடம் ஒரு சில கெட்டவைகளும் இருக்கும்.
நாம் இப்போது கலியுகத்தில் வாழ்கிறோம்.

மனிதர்களின் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்வானா?

பாவிகளே! உங்கள் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்கிறான். இங்கே வாருங்கள்!” என்று கூவிக்கூவி அழைப்பவர்கள் இருக்கிறார்கள்! ஏதோ பாவம் என்ற பொருளை இறைவன் ‘ரீபர்ச்சேஸ்’ செய்து கொள்கிறார் என்பது போல் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு அந்தக் கடைகளுக்குச் சென்று தங்கள் பாவங்களை குறைந்த விலைக்கு விற்றும் வருகிறார்கள். இறைவன் அதை வாங்கிக்கொள்கிறான் என்பது இந்த அப்பாவிகளின் நம்பிக்கை. பாவம்!
உண்மையில் பிறக்கும் மனிதர்கள் எல்லோரும் பாவிகளா என்றால் இல்லை என்கிறது இந்து தர்மம். நாம் செய்யும் கர்மங்களின் வினைப்பயனாகவே பிறப்பும் இறப்பும் அமைந்து விடுகிறது என்கிறது இந்து மத உபதேசங்கள்.
சரி கர்மம் என்றால் என்ன? கர்மம் என்றால் செயல்கள் என்று பொருள். செயல்களில் பாபமும் அடக்கம், புண்ணியமும் அடக்கம். அதற்கான வினைப் பயன் நமது அடுத்த பிறவியிலும் தொடர்கிறது. இது ஒரு சங்கிலித் தொடர் போன்று அமைகிறது. நன்மை செய்பவனும், தீமை செய்பவனும் அதற்கேற்ற பிறவிகளை அடைகிறான் என்கிறது உபநிஷத்து.
“மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்” என்கிறார் உபநிஷத்தில் எமதர்மன்.
சரி இப்படி இருக்கும் போது பாபங்களை இறைவன் எடுத்துக் கொள்வான் என்று கூறப்படுவது சரியா? இறைவன் மனிதர்களின் பாபங்களை எடுத்துக் கொள்வாரா? ஓரிடத்திலிருந்து குப்பையை அகற்றினால் இன்னொரு இடத்தில் கொட்ட வேண்டும். குப்பைகள் கொட்டப்பட்ட புதிய இடம் நாற்றமடிக்கும். அந்நாற்றத்தை அகற்ற வேண்டுமானால் அங்கே இருந்தும் அதே குப்பைகளை அகற்ற வேண்டும். பாபங்களும் அப்படித்தானே! மனிதர்களின் பாபங்களை இறைவனிடம் கொடுத்து விட்டால் இறைவன் பாவியாயிற்றே! அவன் தன் பாபத்தை கழிக்க அதை யாரிடம் கொடுப்பார்? சரி எல்லா பாபங்களையும் வாங்கி ஜீரணிக்கும் அளவு சக்தி படைத்தவன் இறைவன் என்று வைத்துக் கொள்வோம், அப்படி பாபம் செய்யும் மனிதர்களை அவன் படைப்பானேன் பின் அதனை தானே வாங்கிச் சுமப்பானேன்? பாபங்களே செய்யாத மனிதர்களை இறைவன் படைக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை?
இங்கே தான் நாம் படைப்பின் ரகசியம் பற்றிய ஒரு தெளிவைப் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. இறைவன் கோடான கோடி உயிரினத்தையும் , பல கோடி விண்மீன்களையும், நட்சத்திரங்களையும் மெனக்கெட்டு உட்கார்ந்து படைத்துக் கொண்டிருக்கவில்லை என்பதே நிதர்சனம். இவை யாவும் பொதுவாக வியாபித்திருக்கும் ஒரு சக்தியில் இருந்து உண்டானது. பரிணாமங்களும் அதன் வளர்ச்சியும் தானே நடக்கும் செயல்கள். அதாவது கர்மங்கள். அந்த கர்ம வினைகளின் பலனாகவே பாபமும் புண்ணியமும். இவை யாவும் தானாகவே நடந்தேருபவை. இவைகளை இறைவன் என்ற ஒரு உருவகம் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று என்பதை இந்து தர்மத்தின் பல்வேறு விளக்கங்களை படித்தாலே புரிந்து கொள்ள முடியும்.
தானாகவே உண்டான படைப்பின் ரகசியத்தை முண்டக உபநிஷத்து இவ்வாறு தெளிவாக்குகிறது.
