Thursday, June 27, 2013

ஓம் சரவண பவ

ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்

விளக்குபூஜை செய்வது

பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். மாதங்களுக்கேற்ப இப்பலன்கள் வேறுபடுகின்றன

சித்திரை - தானிய வளம் உண்டாகும்.
வைகாசி - செல்வம் செழிக்கும்.
ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும்.
... ஆடி - ஆயுள்பலம் கூடும்.
ஆவணி - புத்தித்தடை நீங்கும்
புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும்
ஐப்பசி - நோய்கள் உண்டாகும்
கார்த்திகை - நற்பேறு கிட்டும்
மார்கழி - ஆரோக்கியம் கூடும்.
தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
மாசி - துன்பங்கள் நீங்கும்.
பங்குனி - தர்மசிந்தனை வளரும்.
Mehr anzeigen

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால்

அவனுக்கு விதித்த ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,
... 100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,
93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,
87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,
80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,
73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,
66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்

தெய்வ படங்களை கிழக்கு பார்த்து வைக்க வேண்டும்

தெய்வ படங்களை கிழக்கு பார்த்து வைக்க வேண்டும், முடியாத போது வடக்கு பார்த்தும் வைக்கலாம். அறையில் வடமேற்கு மூலையில் பூஜை இடத்தை அமைப்பது வீட்டில் வாஸ்து தோஷ்ம் இ...ருந்தாலும் சரி செய்து விடும் தனியாக பூஜை அறை இல்லாத போது நம் தலைக்கு மேற்பட்ட உயரத்தில் சாமி மாடத்தை அமைப்பது நல்லது. எப்போது ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் சாமி மாடத்தில் இருப்பது நல்லது. பூஜை அறையை மெழுகி விட்டு சிறிது மஞ்சள் தண்ணீர் தெளிப்பது நல்லது.

மணியடித்து பூஜை செய்வது நல்லது. நிவேதனம் செய்ய எதுவுமே இல்லாத போது உலர்ந்த திராட்சை , கல்கண்டு போன்றவற்றை வைத்து பூஜை செய்யலாம். வீட்டில் அமைதியும் நிம்மதியும் செல்வவளம் இவை இருக்க பூஜை அறையை சிறிது கவனித்தால் போதும்.

யார் பிராமணன்?

யார் பிராமணன்?

பாண்டவர்கள் வனவாசம் செய்துகொண்டிருந்த சமயம். ஒருநாள் பீமசேனன் வனத்தின் அழகை ரசித்துக்கொண்டு உலாவிக்கொண்டிருந்தான். திடீரென்று ஒரு பெரிய மலைப்பாம்பு அவனை பிடித்து சுற்றிக்கொண்டது. அசாத்தியமான பலம் கொண்ட பீமனால் எத்தனை முயற்சித்தும் அந்த பாம்பிடமிருந்து மீள முடியவில்லை.

கொஞ்ச நேரத்தில், யுதிஷ்டிரர் தமயனை... தேடி அங்கு வந்தார். பீமனின் நிலையை பார்த்து பயந்துபோனார். பாம்பிடம் பீமனை விட்டுவிடும்படி பிரார்த்தித்தார். வேறு ஏதாவது இறை கொடுத்துவிடுகிறேன் என்றார். ஆனால், அந்த சர்ப்பம் அதற்கு இணங்கவில்லை.

ஆச்சரியமாக, அந்த பாம்பு பேச ஆரம்பித்தது.

அந்த பாம்பு வேறு யாருமல்ல, பாண்டவர்களின் மூதாதயர். பூர்வீக பிறவிகளில் அந்த பாம்பு நஹூஷன் என்ற அரசன். பணமும், அதிகாரமும் சேர்ந்த செருக்கால் அந்த அரசன் பிராமணர்களை அவமதிக்கவே அகஸ்தியரின் சாபத்தால் பாம்பாக பிறந்திருந்தான்.
அந்த பாம்பு யுதிஷ்டிரரிடம் சில கேள்விகளுக்கு சரியான விடை சொன்னால் பீமனை விட்டுவிடுவதாக சொன்னது.

நஹூஷனுக்கும் யுதிஷ்டிரருக்கும் நடந்த உரையாடல் வருமாறு..

ந : எவன் பிராமணன்? எது அறியத்தகுந்தது?

யு : சத்யம், தயை, பொறுமை, நல்ல நடத்தை, பூர்ணமாக ஹிம்ஸையை விலக்குதல், புலனடக்கம், கருணை என்ற குணங்கள் கொண்டவனே பிராமணன். சுக துக்கங்களைக் கடந்த பிரம்மமே அறியத்தக்கது. அதை அறிவதால் ஒருவன் பூர்ணத்துவம் பெறுகிறான்.

ந : இந்த குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருந்தால் அவன் பிராமணனா? பிரம்மம் என்பது சுகதுக்கங்கள் இல்லாதது என்றால், சுகதுக்கங்களை கடந்த நிலை இருக்கும் என்று தோன்றவில்லையே!

யு : சத்தியம் முதலான நான் சொன்ன குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருக்குமானால் அவன் சூத்திரன் அல்லன். இந்த குணங்கள் ஒரு பிராமணரிடம் இல்லையென்றால் அவன் பிராமணன் அல்லன். ஓ, சர்ப்பமே, இந்த குணங்கள் கொண்டிருக்கும் மனிதன் பிராமணன் என்றே ஆகிறான். இக்குணங்கள் இல்லாமல் இருப்பவன் சூத்திரனே.

சுகதுக்கங்கள் இல்லாத நிலை இல்லை என்று சொல்வது கர்மத்தால் விளைந்த அனைத்துக்கும் பொருந்தும். நீர் எப்படி இயற்கையில் உஷ்ணமாகாதோ, நெருப்பு எப்படி இயற்கையில் குளிர்ந்திருக்காதோ அப்படியே அறியாமை அகன்ற சத்தியத்தில் சுகதுக்கங்கள் இல்லை.

ந : குணங்களே பிராமணனை தீர்மானிக்குமானால், இக்குணங்கள் இல்லா பிராமணின் பிறப்பு முக்கியமற்று போகிறதே.

யு : பல குணங்கள் கலந்துவிட்ட இக்காலத்தில் பிறப்பால் பிராமணனை காண்பது கஷ்டம். எல்லாரும் பிறப்பில் சூத்திரர்களே. சில சம்ஸ்காரங்களாலும், வேதம் படிப்பதாலும் பிராமண குணங்கள் கிடைத்து பிராமணனாகிறான். ஸ்வாயம்புவ மனு சொல்வதும் இப்படியே. எல்லா சம்ஸ்காரங்களும் செய்தும், வேதம் படித்தும் அவனுக்கு இக்குணங்கள் கொள்ளாவிட்டால் அவன் பல குணங்கள் கலந்தவன் என்று அறிந்துகொள். சாத்திரங்களின் முடிவான தீர்மானம் இது. தன் சம்ஸ்காரங்களால் நற்குணங்கள் மேலெழும்பி இருப்பவனே பிராமணன்.

யுதிஷ்டிரனின் இந்த பதில்களால் சந்தோஷப்பட்ட நகுஷன் பீமசேனனை விடுவிக்கிறான்.

- மகாபாரத இதிஹாஸம். தத்வலோகா பத்திரிக்கையில் 1993

திருநீறு    

 
 
 
----------
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

... அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.


இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்கள் மூன்று .
முதலாவது இறைவன் மனிதனுக்குச் சொன்னது . அது , கிருஷ்ண பரமாத்மா உபதேசித்த நூல் பகவத் கீதை .
இரண்டாவது , அறியவர் இறைவனுக்கு சொன்னது . மணிவாசகர் மகேசனுக்குப் பாடியது . அது திருவாசகம் .
மூன்றாவது , மனிதன் மனிதனுக்கு சொன்ன நூல் . வாழ்வாங்கு வாழ வள்ளுவர் வகுத்து தந்த திருக்குறள்தான் அது .
இந்த மூன்று நூல்களும் எல்லா இல்லங்களிலும் இருக்க வேண்டியவை . உயரும்போதெல்லாம் படிக்க வேண்டியவை

மாவிலை !


மகத்துவம் நிறைந்த மாவிலை !
கோயில் சம்பந்தப்பட்ட எந்த விழாவை எடுத்துக் கொண்டாலும் சில பொருள்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் . மஞ்சள் , குங்குமம் , விபூதி , மஞ்சள் தூள் கலந்த அரிசி ( அட்சதை ), தர்ப்பைப் புல் , மாவிலை போன்றவை எல்லா சுபகாரியங்களிலும் பயன்படுத்தப்படும் பொருட்கள் .
பந்தலிலும் முகப்பிலும் குருத்தோலைத் தோரணங்கள் இடம் பெறும் . வீட்டின் முகப்பில் மாவிலைத் தோரணம் கட்டாயம் இருக்கும் . இதைக்கட்ட நேரமில்லாவிட்டாலும் , ஒரு கொத்து இலையாவது
சொருகி வைப்பர் .
பூஜைகள் செய்யும்போது கலச ஸ்தாபனத்துக்கு கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் மாவிலைகள் இட்டு அதன்மீது தேங்காயை வைத்துத்தான் சாமியை ஆவாஹனம் செய்வார்கள் . பூஜை முடிந்த பின் மாவிலை நுனியால் கலசத்தில் உள்ள புனித நீரை பக்தர்கள் மீது தெளிப்பர் . இப்படி விழாக்களில் முதன்மை இடம் பெறுவது மாவிலை . இதற்கு சமய ரீதியான காரணம் உண்டு . மாவிலையின் நுனியில் லட்சுமி தேவி வசிக்கிறாள் . அதனால்தான் அதிகம் முற்றாததும் , நுனி உள்ளதுமான இலையை உபயோகிப்பர் .
மாவிலைக்கு இன்னொரு சக்தியும் உண்டு . மரம் , செடி , கொடிகள் காற்றில் கலந்து கிடக்கும் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளிப்படுத்துகின்றன . மனிதன் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறான் . மாசுபடும் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவன மரம் , செடி , கொடிகள் மரத்திலிருந்து வெட்டப்பட்டபின்னரும் கூட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பணியை மாவிலைத் தோரணம் செய்து வருகிறது என்கிறார்கள் . அலங்காரத்துக்கு மட்டுமல்ல ; ஆரோக்கியத்துக்கும் உதவும் மாவிலையை பயன்படுத்துவதே நல்லது

வேதங்களின் தாய் !


சந்தியா , சாவித்திரி , காயத்ரி , சரஸ்வதி இவர்கள் நான்கு பேரும் சந்தியாவந்தன வழிபாட்டில் சிறப்பிடம் பெறும் தெய்வங்கள் . வைதீக வழிபாட்டில் காயத்ரி தேவிக்கு அதிகமுக்கியத்துவம் உண்டு .
சூரியனுக்கு ஒளி தருமாறும் , உலகுக்கெல்லாம் ஞான ஒளி கொடுக்குமாறும் வேண்டும் மந்திரமே காயத்ரி மந்திரமாகும் .
காயத்ரி என்றால் எவரெல்லாம் தன்னை ஜெபிக்கிறார்களோ அவர்களைக் காப்பாற்றுவது என்று பொருள் .
' காயத்ரீம் சந்தஸாம் மர்தா ' என்பது ஒரு வாக்கியம் . இத்தொடரில் உள்ள சந்தஸ் என்பது வேதத்தைக் குறிக்கும் .வேத மந்திரங்களின் தாய் காயத்ரி மந்திரம் என்பது இந்தத் தொடரின் பொருள் .
காயத்ரி 24 எழுத்துக்களை கொண்டது . மூன்று பாதங்களை உடையது . எனவே , இம்மந்திரத்தைத் திரிபதா என்பார்கள் . ஒவ்வொரு பாதம் ஒரு வேதத்தின் சாரமாகும் . மூன்று பாதங்களும் ரிக் , யஜுர் ,
சாம வேதங்களின் சாரமாகக் கருதப்படுகின்றன . ( அதர்வண வேதத்துக்கு என்று தனி காயத்ரி மந்திரம் உண்டு . இரண்டாவது முறை உபநயனம் செய்து கொண்டு அதன் பின்புதான் அதர்வண காயத்ரி மந்திர ஜெபம் செய்வார்கள் .)
காலை , நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் காயத்ரி ஜெபம் செய்ய வேண்டும் . காயத்ரி , சாவித்திரி , சரஸ்வதி என்று மூன்றுவிதமாக தியானிக்கவேண்டும் . காலையில் பிரும்ம ரூபிணியாகவும் , மதியம் சிவரூபிணியாகவும் , மாலையில் விஷ்ணுரூபிணியாகவும் காயத்ரி தேவி இருக்கிறாள் .
மந்திர சக்தி என்பது அக்னியைப் போன்றது . நெருப்பு அணைந்து இருப்பது போல தெரிந்தாலும் அதற்குள் ஒரு பொறி நிச்சயம் இருக்கும் . அந்தப் பொறி தான் காயத்ரி மந்திரம் . அதை ஊதுவதால் பெரிதாக்கிவிட முடியாது . ஓதுவதால்தான் அதிகரிக்கச் செய்ய முடியும் .
ஜூரத்துக்கு மருந்து கொடுப்பது போல ஆத்மாவைப் பிடித்திருக்கக் கூடிய பந்தங்கள் என்னும் ஜூரத்தை நீக்கக் கூடிய மருந்துதான் காயத்ரி என்கிறார் காஞ்சி மாமுனிவர்

தீட்டு !


" தீண்டக் கூடாது ( தொடக் கூடாது ) என்று விலக்கி வைப்பதைத்தான் ' தீட்டு ' என்பர் . முற்காலத்தில் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக , பாதிக்கப்பட்டவரை தொடக் கூடாது என்று சொன்னார்கள் . மனிதனின் பிறப்பு , இறப்பு இரண்டுமே தீட்டுதான் . அதனால்தான் குழந்தை ஜனனத்தின்போது 11 நாட்கள் குழந்தையைத் தொடக் கூடாது என்று சொல்வார்கள் .அந்த நாட்களில் குழந்தையின் உடம்பில் இருந்து கிருமி வெளிப்படும் என்பதால் விலகி இருக்க வேண்டும் . மரணம் நிகழ்ந்த வீட்டிலும் 11 நாட்களுக்கு அப்படித்தான் .
' தீட்டு ' என்பதை தள்ளி வைத்தல் என்று தவறாகப் புரிந்து கொள்வோர் பலர் , தீட்டு என்பது நம் உடல்

இரண்டு முடி சூட்டு விழாக்கள் !ராம பட்டாபிஷேகத்திற்கும், மகாபாரத தர்மர் பட்டாபிஷேகத்திற்கும் உள்ள சிறப்பு :
ராமாயணத்தில் வசிஷ்ட முனிவரால் ( மனிதர் ) ஸ்ரீ ராமபிரானுக்கு ( கடவுள் ) பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது .
மகாபாரதத்தில் பார்த்தனுக்கு தேரோட்டியவரும், கீதோபதேசம் செய்தவருமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ( கடவுள் ) தர்ம புத்திரருக்கு ( மனிதர் ) , பட்டாபிஷேகம் செய்தார். இதுதான் மகாபாரதத்தின் சிறப்பு .

