Thursday, August 22, 2013

சந்திராஷ்டமமா? ஒரு பரிகாரம் இருக்கு!

சந்திராஷ்டமமா? ஒரு பரிகாரம் இருக்கு!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வார். அவர் செல்லும் ராசி நம் ஜென்மராசிக்கு, எட்டாவது ராசியாக இருந்தால் அன்றைய நாளை சம்பந்தப்பட்ட ராசிக்குரியவர் சந்திராஷ்டம நாளாக கொள்ள வேண்டும். இந்நாளில் சுபநிகழ்ச்சிகள், முக்கிய விஷயங்களில் ஈடுபட்டால் தடை ஏற்படும் என்பது ஜோதிட விதி. இதிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரம் இருக்கிறது. சந்திரனை மாத்ருகாரகர் என ஜோதிடம் குறிப்பிடுகிறது. அதாவது அம்மாவிற்கு உரியவர் சந்திரன். அதனால், சந்திரனால் உண்டாகும் கெடுபலன்களை குறைக்க அம்மாவிடம் ஆசி பெறுவது போதுமானது. தாய் இல்லாத பட்சத்தில் குலதெய்வத்தை வழிபடவேண்டும். குலதெய்வம் தெரியாவிட்டால் விநாயகப்பெருமானை வணங்குவது சிறப்பு. ஏனென்றால், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற வாக்கிற்கேற்ப அம்மையப்பரை வலம் வந்து வெற்றிக்கனி பெற்றவர் அவர். இதனால் தான் வேதம் அன்னையின் பெருமையை மாத்ரு தேவோ பவ என்று சொல்லி நமக்கு வழிகாட்டுகிறது

No comments:

Post a Comment