Thursday, March 14, 2013

பிறவியைப் பெருங்கடல் என்றது ஏன்?


பிறவிப் பெருங்கடல்
பிறவிப் பெருங்கடல்

 

 
பொதுவாகச் சமண சமயக் கடவுள் வணக்கமுறை நால்வகைச் சரணத்தை உள்ளடக்கியிருக்கும். இம் முறையிலேயே திருக்குறள் கடவுள் வாழ்த்தும் அமைந்துள்ளது. ஏழு குறள்களில் அருக சரணமும். 'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்' என்னும் குறளில் சித்த சரணமும், 'பொறிவாயில் ஐந்துவித்தான்' என்னும் குறளில் சாது சரணமும், 'இருள்சேர் இருவினையும் சேரா' என்னும் குறளில் தன்ம சரணமும் அமைந்துள்ள நயம் அறிந்து இன்புறத்தக்கது. (குறிப்பு: பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் இழுக்கம் என்பது ஐந்து பொறிகளையும் அடக்கிய சாதுக்களின் இழுக்க நெறிகளில் இன்றாகிய பொய்தீர் காட்சியைக் குறிக்கும். காட்சி என்பது நற்காட்சி: பொய்தீர் காட்சி என்பது தூயநற்காட்சி. இதனை வடநூலார் தா¢சன விசுத்தி என்பர். ஷோடஸ பாவனை என்னும் பதினாறு சிந்தனைகள் சாதுக்களுக்கு ¡¢ இழுக்கு நெறிகளாகும் இவை அருகருக்கு அல்ல.
அருகர் பொறிகளின் உதவியின்றியே, மூவுலகும் முக்காலமும் உணர்ந்தவர்; பொறியோடு வல்வினை கடந்த புனிதர் சாதுக்களை விடப் பலபடி உயர்ந்த்வர். ஐந்தவித்தல் என்ற பேச்சுக்கே அருக நிலையில் இடம்; இல்லை. சாது நிலையிலேயே அனைத்தையும் வென்றவர் அவர். எனவே இந்தக் குறளில் உள்ள 'ஐந்தவித்தான்' என்பதை மட்டும் நோக்காது 'பொய்தீர் இழுக்கத்தையும் சேர்த்துப் பொருள் கொண்டால் இக்குறள், சாதுக்களையே குறிப்பிடுகிறது என்பது புலனாகும். எனவே இது சாது சரணம் ஆயிற்று. இது போலவே 'இருள்சேர் இருவினையும் சேராத, இறைவன் பொருள்சேர் புகழ்பு¡¢ந்தார் மாட்டு' என்னும் குறளில் வரும் 'பொருள் சேர் புகழ்பு¡¢ந்தார் மாட்டு' என்பது இறைவனின் புகழ்மிக்க ஆகமங்களைப் (புகழ் சேர் பொருள்) போற்றிப் பின்பற்றுவா¡¢டத்து, இருவினையும் சேரா எனப்பொருள் கொள்ளவேண்டும். எனவே, இக்குறள் தன்ம சரணம் ஆயிற்று சிலர், அருக சரணமும் சித்த சரணமும் கடவுள் வாழ்த்தில்' கூறுகிற ஆசி¡¢யர், நீத்தார் பெருமையில் சாது சரணமும், தன்ன சரணமும் கூறுகிறார் என்பர். ஆயினும் ஆழந்து நோக்கினால் நால்வகைச் சரணத்தையும் இக்கடவுள் வாழ்த்து அதிகாரத்திலேயே காணலாம். மேலும் குந்தகுந்தரைப் போன்ற ஆசா¡¢யர்கள் நால்வகைச் கரணத்தையும் இரே இடத்தில் தான் அமைப்பரே அன்றி இங்கொன்றும் அங்கொன்றுமாக அமைக்க மாட்டார் எனத் தெளிக.

இவ்வாறு அருக சரணம், சித்த சரணம், சாது சரணம், தன்ம சரணம், என்னும் நால்வகைச சரணங்களையும் சமண இலக்கியங்கள் அனைத்திலும் காணலாம்.

'
நல் அறத்து இறைவனாகி நால்வகைச் சரணம் எய்தி' முத்தி அடைந்தவன்; நம் சீவகன் என்பதும் இங்குக் கருதத்தக்கது.