கண்ணா ! உன்னுடைய தலை சிறந்த அன்பு கொண்டிருப்பது யார்

பகவானுக்கு பாத நீரை தைரியமாக கொடுத்தது ?
_________________________________________________

பகவான் கிருஷ்ணர் அவரது மனைவி ருக்மணியுடன் , துவாரகையில் வசித்து வந்தார். ஒரு நாள் ஒரு முனிவர் , கண்ணா ! உன்னுடைய தலை சிறந்த அன்பு கொண்டிருப்பது யார் எனக் கேட்டார் ?, ருக்மணி தன் பேரை தான் பகவான் சொல்லுவார் என ஆவலுடன் எதிர் பார்த்து இருந்தாள். அப்போது கிருஷ்ண பரமாத்மா சொன்னார், என் மேல் அதிகமான அன்பு வைத்திருப்பது ராதா தான், என்றார். ருக்மணி கோபத்துடனும், பொறாமையுடனும் உள்ளே சென்று விட்டாள். கிருஷ்ணர் புன்னகைத்து கொண்டார்.
சில நாட்கள் கழித்து, கிருஷ்ணர் ஒரு நாள் தீராத வயிற்று வலி வந்து மிக வேதனையுடன் அவதிப்பட்டார். ருக்மணி பதறி போய், மருந்து களை அளித்தாள், இருந்தும் வலி குறையவில்லை., கிருஷ்ணரின் வேதனையும் தீரவில்லை.
... அப்போது அங்கு வந்த நாரத முனிவர், இந்த வலி தீர வேண்டுமானால் , பகவானின் உண்மையான பக்தர் யாராவது, தன் பாதங்களை கழுவி அந்த நீரை சிறுது பகவானுக்கு கொடுத்தால் , அவரின் வலி தீர்ந்து விடும் என்றார்.
உடனே கிருஷ்ணர் , ருக்மணியிடம் , உன் பாதங்களை கழுவி அந்த நீரை உடனே கொடு , என்னால் வலி பொறுக்க முடியவில்லை என்று கெஞ்சினார்.
திடுக்கிட்டு போன ருக்மணி சொன்னாள், நீங்களோ உலகை எல்லாம் காக்கும் கடவுள் , உங்களுக்கு என் பாதம் பட்ட நீரை அளித்தால், நிச்சயம் எனக்கு நரகம் தான் கிடைக்கும் ! இப்படி ஒரு பாவ செயலை செய்ய நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன் என்று கண்டிப்பாக கூறி விட்டாள்.
கிருஷ்ணர் , நாரதரை அழைத்து , நீங்கள் பிருந்தாவனத்துக்கு சென்று யாரிடமாவது , என் நிலைமையை எடுத்து கூறி , உடனே அவர்களின் பாதம் கழுவிய நீரை பெற்று வாருங்கள் , என்று அனுப்பி வைத்தார்.
சிறிது நேரத்திலேயே நாரதர் ஒரு கிண்ணத்தில் நீருடன் வந்தார் . கிருஷ்ணர் அந்த நீரை சிறிது பருகிய உடனேயே அவரின் , வயிற்று வலி சட்டென குணமாகி விட்டது. பழைய நிலைமைக்கு திரும்பி விட்டார்.
ருக்மணி நாரதரிடம் ஆவலாய் , யார் சுவாமி , பகவானுக்கு பாத நீரை தைரியமாக கொடுத்தது ? என்று கேட்டாள் . நாரதர் சொன்னார் , நான் போய் பிருந்தாவனம் முழுதும் சுற்றி பகவானின் நிலைமையை எடுத்து கூறி கேட்டும் யாரும் கொடுக்க தயாராக இல்லை ! அப்போது ஒரு சிறுமி வந்து தன் பாதங்கள் கழுவிய நீரை கொடுக்க ஓடி வந்தாள். அவளது தோழியர் அவளிடம் , ராதை ! நீ பெரும் பாவத்தை செய்ய போகிறாய் ! பகவானுக்கு உன் பாதம் பட்ட நீரை கொடுத்தால் நீ ஏழு ஜென்மத்திற்கும் நரகத்தில் தள்ள படுவாய் ! என்று தடுத்தனர்., ஆனால் அதற்கெல்லாம் கவலை படாத ராதை கூறினாள், " எனக்கு என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை ! ஆனால் என் பகவான் கிருஷ்ணர் , வலியில் அவதி படுவதை என்னால் தாங்க முடியாது " என்று கூறி , அவள் தான் கொடுத்தாள், என்றார்.

ருக்மணி பக்கம் திரும்பிய கிருஷ்ணர் ," பார்த்தாயா ருக்மணி , எனக்காக ராதை நரகத்திற்கு கூட செல்ல தயாராகி விட்டாள் ! அவள் என்னை பற்றி மட்டுமே கவலை பட்டாள் . தனக்கு என்ன நேர்ந்து விடுமோ என தன்னை பற்றி எள்ளளவும் கவலை படவில்லை " இதுவன்றோ உண்மையான அன்பு , எந்த நிபந்தனைகளும் அற்றது ! தியாக உணர்வு கொண்டது !! இதுவே தலை சிறந்த பக்தி , ராதையே தலை சிறந்த பக்தை என்றார், தலை குனிந்து ருக்மணி ஒப்பு கொண்டாள்.
டிஸ்கி : நமக்கு என்ன நடக்கும் என நினைத்து செய்யப்படும் எந்த செயலும் அன்பின் பாற்பட்டது ஆகாது ! ஆகவே எதிர் பார்ப்பில்லாத அன்பினை உலகிற்கு அளிப்போம் ! !!

அத்வைதம் த்வைதம் :

அத்வைதம் த்வைதம் :

நீங்கள் கடையில் தேங்காய் வாங்குகிறீர்கள்; தேங்காய்க்குள் தண்ணீர் இருக்கிறது. நீங்கள் ஒரு எலுமிச்சம் பழம் வாங்குகிறீர்கள்; அதற்குள்ளும் நீர் இருக்கிறது, அதை ஜூஸ் (Juice) என்கிறோம். இதேபோல எந்த இடத்தில் நீர் இருந்தாலும் அது நமக்குத் தேவைப்படுவதாகவே உள்ளது. சில இலைகளில் கூட நீர் இருக்கிறது; கசக்கிப் பிழிந்து அதை உபயோகப்படுத்துகிறோம். ஒவ்வொன்றிலிருந்து கிடைக்கும் நீருக்கும், தனித்தனிப் பெயர்களைக் கொடுத்து அவற்றை உபயோகப்படுத்துகிறோம்.

இந்த நீரின் மூலம் என்ன? தேங்காய்க்குள் எப்படி தண்ணீர் வந்தது? நிலத்திலிருந்து தானே? அப்படியானால் நிலத்திற்கு, பூமிக்கு எப்படி தண்ணீர் வந்தது? மழையிலிருந்து வந்தது, மழை எப்படி நீரைப் பெற்றது. கடலிலிருந்து, கடல்நீர் ஆவியாகி மேகமாக மாறுவதால் வந்தது.
...
இதே தத்துவம் தான் எலுமிச்சம் பழத்திலுள்ள நீருக்கும், இலைகளில் உள்ள நீருக்கும் ஏற்றது. தேங்காய்க்குள்ளும் எலுமிச்சம் பழத்திற்குள்ளும், இலைகளுக்குள்ளும், எல்லாவற்றிலும் கடல் நீரைத் தானே காண்கிறோம்? இதுதான் அத்வைதம்.

பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களையெல்லாம் மறந்து விடாமல் மூலத்தைப் பார்க்க வேண்டும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.-

Saturday, June 22, 2013

இல்லறத்தில் ஆன்மீகம்

இல்லறத்தில் ஆன்மீகம்
இறையுணர்வு என்பதே அன்புவுணர்வுதான். அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்.அன்பு என்பது கடவுளிடம் மட்டும் அன்றி கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் அன்பு செய்ய வேண்டும். அருள் நெறி என்பது அன்பு நெறியின் நீடிய தோன்றமாகும்.
எனவேதான் அருள் என்னும் அன்பு ஈன்று குழுவி என்கிறார் வள்ளுவர். உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துது இறைவனுக்கு ஆற்றும் தொண்டிற்கு சமமாகும். உயிர்களின் இதயக் கோயிலே இறைவன் வாழும் கலைக்கோயிலாகும். அருள் நெறி என்று உயிர்களுக்கு அன்பு செய்ய சமய வாழ்வு வாழ்கிறோம் எனில் அது சமுதாய வாழ்வுடன் இணைந்ததாக அமையவேண்டும். இந்த வகையில் இல்லறத்தில் என்றும் இறைவனை அடையலாம் என்பதை இந்து சமயம் காட்டுகிறது.
இல்லறத்தை நல்லறமாக மாற்றி வாழ வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை- என்கிறார் வள்ளுவர்
இல்வாழ்க்கையின் பண்பு அன்புடமை. பயன் அறனுடையமையாகும். மனைவி சுற்றம் என்று வி¡¢யும் அன்பிலே வாழும் ஒருவன் உலகனைத்தின் பாலும் வி¡¢ந்த அன்பு பூணும் மனப்பக்குவம் அடைகிறான். மனைவியும் அதே அன்புசால் மனப்பக்குவம் அடைகிறாள்.உலகனைத்தையும் அன்புக்கண்களிலே காணும் இந்த வி¡¢ந்த மனோபக்குவம் அடைய இல்லறம் வழிகாட்டுகிறது. அன்பும், அறனும் இல்வாழ்க்கையினை சிறப்பாக்குகிறது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் -வள்ளுவர்.
இல்லறம் நடத்தியே இறைவனை அடைந்தாகச் சொல்லப்படும் நாயன்மார்களுடைய கதைகளிலும், ழ்வார் கதைகளிலும் தனை நாம் அறியலாம்.
"காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றிஓடே எடுத்தென்ன? உள்ளன்பில்லாதவர் ஓங்கு செல்லநாடேயிடை மருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர் பால்வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுமே"
இங்கு இல்லறத்தானும் வீடுபேறு பெறமுடியுமென கூறப்படுகிறது.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்ததை ஒழித்துவிடின் -
இதைதான் சமயம் கூறுகிறது. உனக்கிட்ட கடமைகளை ஒழுங்காக செய். அதுவே உன்னை உயர்நிலையை அடையும் தகுதியை வளர்த்துக் கொடுக்கும்.
இந்து தர்மத்தின் முக்கிய நூலாக போற்றப்படுவது பகவத்கீதை. இந்த கீதையை உபதேசித்தவனும் கேட்டவனும் சந்யாசிகள் அல்லர். குடும்பவாழ்விலிருந்தோர்,மன்னாளும் மன்னர்கள்.
கீதையிலே பரமாத்மா கிருஷ்ணன் சொல்கிறான் :
"அர்சுனா, மூன்று உலகங்களிலும் இனி மிஞ்சிற்கும் செயல்,செய்கை ஒன்றும் எனக்குக் கிடையாது. அடையத்தக்கது, அடையப்படாது என ஒரு பேறுமில்லை.எனினும் நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் தொழில்செய்யாது வாளாவிருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும், என் வழியையே பின் பற்றும்.அதனால் இந்த உலகம் அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரணமாகாமல் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். ஓயாமல் தொழில் செய்பவன் சிறந்த கர்மயோகி. அவன் ஜிவாத்மாவை இடைவிடாது துதிக்கிறான். சம்சாரத்தை நேசிக்கிறான். குடும்பத்தை காக்கிறான். மனைவி, மக்களை காக்கிறான்.சுற்றதாத்தாரை, அயலவரை போற்றுகிறான். எல்லாவற்றையும் துறந்து சென்றால் அவன் முத்திக்கு தகுதியுடைவனாக மாட்டான். எல்லாவற்றையும் துறந்து செல்கிறவன் கடவுளுடைய இயற்கை விதிகளை துறந்து செல்பவனாகிறான்...
இவ்வாறு நாம் பாக்கும் போது இல்வாழ்க்கையில் முற்று முழுதாக விடின் இறைவனை அடையலாமா? என்ற கேள்வி எழும். வாழ்வில் பற்றை விலக்க வேண்டுமே ஒழிய வேண்டியதில்லை. 'படகு தண்ணீரில் இருக்கலாம். தண்ணீர் படகினுள் இருக்ககூடாது'என்று அருமையாக வழிகாட்டுகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
இல்லறத்துறவை காட்டிலும், உள்ளத்துறவு சதகோடி மடங்கு மேலானதாகும்.இல்லாள் அகத்திருக்க இல்லாததது ஒன்றில்லை. கற்புடைய மனைவியைகாதலுற்று, அறம்பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கைகையாகும்.கடவுள் அனைத்து உயிர்களிலும் இருக்கிறார். இல்வாழ்க்கையில் இருந்து கொண்டு உற்றார்,உறவினர், உலகத்தாருக்கும் உபசாரம் செய்து கொண்டு அறவழியில் இன்பங்களை அனுபவித்து ஆண்டவனை தொழுது அதனால் மனிதத் துன்பங்களில் இருந்து விடுபட்டு மேன்மையான வாழ்க்கை வாழ்வது மேலான வழியாகும்.
இதனை வள்ளுவப் பெருந்தகை அன்புடைமை, வாழ்க்கை துணைநலம், புதல்வரைப் பெறுதல், விருந்தோம்பல், இனியவை கூறல் என்ற அதிகாரங்களில் வாழ்வின் ஆன்மீக வழிகாட்டியில் காணலாம்.
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்போ ஓய்ப் பெறுவதெவன் "
இல்லறத்தினை ஒழுங்காக நடத்துபவன் துறவறத்திற்கு போய் பயன் ஒன்றுமில்லை.இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் முயல்வாருள் எல்லாம் தலை"
இல்லறத்தை சாரியாக நடத்துகிறவன் புலன்களை அடக்கி முயல்கிற எல்லாரினும் தலை சிறந்தவன்.
"அற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து"
சாரியான முறையில் இல்லறம் நடத்துகிறவன் , துறவறத்தானை விட பொறுப்புகளும் சகிப்புகளும் உள்ளவன். இல்லறத்தான் பிறருக்குக்குற்ற துன்பங்களையும் தனக்கு வந்தது போல் எண்ணி அதை நோக்கும் பொறுப்புடையவனாகிறான்.
"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அ•தும்பிறன் பழிப்ப தில்லாயின் நன்று"
மனிதனுக்கு அறம் என்று நூல்களால் தீர்மானிக்கப்பட்டதே இல்லறம் ஆகவே, இல்லறத்தை சாரியாக நடாத்துகிறவன் வானுறையும் தெய்வதுள்வைக்கப்படுவான்.
எதனைத்தைப் பற்றி ஆராய்ச்சி இல்லாமலே கர்ம ஒழுக்கங்ளினால்இல்லறத்தில் நின்று வீடுபேறு அடைய முடியும். இல்லறம் பொறுப்புகளும்,சகிப்புத் தன்மையும் உடையது. இல்லறத்தை நாம் கர்மயோகமாக கருதினால் அதுவே சமுதாயத்துக்கு பயனுள்ளது.
பொரியபுராண வரலாறு மூலம் "அடியார்கள் இல்லறத்தை நடத்தி இறைவனை அடைந்ததைக் காணலாம்."இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணக் கடை"
என்பதற்கேற்ப நன் மனைவியைப் பெற்ற இளையான் குடிமாற நாயனார், இல்லறத்தில் அன்று வறுமை வந்துற்றபோதும் , காரைக்காலம்மையால் வரலாறும் இல்லறத்தில் நின்று கொண்டே ஆன்மீகத்தில் உயர்ந்து போ¢ன்ப பெருவாழ்வு பெற்றதை அறியலாம்.இல்லற வாழ்விலே தர்மத் தளத்தில் நின்று செய்யும் கடமைகள் ஆன்மீக உணர்விற்குவழிவகுக்கும் என்பதை அறியலாம்.
ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம் எனில் அது மக்கள் வாழ்க்கை நலத்துடன் இணைந்ததா¡க இருக்க வேண்டும். அவ்வாறு அமைவதற்கு இல்லறம் சிறந்த வழியாகும். இந்துமத தத்துவக் கருத்துக்கள் மூலமும் இவற்றை நாம் உய்த்துணரலாம்.
நம்பிக்கை !
நம்பிக்கை !
ஏகாதசியில் மரணம் அடைந்து, துவாதசியில் தகனம் நடந்தால் மோக்ஷம் அடையலாம் என்று கூறப்படுகிறது .காரணம் ஏகாதசியின்
தேவதை_ யமன், துவாதசியின் தேவதை _விஷ்ணு .எனவேதான் இந்துக்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை உள்ளது.

