Wednesday, May 22, 2013

நம்பிக்கை தேவை


 

ஒரு நாள் கிருஷ்ணர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சத்யபாமா அவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். கிருஷ்ணர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பாதியிலேயே எழுந்தார். “என்னாயிற்றுஎன்று கேட்ட சத்யபாமாவிடம், “என்னுடைய பக்தர் ஒருவர் துன்பத்தில் இருக்கிறார், அதனால் நான் உடனே போக வேண்டும்,” என்று சொல்லிவிட்டு வாசல் வரை சென்ற கிருஷ்ணர், திரும்பி வந்து தட்டில் போட்ட சோற்றை சாப்பிட ஆரம்பித்தார்.

குழம்பிப் போன சத்யபாமா, “வாசல் வரை சென்று திரும்பிவிட்டீர்களே, என்ன நடந்தது?” என்றார். அதற்கு கிருஷ்ணரோ, “என் பக்தன் ஒருவன் காட்டில் உட்கார்ந்து கொண்டு என் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தான். அப்போது பசியோடு திரிந்துக் கொண்டிருந்த புலியொன்று அவனை நோக்கி வந்தது. அவனை காப்பாற்ற நினைத்த நான், உடனே புறப்பட்டேன். ஆனால் அந்த முட்டாள் தன்னைக் காத்துக் கொள்வதற்காக ஒரு கல்லை கையில் எடுத்துக் கொண்டான். அதனால் நான் திரும்பிவிட்டேன்,” என்றார்.

No comments:

Post a Comment