"
ஏழு குறள்கிளல் அருக சரணமும். 'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்' என்னும் குறளில் சித்த சரணமும், 'பொறிவாயில் ஜந்தவித்தான்' என்னும் குறளில் சாது சரணமும், 'இருள்சேர் இருவினையும் சேரா' என்னும் குறளில் தன்ம சரணமும் அமைந்துள்ள நயம் அறிந்து இன்புறத்தக்கது."


திருக்குறள் அறங்களைப் பொ¢தும் போற்றும் பிறசமயத்தார். 'இவர் எம்மதத்தவர்தான்: இவர் எம்மத்தவர்தான்' எனப் போட்டி போட்டுக் கொண்டு வாதிடுகின்னறனர். ஆயின் நடு நிலையிலிருந்து ஆயவோர்க்குத் திருக்குறள் ஆசி¡¢யர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விலங்கும்.

சமண சமயத் தீர்த்தங்கரர் அனைவரும் பல பிறவிகளைக் கண்டவர்கள். இத்தகைய இரு நிலை சிவபெருமானுக்கோ, திருமாலுக்கோ இல்லை. சிலbபருமானோ, தாய் வயிற்றில் பிறக்காதவர்- பிறவா யாக்கைப் பொ¢யோன் எனப் போற்றப்படுபவர். திருமாலோ எனின் உலகைப் படைத்தவரே அவர்தான் என அவரைப் போற்றுவோர் கருதுகின்றனர். இவ்விரு கடவுளர்க்கும் பிறப்பும் இவ்வளவு இறப்பும் இல்லை. எனவே இவர்கள் வினைவயப்பட்டவர் அல்லர். ஆனால் அருகப் பெருமாளோ நம்மைப் போல் இரு தாய் வயிற்றில் பிறந்து வினை வயப்பட்டுப் பின வினையின் நீங்கி வீட பேறடைந்தவர். அருகர் இருபத்து நால்வராகர். அவருள் முதல்வராகப் திகழ்பவர் ;விருஷபதேவர் எனப் போற்றப்படும ஆதிபகவன் ஆவார். இவரையே கடவுள் வாழ்த்தில் போற்றுகிறார், குறளாசி¡¢யர், எனவே அவரைச் ;சமணர் எனச் சொல்லவும் வேண்டுமோ?

'
உலகியற்றியான்' முதலிய சொற்களைக் காட்டிச் சிலர். குறளாசி¡¢யர் படைப்புக் கொள்கையே இப்புக் கொள்கிறார் என்று வாதிடுகின்றனர். 'இயற்றினான்' என்பதற்கச் சமணர் காணும் பொருள் வேறு.

ஆதிபகவனாகிய விருஷபதேவர் உயிர்கட்குத் தொழில் முதலியவற்றை இழுங்குபட இயற்றினார் என்று ஸ்ரீபுராணம் போன்ற சமண நூல்கள் கூறுகின்றன.
இதுபோலவே

'
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் ¡¢து'


என்னும் குறளுக்கும் 'உலகில் வாழும் முறையை ஆதியில் அமைத்துக் தந்த ஆதிநாதர் காட்டிய வழியை அல்லாமல், கோடிக்கணக்கில் செல்வத்தைத் தேடித் தொகுத்தார்க்கம் அவற்றை நுகர்தல் இயலாது' என்று பொருள் கொள்ள வேண்டும்.

சிவன், திருமால் முதலிய சொற்களை மட்டும் கொண்டு சிலர் சமய முடிவு காண்கிறனர். இந்த முறையும் சா¢யன்று முருகப் பெருமானுக்கும், சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் இணையானவன் சீவகன் எனப் பல இடங்களில் சீவக சிந்தாமணி சுட்டிக் காட்டும். இதனால் சிந்தாமணியை யாரும் சமணக் காப்பியம் அன்று என்று சொல்வதில்லை! சைவ வைனவ நூல்களில் காணப்பெறும் கடவுளின் ஆயிரம் திருப்பெயர்களைச் சமண நூல்களிலும் காணலாம்.

ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய வீரர் அருகர். அவர்கள் நம்மைப் போல் மனிதராகப் பிறந்தவர். ஆனால் மெய்யுணர்வு கொண்டு வாலறிவு என்னும் கேவல ஞானம் பெற்று உலகு உய்ய நல்லறங்களை உபதேசித்தவர். எப்படி வாழ வேண்டும் என்பதனை வெறும் போதனையால் மட்டுமின்றிச சாதனையாலும் விளக்கியவர். வினையின் நீங்கிப் பிறவிப் பெருங்கடலைக் கடந்து பிறவாத முத்திக் கரையை அடைந்தவர்கள். அவர்கள்; அருளிய

"
புண்ணியம் மிக உயர்ந்த அமைதியைக் தருகிறது: தாயைப் போல் உயிரைப் பேணி வளர்க்கிறது; தந்தையைப் போல் பாதுகாக்கிறது; ;நண்பனைப் போல்; இன்பம் தருகிறது; உடன் பிறந்தோரைப் போல் நேசிக்கிறது; குருவைப் போல் நற்போதனை அளிக்கிறது; பாவப் பகைவனிடமிருந்து உயிரைப் பாதுகாக்கும் கேடயமாக இருக்கிறது."

ஆகமக் கருத்துக்களை - வாழந்த வாழ்க்கையை எப்போதும் நினைக்க வேண்டும் அத்தகையோர் பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

இறைவனுடைய அடிகளை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பிறவியாகிய பொ¢ கடலினை நீந்திக் கடப்பார்கள். நினைக்காதவர்கள் கடக்க மாட்டார்கள். (அதனுள் அழுந்திக் துன்புறுவர்)

பிறவியைப் பெருங்கடல் என்றது ஏன்? கடலின் ஆழத்தை - கரையைக் காண முடியாதது போல பிறப்பின் எல்லையையும் அறிய முடியாது. இவ்வொரு தீர்த்தங்கரரின் பூர்வ பவங்களும் இதற்குச் சான்றாகும். ஆதிநாதர் முதல் வர்த்தமானர் வரை 24 தீர்த்தங்கரர்க்கும் பூர்வபவங்கள் கூறப்படுகின்றன. அதிலும் மகாவீரரின் பூர்வ பவங்கள் குறிப்பிடத்தக்கன.

தன் முற்பிறப்பில் கேடானகோடி ஆண்டுகள் பலப்பல பிறவிகளில் உழன்று உழன்று துன்புற்று வர்த்தமானாராகப் பிறந்து மகாவீரராக உயர்ந்து இறுதியில் முத்தி அடைந்தவர் அவர்! முற்பிறவிகளைக் கணக்கிட்டு - அளவிட்டு - அறுதியிட்டுக் கூறமுடியாது. இதனால் பிறவியைப் "பெருங்கடல்" என்றார். பழமையான நம் முற் பிறவிகளை எண்ணிக் கணக்கிடவோமானால் அவை, கடலின் மணலும் இப்பிடப்போதாத அளவுடையன.

'
தொல்லை நம் பிறவி எண்ணின் தொடுகடல்
மணலும் ஆற்றா எல்லைய'

எணச் சிந்தாமணி கூறுவதை நோக்குக.


அத்தகைய பிறவிகள் பலவற்றிலிருந்தும் நீங்கி வீடுபேறடைய வேண்டின், இறைவன் அடிகளைச் சரண் அடைதல் வேண்டும். சரண் அடைந்து அப்பெருமான் அருளிய ஆகமக் கருத்துக்களை எப்போதும் எண்ணிப் பார்க்க வேண்டும். நான்கு கதிகளும் துன்பம்தான்! யாக்கையும் நிலையில்லை! மாறி மாறி வரும் பொருள்கள் இறுதியில் பேரவலத்தைத் தோற்றுவித்து மறைகின்றன. இந்த உலகில். எதுதான் மறயைவில்லை? நினைத்துப் பாருங்கள்! எத்தினம் உலகில் எமன் வரா நல்தினம்?