Friday, June 21, 2013

'அதமன்-மத்திமன்-உத்தமன்'


வயதான காலத்தில் தன்னை வைத்துக் காப்பாற்ற மகன் இல்லையே என்று ஏங்குபவன் "அதமன்".
தான் இறந்த பிறகு தனக்கு கருமம் செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் "மத்திமன்"
தான் இறந்த பிறகு தான் செய்துவந்த தான தருமங்களைத் தொடர்ந்து செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் தான் "உத்தமன்"

அரச மனு நீதி !


மாதா, பிதா, குரு, புரோகிதர், புராணிகர், வேதப்பிராமணர் ,தபசிகள், வித்வஜனர், விகடகவிகள், சுத்தவீரர் , தானாபதிகள்,தூதர்கள்,சுற்றத்தார்,பிணியாளர் வறியவர், பாலர், அடைக்கலம் புகுந்தோர், போகமாதர் என்னும் இந்தப் பதினெட்டுப் பெயர்களும் செய்த குற்றத்தைப் பாராட்டி அதற்காக அவர்களைத் தண்டிப்பது அரசர்களுக்கு மனுனீதியன்று.

கஜ + அஜ + கோ கர்ணம் .கிருபானந்த வாரியார்


கஜகர்ணம் : யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது. அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல் பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள். அவர்களை ' கஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
அஜகர்ணம் : ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும். அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள். திரும்பிப் பார்க்க மாட்டார்கள். அவர்களை ' அஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
கோகர்ணம் : பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும் அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும். அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் .இவர்களை 'கோகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
--- கிருபானந்த வாரியார்

இரண்டு முடி சூட்டு விழாக்கள் !


ராம பட்டாபிஷேகத்திற்கும், மகாபாரத தர்மர் பட்டாபிஷேகத்திற்கும் உள்ள சிறப்பு :
ராமாயணத்தில் வசிஷ்ட முனிவரால் ( மனிதர் ) ஸ்ரீ ராமபிரானுக்கு ( கடவுள் ) பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது .
மகாபாரதத்தில் பார்த்தனுக்கு தேரோட்டியவரும், கீதோபதேசம் செய்தவருமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ( கடவுள் ) தர்ம புத்திரருக்கு ( மனிதர் ) , பட்டாபிஷேகம் செய்தார். இதுதான் மகாபாரதத்தின் சிறப்பு .

வெற்றிலைப் பாக்கு போடும் முறை

.
காலையில் ( களிப் ) பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும், பகல் சாப்பாட்டிற்குப் பிறகு பாக்கு சுண்ணாம்பு மிகுதியாகவும் வெற்றிலை குறைவாகவும், இரவில் பாக்கு சுண்ணாம்பு மிகக் குறைவாகவும் வெற்றிலை மிகவும் அதிகமாகவும் போட்டுக்கொள்ள வேண்டும் எப்போதும் முதலில் ஊரும் நீரை உமிழ்ந்துவிட்டு, பிறகு ஊறும் நீரை உட்கொண்டு திப்பியை உமிழவேண்டும் .

ராமர் -- குகன் !


ராமர் காட்டுக்கு வந்ததும் முதமுதல்ல அவரைச் சந்திச்சது குகன். வேடனான குகனும், அரச குமாரரான ராமரும் முதல் சந்திப்பிலேயே சாதி பாகுபாடு இல்லாம இணைஞ்சிட்டாங்க. அந்த சந்திப்பின்போது குகன் தேனையும், மீனையும் ராமருக்கு கொடுத்தான் .
அப்போ மத்தவங்க, " ராஜகுமாரனான ராமருக்கு நீ மீனையும், தேனையும் கொடுத்ததில் என்ன பெருமை ? எத்தனையோ உயர்ந்த விருந்தை உண்டவராயிறே ராமர்" னாங்க .
அப்போ குகன், " சாதாரண வேடனான நான் கொடுத்த இந்த பொருட்களில் மற்றவர்களுக்குப் புரியாத உட்பொருள் உண்டு. அதைப் புரிந்து ஏற்றுக் கொண்டார் ராமர்." னான் .
" என்ன? "ன்னு பதில் கேள்வி வர, குகன் மூலமா கம்பர் எப்படி சமாளிக்கிறாருன்னு பாருங்க .
" தேன் உயர்ந்த மலையில் உள்ள மரத்தின் உச்சியில் கிடைப்பது. மீன் கடலின் ஆழத்தில் கிடைப்பது. எங்கள் நட்பு கடலின் ஆழம் போன்று இதய ஆழத்தில் இடம் பெற்றால் அது மலையைப் போல் உயர்ந்ததாக இருக்கும் என்பதே உட்பொருள்" னான் .
' இதைவிட ஆழமில்லை என்றும் இதைவிட உயர்ந்ததில்லை என்றும் போற்றும்படி அமைவது நட்பு '.

லிங்கம்

லிங்கம்

ஏன் லிங்க வடிவம் ?.
வடிவற்ற நிலையிலிருந்து சக்தி ஒரு வடிவெடுக்கும்போது , அது முதலில் பெறுவது லிங்க வடிவம்தான் . அதீத சக்தியைப் பூட்டிவைக்க மிக உன்னதமான வடிவம் தியான லிங்கம் !
தியான லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது எப்படி ?
ஒரு வடிவத்தைப் பிரதிஷ்டை செய்யும்போது அதற்கு மந்திரப் பிரதிஷ்டை; பிராணப் பிரதிஷ்டை என இரு வழிகள் உள்ளன . ஒவ்வொரு சக்தி நிலைக்கென்று உள்ள மந்திரங்களை உச்சாடனம் செய்து , பிரதிஷ்டை செய்வது மந்திரப் பிரதிஷ்டை . உயிர் சக்தி கொண்டு நேரிடையாகச் சக்தி நிலையில் பிரதிஷ்டை செய்வது பிராணப் பிரதிஷ்டை . தியான லிங்கம் அதீத சக்தி கொண்டு பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது . அதற்குக் கிட்டத்தட்ட மூன்றாண்டு கால தீவிர சாதனை தேவைப்பட்டது . நாம் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்...தியான லிங்கம் யோகக் கலையின் அதி தூய்மையானதொரு வெளிப்பாடு .
தியான லிங்கம்.... சில சிறப்புத் தகவல்கள் !
தியான லிங்கம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை விளக்குவதற்காக , நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தம்பத்தில் இந்து , இஸ்லாம் , கிறிஸ்துவம் , ஜைனம் , புத்தம் , தாயிஸம் போன்ற உலகின் முக்கியமான எல்லா மதங்களின் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன .
மூன்று உயரமான படிகளில் ஏறியதும் , ' பரிக்கிரமா ' என்னும் திறந்தவெளிப் பாதை . இருபுறமும் நீள் மண்டபங்கள் .உடனடியாக கவனத்தைக் கவர்வது , யோகக் கலையின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் பதஞ்சலியின் அற்புத வடிவம் . அவருக்கு நேரெதிரில் வனஸ்ரீ என்னும் பெண் தெய்வத்தின் வடிவம் . ஒரு பொன் இலை வடிவத்தில் , வனஸ்ரீ அன்பையும் , செல்வத்தையும் குறிக்கிறாள் . தவிர கண்ணப்பர் , மெய்ப்பொருள் நாயனார் , ஷிவயோகி , சதாசிவ பிரம்மானந்தா , அக்கா மகாதேவி , பூசலார் போன்ற தெய்வப் பிறவிகளின் சிற்ப வடிவங்கள் . எங்கும் சக்தி நிலையை விளக்கும் சர்ப்ப வடிவங்கள் .
இவற்றைக் கடந்ததும் , பிரமிக்க வைக்கும் வட்ட வடிவக் கருவறை . மையத்தில் கம்பீர அழகுடன் பரவசப்படுத்தும் தியான லிங்கம் . 33 அடி உயர வட்ட வடிவமான அபாரமான கருவறையில் கான்க்ரீட் , இரும்பு போன்ற பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன . செங்கல்லும் , மண்ணும் , பாறையும் ,இயற்கையான பிணைப்புப் பொருட்களும் ம்ட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன .
இந்தக் கருவறைக் கூடத்தின் சுற்று வெளியில் , லிங்கத்தை நோக்கியபடி 28 தியானப் பிறைகள் அமைக்கப்பட்டுள்ளன .
தியான லிங்கம் அடர்த்தியான கருங்கல் கொண்டு அமைக்கப் பெற்றது . தியான லிங்கத்தின் உயரம் 13 அடி , 9 அங்குலம் .
ஆவுடையார் என்று சொல்லப்படும் அதன் பீடம் , சுருண்டு படுத்திருக்கும் ஒரு சர்ப்பத்தின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது . லிங்கத்தைவிட 30 சதவீதம் அடர்த்தி குறைவான வெண்பாறையில் உருவாக்கப்பட்டுள்ளது அது .
ஆவுடையார் சர்ப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் , 3 அடி 3 அங்குலம் . மொத்த நீளம் 13 அடி , 9 அங்குலம் .
தியான லிங்கத்தில் ஏழு சக்கரங்களின் சக்தி நிலைகளில் ஏழு பித்தளை வ்ளையங்கள் . ஆவுடையார் சர்ப்பத்துக்கு ஏழு சுருள்கள் . தியான லிங்கத்தைச் சுற்றிலும் ஜல சீமை .
வட்டக் கருவறையில் மைய உச்சியில் , லிங்க வடிவில் தொங்கவிடப்பட்டு இருக்கும் பித்தளை அமைப்பு நேரடியாகச் சூரியக் கதிர்கள் நுழைவதைத் தடுத்து , கருவறைக்கூடத்தை எப்போதும் குளுமையாக வைத்திருக்க உதவுகிறது .
லிங்கத்தின் உச்சியில் துளித் துளியாக நீர் சொட்டிக்கொண்டு இருக்கும் . ஒலி , வெளிச்சம் , விளையாடும் எண்ணெய் விளக்குகள் , உள் வரை ஊடுருவும் அமைதி எல்லாமாகச் சேர்ந்து தியான லிங்கத்தின் அண்மையில் இருக்கையில் , விவரிக்க முடியாததொரு தெய்வீக உணர்வை உள் செலித்துகின்றன
--சத்குரு ஜக்கி வாசுதேவ். ஆனந்தவிகடன். ( 18-04-2007 )

காலனை உதைத்த கால் !

காலனை உதைத்த கால் !
" வெறி கொண்ட காலனை உதைத்த கால் உனது கால் , அதனால் தூக்கி நின்றான் " .
காலனை உதைத்த கால் உமையவளுக்குச் சொந்தமான இடது கால் , அதனால் அதற்கு மதிப்புக் கொடுப்பது போல , நடராஜர் , காலைத் தூக்கி ஆடியபோது , அந்தக் காலைத் தூக்கி ஆடினார் என்று இதற்குப் பொருள் .
கருணையின் வடிவமே உமையவள் . அவளை வணங்கினால் நாம் எல்லா நலன்களும் பெறலாம் . அவள்தான் மதுரையில் மீனாட்சியாகப் பிறக்கிறாள் . மதுரையை ஆண்ட அவள் திக் விஜயம் கிளம்புகிறாள் . பூவுலகில் அவளை எதிர்த்து நிற்பார் யாருமில்லை . எல்லாரும் சரண் அடைந்து விடுகிறார்கள் .
உடனே , மீனாட்சி அஷ்டதிக் பாலகர்கள் மீது பாய்கிறாள் .அவர்களும் , சரணடைகிறார்கள் . கடைசியில் தென் திசைக் காவலனான யமனாவது தன்னை எதிர்த்து நிற்பானா என்று நினைக்கிறாள் .
அவனோ , அவள் காலில் விழுந்து , " தாயே ! எனக்கு உயிர் கொடுத்த உமையவளே ! உன்னை நான் எதிர்த்துப் போரிடலாமா ! அது நீதியாகுமா ! அப்படிப் போட்டாலும் உன்னை நான் வெல்ல முடியுமா ! " என்று கேட்கிறான் .
" நான் உனக்கு உயிர் கொடுத்தேனா ! எப்பொழுது ? " என்று கேட்கிறாள் மீனாட்சி .
" ஏனம்மா ! மார்க்கண்டேயரை மறந்து விட்டாயா ? அவருக்குக் கொடுக்கப்பட்ட பதினாறு வயது ஆயுள் முடிந்துவிட , அவர் உயிரை எடுக்க நானே வந்தேன் . அப்பொழுது , அவர் சிவலிங்கத்தைத் தழுவிக் கொள்ள , நான் அதையும் சேர்த்து என் பாசக் கயிற்றினால் இழுத்தேன் . அதைக் கண்டு கோபம் கொண்ட சிவன் என்னை உதைக்கப் போனார் . பிறர் உயிரை வாங்கும் என் உயிரையே அவர் வாங்கிவிடுவாரோ என்று நடுங்கினேன் . உன்னை மனதார வேண்டிக் கொண்டேன் . அதன் காரணமாக , அவர் என்னை உதைத்த கால் உனது கால் , ஆதலால் நான் பிழைத்தேன் " என்கிறான் யமன் .
இதைக் கேட்டு மீனாட்சி அவன் மீது கருணை கூர்கிறாள் . அந்த கருணைதான் அவளைச் சிவனைச் சந்திக்கச் செய்து , அவனோடு மணம் முடித்து வைக்கிறது .

