Thursday, August 22, 2013

சுபநிகழ்ச்சி களுக்கோ கிளம்பும்போது கேசவா கேசவா என ஏழுமுறைசொல்லுங்க! தடைகளை வெல்லுங்க!

கேசவன் யார் என கேட்டால் விஷ்ணுவின் பெயர்களில் ஒன்று என்று சொல்வோம். கேசி என்ற அரக்கனைக் கொன்றதால் கிருஷ்ணனுக்குகேசவன் என பெயர். ஆனால், இதற்கு இப்படியும் ஒரு பொருள் சொல்வர். க, அ, ஈச, வ ஆகிய நான்கு எழுத்தும் சேர்ந்ததே கேசவ என்றாகிறது. அதில் க பிரம்மாவையும், அ விஷ்ணுவையும், ஈச சிவனையும் குறிக்கும். வ என்றால் தன் வசத்தில் வைத்திருப்பவர் என பொருள். கேசவ என்றால் மும்மூர்த்திகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். பணிக்கோ, பிற சுபநிகழ்ச்சி களுக்கோ கிளம்பும்போது  கேசவா கேசவா என ஏழுமுறை சொல்லிச் செல்பவர்கள்  அன்றைய பணிகளை தடையின்றி முடித்து திரும்புவர் என்கிறார் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார்.

No comments:

Post a Comment