பெற்றோரும் உறவினரும் நண்பரும் செல்வமும் எந்த அளவு உயிருக்குப் பாதுகாவலாக அமைய முடியும்? மரணப் பிடியில் நாம் சிக்கும்போது நமத உயிரைக் காப்பாற்ற யார் வருவார்? யாரால் முடியும்? பெற்ற தாயும் உற்ற மனைவியும் மகளிரும் 'ஐயோ' என நிலை கலங்கி அலறித் துடித்து வீதிவரை வந்து நின்று செயலற்று ஏங்கி நிற்பர். பாசம் மிக்க தந்தையும் ஆசையுள்ள மகனும் கையால் தலைமோதித் தாங்கொணாத்துயரச் சுமையைச் சுமந்து கொண்டு சுடுகாடு வரை வந்து நின்று கையற்று மெய் சோர்வார்.

இந்த அளவோடு நின்று விடுகிறது. செல்வமும் சுற்றமும் பின் பார்த்த முகத்தை விட்டு - பழகிய இடத்தை விட்டுப் புதியதோர் உலகுக்குப் பயணம் செய்கிறது. உயிர் அதனைத் தடுப்பார் இவர். ஆயினும் அது செல்லும் தேயத்துக்கு உறுதுணையாக இருப்பது நல்வினையே! என்பதனை நினைவில் கொள்க வேண்டும் பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் வழி அருகப் பெருமானின் அருளுரையே எனக் கருதல் வேண்டும். வேறு புகலிடம் இல்லை. என அடிக்கடி நினைக்க வேண்டும்.

தொல்லை
முரணார் வினைப் பகைவர் மூளுங்கால் வாமன்
சரணார விந்தங்கள் அல்லால் - அரணாய்நீர்
எண்ணும் பொருள் கற்றம் யாக்கை
என்றிள்ள வெல்லாம்
நண்ணும் சரணாக நாடன்மின்
திருக்கலம்பகம் பா. 76 வா¢ 7-10

எனவே நிலையில்லாத பொருள்களின் மீது சிந்தை செல்லாமல் நிலையான உயி¡¢ன் ஆக்கத்திற்கு ஏற்ற புண்ணிய கருமங்களைச் செய்தல் வேண்டும். சமண ஆகமங்கள் தானம், விரதம், தவம், தியானம் எனப் பல்வேறு புண்ணிய காரணங்களை விளக்கியுரைக்கின்றன. அவற்றைப் போற்றிப் புண்ணியத்திற்கு¡¢ நல்வினைகளைப் பு¡¢தல் வேண்டும்.

புண்ணியம் மிக உயர்ந்த அமைதியைத் தருகிறது. தாயைப்போல் உயிரைப் பேணி வளர்க்கிறது; தந்தையைப் போல் பாதுகாக்கிறது; நண்பனைப் போல் இன்பம் தருகிறது. உடன் பிறந்தோரைப் போல் நேசிக்கிறது. குருவைப் போல் நற்போதனை அளிக்கிறது. பாவப் பகைவனிடமிருந்து உயிரைப் பாதுகாக்கும் கேடயமாக இருக்கிறது. உயர் பதவிகள் அனைத்தையும் தருகிறது. எல்லாவற்றிக்கும் மேலாகத் தீர்த்தங்கராகி இடையறாது இறைவனைப்; பற்றிய சிந்தனையில் நினைப்பதும் புண்ணிய காரணமே ஆகும்.

இங்கு இன்றை நினைவில் கொள்ளவேண்டும் திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் பற்றிய ஏழு குறள்களில் இறைவனின் 'அடி' என்னும் சொல் வருகிறது.

வாலறியன் நற்றாள்' (அடி)
'
மலர்மிசை ஏகினான் மாண் அடி'
'
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி'
'
க்கு உவமை இலாதான் தாள்' (அடி)
'
அறவாழி அந்தணன் தாள்' (அடி)
'
இறைவன் அடி'
'
என்குணத்தான் தாள்' (அடி)

ஏன் முழு வடிவத்தையும் கூறாமல் ஙஙஅடிஙஙயை மட்டும் கூற வேண்டும்? அடியை வணங்குகிறோம் என்றால் அவர் சென்ற வழியைப் போற்றுகிறோம் என்பது பொருள். வீடுபேறு அடைய அந்தத் திருப்பாதங்கள் எந்த வழியில் சென்றனவோ அந்த வழியில் செல்ல விரும்புகிறோம் என்பது பொருள் ஆதலால் அருகப் பெருமானின திருவடிகள் போற்றப்படுகின்றன. இடையறாத சிந்தனை செயலில் இறங்கத் தூண்டும். எனவே அப்பெருமானின் திருவடிகளைச் சார்தல் வேண்டும். அத் திருவடிகளை எப்போதும் மனத்தில் இருத்தல் வேண்டும்.