இன்று போய் நாளை வா "

முதல் நாள் போரில் , ராமனை எதிர்த்த ராவணன் தேர் இழந்து , வாள் இழந்து , வில் இழந்து கவசம் இழந்து , கிரீடம் இழந்து தன்னந்தனியனாக நிற்கிறான் . ராமன் இஷ்டப்பட்டிருந்தால் , அப்பொழுதே அவனைக் கொன்று போரை முடித்திருக்கலாம் . அவனுக்கு நோக்கம் முக்கியம் . அந்த நோக்கத்தை எந்த வழியில் நிறைவேற்றுகிறான் என்பதும் முக்கியம் . யுத்தமானாலும் , அதையும் தர்ம வழியில் நடத்த வேண்டும் என்பது அவன் கொள்கை . அதனால் நிராயுதபாணியாக இருந்த ராவணனை அவன் கொல்ல விரும்பவில்லை . அதற்குப் பதில் , " இன்று போய் நாளை வா " என்று சொன்னான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும் .
ஆனால் , கம்பரின் பாட்டில் , ' இன்று போய் , நாளை வா என்று மட்டும் இல்லை' இன்னொரு முக்கியமான சொல்லும் இருக்கிறது . அந்தச் சொல்லோடு சேர்த்துச் சொன்னால்தான் இந்த வாசகத்துக்குச் சரியான பொருள் கிடைக்கும் .
ராமன் " இன்று போய் நாளை வா " என்று மட்டும் சொல்லவில்லை , " போர்க்கு " என்ற சொல்லைச் சேர்த்து , " இன்று போய் போர்க்கு நாளை வா " என்கிறான் .
இதில் ராமன் ஒரு கருத்தைச் சூசகமாகக் கூறுகிறான் . " போர் புரிவதானால் நாளை வா . இல்லை , என்னைச் சரண் அடைவதென்றால் இன்றே அடை , போரை இத்தோடு நிறுத்திக்கொள்வோம் " என்கிறான் .
இது ராமனை ஒரு இக்கட்டான நிலையில் கொண்டு நிறுத்தாதா என்று சிலர் கேட்கலாம் . அது என்ன இக்கட்டான நிலை ! வாலி வதத்தின்போது , ஏன் ராமன் மறைந்து நின்றான் என்று லட்சுமணன் விளக்கம் கூறுகிறானே , அந்த இக்கட்டான நிலை .
லட்சுமணன் கூறுகிறான் , " நின் தம்பி முன்பு வந்து சரண் புக , உன்னைக் கொல்லுவேன் என்று ராமன் அவனுக்கு வாக்குக் கொடுத்தான் . ராமன் உன் எதிரில் வந்திருந்தால் நீயும் சரண் புகுந்திருப்பாய் . அப்பொழுது நின் தம்பிக்குக் கொடுத்த வாக்கு என்ன ஆவது " என்று .
அதே மாதிரி , இங்கே ராவணன் சரண் புகுந்தால் , ஏற்கனவே விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து கொடுத்த அரசை ராவணனுக்கு எப்படிக் கொடுப்பது ? ஆனால் இது பற்றி ராமன் கவலைப்படவில்லை . அப்படி ராவணன் சரண் அடைந்திருந்தால் , கோசலை நாட்டை அவனுக்குக் கொடுத்திருப்பான் என்று காட்ட , கம்பர் , " இன்று போய் நாளை வா " என்று சொன்னது யார் தெரியுமா ,
" கோசலை நாடுடை வள்ளல் " என்று அப்பாட்டை முடிக்கிறார்

வேதங்களின் தாய் !


சந்தியா , சாவித்திரி , காயத்ரி , சரஸ்வதி இவர்கள் நான்கு பேரும் சந்தியாவந்தன வழிபாட்டில் சிறப்பிடம் பெறும் தெய்வங்கள் . வைதீக வழிபாட்டில் காயத்ரி தேவிக்கு அதிகமுக்கியத்துவம் உண்டு .
சூரியனுக்கு ஒளி தருமாறும் , உலகுக்கெல்லாம் ஞான ஒளி கொடுக்குமாறும் வேண்டும் மந்திரமே காயத்ரி மந்திரமாகும் .
காயத்ரி என்றால் எவரெல்லாம் தன்னை ஜெபிக்கிறார்களோ அவர்களைக் காப்பாற்றுவது என்று பொருள் .
' காயத்ரீம் சந்தஸாம் மர்தா ' என்பது ஒரு வாக்கியம் . இத்தொடரில் உள்ள சந்தஸ் என்பது வேதத்தைக் குறிக்கும் .வேத மந்திரங்களின் தாய் காயத்ரி மந்திரம் என்பது இந்தத் தொடரின் பொருள் .
காயத்ரி 24 எழுத்துக்களை கொண்டது . மூன்று பாதங்களை உடையது . எனவே , இம்மந்திரத்தைத் திரிபதா என்பார்கள் . ஒவ்வொரு பாதம் ஒரு வேதத்தின் சாரமாகும் . மூன்று பாதங்களும் ரிக் , யஜுர் ,
சாம வேதங்களின் சாரமாகக் கருதப்படுகின்றன . ( அதர்வண வேதத்துக்கு என்று தனி காயத்ரி மந்திரம் உண்டு . இரண்டாவது முறை உபநயனம் செய்து கொண்டு அதன் பின்புதான் அதர்வண காயத்ரி மந்திர ஜெபம் செய்வார்கள் .)
காலை , நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் காயத்ரி ஜெபம் செய்ய வேண்டும் . காயத்ரி , சாவித்திரி , சரஸ்வதி என்று மூன்றுவிதமாக தியானிக்கவேண்டும் . காலையில் பிரும்ம ரூபிணியாகவும் , மதியம் சிவரூபிணியாகவும் , மாலையில் விஷ்ணுரூபிணியாகவும் காயத்ரி தேவி இருக்கிறாள் .
மந்திர சக்தி என்பது அக்னியைப் போன்றது . நெருப்பு அணைந்து இருப்பது போல தெரிந்தாலும் அதற்குள் ஒரு பொறி நிச்சயம் இருக்கும் . அந்தப் பொறி தான் காயத்ரி மந்திரம் . அதை ஊதுவதால் பெரிதாக்கிவிட முடியாது . ஓதுவதால்தான் அதிகரிக்கச் செய்ய முடியும் .
ஜூரத்துக்கு மருந்து கொடுப்பது போல ஆத்மாவைப் பிடித்திருக்கக் கூடிய பந்தங்கள் என்னும் ஜூரத்தை நீக்கக் கூடிய மருந்துதான் காயத்ரி என்கிறார் காஞ்சி மாமுனிவர்

திருநீறு ஏன் ?

திருநீறு

மாற்றங்களைக் கடந்தவர் கடவுள் . ' மாற்றம் மனம் கழிய நின்ற மறையவன் ' என்பது திருவாசகம் . பிரம்மம் என்பது மாறுபாடுகள் இல்லாதது , அழியாதது , சாஸ்வதமானது என்று தத்துவ நூல்கள் சொல்லுகின்றன . நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது இன்னொன்றாக மாறிவிடும் . பஞ்சையோ , கட்டையையோ இட்டால் அது சாம்பலாகும் . ஆனால் , நெருப்பில் சாம்பலைப் போட்டால் என்னவாகும் ? அது சாம்பலாகவே இருக்கும் . எந்த மாற்றமும் அடையாது .
இப்படி மாறாமல் இருக்கும் பிரம்ம தத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்கிறோம் . கண்ணில் படுவதுதான் மனதில் நிலைத்து நிற்கும் .கண்ணில் இருந்து மறைவது காலப்போக்கில் மறைந்துவிடும் . பிரம்மம் பற்றிய நினைப்பு எப்போழுதும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நெற்றியில் திருநீறு அல்லது திருமண் அணிகிறோம் !

ஜபத்தின் பலன் !


* வீட்டில் சுத்தமான இடத்தில் அமர்ந்து இறைவன் நாமாவை ஜபம் செய்தால் பலன் ஒன்றுக்கு ஒன்று .
* நதிக்கரையில் அல்லது நீரோடைக் கரையில் பலன் ஒன்றுக்கு இரண்டு
* பசு கட்டிய இடத்தில் ஒன்றுக்கு நூறு மடங்கு பலன் .
* யாகம் செய்த இடத்தில் ஒன்றுக்கு ஆயிரம் மடங்கு பலன் .
* சுத்தமான கோயில்களில் ஒன்றுக்குப் பத்தாயிரம் மடங்கு பலன் .
* புனிதத் தலங்களில் ஒன்றுக்கு லட்சம் மடங்கு பலன் .
* மகான்கள் சித்தி பெற்ற இடத்தில் ஒன்றுக்கு கோடி மடங்கு பலன்

பிரணவ மந்திரம் .


' ஓம் ' என்ற மந்திரத்தில் ' அ ' ' உ ' ' ம் ' என்ற மூன்று எழுத்துக்களின் உச்சரிப்பு சேர்ந்திருக்கிறது . இதில் ' அ ' என்ற எழுத்து நம்முடைய வயிற்றுப் பகுதியிலிருந்து சக்தியுடன் எழுந்து வருகிறது . ' உ ' என்பது நம்முடைய கண்டத்தில்லிருந்து புறப்படுகிறது . நாம் முடிக்கும் ' ம் ' என்ற எழுத்து இந்த உச்சரிப்பை , உதடுகளை மூடி முடித்து வைக்கிறது . இந்த மூன்றும் மொழியை அமைக்கும் ஒலிகளை பிரதிபலிக்கும் செயல்களாக அமைகின்றன . ஆரம்பம் , இடை , முடிவு என்ற நிலைகளையும் அவை காட்டுகின்றன . நமது ரிஷிகள் இந்த மூன்றையும் இணைத்தே பிரணவ மந்திரமாக அமைத்திருக்கிறார்கள் . ஒவ்வொரு ஜீவனும் விழிப்பு , கனவு , உறக்கம் என்ற மூன்று நிலைகளையும் இணைத்து , உடலின் மூன்று பகுதிகளையும் சேர்க்கும் ' ஓம் ' என்ற மந்திரம் காட்டுகிறது . நாம் உட்கார்ந்து 'ஓம் ' என்று சொல்லும்போது , இந்தத் தத்துவத்தை முழுமையாக உணர வேண்டும் .
--- சுவாமி பூர்ணானந்த தீர்த்தர்

தாயின் மகிமை '

இராமபிரானின் தாயான கௌஸல்யை காலமான சமயம் இராமர் அதிகமான தான தற்மங்களைச் செய்தாராம் . பிறகு குருவான வசிஷ்டரை வணங்கி , " ஸ்வாமி ! நான் நிறையத் தான , தர்மங்களைச் செய்தேன் . கோடிப் பசுக்களை ' கோதானம் ' செய்து விட்டேன் . இதனால் என் பிரியமான தாயின் மனம் மகிழ்ச்சி அடைந்திருக்குமா ? " -- என்று கேட்டாராம் .
அதற்கு வசிஷ்டர் , " அப்பனே ! ஒரு சமயம் உன் தாய் உன்னை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும்போது நான் எதிரில் வந்தேன் என்று உட்கார்ந்திருந்தவள் இடக் கையைத் தரையில் ஊன்றிக் கொண்டு சிரமத்துடன் எழுந்து கொண்டாள் . அந்த ஒரு சிரமத்துக்கு ஈடாகாது உன் கோதானம் " --- என்றாராம் . இராமர் தலை குனிந்தாராம் .

5 வகை நந்திகள் .

5 வகை நந்திகள் .
பெரிய சிவாலயங்களில் 5 வகையான நந்திகள் அமைந்திருக்கும் .
இந்திர நந்தி.
வேத நந்தி .
ஆத்ம நந்தி .
மால்விடை நந்தி .
தரும நந்தி . ஆகியவைதான் அவை .
. இவைகளில் , இந்திர நந்தியை கோவிலுக்கு வெளியே சற்றுத் தொலைவில் கருவறையை நோக்கி அமைக்கின்றனர் .
வேத நந்தி அல்லது பிரதம நந்தியை சுதையாலும் , சுண்ணாம்பாலும் மிகப் பெரிய அளவில் பெரிய மண்டபத்தினுள் அமைக்கின்றனர் .
ஆத்ம நந்தி கொடி மரத்தின் அடியில் அமைகிறது . இதற்கே , பிரதோஷ கால சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன .
மால்விடை நந்தி சக்தி பதமான இரண்டாவது ஆவரணுத்துள் அமைகிறது .
தரும நந்தி இறைவனுக்கு அருகில் மகா மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் .

உடலுக்கு 9 வாசல் !

உடலுக்கு 9 வாசல் !
பரம்பரையாகச் சொல்லப்பட்டு வரும் கணக்கு இது . ஆனால் , இக்கணக்கு தவறு .
இரண்டு கண்கள் + இரண்டு காதுகள் + இரண்டு மூக்குத் துவாரங்கள் + வாய் + சிறுநீர்ப்பாதை + மலப்பாதை ஆக ஒன்பது வாசல் உடலுக்கு என்பர் .
இது ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் . பெண்களுக்கு 10 வாசல் . ஆண்களை விட ஒன்று கூடுதல் . கருப்பைப் பாதை அல்லது உடலுறவுப்பாதை என்பது பெண்களுக்கு கூடுதலான வாசல் .
அதாவது , ஆண்களுக்கு சிறுநீர்ப்பாதையும் விந்து வெளியேறும் பாதையும் ஒன்று . ஆனால் , பெண்களுக்கு உடலுறவுப் பாதை ( கருப்பைப் பாதை ) தனி , சிறு நீர்ப்பாதைத்தனி . எனவே , பெண்களுக்கு 10 வாசல் .
பெண்களுக்கு கருப்பைப் பாதைத் தனி , சிறுநீர்ப்பாதைத் தனி என்பதைக்கூட அறியாமல் காலங்காலமாய்ச் சொல்லப்படும் கணக்கு தவறு என்பதை அனைவரும் அறிய வேண்டும் . கருப்பைப் பாதைக்கு மேல் உள்ள சிறு துவாரந்தான் பெண்ணின் சிறுநீர்ப்பாதை கருப்பைப்பாதை ( உடலுறவுப் பாதை ) வழி பெண்களுக்கு சிறுநீர் வருவதில்லை .
இன்னும் சரியாகச் சொன்னால் , பெண்களுக்கு மொத்தம் 12 வாசல்கள் . ஆம் , பால் சுரப்புப் பாதைகள் இரண்டையும் சேர்த்தால் 12 வாசல்கள்தானே !

ஆண் வெற்றிலை பெண் வெற்றிலை


வெற்றிலையின் பின்பக்கம் உள்ள நரம்புகள் நடுநரம்பின் ஒரு புள்ளியிலிருந்து இடம் வலமாகப் பிரிந்து சென்றால் , அது பெண் வெற்றிலை .
நடுநரம்பின் வெவ்வேறு பிள்ளிகளிலிருந்து கிளை நரம்புகள் இடது பக்கமாகவோ , வலது பக்கமாகவோ பிரிந்து சென்றால் அது ஆண் வெற்றிலை

ஏழு .தலைமுறை


ஆணின் விந்தில் உள்ள பல நூறு அணுக்களில் ஒன்றும் , பெண்ணிடம் உருவாகும் கருமுட்டைகளில் ஒன்றும் இணைந்து கரு உருவாகிறது என்பது இயற்கை . அறிவியல் மற்றும் மருத்துவத் தகவல் . குழந்தையின் பண்புகள் இந்த ஜீன்களால் நிர்ணயிக்கப்படுகின்றன . ஜீன்களைப் பற்றி .ஆராய்ச்சி , அறிவியல் உலகில் இன்றும் தொடர்கதையாக இருந்து கொண்டிருக்கிறது . இந்தச் செய்தியை முன்னோர்கள் சிந்தித்தனர் . ஜீன்களை ' சுக்ல தாது ' என்பார்கள் . சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன . அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை , தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது .
தந்தையிடமிருந்து 21 அம்சங்கள் ; பாட்டனிடமிருந்து 15 அம்சங்கள் ; முப்பாட்டனிடமிருந்து 10 அம்சங்கள் ; ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை . நான்காவது தாதையிடமிருந்து 6 அம்சங்களும் ; ஐந்தாவது தாதையிடமிருந்து 3 அம்சங்களும் ; ஆறாவது தாதையிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன . எனவே , ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெறுகின்றன . எனவேதான் தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது .
நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை , பாட்டன் , முப்பாட்டன் - இவர்கள் மூவருக்கும் திவசத்தில் பிண்டம் தரவும் தில தர்ப்பணம் கொடுப்பதற்கும் இதுவே காரணம் .