தஸ்மாதக்னி: ஸமிதோ யஸ்ய ஸூர்ய:
ஸோமாத் பர்ஜன்ய ஓஷதய: ப்ருதிவ்யாம்|
புமான் ரேத: ஸிஞ்சதி யோஷிதாயாம்
பஹ்வீ: ப்ரஜா: புருஷாத் ஸம்ப்ரஸுதா:||
தஸ்மாத் – அவரிடமிருந்து; அக்னி – நெருப்பாலான க்ரகங்கள்
பஹ்வீ – பலவிதமான; ப்ரஜா: – உயிரினங்கள்; ஸம்ப்ரஸுதா:
- உண்டாகின்றன.
“அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டானது. சூரியன் அந்த வானுலகை ஒளிரச் செய்கிறான். சந்திரனிலிருந்து மேகங்கள் உண்டாயின. பூமியில் வளர்கின்ற செடிகொடிகள் மேகங்களின் காரணமாக உண்டாயின. ஆண் பெண்ணிடம் விந்துவை விடுவதன் மூலம் உயிர்கள் தோன்றின. இவ்வாறு அந்த இறைவனிலிருந்தே பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன.” – முண்டக உபநிஷத்து.
இங்கே இறைவன் என்பதை ப்ரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் அளவிட
முடியாத சக்தி என்று கொள்வோம். அந்த அளவிட முடியாத சக்தியின் வாயிலாகவே எல்லாம் தோன்றியது என்று முண்டக உபநிஷதம் விளக்குகிறது. கவனிக்க, இறைவன் ஒவ்வொரு கிழமையாக ஒன்னொன்றையும் படைத்தான் என்று கூறவில்லை. இறைவனிடமிருந்து தோன்றியது என்று தான் கூறுகிறார்கள். ஆக இறைவனிடமிருந்து தோன்றியதே தவிற அவன் உட்கார்ந்து ஓவர் டைம் போட்டு படைக்கவில்லை. அதனாலேயே இறைவன் என்பதை ப்ரபஞ்சத்தின் சக்தியாக நாம் புரிந்து கொள்வோம். அப்படி எடுத்துக் கொண்டால் படைப்பின் (ப்ரம்மத்தின்) ரகசியத்தை இன்னும் எளிதாக நாம் புரிந்து கொள்ளலாம்.
சரி, படைப்பு என்பது ப்ரபஞ்சத்தில் இருந்து ஒரு சங்கிலித் தொடராக உண்டானது என்று கொண்டால், கர்மவினை, பாபம், புண்ணியம் போன்றவை எங்கிருந்து துவங்கியது என்பதையும் அறிய முற்படுவோம் அல்லவா. அந்தச் சங்கிலித் தொடரைப் பார்க்கலாம்.
அறிவியலாளர்களின் பிக் பேங்க் தியரியும் – முண்டக உபநிஷத்தின் மேற்கண்ட ப்ரம்மத்தின் தோற்றமும் ஒன்று படுவதை இங்கே கவனிக்கலாம். ஒரு நெருப்பு பிழம்பிலிருந்து பிரிந்தது தான் நாமிருக்கும் இந்த அண்ட வெளி என்கிறார்கள் அறிவியலாளர்கள். “அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டானது” – முண்டக உபநிஷத்து. இறைவன் = ப்ரபஞ்ச சக்தி.
இப்போது முதல் கர்மம், கர்மவினை அதனால் உயிர்த் தோற்றம் அவற்றினால் உண்டான பாபம் புண்ணியம் போன்றவற்றை முண்டக உபநிஷத்தின் வழியில் விளக்கமாகப் பார்ப்போம்!
ஒரு நெருப்பு பிழம்பிலிருந்து பிரிந்தது தான் நாமிருக்கும் இந்த அண்ட வெளி. நம்முள் எந்த பொருளுக்கு ஆத்மா என்று பெயரோ அதே பொருள் தான் சூரியனின் மையப்பகுதியிலும் இருக்கிறது. பூமியின் மையத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் நெருப்பு பிழம்புதான் பூமிப்பந்தின் ஆத்மா எனக் கொள்வோம். சுழலுவதும் மழை பெய்வதும் அதன் கர்மா! அந்த மழையால் இடியும் மின்னலும் உண்டானது கர்ம வினை. அந்த கர்ம வினையின் பயனாகத் தோன்றிய முதல் உயிரி அமீபா! அந்த அமீபாவின் கர்மம் இனவிருத்தி என்று கொண்டால் அந்த கர்ம வினையின் பயன் பரினாம வளர்ச்சி, செடி கொடி முதல் மனிதர்கள் வரை.