அருகப் பெருமானின் திருவடிகள் நெஞ்சத்தில் இருக்குமானால் ஐம்பொறிகளைப் ஆட்டிப்படைக்கினற ஙஙஆசைஙங என்னும் நச்சரவு மனத்திற்குள் புகமுடியாது.

ஆறுகள் அனைத்தும் கடலில் வந்து வீழ்ந்தபோதும் கடல் நிரம்புவதில்லை இதுபோலவே உலகுன பொருளெலாம் வந்து குவிந்தாலும் ஆசை நிரம்பாது. இந்த ஆசைக்கு மனத்தில் இடம் கொடுத்தால் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியாது என்பது மட்டுமன்று. ஆன்மாவைச் சீரழித்து மீண்டும் மீண்டும் பிறவிக்கு வித்திட்டு விடும். எனவே முதலில் ஆசையை எல்லாப் பிறவிகளுக்கும் வித்து; பிறவிக்கு மட்டுமன்று; எல்லா வினைகளுக்குமே இதுவே தாய்! ஞானாவரணீயம் முதலான மாயப் பிசாசுகளைத் தோற்றுவிக்கும் கோரப் பேய் இது' எல்லா வினைக்குப்பைகளையும் உயி¡¢டத்தில் கொண்டு வந்து கொட்டுவதும் இதுவே! உயிர் முத்தி அடையாமல் தடுத்து நிறுத்திக் கெடுப்பதும் இந்த ஆசையே! எல்லாப் பிறவிகளுக்கும் பகையாக இருப்பதும் இந்த ஆசையே! நரகத்தில் தள்ளுவதும் ஆசையே! எல்லாவற்றிலும் பாவத்தைச் சேர்ப்பதும் ஆசையே! தருமம் கெடுமாறு செய்துவதும் ஆசையே! இருபோதும் நிரம்பாத தன்மையுடையதும் ஆசையே! மூவுலகில் வலிமை பொருந்திய ஆசையே! முனிவர் தன்மைக்கு இடையூறாய் இருப்பதும் ஆசையே! ஆசையற்றவர் நல்ல முனிவர் ஆவர்.

தன்மையுடையதும் ஆசையே! மூவுலகில் வலிமை பொருந்தியதும் ஆசையே! முனிவர் தன்மைக்கு இடையூறாய் இருப்பதும் ஆசையே! ஆசையற்றவர் நல்ல முனிவர் ஆவர்.

மோகமே, பிறவிக்கு நல் வித்தது;
மோகமே, வினை தன்னை முடிப்பது;
மோகமே, முடிவைக் கெட நிற்பது;]
மோகமே, பகை முன்னை உயிர்க்கெலாம்.
-
மேரு 324

மோகமே, தி¡¢யக்கிடை உய்ப்பது;
மோகமே, நரகத்தில் விடுப்பது;
மோகமே, மறமாவது முற்றவும்;
மோகமே, அறமாகற நிற்பதும்.
-
மேரு 325

மோகமே, நிறையா நிறை யாயது;
மோகமே, மூலகின் வலியது;
மோகமே, முனிமைக்கு இடையூறது;
மோகமே, இல்லவர் நல்ல முனிவரே.
-
மேரு 326


இத்தகைய ஆசையால் மீண்டும் மீண்டும் தோன்றம்ம பிறவியாகிய பெருங்கடலை வைராக்கியம் என்னும் தோணி கொண்டு கடக்க வேண்டும். அந்தக் தோணி நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என்னும் கயிற்றால் உறுதியாகக் கட்டப்பட வேண்டும். அப்போதுதான் கவலை என்னும் அலையாலும், பேராசை, என்னும் சூறாவளியாலும், காமம் என்னும் திமிங்கலத்தாலும் சிறிதும் சேதம் அடையாமல்; ஆன்மா முக்தி என்னும் கரையை அடைய முடியும்.

நாளும் நல்லறம் செழிப்பதாக!


No comments:

Post a Comment