ஒருமைப்பாட்டின் தாரக மந்திரம் .

ஒருமைப்பாடு .
ஒரு மகானைச் சந்திக்க இளைஞர்கள் சிலர் சென்றார்கள் . " உங்களை மகான் என்கிறார்களே .... அப்படி எங்களை விட உங்களிடம் என்ன சிறப்புத் தன்மை இருக்கிரது ?" என்று கேட்டார்கள் .
" நான் சாப்பிடுகிறேன் , படிக்கிறேன் , தூங்குகிறேன் , உடற்பயிற்சி செய்கிறேன், பிரார்த்தனை செய்கிறேன் " என்றார் மகான் .
" இவை எல்லாவற்றையும் நாங்களும்தான் செய்கிறோம் . பிறகு எப்படி நீங்கள் உயர்ந்தவராகக் கருதப்படுகிறீர்கள்? " என்று இளைஞர்கள் மீண்டும் கேட்டார்கள் .
அப்போதுதான் மகான் சொன்னார் , " இரண்டு செயல்களும் ஒரே மாதிரியாகத் தெரியலாம் . ஆனால் , வித்தியாசம் இருக்கிரது . நான் சாப்பிடும்போது சாப்பிட மட்டுமே செய்கிறேன் . தூங்கும்போது தூங்க மட்டுமே செய்கிறேன் . படிக்கும்போது படிக்க மட்டுமே செய்கிறேன் , பிராத்தனை செய்யும்போது வேறு சிந்தனைக்கு இடமின்றி பிராத்தனை மட்டுமே செய்கிறேன் . செய்கிற செயலில் மட்டும் மனத்தை ஒருமுகப்படுத்துகிறேன் . நீங்கள் எப்படி ? " என்று கேட்டார் மகான் .
தங்கள் மனம் அடிக்கடி அலைபாய்வதை அப்போதுதான் இளைஞர்கள் உணர்ந்தார்கள் . வெற்றிக்கு வேண்டியது ஒருமைப்பாடு .
ஒரு நேரத்தில் ஒரு பணி . ஒரு நேரத்தில் ஒரு செயலை மட்டுமே செய்வது மனஒருமைப்பாட்டிற்கு மிகவும் அடிப்படையானதாகும் . அதில் ஒன்றிச் செய்வது மிகவும் முக்கியம் . ' நாம் ஒரு நாளைக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணங்களை எண்ணுகிறோம் ' என்று அறிஞர்கள்
கூறுகின்றனர் . மனம் அமைதியாக இருந்தால் எண்ணங்கள் குறையும் . எண்ணங்கள் ஒருமுகப்படுத்திச் செயலாற்றினால் மிகப் பெரும் ஆற்றல் கிடைக்கும் .
மன ஒருமைப்பாடு ' மனத்தை நிலைப்படுத்த தனித்தனியாக எதையும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை . உன் ஆற்றலை செயலில் மனத்தை முழுவதும் குவிக்க முயன்றால் போதும் . குளிப்பது , உண்பது , படிப்பது , பயில்வது , உலவுவது , உரையாடுவது , படக்காட்சியைப் பார்ப்பது ஆகிய எந்தச் செயலாயிருந்தாலும் முழு முனைப்போடு அதில் மனத்தை ஈடுபடுத்து . நீ வெற்றி பெறுவாய் ' என்கிறார் ஜேம்ஸ் ஆலன் .
' மனத்தை அடக்க நினைத்தால் அலையும் . மனத்தை அறிய நினைத்தால் அடங்கும் ' என்றார் வேதாத்ரி மகரிஷி . மேலாகக் கேட்பதற்கு மிகவும் எளிதாகத் தோன்றலாம் . ஆனால் , செயல்படுத்திப் பாருங்கள் . அப்போதுதான் அதன் சிரமம் தெரியும் .
எப்போது நீங்கள் எதுவாக இருக்கிறீர்களோ .... அப்போது நீங்கள் அதுவாகவே இருங்கள் . -- இதுதான் மன ஒருமைப்பாட்டின் தாரக மந்திரம் .

ரோகி , போகி , யோகி மூவருமே இரவில் தூங்கமாட்டார்கள்


ரோகி , போகி , யோகி மூவருமே இரவில் தூங்கமாட்டார்கள் . ரோகி என்றால் நோயாளி . உடல்நிலை மோசமாக இருக்கும்போது , ஒருவனுக்குத் தூக்கம் வராது . போகி என்றால் இன்பத்தை நாடிப் போகிறவன் . அவன் நாடும் இன்பங்கள் பலவற்றுக்கு இரவுதான் உகந்தது . யோகி இரவில் தூங்காமல் இருப்பதற்குக் காரணம் , இரவும் இருளும் அவருடைய ஆன்மிகப் பயிற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் .
காரணம் , இருளில் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பாகுபாடு இன்றி ஐக்கியமாகிவிடுகின்றன . வெளிச்சம் வந்ததும் ஒவ்வொன்றும் தன் தனி அடையாளத்தோடு விறைத்து நிற்கிறது . இருள் என்பது உண்மைக்கு வெகு அருகில் இருக்கிறது . வெளிச்சம் என்பது பொய்க்கு அருகில் இருக்கிறது .
ஆன்மிகத்தில் இருள் என்பது உன்னதமாக கருதப்படுகிறது

ஒருவன் தான் சம்பாதித்த பணத்தை ஆறு வகையாகப் பிரித்துக் கொண்டு செலவிட வேண்டும்

 .
வேதவேள்விகளைப் புரிவதை விடவும் , கோயில் , குளங்களுக்குச் சென்று சுவாமி கும்பிடுவதை விடவும் முன்னோர்களை வழிபடுவது முக்கியம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன .
' மாதுர் தேவோ பவ ; பிதுர் தேவோ பவ ; ' -- என்பது சாஸ்திரத் தொடர் .
முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்தது தமிழ்நெறி . ஒருவன் தான் சம்பாதித்த பணத்தை ஆறு வகையாகப் பிரித்துக் கொண்டு செலவிட வேண்டும் என திருவள்ளுவர் கூறியிருக்கிறார் .
ஒரு பகுதி அரசனுக்குரிய வரி , தென்புலத்தார் , தெய்வம் , விருந்து , சுற்றம் , தன் சொந்தச் செலவுகள் என்று ஐந்து வகை . ஆக மொத்தம் ஆறு வகை .
இவற்றுள் தென்புலத்தார் என்பது தெற்கில் உள்ள பிதுர்லோகத்தில் வாழும் முன்னோர்களைக் குறிக்கும் . தெய்வ வழிபாட்டை விடத் தென்புலத்தார் வழிபாட்டுக்குத் திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுத்ததைத் " தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை " என்ற இந்தக் குறள் காட்டுகிறது

வன்மை - மென்மை !


சாகும் தருவாயில் ஒரு குரு படுக்கையில் கிடந்தார் . அவரை சுற்றி அவரது சீடர்கள் நின்று கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர் . குருவின் மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது . மெதுவாக கண் திறந்த குரு , ' என்ன ' என்பது போல் அவர்களைப் பார்த்தார் . சீடர்களின் கண்களில் கண்ணீர் . கடைசியாக அவர்களுக்கு ஏதாவது சொல்ல நினைத்த குரு , ' வாழ்க்கை தத்துவம் ஒன்றை புரிய வைக்கிறேன் , அருகில் வாருங்கள் ' என்று தன் சீடர்களை அழைத்தார் . நெருங்கி வந்த அவர்களிடம் தன் பொக்கை வாயைத்திறந்து காண்பித்தார் . ' அவ்வளவுதான் போங்கள் ' என்றார் . ஒரு சீடனைத் தவிர எல்லோரும் ' புரிந்தது ' என்று தலையை ஆட்டிவிட்டு சென்றுவிட்டனர் . அந்த சீடனுக்கோ ஒரே குழப்பம் . 'வாய்க்குள் அப்படி என்ன வாழ்க்கை தத்துவம் இருக்கப் போகிறது ' என்று குழம்பியபடியே இருந்தவன் , குருவிடமே கேட்டான் .
' என் வாய்க்குள் என்ன இருந்தது ?' - குரு கேட்டார் .
' நாக்கும் , உள் நாக்கும் இருந்தது ' - சிஷ்யன் .
' பல் இருந்ததா ?' - குரு .
' இல்லை ' - சிஷ்யன் .
' அதுதான் வாழ்க்கை . வன்மையானது அழியும் . மென்மையானது வாழும் ' - குரு

சிந்தனைக்கு !


அமெரிக்கா செல்ல தீர்மானித்த விவேகானந்தர் , அன்னை சாரதாதேவியை வணங்கி ஆசி கேட்டார் .
" அறையில் இருக்கும் கத்தியை எடுத்து தா " என்றார் அன்னை .
" என்ன இது ?' என்று யோசித்தபடியே , விவேகானந்தரும் கத்தியை எடுத்துக் கொடுத்தார் .
கத்தியை வாங்கிய அன்னை , " உனக்கு ஆன்மிக போதனை செய்ய தகுதி இருக்கிறது . தாராளமாக அமெரிக்கா சென்று வா !" என்று ஆசிர்வதித்தார் .
' அம்மா கத்தி அளித்ததை வைத்து ஆன்மிகதகுதியை எப்படி அறிந்துகொண்டீர்கள் ?' என்று விவேகானந்தர் கேட்டதற்கு அன்னை அளித்த பதில் :
" கத்தியின் கூர்மையான பகுதியை உன் கையில் பிடித்துக்கொண்டு , கைப்பிடி பகுதியை என்னிடம் நீட்டினாய்... . இது அடுத்தவருக்கு காயமேற்படக்கூடாது என்று உனக்குள் நிறைந்திருக்கும் ஆன்மிக உணர்வை வெளிப்படுத்துகிறது !" என்றார் அன்னை .
* மனித ஜென்மம் எடுக்கும் எந்த உயிரும் பிறந்த முதல் மாதத்திலிருந்து பிண்டத்துக்கும் , அண்டத்துக்கும் ஆன தொடர்பை புதுப்பித்துக்கொள்கிறது . .
* ' தத் ' என்றால் ' அது ' என்று அர்த்தம் . ' த்வம் ' என்றால் ' நீ ' என்று அர்த்தம் ; தத்துவம் என்றால் , ' நீயே அது ' என்று அர்த்தம்

கிருஷ்ணன் வணங்கும் 6 பேர்

கிருஷ்ணன் வணங்கும் 6 பேர் .
நான் 6 பேரை வணங்குகிறேன் என்று கிருஷ்ணபரமாத்மா சொல்லியிருக்கிறார் . அந்த 6 பேர் யார் தெரியுமா ?
ப்ராதஸ்நாநி அதிகாலையில் குளிப்பவன் .
அஸ்வத்தசேவி அரச மரத்தை வணங்குபவன் .
த்ருணாக்னி ஹோத்ரி மூன்று தீயை இடையறாது வளர்ப்பவன் .
நித்யான்னதாதா நாள்தோறும் ஏழைகளுக்கு உணவளிப்பவன் .
சதாபிஷேகி நூற்றாண்டு விழா செய்து கொண்டவன் .
ப்ரம்மஞானி இறைவனை உணர்ந்தவன் .

ஸ்ரீ சரபேஸ்வர கவசம்

நம்மில் சிலபேருக்கு வீட்டில் இருக்கும் போதோ அல்லது வெளியில் செல்லும் பொழுதோ இனம் புரியாத அச்சம் ஏற்படும்.

2.சிலருக்கு பல காரணங்களினால் திருமணம் தடைபட்டு கொண்டே இருக்கும்.

3.சிலருக்கு தீய கனவுகளின் காரணமாக இரவில் பெருங்குரலை எழுப்பி அலறுவார்கள்.

4.சில குடும்பங்களில் கணவரின் தீய நடத்தையால் குடும்பமே நெருக்கடிக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருக்கும்.

5.பெண்கள் வேலை,படிப்பு காரணமாக அடிக்கடி வெளியில் செல்லும் போது தீயவர் தொல்லைக்கு ஆளாக நேரிடும்.

6.வயதுக்கு வந்த பெண்ணை படிப்பதற்கு கல்லூரிக்கு(ஹாஸ்டல்) அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழும் தகப்பனாரும்

7.சில மாணவர்கள் தைரியம் குறைந்தவர்களாக இருப்பார்கள் அவர்களும் ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை ஓதி வரவும் (குறைந்தது தினமும் 21 முறை ) தக்க நிவாரணம் கிடைக்கும் .

"நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே!

" இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம், பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம். அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்.

சங்கு :

சங்கு :
----------
சங்கு பொதுவாகவே லெட்சுமியின் அம்சத்தை தாங்கியிருப்பது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப் படுகிறது. எந்த இனத்து சங்காக இருந்தாலும் அவற்றிலிரு வகைகள் உண்டு. இடம்புரி வலம்புரி என்று அவற்றைக கூறுவார்கள்.

சாதாரணமாக உள்ள சங்கில் ...அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள். தமிழ் மக்களின் ஆதி கலாச்சாரத்தில் ஒன்று இந்த சங்கு ஊதுதல் .சங்கு ஊதினால் அபசகுணம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர்.ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் .சங்கின் குணம் நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது .இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள் .இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது .இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர்.பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருக்குவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர்.வெண்மை நிற பால் சங்கை
உரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கபடுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது சங்கு ஊதுவதால் மூலாதார சக்கரம் நன்றாக செயலாக்கம் பெறுகிறது .மேலும் மூச்சு சீராகவும் ,நுரையீரல் செயல் பாட்டிற்கும்
பெரிதும் உதவுகிறது .சங்கு ஊதும் போது நாதமானது மூலாதாரத்தில் இருந்து எழுப்படுகிறது இதனால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுகிறது

ஆன்மீகத்தில் சங்கு :
இதன் ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும். மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று. இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீட்சம் பெருகும். வியாதிகள் நீங்கும்.

ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோமடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர். கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறுவோம்.

ஸம்ஸ்க்ருதம் எல்லோரும் கற்றுக் கொள்ளலாமா?

ஸம்ஸ்க்ருதம் எல்லோரும் கற்றுக் கொள்ளலாமா?