ஆக பிரபஞ்சத்தின் நிலையில்லா கர்மமும் அதன் வினையும் தான் ‘நாம்’. ஆக நாம் பிறந்ததும் நம்முடைய வாழ்க்கை சுழல்வதும் நமக்கு மேல் இருக்கும் மிகப்பெரிய சக்தியான பிரபஞ்சத்தின் கர்மத்தால் உண்டானது. ஆக பிக் பேங்க் வெடிப்பு முதல் கர்மம் என்று நமது சிற்றறிவிற்கு எட்டியவரைக் கொள்ளலாம். ஆக முதல் கர்மாவிலும் முதல் உயிரின் தொடக்கத்திலும் பாவம் புண்ணியம் இருக்கவில்லை. பின் உயிர்கள் ஒன்று இரண்டான போது ஒன்றின் பசிக்கு இன்னொன்று உணவானபோது தான் பாவமும் புண்ணியமும் பிறந்திருக்க வேண்டும். பின்னர், முதல் பாவம் அதற்குப் பலனாக வேறு பிறப்பு, பின்னர் அதில் பாவம் அதனால் இன்னொரு பிறப்பு என்று நீண்டு ‘நம்’ வரை வந்திருக்கிறோம்.
ஆக இந்த ப்ரம்மத்தின் ரகசியத்தைப் புரிந்து கொண்டு அதை உணர்ந்து வாழ்பவர்கள் யாரோ அவர்களே ஞானிகளாகின்றனர். அவர்கள் தங்களது ஞானத்தால் உணர்வுகளை இறைவனிடமே (அல்லது ப்ரபஞ்சத்தின் சக்தியிடமே) நிலை பெறச்செய்து இறுதியில் அதனுடனேயே கலந்து விடுகிறார்கள். அவ்வாறு இறைசிந்தனையில் ஆழ்ந்து கர்மங்களை தொலைப்பவர்கள் பாபங்களில் இருந்து தாமாகவே விடுபடுவார்கள்.
ஸ்ரீ க்ருஷ்ணர் இதை மெய்ப்பிக்கிறார்.
கீதைக்கு வருவோம், ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனிடம் இவ்வாறு கூறுகிறார் –
“அர்ஜுனா! செயல்களையோ அவற்றைச் செய்யும் உரிமையையோ, செயல்களின் பயனோடு ஒன்றுபடும் தன்மையையோ இறைவன் இவ்வுலகில் ஏற்படுத்தவில்லை. அவ்வாறு செய்வது இயற்கையின் வேலை” என்கிறார்.
மேலும் “அர்ஜுனா! எங்கும் நிறைந்த இறைவன் எவருடைய பாவத்தையோ, புண்ணியத்தையோ வாங்கிக் கொள்வதில்லை. எவருடைய குணங்களையும் பொருட்படுத்துவதில்லை, அறிவு அறியாமையால் மறைக்கப்பட்டுள்ளது. எனவே உயிர்கள் மாயையில் மூழ்கி உள்ளன.” என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.
“அர்ஜுனா! யோகிகள் அறிவை இறைவனிடத்தில் நிலைக்கச் செய்வதாலும், அவர்கள் ஆன்மாவும் அதுவாகவே இருப்பதாலும், அதிலேயே நிலை பெறுவதாலும், அதுவே அவர்களுடைய மேலான லட்சியமாக இருப்பதாலும், அவர்களுடைய பாபங்கள் அனைத்தும் ஞானத்தால் அழிக்கப்பட்டு மீண்டும் பிறவாத நிலையான மோட்ச பதவியை அடைகிறார்கள்.” - ஸ்ரீ க்ருஷ்ணர், ஸந்யாஸ யோகம்.
அதாவது பாபங்கள் யாருக்கும் தாரைவார்த்துக் கொடுக்கப்படுவதில்லை. தன்னுடைய உணர்வுகளை இறைவனிடத்திலே செலுத்தி கர்மங்கள் அதாவது பாபமோ, புண்ணியமோ எந்த விதமான உணர்ச்சிப்பூர்வ செயலிலும் ஈடுபடாமல் இறை சிந்தனையிலேயே கலந்து விடுபவர்கள் தன்னுடைய பாபங்களில் இருந்து தானே விடுபடுகிறான் என்பதே கீதோபதேசம்.
ஆக இந்து தர்மத்தின் எந்த உயர்ந்த உபதேசங்களும் இயற்கைக்கு மாறான நம்பிக்கையை வளர்ப்பதில்லை. அவை நிதர்சனமான உண்மையையும் இயற்கையின் சக்தியை முழுவதுமாகப் புரிந்து கொள்வதற்கும் உதவுகின்றன. இதனை புரிந்து கொள்ளும் மனிதர்கள் பாபம் செய்ய மாட்டார்கள். செய்த பாபத்தை வாங்கிக்கொள்ள (buy back) ஒரு சாமி வரும் என்று பாபத்தை விற்க வரிசையில் நிற்க மாட்டார்கள்!. இதனை நாமும் புர்ந்து கொள்வோம். மற்றவருக்கும் எடுத்துச் சொல்வோம்! அதாவது..