பதில் :
எல்லோரும் கற்றுக் கொள்ளலாம். முன்பு ஸம்ஸ்க்ருதம் அனைவரின் மொழியாக இருந்துள்ளது. பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் ஸம்ஸ்க்ருத பேரறிஞர்களாய் இருந்திருக்கிறார்கள். பெண்களும் கற்றுக் கொள்ளலாம்.
...
மற்றொரு விஷயத்தையும் கவனிப்போம். ஸம்ஸ்க்ருதம் கடினம் என்று சிலர் நினைக்கிறார்கள். இதற்கு காரணம் ஸம்ஸ்க்ருதத்தை இன்றைய நாளில் கற்பிக்கும் முறையே அந்த எண்ணத்தை உருவாக்கியுள்ளது. இப்பொழுது இலக்கண ரீதியாக மொழி பெயர்ப்பு செய்து கற்பிக்கும் பழக்கம் (பல்கலைக் கழகங்கள் உள்பட) தவறானது.

மேலும் குந்தையின் துவக்க நிலையிலிருந்து ஸம்ஸ்க்ருதத்தை கற்பிக்க வேண்டும். பாமரர் முதல் பண்டிதர் வரை எல்லோரும் கற்கப்பட வேண்டிய மொழி ஸம்ஸ்க்ருதம். அதன் உச்சரிப்பே நமக்கு சக்தியையும், கௌரவத்தையும் அளிக்கிறது என்பது ஸ்வாமி விவேகானந்தரின் கூற்று

இல்லத்து நித்ய பூஜையில் நாம் கவனிக்க வேண்டிய சில குறிப்பிட்ட விசேஷங்கள்

இல்லத்து நித்ய பூஜையில் நாம் கவனிக்க வேண்டிய சில குறிப்பிட்ட விசேஷங்கள்
-------------------------

* கூடுமான வரையில் விக்ரஹங்களை இல்லத்தில் வைத்து பூஜிப்பதைத் தவிர்க்கவும். படங்கள் போதுமானது.
* அதே மாதிரி கடையில் இப்பொழுது கிடைக்கும் அல்லது பலரால் இலவசமாக சரமாரியாக அளிக்கப்படும் யந்திரங்களை இஷ்டத்திற்கு வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. யந்திரங்கள் மிகவும் மகிமையானவை. அவற்றை பூஜிக்கும் விதானமே தனி. அதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. நம்மால் எல்லோராலும் வழிபட சாத்தியமாகாமல் போகலாம். அந்த தோஷம் நமக்கு வேண்டாம்.
... *சந்தனம் அரைத்தபின், சந்தனத்தை கட்டை விரல் சேர்க்காமல் எடுக்க வேண்டும். அரைத்தப் பிறகு சந்தனக் கட்டையும், அடிக் கல்லையும் ஒன்றாக ஒன்றின் மேல் ஒன்றை வைக்கக் கூடாது. தனித்தனியாக வைக்க வேண்டும்.
* பூஜையில் பெண்கள் சந்தனம் அரைத்துக் கொடுக்கக் கூடாது. ஆண்கள் விளக்கேற்றுவதும், விளக்கை மலையேற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.
* பூஜை செய்கின்றேன் என்று இல்லத்து மற்ற வேலைகளைப் புறக்கணித்தோ,உதாசீனப்படுத்தியோமணிக்கணக்கில் பூஜையில் ஈடுபடத் தேவையில்லை. பக்தியும், சிரத்தையும் மடி ஆசாரமும்தான் முக்கியம். விசேஷ நாள், கிழமை யென்றால் அது விஷயம் வேறு
ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிவன், உலகில் தர்ம, நியாயம் அழிந்து விடக்கூடாது. அதை பாதுகாப்பது உன் பொறுப்பு எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு பற்கள் வெளியே தெரியும்படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார்.

இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டான். நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன். சரி நமது உருவம் தான் இப்படி அகிவிட்டது.

நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர் கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு. இவனுக்கு காட்சி கொடுத்து வேண்டியதை கேள் என்று கூறினார்.

அதற்கு தர்மதேவன் நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருள வேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான்.

தர்மதேவனின் வேண்டுகோளின்படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால் அழகு எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர்மலை என்றானது. இன்றும் கூட அழகர் கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.

செல்வம் சேராத தோஷம்

உங்கள் ஜாதகத்தில் லக்னத் துக்கு 2-ஆம் இடமான தன ஸ்தானமும் 4-ஆம் இடமான வீடு அமைப்பு ஸ்தானமும் பாதிக்கப்பட்டிருந்தால். செல்வம் சேராத தோஷம் ஏற்பட்டு விடும். செல்வம் சேர்வதற்காக சேமிப்பை உயர்த்த வேண்டுமானால் சில பரிகாரம் செய்ய வேண்டும்.

வள்ளி- தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் ஆலயத்துக்கு செவ்வாய் கிழமையன்று காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்குச் சென்று பசும் நெய்யைக் கொண்ட நெய் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஒரு மணி நேரம் தொடர்ந்து எரிய வேண்டும்.

அந்த அளவிற்கு நெய் எடுத்துச் செல்ல வேண்டும். தீபம் ஏற்றப்பட்டவுடன் சந்நி தானத்தின் முன் அமர்ந்து ஓம் சரவணபவ என்று தொடர்ந்து ஒரு மணிநேரம் பாராயணம் செய்ய வேண்டும். கண்களை மூடிக்கொள்ளாமல் விளக்கின் ஒளியை உற்று நோக்க வேண்டும்.

இதே போல ஒன்பது செவ்வாய்க்கிழமைக்கு செய்ய வேண்டும். இதனால் கஷ்டம் விலகும். இத்தகைய பரிகாரம் செய்ய முடியாதவர்கள் அவரவர் வீட்டிலேயே வள்ளி- தெய் வானையுடன் கூடிய முருகன் படத்தை வைத்து வணங்கலாம்

மனிதன் செய்த முந்தைய வினையே காரணம்

ஒரு பணக்காரர் மிகப்பெரிய யாகம் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் யாகம் செய்யும் போது விலங்குகளைப் பலியிடுவது வழக்கம். யாகம் துவங்க இருந்த வேளையில், ஜைனமத ஸ்தாபகர் மகாவீரர் தன் சீடர்களுக்கு அகிம்சை குறித்து போதித்துக் கொண்டிருந்தார். மிருகங்களைத் துன்புறுத்துவதை அவர் கண்டித்தார். இந்த தகவல் வேத விற்பன்னர்களுக்கு தெரிய வந்தது.
அவர்களின் தலைவர் இந்திரபூதி. அவர் பெரிய கல்விமான். ஆனால், ஆணவம் மிக்கவர். அவர் மகாவீரரைச் சந்தித்து, வேதங்கள் சொல்லியுள்ளபடியே தாங்கள் பலியிடுவதாக ஆதாரத்துடன் கூறினார்.
""நீங்கள் சொல்வது தவறு. இறைவன் தன்னால் படைக்கப்பட்ட பிராணிகளை மனிதன் அழித்துக் கொள்ளலாம் என்று சொல்லவே மாட்டான்,'' என்றார்.
அதற்கு இந்திரபூதி,""சரி...இந்த உலகத்தையாவது கடவுள் தான் படைத்தார் என்பதை ஏற்கிறீர்களா?'' என்றார்.
""அதையும் ஏற்கமாட்டேன். கடவுள் என்பவர் சர்வசக்தியுள்ளவர். அவர் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்துடன் மனிதர்களைப் படைப்பார் என்பதை நான் நம்ப மாட்டேன்,'' என்றார் மகாவீரர்.
""அப்படியானால், ஏழை, பணக்காரர், அழகன், அழகில்லாதவன் என்ற வேற்றுமையெல்லாம் எப்படி வந்தது?'' என திருப்பிக்கேட்டார் இந்திரபூதி.
""இதற்கு காரணம் மனிதன் செய்த முந்தைய வினையே! இறைவனின் படைப்பில் வித்தியாசம் கிடையாது. மனிதன் தான் செய்யும் வினைகளுக்கேற்பவே இத்தகைய பலன்களை அடைகிறான்,'' என்று தெளிவாகச் சொன்னார்.
இதுகேட்ட வேத விற்பன்னர்கள் மகாவீரரின் காலடியில் விழுந்தனர். தங்களுக்கு நற்கருத்துக்களை போதிக்குமாறு வேண்டிக்கொண்டனர்.

Thursday, June 20, 2013

வேத , உபநிஷதங்கள் .


நமது வேத உபநிஷதங்கள் யாவும் செவி வழியாகக் கேட்டு மனத்தில் இருத்தி , திரும்பத் திரும்பப் பாராயணம் செய்யப்பட்டே பாதுகாக்கப்பட்டன .எனவேதான் அவற்றுக்கு சுருதி ( காதால் கேட்கப்பட்டது ) , ஸ்மிருதி ( நினைவில் வைக்கப்பட்டது ) என்ற பெயர் வந்தது . உலகத்திலேயே மிகப் பழமையான மறைநூலான ரிக்வேதம் இப்படித்தான் நமது மூதாதையரால் பாதுகாக்கப்பட்டது .

Wednesday, June 19, 2013

ருத்ராட்ச மாலை .


ருத்ராட்ச மாலை ஒரிஜினல் தானா என்பதை அறிய எளிமையான டெஸ்ட் ஒன்று உள்ளது .
உங்கள் இடது கை விரல்களை மெதுவாக மடக்குங்கள் . ஐந்து விரல்களும் மூடிய நிலையில் , லேசாக வைத்திருங்கள் . அது யோகத்தில் ஒரு முத்திரை . அப்போது ருத்ராட்சமாலையை விரலின் முட்டிக்கு மேலாகத் தொடாமல் தொங்கவிடுங்கள் .
ஓர் ஆச்சர்யம் நிகழும் . ருத்ராட்ச மாலை அப்படியே மெல்ல வலதுபுறமாகச் சுழல ஆரம்பிக்கும் . உடனே கையை அதே பொஸிஷனில் சற்று இறுக்கமாக வைத்திருங்கள் . அது யோகத்தை முறித்தல் நிலை . அப்போது மாலை மெல்ல இடதுபுறமாகச் சுழல்வதை உணர்வீர்கள் . அப்படிச் செய்தால் அது குறையற்ற , சுத்தமான ருத்ராட்ச மாலை . முனிவர்கள் ருத்ராட்ச மாலை அணிந்த காரணம் புரிகிறதா ?
அந்தக் காலத்தில் முனிவர்கள் காட்டுக்குள் இருப்பார்கள் . கிடைத்ததைச் சாப்பிடுவார்கள் . அப்போது அது நல்ல உணவா , கெட்ட உணவா என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு ருத்ராட்ச மாலைஉதவும் . அதாவது நல்ல உணவாக இருந்தால் மாலை கடிகாரம் போல் வலப்புறமாகச் சுற்றும் . விஷமுள்ள உணவாக இருந்தால் இடதுபுறமாகச் சுழலும் . அதை வைத்து அவர்கள் நல்ல உணவைக் கண்டுகொள்வார்கள்

குடந்தையின் பெருமை !


தீர்த்த யாத்திரை தலங்களில் கும்பகோணத்திற்கு தனிப் பெருமை உண்டு . கோயில் இல்லாத ஊரில் வசிப்பவர்கள் அருகில் இருக்கும் கோயில் குளத்தில் நீராடினால் அவர்தம் பாவங்கள் போகும் . புண்ணிய க்ஷேத்திரத்தில் இருப்பவர்கள் செய்த பாவங்கள் வாரணாசிக்கு சென்று நீராடினால் போகும் . வாரணாசியில் செய்த பாவங்கள் கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் நீராட போகும் . கும்பகோண்த்தில் இருப்பவர்கள் செய்த பாவங்கள் எங்கே சென்று நீராடினால் போகும் ? இதற்கு ஒரு சுலோகம் விடை சொல்கிறது .
கும்பகோணத்தில் செய்த பாவங்கள் அங்கு உள்ள மக தீர்த்தத்தில் நீராடினால் விலகுமாம் .
" அன்னிய க்ஷேத்ரே க்ருதம் பாவம் புண்ணிய க்ஷேத்ரே விநச்யதிகி: புண்ணிய க்ஷேத்ரே க்ருதம் பாவம் வாரணஸ்யாம் விநச்யதிகி : வாரணஸ்யாம் க்ருதம் பாவம் கும்பகோணே விநச்யதிகு : கும்பகோணே க்ருதம் பாவம் கும்பகோணே விநச்யதிகி :' என்பது பவிஷ்யோத்ர புராணத்தில் உள்ள சுலோகம் ஆகும் .

நீராடல் விசேஷம் !


ஐப்பசிக்கு ஆறு
கார்த்திகைக்கு சுனை
மார்கழிக்கு குளம்
மாசிக்கு கடல் .

உறவில் விரிசல் வேண்டாம்


ஹசன் , உசேன் என்ற இரு சகோதரர்கள் . இவர்கள் அன்னையின் பெயர் பாத்திமா . இவர் , பெருமகனார் நபிகள் நாயகத்தின் புதல்வி
சகோதரர்கள் இருவரும் ஏதோ ஒரு மனத்தாங்கலில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதையே நிறுத்திக் கொண்டனர் . அன்னை பாத்திமாவுக்கு இது மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது . இருவரையும் சமாதானப்படுத்திப் பேச வைக்க முயற்சி செய்தார் .
" அன்பு மக்களே! இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்கள் ஒருவருக்கு ஒருவர் மூன்று தினங்களுக்கு மேல் பேசாமலிருந்தால் , அது அவர்களில் ஒருவர் மற்றவரைக் கொலை செய்ததற்குச் சமானம் என்று உங்கள் தாத்தா ( பெருமகனார் நபிகள் நாயகம் ) சொல்லியிருப்பது உங்களுக்கு நினைவில்லையா ? ஆகவே , கோபதாபங்களை மறந்து உறவாடுங்கள் " என்று கனிவோடு கூறினார் .
தாங்கள் தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை ஏற்கெனவே உணர்ந்த அந்தச் சகோதரர்கள் அன்னையின் வேண்டுகோளுக்குப் பிறகு , பேசிவிடத் துடித்தனர் . ஆனாலும் , அங்கு மவுனம் தான் நிலவியது . யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்பதுதான் இப்போதைய பிரச்னை .
" மூத்தவன் என்பதால் அண்ணனுக்குக் கூடுதலான சுயகவுரவம் இருக்கும் . எனவே தம்பி முதலில் பேசத் தொடங்கலாமே ?" என்று அன்னை அடியெடுத்துக் கொடுத்தார் . அதற்குத் தம்பி உசேன் சொன்ன பதில் என்ன தெரியுமா ? " அம்மா ! நான் முதலில் பேசத் தொடங்குவதில் பிரச்னை இல்லை . ஆனால் , தாத்தா சொல்லியிருக்கிற இன்னொரு கருத்து என் நினைவுக்கு வருகிறது . ' பேசாமல் இருக்கிற இருவரில் பிணக்கைத் தீர்த்துக் கொள்ள யார் முதலில் பேசத் தொடங்குகிறார்களோ , அவர்களுக்குத்தான் சொர்க்கத்தின் வாசல் முதலில் திறக்கும் " என்று ஓரிடத்தில் அவர் சொல்லியிருக்கிறாரே ! அதனால் அந்தப் பாக்கியம் அண்ணனுக்குக் கிடைகட்டுமே என்பதற்காகத்தான் நான் பேசாமல் இருக்கிறேன் " என்றார் .
இதைக் கேட்டதும் அன்னையும் அண்ணனும் சிலிர்த்துப் போனார்கள் . " தம்பி !" என்று அவர் அழைக்க , " அண்ணா !" என்று இவர் அழைக்க இருவரும் தழுவிக் கொண்டார்களாம் .
--- இளசை சுந்தரம் . இலக்கியப்பீடம் . டிசம்பர் 2009 .
இயேசுவின் தாய் மேரியின் இஸ்லாமியப் பெயர் மரியம் . பாத்திமா போன்ற பொதுவான பெயர்களும் உண்டு . நபிகள் நாயகத்துக்கும் அவரின் முதல் மனைவியான கதீஜா அவர்களுக்கும் பிறந்த மகளே பாத்திமா

வலம்புரிச் சங்கு !


பொதுவாக நமது இறை வழிபாட்டிலேயே சங்குக்கு முக்கிய பங்கு உண்டு . தர்மத்தின் வடிவம் என்பதால் பஞ்ச பாண்டவர்களின் கைகளில் ஒவ்வொரு விதமான பெயர்களில் விளங்குகிறது . தருமர் வைத்துள்ள சங்கு , ' அனந்த விஜயம் ' என்றும் , அர்ஜுனர் வைத்திருக்கும் சங்கு, ' தேவதத்தம் ' என்றும் , பீமசேனன் வைத்திருக்கும் சங்கு , ' மகாசங்கம் ' என்றும், நகுலன் வைத்திருக்கும் சங்கு, ' சுகோஷம் ' என்றும் , சகாதேவன் வைத்திருக்கும் சங்கு, ' மணிபுஷ்பகம் ' என்றும் அழைக்கப்படுகிறது . ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் இடக்கையில் வைத்திருக்கும் ' பாஞ்சஜன்யம் ' என்ற சங்கு, இறந்தவருக்கு நற்கதி அளிக்கக்கூடியது .
சங்குகளில் மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு ஆகிய எட்டு வகையும், அரிய வகையான வலம்புரிச் சங்கும் தோற்றங்களால் வேறுபட்ட இன்னும் 7 வகை சங்குகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை . இந்த பதினாறு வகை சங்குகளில் வலம்புரிச் சங்கு மிகவும் உயர்ந்ததும் தெய்வத்தன்மை கொண்டதும் ஆகும் .

கும்பமேளா .


கும்பமேளா -- பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாகக் கொண்டாடப்படும் வட இந்தியத் திருவிழா . தென்னிந்தியாவிலும் இதே போன்று பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு வைபவம் நிகழ்கிறது -- மகாமகம் . தமிழ்நாட்டில் கும்பகோண்த்தில் மகாமகக் குளத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் புனித நீராடும் தனிச்சிறப்புமிக்க விழா.
இரண்டும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற ஒற்றுமை தவிர , முக்கியமான வித்தியாசம் ஒன்றும் உண்டு . ஆமாம் , மகாமகம் ஒவ்வொரு 12 ம் ஆண்டிலும் ஒரே தலத்தில் கொண்டாடப்படுகிறது . ஆனால், கும்பமேளா வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது . அதாவது நான்கு இடங்களில். ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை அடுத்தடுத்து .
1 ) உத்தரப்பிரதேசம், அலகாபாத்திலுள்ள கங்கை - யமுனை - சரஸ்வதி நதிகள் கூடும் பிரயாகை.
2 ) உத்தர்கண்ட், கங்கைக்கரையில் உள்ள ஹரித்வார் .
3 ) ஷீப்ரா நதிக்கரையில் உள்ள மத்தியப்பிரதேசம் உஜ்ஜயினி .
4 ) கோதாவரி நதி தீரதில் உள்ள மகாராஷ்டிர நாசிக் .
இப்படி நான்கு தலங்களில் முறைவைத்துக் கொண்டாடப்படுகிறது .

5 அம்மாக்கள்

.
ஒவ்வொருவருக்கும் 5 அம்மாக்கள் :
1 . தேஹ மாதா : உடல் அளித்த அம்மா .
2 . கோமாதா ......: பால் அளித்த பசு .
3 . பூ மாதா.........: உணவு அளிக்கும் தாவரங்களை வளர்க்கும் பூமி .
4 . தேச மாதா....: தாய் நாடு .
5 . வேத மாதா...: தெய்வத்துடன் ஐக்கியமாக வழிகாட்டும் ஆன்மிக ஞானத்தை வழங்கும் வேதங்கள்

அருந்ததி பார்ப்பது ஏன் ?

அருந்ததி பார்ப்பது ஏன் ?
திருமணமான புதுத் தம்பதிகள் பின்னிரவில் அருந்ததி பார்க்க வேண்டும் என்ற சம்பிரதாயம் இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளது .
வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி . ஒரு சமயம் தேவேந்திரன், அருந்ததியிடம் வந்து, " ஒரு குடம் கொண்டு வா . குளத்தில் இருந்தோ , கிணற்றீல் இருந்தோ நீர் எடுக்காமல், குடத்தில் நீர் நிரப்பிக் காண்பிக்கிறேன் " என்றான் . அருந்ததி அவன் சொன்னபடியே குடம் கொண்டு வந்தாள் .
தேவேந்திரன் , சிறிது நேரம் தியானம் செய்து விட்டுக் குடத்தைப் பார்த்தான் . குடத்தில் கால் பாகம் நீர் நிரம்பியிருந்தது . பிறகு வாயுதேவன் வந்து தியானம் செய்தான் . அடுத்த கால்பாகம் நீரை மட்டுமே நிரப்பமுடிந்தது . எஞ்சிய அரைக் குடத்தை நிரப்பித் தருவதாகக்கூறி அருந்ததி தியானம் செய்யத் தொடங்கினாள் . சிறிது நேரத்தில் குடம் முழுவதும் நீரால் நிரம்பியது
இதைக் கண்டு தேவேந்திரன் , ஆச்சர்யமடைந்தான் . " தேவர்களால் கூட முடியாத காரியத்தை உன்னால் எப்படி செய்ய முடிந்தது ?" என்று கேட்டான் . அருந்ததி , " என் கணவரை நினைத்து தியானம் செய்ததால்தான் அது சாத்தியமானது " என்று கூறினாள் .
தேவர்கள் எல்லோரும் , அவளூடைய கற்பின் பெருமையை உலகுக்கு உணர்த்த வேண்டியே நட்சத்திரமாகப் பிறக்கும்படி செய்தனர் . அது முதல் திருமணம் முடித்த தம்பதியினர் , கற்புக்கரசியாக விளங்க வேண்டி , அருந்ததி பார்ப்பது என்ற பழக்கம் ஏற்பட்டது

ஆழ்வார்கள் பாடிய 4000 பாசுரங்கள் :

பாசுரங்கள் 4000 .
ஆழ்வார்கள் பாடிய 4000 பாசுரங்கள் :
பொய்கையாழ்வார் ................100 .
பூதத்தாழ்வார் .........................100 .
பேயாழ்வார் .............................100 .
திருமிழையாழ்வார் .................216 .
மதுரகவியாழ்வார் ........ ..........11 .
நம்மாழ்வார் ............... ..........1,296 .
குலசேகரர்ழ்வார் ........... .........105 .
பெரியாழ்வார் ............................473 .
ஆண்டாள் ..................................173 .
தொண்டரடிப்பொடியாழ்வார் .... 55 .
திருப்பாணாழ்வார் .......................10 .
திருமங்கையாழ்வார் ...............1,361

துளசியின் பெருமை !.


துளசி இலையின் நுனியில் நான்முகனும் , அடியில் சங்கரனும் , மத்தியில் நாராயணனும் வசிக்கிறார்கள் .
. பனிரெண்டு ஆதித்யர்கள் , பதினோரு ருத்ரர்கள் , எட்டு வசுக்கள் , அசுவினி தேவர்கள் இருவர் வசிக்கின்றனர் .
துளசி இலையின் நீர் கங்கைக்கு நிகரானது . எனவேதான் துளசி நீரால் எம்பெருமான் திருமேனியில் ஆவாஹனாதிகள் செய்கிறார்கள் .

பரிணாம வளர்ச்சிக்கேற்ப இறைவன் அவதாரம் எடுத்துப் பூமிக்கு வந்திருக்கிறார்

படிகள் பத்து !
மனித இனம் , விலங்கு இனம் முதலியவற்றைத் தன்னில் கொண்டு அவற்றின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப இறைவன் அவதாரம் எடுத்துப் பூமிக்கு வந்திருக்கிறார் என்று ' பத்து அவதாரம் ' நமக்குப் புலப்படுத்துகிறது . எப்படி ?
1 ) மச்சாவதாரம் : தண்ணீருக்கும் அடியில் உள்ளது மீன் .
2 ) கூர்மாவதாரம் : கொஞ்சம் தண்ணீருக்கு மேலே , கொஞ்சம் கீழே வசிக்கும் ஆமை .
3 ) வராக அவதாரம் : பூமிக்கு மேலே உள்ள மிருகம் . பன்றி .
4 ) நரசிம்மாவதாரம் : விலங்கு நிலையும் , மனித நிலையும் கலந்தது . ( சிங்கம் -- மனிதன் ) .
5 ) வாமனாவதாரம் : குட்டையான மனித நிலைக்கு மாறுதல் .
6 ) பரசுராம அவதாரம் : கோபம் கொண்ட மனித நிலை -- குறையுள்ளது .
7 ) பலராமர் அவதாரம் : சாதாரண மனிதர் .
8 ) கிருஷ்ணாவதாரம் : விளையாட்டும் , வினையும் கலந்த மனிதத் தன்மை .
9 ) இராமாவதாரம் : பொறுமையுடன் விவேகமான மனித நிலை கொண்டது .
10 ) புத்தர் அவதாரம் : மனித நிலை கடந்து மேலான நிலை கொண்டது .

ஐஸ்வர்யம் !


சிவத்துடன் சம்பந்தமுடையது சைவம் . விஷ்ணுவுடன் சம்பந்தமுடையது வைஷ்ணவம் . இதுபோல ஈஸ்வரனுடன் சம்பந்தமுடையது ஐஸ்வர்யம் . இங்கு இறைவனின் திருவருள் என்று பொருள் கொள்ள வேண்டும் . ஈஸ்வரனின் திருவருளினால் கிடைக்கும் எல்லாமே ஐஸ்வர்யம்தான் .
கோயிலில் கொடுக்கப்படும் திருநீறு, குங்குமம், துளசி மற்றும் ஒருவருக்கு அமையும் நல்ல பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள், மாடு, கன்று, செல்வம், நோயின்மை, படிப்பு, நல்ல நண்பர்கள் எல்லாமே இறையருள் இருந்தால்தான் நன்றாக அமையும் . எனவேதான் இவை எல்லாவற்றையும் ஐஸ்வர்யம் என சாத்திரங்கள் கூறுகின்றன .

பஞ்சபூதங்களுக்கான மூலிகைகள் !

மூலிகைகள் !
பஞ்சபூதங்களுக்கான மூலிகைகள் !
நிலம் ........ -- அருகம்புல் .
நீர் .............._ மாஇலை .
நெருப்பு .... -- வாழை .
காற்று .......-- வேப்பிலை .
ஆகாயம் ..-- வெற்றிலை

நவக்கிரகங்களின் தேவியர்


புதன் -- இளாதேவி .
சுக்கிரன் -- சுகீர்த்தி .
சந்திரன் -- ரோகிணி .
குரு -- தாராதேவி .
சூரியன் -- உஷா , பிரத்யுஷா .
செவ்வாய் -- சக்திதேவி .
கேது -- சித்ரலேகா .
சனி -- நீலா .
ராகு -- சிம்ஹி

ஞானம் !


' ஐ வான்ட் பீஸ் ; எனக்கு அமைதி வேண்டும் ' என்று ஒருவர் முனிவரிடம் கேட்டார் . முனிவர் , " முதல் சொல் ' ஐ ' யை விடு " என்றார் . " வான்ட் பீஸ் " என்றார் அன்பர் .
" இரண்டாவது சொல் ' வான்ட் டை விடு " என்றார் முனிவர் . " மிஞ்சியிருப்பது ' பீஸ் ' மட்டுமே " என்றார் அன்பர் .
" ' ஐ ' யையும் ' வான்ட் ' டையும் விட்டால் பீஸ் தானாகக் கிடைக்கும் . அதுவே ஞானம்" என்றார் முனிவர் .

குணம் !


வெற்றிக்காக எத்தகைய போர்க்குணம் வேண்டும் என்பதை தன் மாணவன் ஒருவனுக்குப் புரிய வைக்க நினைத்தார் குரு . உடனே, அந்த மாணவனை ஒரு குளத்துக்குள் மார்பளவு ஆழத்துக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தார் . சட்டென்று, அவனுடைய தலையை தண்ணீருக்குள் பலம் கொண்ட மட்டும் அழுத்தினார் சில விநாடிகளில், குருவையே தள்ளிக் கொண்டு தண்ணீருக்கு மேலே வந்து, ' ஆளைக் கொல்வது போல இப்படி அழுத்துகிறீர்களே... உங்களுக்கு என்னவாச்சு ? ' என்று கேட்டான் மாணவன் கோபம் பொங்க .
குருவோ...' அழுத்தியது ஒருபுறம் இருக்கட்டும் . அதிலிருந்து நீ எப்படி விடுபட்டு வந்தாய் அதைச் சொல் ? ' என்றார் சாந்தமாக .
' மூச்சுத் திணறியதில் என் உயிரே போய்விடும் போல இருந்தது . அதான், முழு பலத்தையும் பிரயோகித்து வெளியில் வந்தேன் . இதிலென்ன அதிசயம் ? ' என்று பதிலளித்தான் மாணவன் .
' இத்தகைய தீவிரம்தான், எத்தகைய இரும்புக் கோட்டையையும் திறக்கும் சாவி ' என்று முடித்தார் குரு

6 பருவங்கள் !


இறைவழிபாடு மிகுந்த மார்கழி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக கணக்கிட்டு பின்வரும் பருவங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன .
1 ) மார்கழி -- தை ( ஹேமந்த ருது ) -- முன் பனிப்பருவம் .
2 ) மாசி -- பங்குனி ( சிசிர ருது ) -- பின் பனிப்பருவம் .
3 ) சித்திரை -- வைகாசி ( வசந்த ருது ) -- கோடைப் பருவம் .
4 ) ஆனி -- ஆடி ( கிரீஷ்ம ருது ) -- காற்றடிப் பருவம் .
5 ) ஆவனி -- புரட்டாசி ( வர்ஷா ருது ) -- முன் மழைப் பருவம் .
6 ) ஐப்பசி -- கார்த்திகை ( சரத் ருது ) -- பின் மழைப் பருவம்

கொலு வைப்பதன் தாத்பரியம்

.
" இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் தேவை , உயிர் பிழைத்தல்தான் ! அதாவது Survival . அதற்கு நீரும் , உணவும் தேவை .
அடுத்த தேவை... ஆடை , வீடு , அணிகலன் , வாகனம் போன்றவை . அதாவது growth . அதற்கு தொழில் நுட்ப அறிவும் பணமும் தேவை .
அடுத்த தேவை... உயர்நிலை . அதாவது Sub - limity . உயிரும் பொருளும் பெற்றதோடு நில்லாமல் , ஞானத்தை அடையவும் முயற்சித்து , அதை எட்டும்போதுதான் அவன் முழு மனிதனாகிறான்
இதன் அடிப்படையில்தான் நவராத்திரி கொலுவின் ஒன்பது படிகளும் வைக்கப்படுகின்றன .
கீழே உள்ள மூன்று படிகளில் உயிர் வளர்க்கத் தேவையான அடிப்படைப் பொருள்களைக் காட்சிக்கு வைக்கிறோம் . ( மண் , வயல் , நதி , உழவன் ,, பறவை , தானியம் , காய்கனி போன்றவை ) .
நடுவிலிருக்கும் மூன்று படிகளில் நமது வளர்ச்சியையும் பாதுகாப்பையும் எடுத்துக்காட்டும் பொருள்கள் இடம் பிடிக்கின்றன . ( நவீன வீடுகள் , நாணயங்கள் , வாகனங்கள் , நூதனப் பொருள்கள் , நாகரிக மனிதர்கள் , ராஜாராணி , சிப்பாய்கள் போன்றவை .)
மேலே உள்ள மூன்று படிகளில் ஞானத்தைக் குறிக்கும் கலையை வளர்க்கும் அம்சங்கள் , தெய்விகக் குறியீடுகள் வைக்கப்படுகின்றன . ( கலைஞர்கள் , மகான்கள் , கடவுள் சிலைகள் போன்றவை .)
உயிர்களை ஜனிக்க வைப்பவள் துர்க்கை .
பொருள் வளம் தருபவள் லக்ஷ்மி .
ஞானம் தருபவள் சரஸ்வது .
இதன் அடிப்படையில்தான் முப்பெரும் தேவியரை வணங்கி , மூன்று சக்திகளுக்கு மூன்று ராத்திரிகள் என நவராத்திரி கொண்டாடி மகிழ்கிறோம் !
ஆல்ஃபிரட் மார்ஷல் , ஹெர்ஸ்பெர்க் , மாஸ்லோ போன்ற பொருளாதார மனவியல் நிபுணர்களின் தியரிகளைப் படித்தால் , அவை நமது நவராத்திரிக் கோட்பாடுகளுடன் அச்சு அசலாக ஒத்துப் போவதைக் கண்டு அசந்து போகலாம் !
முதலில் உயிர் பிழைத்தாலே போதும் என்ற கீழ்நிலை , பிற்பாடு , வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் . கிடைத்த செல்வத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் ... எல்லாம் ஓரளவு கிடைத்தபின் , கலை , இலக்கியத்தில் நாட்டம்... அதைத் தொடர்ந்து ஞானமும் மோனமும் வேண்டும் உயர் நிலை . அதைப் பெறவே... இந்த மனிதப்பிறவி . எல்லாமே படிப்படியான உயர்வு !

7 தலைமுறைகள் !


ஜீன்களை ' சுக்ல தாது ' என்பார்கள் . சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன . அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை, தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது .
தந்தையிடமிருந்து 21 அம்சங்கள்; பாட்டனிடமிருந்து 15 அம்சங்கள்; முப்பாட்டனிடமிருந்து 10 அம்சங்கள் -- ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை . நான்காவது மூதாதையிடமிருந்து 6 அம்சங்களும்; ஐந்தாவது மூதாதையிடமிருந்து 3 அம்சங்களும்; ஆறாவது மூதாதையிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன . எனவே, ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெருகின்றன . எனவே தான் தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது .
நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை , பாட்டன் , முப்பாட்டன் -- இவர்கள் மூவருக்கும் திவசத்தில் தில தர்ப்பணம் கொடுப்பதற்கு இதுவே காரணம் .

பொற்கோயில் .


பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ளது பொற்கோயில் .
கோயில் வளாகம் சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம் . கோயில் முழுவதும் சொக்கத் தங்கத்தால் வேயப்பட்டிருக்கிறது . பொற்கோயிலின் நிழல் ' அம்ருத் சரோவர் ' என்ற தடாகத்து நீரில் விழுந்து, நீரோட்டத்தில் அது ஆடி, அசைந்து தரும் காட்சி காணக்கிடைக்காதது . கோயிலின் பிம்பம் விழும் அந்தத் தடாகத்து நீரை மிகவும் சுத்தமாகப் பராமரிக்கிறார்கள் . அதில் முழுக்குப் போடலாம் . ஆனால் சோப்பு, ஷாம்பு எதுவும் உபயோகிக்கக்கூடாது . யாராவது ஒரு சீக்கியர் தடாகத்தின் படிகளைத் துடைத்துக் கொண்டேயிருக்கிறார் . இந்தத் தடாகம் 15 -ம் நூற்றாண்டில் வெட்டப்பட்டதாம் .
' கர்பானி கீர்த்தன் ' என்ற பஜனைப் பாட்டு, ஸ்ரீ ஹரிமந்திர் சாஹிப் பொற்கோயிலின் கதவு திறந்ததிலிருந்து, இரவு மூடும் வரை இடைவிடாது ஒலித்துக் கொண்டேயிருக்கிறது . சீக்கியர்களின் வேதப் புத்தகமான ' ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்' பை சகல மரியாதைகளுடன் பல்லக்கில் வைத்து, எல்லோரும் புடைசூழ, ' அகாலி தக்த் ' என்ற மேடையை சுத்தம் செய்து, விரிப்புகள் விரித்து சிறிய கட்டிலில் அமர்த்தி வைக்கிறார்கள் . பின்னணியில், குர்பானி பாட்டு, பஜனை ஒலிக்கிறது . ஒரு சீக்கியர், நாம் தரும் காணிக்கை பணத்தை வாங்கிக் கொண்டு
நமக்கு சர்க்கரைக் கட்டி, படம், புத்தகம் ஆகியவைகளை பிரசாதமாக அளிக்கிறார் . படி ஏறி மேலே செல்லும்போது, ஆண் பெண் அனைவரும் கட்டாயம் தலையை மூடிக் கொண்டிருக்க வேண்டும் . நுழையும்போதே மஞ்சள் கைக்குட்டைத் துணிகள் ஆண்களுக்கு அளிக்கப்படுகிறது . பெண்கள் புடவைத் தலைப்பாலோ, துப்பட்டாவினாலோ தலையை முக்காடு போட்டு மூடிக் கொண்டுதான் உள்ளே செல்ல வேண்டும் .
அங்கு,ஏழை, பணக்காரன் எல்லோரும் சரிசமமாக அமர்ந்து சாப்பிடும் ' குரு கா லங்கர் ' என்ற லங்கரில் ( சமையற்கூடத்தில் ) சராசரியாக 50,000 பேருக்கு மேல் ஒவ்வொரு நாளும் உணவருந்துகிறார்கள் . தட்டுகள், கிண்ணங்கள், சாப்பிடும் இடம் எல்லாமே மிக மிக சுத்தமாக இருக்கிறது . இத்தனை ஆயிரம் மக்கள் சாப்பிட்ட சுவடே தெரியாமல் உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட்டுவிடுகிறது . எல்லாமே ஃப்ரீதான் . முகலாய மன்னர் அக்பர் பாதுஷாவே இந்த லங்கரில் மக்களோடு மக்களாய் அமர்ந்து உணவருந்தி இருக்கிறாராம் .

இதிஹாசம்


இதிஹாசம் என்றால் என்ன ?
இதிஹாசம் = இதி + ஹ + ஆஸம் .
' இதி ஆஸம் ' என்றால், ' இப்படி நடந்தது ' என்று அர்த்தம் .
' ஹா ' என்றால், ' ஸத்தியமாக ', ' நிச்சயமாக ', ' வாஸ்தவமாக ' என்று அர்த்தம் . எனவே, இதிஹாசம் என்றால் ' ஸத்தியமாக இப்படி நடந்தது ' என்று பொருள் . ராமாயணமும் மகாபரதமும் நமது இதிஹாசங்கள் .
ஸ்ரீராமர் இருந்தபோதே, ராமாயணத்தை வால்மீகி எழுதினார் . பாண்டவர்கள் இருந்தபோதே, மகாபாரதத்தை வியாசர் எழுதினார் .இந்த இரண்டிலும் உள்ள நிகழ்வுகள் நிஜம்தானா என்று சந்தேகப்படுவதற்கு இடமே இல்லை !

பஞ்சமுக தரிசன பலன் ! ஹனுமான்


கிழக்கு முகம் : ஹனுமான் . இவரது தரிசனம் நல்ல புத்தி, வெற்றியை அருளும் !
தெற்கு முகம் : நரசிம்மர் .. இவரது தரிசனம் துணிவையும் வெற்றியையும் அருளும் !
மேற்கு முகம் : கருடர் . இவரது தரிசனத்தால் விஷ பாதிப்புகள், நோய் நொடிகள், பில்லி சூனியத் தொல்லைகள் அகலும் !
வடக்கு முகம் : வராஹர் . இவரது தரிசனம் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும் !
ஆகாயம் பார்த்திருக்கும் முகம் : ஹயக்ரீவர் . இவரது தரிசனம் ஞானத்தையும் நல்ல வாரிசுகளையும் அருளும் !

ஆலய வாத்தியங்கள் ..

..
ஆலய வாத்தியங்கள் பஞ்சபூத அடிப்படையில் ஆனவைதான் :
1 . ப்ருதிவி ( நிலம் ) வாத்யம் : மரத்தினால் செய்யப்பட்டவை .
2 . அப்பு ( நீர் ) வாத்யம் : உலோகத்தினால் செய்யப்பட்டவை .
3 . வாயு வாத்யம் : துளை உள்ள வாத்யங்கள் .
4 . ஆகாய வாத்யம் : சங்கநாதம், தாள வாத்யம் .
5 . அக்னி வாத்யம் : நரம்பு வாத்யங்கள்

எந்த யோகத்தில் என்ன செய்யலாம் ?


அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்பவை யோகத்தின் வகைகள் . பஞ்சாங்கத்தில் இன்று என்ன யோகம் என்று இருக்கும் . யோகங்கள் 27 . இவற்றுக்கு தனித்தனி பலன் உண்டு .
விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வியாகாதம், வஞ்ரம், வியதீபாதம், பரிகம், வைதீருதி என்பவை தவிர்க்க வேண்டிய யோக நாட்கள் . யோகத்தின் பெயர்களும், அவற்றிற்குரிய பலன்களும் பின்வருமாறு :
விஷ்கம்பம் -- மனநடுக்கம்; ப்ரீதி -- பிரியம் ; ஆயுஷ்மான் -- வாழ்நாள்; சவுபாக்கியம் -- புண்ணியம்; சோபனம் -- நலம்; அதிகண்டம் -- பெரிய கண்டங்கள்; சுகர்மம் -- அறம்; திருதி -- துணை; சூலம் -- சில திசைப் பயண இடையூறுகள்; கண்டம் -- ஆபத்துக்கள்; விருத்தி -- ஆக்கம்; துருவம் -- ஸ்திரத்தன்மை பெறுதல்; வியாகாதம் -- பாம்பு முதலானவற்றால் ஆபத்து; அரிசனம் -- மகிழ்ச்சி; வச்சிரம் -- ஆயுதங்களால் தொல்லை; சித்தி -- வல்லமை; வியதீபாதம் -- கொலை; வரியான் -- காயம்; பரிகம் -- தாழ்வு; சிவம் -- காட்சி; சித்தம் -- திறம்; சாத்தியம் -- புகழ்; சுபம் -- காவல்; சுப்பிரம் -- தெளிவு; பிராம்மம் -- பிரமை; மாஹேத்திரம் -- இந்திரனைப் பற்றிய அறிவு; வைத்திருதி -- பேய்களால் தொல்லை .

ஆன்மிக முன்னேற்றத்திற்கான தர்ம வழிகளில் நான்கு

ஆன்மிக முன்னேற்றத்திற்கான தர்ம வழிகளில் நான்கு வகைகள் !
முதல் வகையின் பெயர், ' சாமானிய தர்மம் '. அதாவது மாதா, பிதா, குடும்பத்தினர், சக மனிதர்கள், குரு ஆகியோரிடம் மதிப்பு மரியாதையோடு நடந்து கொள்ளுதல் . இதைத் தனது வாழ்க்கையால் அறிவுறுத்தினார், ஸ்ரீராமர் !
2 -வது வகையின் பெயர், ' சேஷ தர்மம் '. அதாவது, ' பூலோக உறவுகள் நிலையானவை அல்ல; தெய்வீக நெருக்கமே நிலையானது ' என்ற ஞானப் பக்குவத்துடன், தெய்வத்தின் பாதங்களைச் சரணடைதல்... வாழ்க்கை முழுவதும் ஸ்ரீராமரை நிழல் போலத் தொடர்ந்து, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் லட்சுமணன் !
3 - வது வகையின் பெயர், ' விசேஷ தர்மம் ' அதாவது, எப்போதும் தெய்வீக சிந்தனையோடு இருத்தல் ... ஸ்ரீராமரை விட்டு பிரிந்திருந்த வேளையிலும் மனம் முழுக்க அவரையே நிறைத்து, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் பரதன் !
4 -வது வகையின் பெயர், ' விசேஷர தர்மம் '. அதாவது, இறையடியார்க்குத் தொண்டு புரிவதற்கே வாழ்க்கையை அர்ப்பணித்தல்.. ஸ்ரீராமரின் பூரண பக்தரான பரதனை நிழல் போலத் தொடர்ந்து, அவருக்குத் தொண்டு செய்வதையே . வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு, இந்த தர்மத்திற்கு உதாரண புருஷரானார் சத்ருக்கனன் !
நான்கு வகை தர்மங்களும் சிறப்பானவையே ; இருப்பினும், சரணாகதி தர்மமான ' சேஷ தர்ம ' முறை மிக மிகச் சிறப்பு .

ப்ரதோஷம்


* தலைக்கு உள்ளே இருக்கின்ற காதுகளினாலும், உடலாலும் மீன்கள் தண்ணீருக்குள்ளே, தங்களைச் சுற்றி எழும்
சப்தங்களை உள்வாங்கிக் கொள்கின்றன என்கிறது நேஷனல் வைல்ட்டு லைப் பெடரேஷன் ஆய்வு !
* இயற்கையாக மனிதர்களுக்கு வயது ஏறஏற முளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9
சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம் .இதனால் நினைவாற்றல் குறைகிறது . அதனால்தான்
ஞாபகமறதி ஏற்படுகிறது .
* ' ப்ரளீயந்தே அஸ்மின் தோஹா ' என்பது ப்ரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம் . அதாவது அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள் 

கணபதி ஹோமம் .வீட்டில் ஹோமங்களை அடிக்கடி செய்து கொண்டேயிருங்கள் . பிறறையும் செய்யச்சொல்லுங்கள் . ஹோமப்புகையும் மந்திரங்களும் உங்கள் வீட்டை மட்டுமல்ல; உங்கள் ஊரையே காப்பாற்றும் . இப்படி எல்லா ஊர்களிலும் எல்லோரும் செய்யத் துவங்கிவிட்டால், காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படுகிறது . உரிய காலத்தில் மழை பெய்யும் . இயற்கை சீற்றங்கள் ஏற்படாது . ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும் . எத்தனை அணுமின் நிலையங்கள் துவங்கினாலும் கவலைப்படவேண்டாம் . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழந்த போபால் விஷவாயு விபத்தில் தினமும் ஹோமம் செய்து கொண்டிருந்த ஒருவர் வீட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது