Monday, September 30, 2013

தச வாயுக்கள்

தச வாயுக்கள்

இதயத்தில் இயங்குவது பிராணன்.
உச்சர்க்கலத்திடை நிற்பது அபாணன்.
கந்தரசக் குழியிற் சந்திடை நிற்பது சமானன்....
நாபியினிற்பது உதானன்.
சரீர முழுவதும் வியாபித்திருப்பது வியானன்.
நீட்டமுடக்கலுங் கிளக்கலுஞ் செய்வது நாகன்.
உரோமம் புளகித்திமைப்பது கூர்மன்.
முகத்திடை நின்று தும்மலுஞ் சினமும் வெம்மையும் விளைவிப்பதுகிருகரன்.
ஓட்டமும், இளைப்பும், வியர்த்தலும் விளைவிப்பது தேவதத்தன்.
உயிர்போகினும் போகாதுடலினை வீக்கித் தலைகிறுத்தகல்வதுதனஞ்சயன்.

இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது..!

இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது..!

அகத்திய சித்தர் தென்பாண்டி நாட்டில் தங்கியிருந்த சமயம் அது. பாண்டிய மன்னன் ஒருவன் அவரை வணங்க வந்தான். அவனுக்கு முதுகில் கூன் இருந்தது. தனது பரம்பரையே இப்படி கூன் விழுவதாக அவன் அகத்தியரிடம் சொல்லி வருத்தப்பட்டான். அகத்தியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, பிறவிக்கூனை குணப்படுத்த தன்னிடம் மூலிகைகள் உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து ஆஸ்ரமத்திற்கு வரும்படியும் சொல்லி அனுப்பி...னார்.மன்னன் நம்பிக்கையுடன் சென்றான்.

தேரையரை அழைத்த அகத்தியர், சீடனே! கூனை நிமிர்த்தும் மூலிகை வகைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேள். அவற்றை காட்டிற்குள் சென்று பறித்து வா, எனச்சொல்லி, மூலிகைகளின் அடையாளம் மற்றும் குணத்தையும் எடுத்துச் சொன்னார். தேரையரும், அகத்தியர் கூறியபடியே அவற்றை அடையாளம் கண்டு ஒரு பை நிறைய பறித்து வந்து விட்டார். அகத்தியர் அந்த மூலிகைகளைச் சாறெடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். தேரையரிடம், தேரையா! நீ இந்தக் கரைசல் பக்குவமாக வரும் வரை கிளறிக்கொண்டிரு. எனக்கு காட்டிற்குள் சிறிது வேலையிருக் கிறது. நான் வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளலாம், என சொல்லிவிட்டு சென்று விட்டார். தேரையரும் பக்குவமாக காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு மேலுள்ள மேற்கூரையில் இருந்து டக் என சப்தம் வந்தது. இது கேட்டு நிமிர்ந்தார் தேரையர். என்ன ஆச்சரியம்! வளைந்திருந்த அந்த மூங்கில் நிமிர்ந்து நேராகி இருந்தது. தேரையரின் மூளையில் பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது. குரு என்னவோ, தான் வந்த பிறகு கரைசலை இறக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லியிருக்கிறார்.

ஒருவேளை அவர் வர தாமதமானால், கரைசல் மேலும் சூடாகி, இந்த அற்புதமான மருத்துவக் குணத்தை இழந்து போகலாம். மூலிகையின் புகைபட்டே வளைந்த மூங்கில் நிமிர்கிறது என்றால், மூலிகை கரைசலைத் தடவினால் கூன் நிச்சயமாக குணமாகத்தானே செய்யும்! இது தான் சரியான பக்குவம். கரைசலை இறக்கி வைத்து விட வேண்டியது தான், என நினைத்தவர், அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டார். களைப்பாக இருந்ததால், சற்று படுத்திருந்தார். வெளியே சென்றிருந்த அகத்தியர் வந்தார்.

அடேய்! உன்னை நம்பி எவ்வளவு முக்கியமான பொறுப்பை ஒப்படைத்து விட்டுப் போனேன். நீ என்னடாவென்றால், உறங்கிக் கொண்டிருக்கிறாயே! மூலிகை குழம்பு என்னாயிற்றோ! என்று கோபமாகப் பேசியவரிடம், மிகுந்த பணிவுடன் சென்ற தேரையர், நடந்ததைச் சொன்னார்.அகத்தியர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். சீடனே! எனக்கு கிடைத்தவர்களில் நீ மிகவும் உயர்ந்தவன். ஒவ்வொரு ஆசிரியருக்கும் இப்படி புத்திசாலி மாணவர்கள் கிடைக்கவும் கூட கொடுத்து வைக்க வேண்டும்! அன்றொரு நாள் ஒரு உயிரைக் காப்பாற்ற மூளையில் இருந்த தேரையையே குதிக்கச் செய்தாய்.இன்று, கூன் நிமிரும் பக்குவத்திற்கு கரைசலை தயார் செய்துள்ளாய். பெரியவர்கள் சொன்னதைக் கேட்க வேண்டும் தான்! அதே நேரம், சமயத்திற்கு தக்க முடிவுகளையும் எடுப்பதன் மூலம் அவர்களின் அபிமானத்தை மேலும் பெறலாம். மகனே! இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது. வெளியே செல், என்றார். தேரையர் அதிர்ச்சியானார். நல்லதைச் செய்ததாகச் சொல்லிவிட்டு, இப்போது வெளியே போகச் சொல்கிறாரே! என குழம்பி நின்றார்.ஒருவேளை நாம் செய்தது முட்டாள்தனமோ.. குரு நம்மைப் புகழ்வது போல பழிக்கிறாரோ, என கலங்கி நின்றார்.

குருதேவா! நான் ஏதும் தவறு செய்து விட்டேனா? தாங்கள் என்னை வெளியே போகச் சொல்லுமளவுக்கு நான் தங்கள் கவுரவத்துக்கு பங்கம் இழைத்து விட்டேனா? அவ்வாறு செய்திருந்தால், நான் உயிர் தரிக்க மாட்டேன்... தேரையர் கிட்டத் தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்.அடடா... தவறாகப் புரிந்து கொண்டாயே! திறமையுள்ள இருவர் ஒரே இடத்தில் இருப்பதால் மக்களுக்கு லாபம் குறைகிறது. அவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தால் பயன்பெறும் மக்களின் அளவு கூடும். நீ தனித்தே வைத்தியம் செய் என்று அனுப்பிவைத்தார்

ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " -மூடநம்பிக்கை

 
ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழ் நவம்பர் 2002ல் இருந்து

தவறான வழக்கம் சந்ததிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி விடும் ...!

எவரேனும் இறந்துவிட்டால் அக்குடும்பத்தினர் ஒரு ...வருடத்திற்குக் கோலம் போட கூடாது , மலைத் தலத்திற்கும் போகக் கூடாது , பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்ற தவறான வழக்கங்கள் தற்போது நிலவி வருகின்றது . இறப்பு நேரிட்ட நாளிலேயே கூட அக்குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதிலும் ,வீட்டில் கோலம் இடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை , சாஸ்திர முரண்பாடும் கிடையாது . இடைச் செருகலாக வந்த இத்தவறான வழக்கமே பல குடும்பத்தவர்களை ஒரு வருட காலம் கோயிலுக்குச் செல்ல விடாமல் தடுப்பதோடு ,அக்குடும்பத்தினருக்கு எவ்வித ஆலய வழிபாட்டுப் பலாபலன்களையும் வரவிடாது ஓராண்டிற்குத் தடுப்பதால் அக்குடும்பத்தினரின் பல துன்பங்களுக்கு நிவர்த்தி கிட்டாமல் போவதுடன் ஆன்மீகத் தற்காப்பு சக்தியும் குறைந்து பலத்த பிரச்சனைகளும் தோன்றி சந்ததிகளை அலைக்கழித்துவிடும் ! இந்த ஒரு வருடத்திலும் பண்டிகைகள் கொண்டாடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை . பண்டிகைகளினால் வரும் புண்ய சக்தி சேகரிப்பையும் இழத்தலும் தவிர்க்கப்படும் .

****அவ்வாறு துக்கத்தை ஒரு வருடகாலம் அனுஷ்ஷப்பதனால் டீ.வி , சினிமா , செய்தித்தாள் படித்தல் , புது ஆடைகள் , ஸ்வீட்டுகள் , காபி , டீ , ருசிகர உணவுகள் , கேளிக்கைகளை ஒரு வருட காலம் எவரேனும் ஒத்தி வைகிறார்களா ? இறைவனா ஓராண்டு தன்னைக் காணலாகாது என்று விதிப்பார் ??? இறைப் பகுத்தறிவுடன் சிந்தியுங்கள் ! துன்பங்கள் மலை மலையாய்ப் பெருகும் கலியுகத்தில் ,அதுவும் பல பூஜைகளும் , வேத சக்திகளும் வெகு வேகமாக மறைந்து வரும் கலியுகத்தில் , " ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " என்ற அறியாமையினால் தோன்றிய தவறான எண்ணத்தைக் கட்டாயம் சமுதாயத்தில் இருந்து அகற்றியே ஆக வேண்டும் .
--- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழ் மார்ச் 2002

Sunday, September 29, 2013

பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்..!

பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்..!

செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுத...ியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .

பண்டைய வானவியலில் ஒரு நாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24*60=1440 ஆகும் .

வருடத்தின் சில நாட்களில் பகல் நீண்டு இருக்கும் சில நாட்களில் இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டு கூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலை முதன் முதலில் உலகிற்கு கூறினான்.

சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்

“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி “

சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்
ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல் நீடிக்கும். ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்.

பாடலின் கடைசி வரி " விடுபூ முடி " மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது இந்த வாக்கிய கணித முறை தான் சோதிடவியலுக்கு அடிப்படையானதாகும்.

வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

பகல் நீட்டிப்பை காண
வி - டு - பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளை எடுத்துக்கொள்வோம் வி என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி
இது போலவே வி - டு - பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளை கொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்
மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை
வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
வ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்

இது போல வி - டு - பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல் எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது

பகல் நீட்டிப்பு
வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்

இரவு நீடிப்பு
கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

மகாளயம் என்றால்

மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்று பொருள். பட்சம் என்றால் அரைமாதம் அதாவது 15 நாள் என்று அர்த்தம். மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 15 நாட்களும் நாம் பித்ருக்களை ஆராதித்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

பூலோகத்தில் 15 நாட்கள் தங்கி இருக்கும் நாட்களில் கோவில் தீர்த்தங்களில் உள்ள தெய்வீக சக்திகளை பித்ருக்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் நாம் பித்ருக்களுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்யும்போது, பித்ருக்கள் மிகவும் மனம் குளிர்ந்து அந்த தெய்வ சக்திகளை நமக்கு கொஞ்சம் பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள்.

மகாளயபட்ச 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலன்களையும், ஆத்மசக்தியையும் கொடுக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.

ஆக நாம் செய்யும் பித்ருதர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த 15 நாட்களில் மகாளயபட்ச வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் கிடையாது. எல்லாமே உங்கள் இஷ்டம்தான். உங்கள் குலு வழக்கப்படி தர்ப்ப ணவழிÖடுகளை எப்படி கொடுப்பார்களோ....

அந்த வழக்கப்படியே செய்யலாம். தர்ப்பணம், சிராரத்தம் கொடுப்பதில் சாதி, மத, குல பேதங்கள் எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்க்ள. மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ரக்களை தேடி வரும்.

அந்த ஆசீர்வாதத்தை பித்ருக்களும் நம்மிடம் நேரடியாக எடுத்து வரக்கூடும். எனவே மகாளயபட்ச நாட்களில் பிரத்ரக்களை வழிபாடு செய்து, விஷ்ணுவின் அருளை பெறத் தவறாதீர்கள்.

முன்னோர்களின் படங்களிற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும்

கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும்.

இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள். அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும். முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான் பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான்.

நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆலயம் சிறந்ததாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆலயம் சிறந்ததாக கூறப்படுகிறது.  

1. மேஷம்- ராமேஸ்வரம்
2. ரிஷபம்- திருப்பதி
3. மிதுனம்- பழனி
4. கடகம்- ராமேஸ்வரம்
5. சிம்மம்- ஸ்ரீவாஞ்சியம்

6. கன்னி- திருக்கழுக்குன்றம்
7. துலாம்- திருத்தணி
8. விருச்சிகம்- காஞ்சிபுரம்
9. தனுசு- மயிலாடுதுறை
10. மகரம்- சிதம்பரம்
11. கும்பம்- தேவிப்பட்டிணம்
12. மீனம்- வைத்தீஸ்வரன்கோவில்

நாம் பூஜை செய்யும் காலத்திற்கேற்ப பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்

 
 
நாம் பூஜை செய்யும் காலத்திற்கேற்ப பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்
 
நாம் பூஜை செய்யும் காலத்திற்கேற்ப பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும் என ஆன்மீகப் பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவை வருமாறு:- விடியற்காலப் பூஜைக்குரிய பூக்கள் கொன்றை, சாமந்தி, செண்பகம் முதலிய மஞ்சள் நிறப் பூக்கள்.

* பகற்காலப் பூஜைக்குரிய பூக்கள் செந்தாமரை, செவ்வலரி, பாதிரி முதலிய சிவப்பு நிறப் பூக்கள்.

* யாம காலப் பூஜைக்குரிய பூக்கள் மல்லிகை, முல்லை, தும்பை, வெள்ளைருக்கு முதலிய வெள்ளை நிறப் பூக்கள். பொதுவாக மஞ்சள், வெள்ளை நிறப் பூக்கள் பூஜைக்கு மிக உத்தமம்.

அம்பாளை வழிபட:

அம்பாளை வழிபட உகந்த மாதங்கள் தை, ஆடி,
அம்பாளை வழிபட உகந்த நாட்கள் செவ்வாய், வெள்ளி.
அம்பாளை வழிபட உகந்த திதி அஷ்டமி, சதுர்த்தசி, பவுர்ணமி.
அம்பாளை வழிபட உகந்த நட்சத்திரம் உத்திரம்.

Saturday, September 28, 2013

இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக்கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும்

உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது.
ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு
நாடுகளும், கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய
நாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் த...ெரியாது. இந்து மதத்திற்கே
அந்தப் பெயர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம்
மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.

மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் தான் அதிகம் அழிவுக்கு உள்ளாக்கப்
படுகிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் சொந்த கடவுளரை இழிவு
படுத்துவதை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வருகிறார்கள் .அதாவது நம்
கண்ணைக் குத்திக் கொள்ள நம் விரல்களையே
பயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். இவற்றை
யெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக்
கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும். கடமையும் கூட.

யோசியுங்கள்.......

இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் கருணாநிதி
இஸ்லாத்தில்
தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அதே ராமர் பால
பிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளை
அவமதித்துப் பேசுகிறார்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

எழுத்துகள்;

எழுத்துகள்;
தமிழ் மொழி 247 எழுத்துகள் கொண்டது என்பது நமக்கு தெரியும் அதேபோல பிற மொழிகளும் எத்தனை எழுத்துகள் உள்ளன என்பதை பார்ப்போம்.
ஆங்கிலம் - 26 எழுத்துகள்
ஸ்பெயின் - 27 எழுத்துகள்
இத்தாலி - 20 எழுத்துகள்...
அரபு - 28 எழுத்துகள்
லத்தின் - 22 எழுத்துகள்
துருக்கி - 28 எழுத்துகள்
கிரேக்கம் - 24 எழுத்துகள்
பாரசீகம் - 31 எழுத்துகள்
ஜெர்மனி - 26 எழுத்துகள்
சமஸ்கிருதம் - 48 எழுத்துகள்
பிரெஞ்சு - 26 எழுத்துகள்
சீனா - 214 எழுத்துகள்

''மண்ணு லகத்தினில் பிறவி மாசற பொருள் உணர்ந்து படிப்போம்.

 
பொருள் உணர்ந்து படிப்போம். விநாயகர் வணக்கம்:

''மண்ணு லகத்தினில் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்...
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்.''

பொருள்: சிவனின் பிள்ளையாகிய ஆனைமுகப்பெருமானே! இந்த பூமியில் நாங்கள் மீண்டும் பிறவாதிருக்கவும், எங்களின் எண்ணம் எளிதாக நிறைவேறவும் உன் மலரடிகளைப் பணிந்து வணங்குகிறோம்.

சிறப்பான சிந்தனைகள் பத்து......

 
சிறப்பான சிந்தனைகள் பத்து......

படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்....

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.

ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

Friday, September 27, 2013

தத்தாத்ரேயர் மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் பதில் சொல்லி உள்ளார்

 
 
இயற்கை தரும் பாடம்!
--------------------------------
“மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனி தன் வணங்குகிறானே… மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக்கி யுள்ளானே… இதெல்லாம் மூடநம்பிக்கை இல்லையா?’ என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.

தத்தாத்ரேயர் இவர்களுக்கெல் லாம் பதில் சொல்லி உள்ளார். இவர், அத்திரி முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார்.
தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.

“எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்…’ என்றார்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், “சுவாமி! ஒரு வருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே…’ என்றான்.
அவனிடம், “பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்…’ என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்…
“மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்; தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன். பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன். எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது; பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.
“ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

“வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
“எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன். பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
“எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன். பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

“பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.

“புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்…’ என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே!

நம்மை நாம் நல் வழிபடுத்திக்கொள்ள பதினெட்டு படித்தளங்கள்:

நம்மை நாம் நல் வழிபடுத்திக்கொள்ள பதினெட்டு படித்தளங்கள்:

1) எதையும் சுயமதிப்பீடு செய்யும் பக்குவம் வளர நல்ல குருவை தேடி,அவரின் வாயிலாக நல்ல கருத்துக்களை அறிந்து பிறகு உணர்ந்து பாருங்கள்.

2) ஐம்புலன்களாகிய பார்த்தல் ,கேட்டல் ,சுவைத்தல் ,நுகர்தல்,உணர்தல் வழியாக சென்றால் மையை உங்களை நரகத்தில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும்.ஆனால் உணர்வுபாதையில் செல்பவர் இறைவனின் பாதக் கமலத...்தில் இருப்பார்.

3) உங்கள் மனம் அவப்போது பாதை மாறி தவறான வழியில் இழுத்துச் செல்லும் பொது குருவின் துணையாலும்,சற்குருவின் துணையாலும் உங்களை நல்வழியில் திருப்பிச் செல்லும் .மந்திரம் கூறுவது மிக முக்கியமாகும் .

4) இன்பம்,துன்பம்,கவலை தரும் நேரத்தில் உங்கள் மனதை இழுத்து இறைவன் பக்கம் திருப்பி 'ஓம் நமசிவாய 'என்ற மந்திரத்தை கூறி பயிற்சி செய்து பாருங்கள் ஆனந்தம் கிடைக்கும்.

5) பிறகு பிறர் குறையைப் பார்த்து உணர்ந்து ,தன குறையை கண்டு திருத்தி தன்னை நல்வராக்கி கொள்வீர்கள்.இறைவனை நினைக்கும் முயற்சியும் ,தியானப் பயிற்சியும் ஞானக் கல்வி என்பதை மறவாதீர்கள்.

6) தியானப் பயிற்சி கூடக்கூட ,சுய விசாரணை செய்ய ஞானவழிப் பாதையின் மிகப் பெரிய முதல் இரும்புக் கதவை இறைவன் கொஞ்சம் கொஞ்சமாக திறப்பார்.மாயத்திரை எழும் ஒவ்வொன்றாக விலகிச் செல்லும்.

7) இந்த நேரத்தில் மாயை ஆசை,பகைமை ,பயம் என்ற மும் மலங்களை உங்களுக்குள்ளே விஸ்வரூபம் எடுக்க செய்யும்.நமசிவாய மந்திரத்தை உச்சரிப்பதால் வெற்றிப்பாதையில் முன்னேறுவீர்கள்.

இரண்டு பக்கமும் அடிக்கடி உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஒன்று உலக வாழ்க்கை,மற்றொன்று ஞான வாழ்க்கை.

9) வெற்றி என்பது பணம் ,புகழ் சம்பாதிப்பது மட்டுமல்ல.அத்துடன் ஞான குருவின் உதவியால் இறைவனை கண்டு உணர்வது .

10) பலரை வெற்றி பெற்றவர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.அவர்கள் பலமுறை தோல்வி கண்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.முயற்சியை கைவிடாதீர்கள்.

11) மற்றவர்கள் புகழ்வதற்காக ஒன்றை செய்வதைக் காட்டிலும் ,பிறர் உயர்வு பெற பனி செய்பவர் இறைவனின் அன்புக்குரியவர்.இவர்களை இறைவன் ஒருபோதும் கைவிடமாட்டார்.நீங்களும் இதில் இடம் பெறுங்கள்.

12) உங்களை உண்மையாக நேசிப்பவர்களின் நலன் கருதுவது ,இறைவனுக்கு தொண்டு செய்வதற்கு சமமாகும்.

13) இறந்த காலத்தின் தவறை நினைத்து பார்ப்பது இன்று நாம் திருந்தத்தான்.ஆனால் அதை நினைத்து வருந்திக் கொண்டிருப்பதற்காக இல்லை.துக்கம் விட்டால் ஞானம் கிடைக்கும்.ஆசை விட்டால் ஆனந்தம் கிடைக்கும்.

14) உங்கள் முன்னேற்றத்திற்கு பிறர் தடையாக இருப்பதாக குறைக் கூறாதீர்கள்.முதலில் உங்களை உற்று நோக்குங்கள் ,பிறகு இறைவனுக்கு உண்மைத் தொண்டராக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.ஒருநாள் உண்மையாகிய இறைவனை கண்டடைவீர்கள்.

15) தொடர்ந்த உழைப்பும் ,இறை நினைப்பும் மந்திரம் கூறுதலும் ,தியானமும் உங்களை உயர்ந்த மனிதராக்கும் .பலர் போற்றும் மனிதராக வாழ்வீர்கள்.

16) இதனால் இறை விசுவாசமும் ,குரு நன்றியும் மனதில் மலரும் .செல்வம் தேடி வரும்.

17) உடனே உண்மை உங்களிடம் மேலோங்கும் . அப்பொழுது பரிசுத்தமாவீர்கள்.மனமும் அறிவும் ஒன்று சேரும் .இறைத் தொண்டு செய்ய தயாராவீர்கள்.

18) ஞான குருமார்கள் உங்களை நேசித்து ஆசிர்வதிப்பார்கள்.உங்களிடம் இறைவன் குடி கொள்வார். எதிலும் மயக்கம் இருக்காது. பௌர்ணமி போன்று என்றும் முழுமையாக பிரகாசிப்பீர்கள்.

நன்றி: இந்து ஒருங்கிணைப்பு மேம்பாட்டு இயக்கம்
Mehr anzeigen

இறைவன் சப்பர பவனி வருவது பற்றி அறிவியல் மற்றும் ஆன்மீகம் கூறும் காரணம்!

இறைவன் சப்பர பவனி வருவது பற்றி அறிவியல் மற்றும் ஆன்மீகம் கூறும் காரணம்!
கோயில்களில் திருவிழா நடக்கும் போது, கற்சிலைகளை சப்பர பவனியாக எடுத்து வருவதில்லை. செம்பு விக்ரகங்கள் அல்லது பிற உலோகங்களுடன் செம்பு கலந்த விக்ரகங்களை சுமந்து வருகிறார்கள். முதலில் சப்பர பவனிக்கான ஆன்மிக காரணத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். நம்மில் பலர் கோயிலுக்குச் செல்வதில்லை. வயது, நோய், கர்ப்பகாலம் போன்ற காரணங்களாலும் போக முடிவதில்லை. இப்படிப்பட்டவர்களும், திருவிழா காலத்தில் தெய்வ தரிசனம் பெற வேண்டும் என்பதற்காக, சுவாமி பவனி வரும் வழக்கம் உருவானது. இதிலே ஒரு அறிவியல் காரணமும் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் மின்சார வயருக்குள் செம்புக்கம்பி இருக்கிறது. இது மின்சாரத்தை அதி வேகமாக கடத்தி விளக்குகளை எரிய வைக்கிறது, இயந்திரங்களை இயங்க வைக்கிறது. அதுபோல, செம்பு விக்ரகங்களின் அழகு, நம்மை அப்படியே நம்மை ஈர்த்து பக்தியில் திளைக்க வைக்கிறது. செம்பைத் தேய்க்க தேய்க்க அதன் பளபளப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இறைசக்தி என்னும் மின்சாரம் பக்தனை விரைவில் அடையவே, சுவாமி பவனியை உருவாக்கினார்கள்.
நவகுஞ்சரம்
மாவீரனான அர்ஜுனனுக்கு முன் அந்த விசித்திர பிராணி தோன்றியது – சேவல் தலை, மயில் கழுத்து, எருதின் திமிலுடன் கூடிய உடல், சிங்கத்தின் கம்பீரமான இடை,... பாம்பு வால். யானைக் கால், மான் கால், புலிக் கால் என்று மூன்று கால்களுடனும், ஒரு மனிதக் கையுடனும் அது நின்றுகொண்டிருந்தது. இது ஒரு அரக்கன் தான் என்று முடிவுகட்டி விட்ட அர்ஜுனன், தாக்குதலுக்காகத் தன் வில்லை எடுக்கையில் இன்னொரு விஷயத்தைக் கவனித்தான். அந்தப் பிராணி தன் கையில் தாமரை மலரை ஏந்தி இருந்தது.
உடனே அர்ஜுனன் என்ன பிராணி இது என்று யோசிக்கத் தொடங்கினான். ஒரு குறிப்பிட்ட ஜந்து என்று சொல்ல முடியாமல் இது கொஞ்சம் அது கொஞ்சம் என்று சேர்ந்து இருந்தது அது. இயற்கையின் சிருஷ்டியில் இப்படி ஒரு பிராணியும் இருக்குமா என்ன? இது போன்ற ஒரு மிருகத்தை இது காறும் அவன் கண்டதில்லை. ஆனால் அப்படிக் காணாததாலேயே அது இல்லை என்று ஆகிவிடாது என்று அவன் மனம் சொன்னது. , “எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல் நன்றாகப் பேசுகிறாய் நண்பா!” என்று ஆரம்பிக்கும் தனது உயிர் நண்பனான கிருஷ்ணனின் உபதேசத்தை எண்ணிப் பார்த்தான். “மனித மனம் ஒரு எல்லைக்குள் அடங்குவது, ஆனால் பிரபஞ்சம் எல்லையற்றது” என்பதை நினைவுகூர்ந்தான். தன் வில்லைக் கீழே வைத்து விட்டு, விழுந்து வணங்கினான்.

மனித பிரக்ஞையில் கனவில் கூட எண்ணிப் பார்க்க முடியாத சாத்தியங்கள் தெய்வீகப் பிரக்ஞையில் உண்மையாகவே இருக்கக் கூடும். ஒன்பது உயிர்வகைகளின் அம்சங்களையும் உள்ளடக்கிய அந்தப் பிராணியின் பெயர் நவகுஞ்சரம் (Navagunjara). இந்த ஞானத்தை அர்ஜுனனுக்கு வழங்குவதற்காகவே எழுந்தருளிய தெய்வ வடிவம் அது!

ஒரிய மொழியில் சரளா தாஸர் எழுதிய மகாபாரதத்தில் மேற்சொன்ன கதை வருகிறது. (நன்றி: Indian mythology: tales, symbols, and rituals from the heart of the Subcontinent - By Devdutt Pattanaik, Imprint: Inner Traditions, Bear & Company)
 

புத்திரன் என்றால்…

புத்திரன் என்றால்…
------------------------
மனித வாழ்க்கை சில நற்காரியங்களுக்காக ஏற்பட்டது. அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட நியம, அனுஷ்டானங்களை சரிவர செய்ய வேண்டியத...ு கடமை.
கணவனும், மனைவியும் குடும்பம் நடத்தி, சமைத்து, சாப்பிட்டு, ஏதோ மனம் போன படி குதூகலமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தால் அது இல்லறம் அல்ல. குடும்ப வாழ்க்கையில் பல தேவ பூஜை, அதிதி பூஜை, பந்துக்களுக்கு உதவு வது, நல்ல காரியங்களுக்கு உதவி செய்வது என பல விஷயங்கள், “தர்மம்’ என்று சொல்லப்பட்டுள்ளது.
இதில், “சந்ததி விருத்தி’ என்பதும் முக்கியமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. கணவன்- மனைவி என்றால், அவர்களுக்குக் குழந்தை பிறக்க வேண்டும். அதிலும், ஒரு புத்திரன் உண்டாக வேண்டும். “புத்திர பாக்கியம்’ என்று உயர்வாகச் சொல்வர். அப்படிப் பிறக்கும் புத்திரனால் பித்ருக்கள், பித்ருலோகம் போவதாக நம்பிக்கை. வாழை யடி, வாழையாக வம்சம் விருத்தியாகிக் கொண்டே போனால் தான் பித்ருக்களுக்குப் புண்ணியலோகம் கிடைக்கும்.
அதனால், புத்திரனில்லாதவர்கள், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும், பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று வருவதும், விரதங்கள் அனுஷ்டிப்பதும் வழக்கம். எவ்வளவு செல்வமிருந்தாலும், எவ்வளவு போகமிருந்தாலும் ஒரு மழ லைச் செல்வத்துக்காக ஏங்கு பவர்கள், கடவுள் அருளால் ஒரு குழந்தை பிறந்து விட்டால் மகிழ்ச்சிக் கடலில் மூழ்குவர். இதில், மற்றொரு விஷயமும் உள்ளது. அப்படி பிறக்கும் புத்திரன், “சத்புத்திர’னாக இருக்க வேண்டும். இது ரொம்பவும் முக்கியம். அதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பஞ்ச பாண்டவர்களைப் போன்ற சத்புத்திரர்களும் உண்டு; துரியோதனாதியர்களைப் போன்ற துஷ்ட பிள்ளைகளும் உண்டு. சத்புத்திரர்களை அடைந்தால் அதுவே பெரிய பாக்கியம்.
புத்திரனை வேண்டி பரமேஸ்வரனைக் குறித்து தவம் செய்தார் மிருகண்டு முனிவர். அவர் முன் தோன்றி, “பதினாறு வயதுடைய சத்புத்திரன் வேண்டுமா, நூறு வயதுடைய துஷ்ட புத்திரன் வேண்டுமா?’ என்று கேட்டார் பரமேஸ்வரன். முனிவர், “நூறு வயதுடைய துஷ்ட புத்திரன் வேண்டாம்; பதினாறு வயதுள்ள சத்புத்திரனை அனுக்கிரகம் செய்யுங்கள்…’ என்று வேண்டினார். அதன்படி மார்க்கண்டேயன் என்ற சத்புத்திரன் உண்டானான்.
அவன், பதினாறு வயது வந்ததும், தன் பெற்றோர் கவலையுடன் இருப்பதைப் பார்த்து, கவலைக்கான காரணத்தை அறிந்து, பரமேஸ்வரனை ஆராதித்து, அவனருளால் காலனை வென்று, என்றும் பதினாறு வயதுடையவனாக விளங்கும்படி வரம் பெற்றான். பிறகு, மார்க்கண்டேய மகரிஷி என்று பிரகாசித்தான்.

புத்திரன் என்றால், சத்புத் திரனாக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களால் தனக்கும், பெற்றோருக்கும், குடும்பத்துக்கும், கீர்த்தியும், கவுரவமும் ஏற்படும். குடிகாரப் பிள்ளையையும், திருட்டுப் பிள்ளையையும் பெற்று வாழ்நாள் முழுவதும் வேதனைப் படும் பெற்றோருக்கு அவனால் என்ன பயன்? தாயாரின் மண்டையை உடைக்கிறவனையும், தந்தை மீது வழக்கு போடுகிறவனையும் நாம் பார்க்கிறோமல்லவா!
இவர்களெல்லாம் பிள்ளையாகப் பிறந்த கடன்காரர்கள். கடனை வசூல் செய்து கொண்டு போக வந்தவர்கள் என்று தான் விவரித்துள்ளனர் பெரியோர்.

இல்லறம் நடத்த வேண்டும். நற்பண்புகள் வாய்ந்த மனைவி கிடைக்க வேண்டும். சத்புத்திரன் உண்டாக வேண்டும் இதுதான் ஒருவனுக்கு கிடைக்க வேண்டிய பெரிய பாக்கியம். இப்படி கிடைத்தவன் புண்ணியவான்; கிடைக்காதவன் பாவம் செய்தவன்!

பஞ்ச பட்சி சாஸ்திரம்

பஞ்ச பட்சி சாஸ்திரம்

ஆய கலைகள் என போற்றப்படும் 64 -கலைகளை யும் விட மேன்மை பெற்ற கலைகளாக விளங்குவது நான்கு கலைகள் ஆகும் அதுவே சரகலை:பஞ்சபட்சி: கெவுளி சாஸ்திரம்: கொக்கோகம்: என்ற நான்கு வித சித்தர் கலைகள் ஆகும்.

இந்த அபூர்வ சாஸ்த்திரங்களை யோகிகள்"ஞானிகள்" முனிவர்கள்"சித்தர்களும் பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்....

இவைகளை பல வருடம் தம்முடனே இருந்து தொண்டுகள் செய்து குருவின் திருப்பாதமே கதி என இருந்து வரும் விசுவாசமுள்ள சீடனுக்கு மட்டும் இக் கலைகளின் அரிய இரகசியங்களை உபதேசித்து வந்துள்ளனர்.

இதில் பஞ்சபட்சி சாஸ்திரம் எனப்படும் மகத்துவம் வாய்ந்த இக்கலை ஆதியில் எம்பெருமான் ஈசன் அன்னை மகாசக்தி உமையவளுக்கு உபதேசித்த அபூர்வ கலையாகும்.

தமிழ்க் கடவுளாகிய சுப்பிரமணியர் சூரபத்மனுடன் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் போகவே அவனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு தாயாகிய மகாசக்தியால் சுப்பிரமணியருக்கு உபதேசித்த உன்னத கலையாகும் "பஞ்ச பட்சி சாஸ்திரம்" இதனையே சூரனை வதம்செய்ய முருகனுக்கு அன்னை மகாசக்தி வேல் கொடுத்ததாக சொல்வர்.

சூரனை வதம் செய்து வெகு காலம் சென்ற பின்பு குருமுனி யாகிய அகத்திய முனிவருக்கு முருகப் பெருமான் பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தை உபதேசம் செய்தார்.


அகத்தியரும் மற்ற சித்தர்களுக்கு உபதேசித்தார் இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர்.


பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும்.இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும்.

நவக்கிரகங்கள்,பன்னிரு இராசிகள்,இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் - 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்)அடக்குவதே இதன் சூட்சும இரகசியமாகும்.

பஞ்சபூதம் எனப்படும் நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும் வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில்,என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.

சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
பட்சி தெரிந்தவனிடம் பகைகொள்ளாதே
பல்லி சொல்பவனிடம் பதில் பேசாதே
என்பது பெரியோர் வாக்குவாகும்.

மேற்கண்டபடி பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும் வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான்.இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம் அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.இக்கலையினைப் பயன் படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை,சிலம்பம் ,பிரச்சனை வழக்குகள்,போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர்.

அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரை வாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம்,பதவி,புகழ், ஆகிய வற்றை எளிதில் அடைய வைக்க முடியும்.மேலும் பஞ்சபட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான்,அவனை எவரும் வெல்ல முடியாது என்பது அறுதியிட்ட உண்மையாகும்.

இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம்,செய்தொழில்,காரியங்கள்,வாழ்க்கையில் முன்னேற புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும்.மேலும்

நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு.நாள் ,திதி ,நட்சத்திரம் ,யோகம் ,கரணம் ,நேரம் ,லக்கினம் ,போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது.

இன்று இத் தெய்வீகக் கலையின் அதிசூட்சும இரகசியங்கள் அறிந்த ஆசான்கள் வெகுசிலர் மட்டும் தான் உள்ளனர்.

உண்மையான மெய்குருவிடம் சென்று பணிந்து இக்கலையை கற்கும் ஒருவனை பஞ்சபூத சக்திகள் துணை நின்று காக்கும்.அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும்.அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ,அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும்.

எனவே இந்த தெய்வீகக் கலையினை குருவின் வழியில் சென்று கற்று சித்திபெற்று தான் வாழ்வில் வளம் பெறுவதுடன், தன்னைச்சுற்றி உள்ளோரையும் வாழ்வில் வளம் பெறச்செய்யலாம்.


சித்தர்கள் இயற்றிய பஞ்சபட்சி சாஸ்திரம் பற்றிய நூல்கள் அனைத்தும் பூட்டு மட்டுமே,இவற்றின் "திறவுகோல்"ஒரு சில ஆசான்களிடம் மட்டுமே உள்ளது.அதில் குறிப்பிடப்படும் குருகுலமாக எமது "சித்தர் வேதா குருகுலம்"மட்டுமே இன்று உள்ளது.மேலும் இதன் வெளிவராத பல உண்மை இரகசியங்கள் இங்கு பயிற்றுவிக்கப் படுகின்றது.என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

1 -இன்றைய நடைமுறையில் உள்ள பஞ்சபட்சி சாஸ்த்திர நூல்கள் அனைத்தும் ஒரு மூலநூலைப் பார்த்து பிரதி எடுக்கப் பட்டவை என்ற உண்மை விளக்கம்.

2 -"பஞ்சபட்சி வசிய சித்தி" முறை இரகசியம்.இதனை சித்தி செய்தால் மட்டுமே பஞ்சபட்சி எனப்படும் இந்த பஞ்சபூத சாஸ்த்திரம் நமக்கு கட்டுப் பட்டு பூரணமாக வேலை செய்யும்.

3 -"நங்கிலி" என்னும் மூலிகையின் உண்மை இரகசியம். இதன் தெளிவான நேரடி விளக்கம்.

4 -"பஞ்சபட்சி திறவுகோல் இரகசியம்" இந்த இரகசியத் திறவு கோல் மூலமாகத்தான் சித்தர்கள் பஞ்சபட்சி சாஸ்த்திரத்தின் அந்தர நாழிகை,ஜாமம் கணக்கிடும் முறை,எதிரி பட்சியை கணிப்பது, படுபட்சி அறிவது,வளர்பிறையில்,தேய்பிறையில் பட்சிகள் ஜாமம் மாறும் இரகசியம், போன்றவை களை கணித்தார்கள்.இந்த திறவுகோல் இதுவரை எந்த ஒரு சித்தர் நூலிலும் மற்றும் ஓலைச்சுவடி களிலும் பதிவு செய்யப்பட வில்லை.சித்தர் குருகுல பாரம்பரிய முறையில் நேரடி உபதேசமாக மட்டுமே கொடுக்கப்பட்டு வரப்படுகின்றது.

5 - "சிதம்பர இரகசியம்" என்னும் பஞ்சாட்சர மாறல் இரகசிய பிரயோக முறை விளக்கங்கள்.

6 -பஞ்ச பட்சி சாஸ்த்திர முறையில் அஷ்ட கர்ம பிரயோக முறை இரகசிய விளக்கங்கள்.வசியம்,மோகனம்,தம்பனம், ஆகர்ஷணம்,வித்துவேசனம், போன்றவைகளை அனுபவ முறையில் பிரயோகிக்கும் வழி முறைகள்.

"குருவும் தாரமும் வாய்ப்பது இறைவன் செயல்" என்பதற்கிணங்க சித்தர் கலைகளில் உள்ள சூட்சும இரகசியங்களை கற்பிக்கும் குரு கிடைக்க இறைவனின் பேரருள் வேண்டும்.

தொட்டுக் காட்டாத வித்தை
சுட்டுப் போட்டாலும் வராது என்பதற்கிணங்க
இக்கலையின் அதிநுட்ப இரகசியங்களை குருமுறையில் கற்றுக்கொள்ளலாம்.ஜோதிடர்கள் மற்றும் மாந்திரீகம் தொழில் புரிவோருக்கும் சித்தர் கலை ஆர்வலர்களுக்கும் இக்கலையினைக் கற்க ஒரு அரிய வாய்ப்பு.


நன்றி !
இமயகிரி சித்தர்...

தற்கொலை தவறு..!

 
.தற்கொலை தவறு..!

தற்கொலை என்பது ஒரு விபரீத செயல்.
தற்கொலை செய்து கொண்ட ஜீவன்கள், சரீரமில்லாமல், பசியாலும், தாகத்தாலும், மன நிம்மதியின்றி ஒவ்வொரு வினாடியும் துடிதுடித்து துன்புருவதைபற்றி நமது புராதன நூல்கள் விவரிக்கின்றன..

தற்கொலை செய்து கொண்ட ஜீவன் படும் கொடிய அனுபவத்தை " கயா ஷேத்திர வரலாறு " விவரித்து இருக்கிறது

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து"

 
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்ற பெயரை பார்த்தவுடன் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் கீதை கருத்துக்கள் பற்றி சொல்லும்போது அளித்த விளக்கம் ஞாபகத்துக்கு வந்தது.

மோட்ஷத்தை அடைய வேண்டுமானால் தர்மம் (புண்ணியம்) செய் என கண்ணன் அர்ச்சுனனுக்கு சொல்கிறான். அப்போது அர்ச்சுனன் "தர்மம் செய்தால் அதன் பலம் எனக்கு கிட்டிவிடுமே, அப்புறம் நான் மோட்சத்துக்கு போவது எப்படி?" என்று கேட்டான். அப்படியானால் தர்மம் செய்யாதே என கண்ணன் சொன்னான். தர்மம் செய்யாமலிருந்தால் மோட்ஷம் போக முடியாதே என்றான் அர்ச்சுனன்.

சிலர் நினைக்கக் கூடும் 'இதென்ன கண்ணன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறானே, தர்மம் செய் என்கிறான், பின் செய்யாதே என்கிறான்'....

கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான். மோட்ஷத்தை கொடுப்பவன் நானே. மோட்சத்துக்கு உன்னை அனுப்ப வேண்டுமானால், எனக்குப் பிடித்ததை நீ செய்யவேண்டும். ஆனால் அதை உன்பொருட்டு செய்யக்கூடாது. அதாவது தர்மத்தை செய், ஆனால் 'நான் செய்கிறேன்' என்ற நினைப்பில்லாமல் செய். தர்மத்தை செய் ஆனால் அதன் பலத்தை என்னிடம் விட்டுவிடு.

இதுவே "சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து"

மனசு சஞ்சலப்படுகிறதா...? ..

மனசு சஞ்சலப்படுகிறதா...? ..

ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரு...ம் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.

புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார்.

சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.

அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார்.

ஏறி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.

இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.

அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் சென்ற பிறகு,

புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்றுவரப் பணித்தார்

நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.

ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான்.

புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.

தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?

நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!

நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய்.

அது தானாகவே சுத்தமாயிற்று.

அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?

ஆமாம் சுவாமி!

நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..

மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம்.

அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும்.

நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம்.

மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம்.,

அது அமைதியாகிவிடும் .

அது தன்னிச்சையாக நடக்கும்.
அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.

It will happen. It is effortless.

மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல!

இயலும் செயலே!

அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை!

கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?

கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?

அனைத்து உயிர்களும் கடவுளின் அம்சமே. இன்னும் சொல்லப்போனால், கடவுளின் முன், நேர்எதிர் குணம் கொண்ட உயிர்கள் கூட சேர்ந்திருக்கும். பாம்பும், மயிலும் முருகனிடமும், பாம்பும், கருடனும் விஷ்ணுவிடமும், சிங்கமும், காளையும் சிவபார்வதி முன்னிலையிலும் சாந்தத்துடன் கூடி இருப்பதைக் காணலாம். எதிரெதிர் குணமுள்ள விலங்குகளே, கடவுளின் முன் கூடி வாழும் போது, ஒரே இனத்தில் பிறந்த மனிதன் அன்புடன் கூடி வாழ்ந்தால் என்ன என்பதை இது வலியுறுத்துகிறது

இந்த உடம்பை மும்மலக் குற்றம் உடையது என்று எண்ணி இருந்தேன்.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.
...
- திருமந்திரம்

இந்த உடம்பைப் பற்றி எனது ஆசான் மகான் நந்தீசர் உபதேசிக்கும் வரையில் இந்த உடம்பை மும்மலக் குற்றம் உடையது என்றும் நரை, திரை, பிணி மூப்பிற்கு உட்பட்டது என்றும் குற்றமுள்ளதாகவும் எண்ணி இருந்தேன்.

மகான் நந்தீசர் ஆசியால் ஏழு திரைகளும் நீங்கி சுழிமுனைக்கதவு திறக்கக் கண்டேன். அதன்பின் ஜோதியும் கண்டேன். குருநாதன் ஆசியால் மெய்ப்பொருளையும் கண்டேன். அதன் பயனாய் முக்திக்கு முதல்வனாகிய சிவபெருமான் கோயிலாகிய என்னுடம்பினுள்ளே இருப்பதையும் அறிந்து கொண்டேன் என மகான் திருமூலதேவர் தான் பெற்ற அனைத்தையும் தனது குருநாதர் ஆசியால் தன பெற்றேன் என கூறுகிறார்.

சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் எவை தெரியுமா?

சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் எவை தெரியுமா?


காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும் வணங்குவதும் நன்று; மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை உடலில் ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும். ஆனால் சூரியனைப் பார்க்கக்கூடாத நேரங்களும் உள்ளன. நீரில் பிரதிபலிக்கும் போதும், நடுபகலிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது. ஜொலித்து நிற்கும் சூரியனை வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும். நடுப்பகலில் சூரியனைப் பார்ப்பதால் பார்வைக் கோளாறுகள் ஏற்பட வழியுண்டு. விஞ்ஞானமும் இதனை ஒப்புகொள்கிறது. பழங்காலத்தில் நீரில் பிரதிபலிக்கும் சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன் வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியைக் காணக்கூடாது என்று கூறி விலக்கினர்.

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.

அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த ...அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.

அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.

வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.

அது ஒரு “தகரவர்க்க”ப் பாடல். முற்றிலும் “த” என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. “ஏகாக்ஷரப் பாடல்” என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே ‘வில்லி பாரதம்’ என்று வழங்குகிறது.

பாடலைப் பார்ப்போம்:
“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”

இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்

இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் “திதத்தத்தத்” என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை “மடக்கு” அல்லது “யமகம்” என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை “அந்தாதி” என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் – தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன.

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.

நன்றி: Ravi Shankar

உண்மையாக ஞானம் அடைந்து தெளிந்த சித்தன் யார்

பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்
தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!
...
- பட்டினத்தார்

பொழிப்பு:


பேய்போல் திரிந்து : பிறர் கர்மத்தை போக்கும் பொருட்டு இரவு பகலாக திரிந்து,

பிணம்போல் கிடந்து : உறங்கினாலும் யோக நிலையில் இருந்தாலும் பிணம் போல் அசைவற்று,

இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி : யாராவது இடும் பிச்சையை நாய் போல் உண்டு,

நன்மங்கையரைத் தாய்போல் கருதி : நல்ல மங்கையரை தனது தாய் போல் நினைத்து,

தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லி : அடிமைபோல் அனைவருக்கும் தாழ்வாய் இருந்து,

சேய்போல் இருப்பர்கண்டீர் : குழந்தைபோல் இருப்பவர்களை கண்டீர்கள் என்றால்,

உண்மை ஞானம் தெளிந்தவரே : அவர்தான் உண்மையாக ஞானம் அடைந்து தெளிந்தவர் (சித்தன்) என்கிறார் பட்டினத்தார்.

Thursday, September 26, 2013

சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்

சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்

 
1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன. இறைவனுக்கு நன்றி செலுத்துவதைத்தான் பரார்த்த பூஜையாக, நிஷ்காம்ய வழிபாடாக, ஆலயங்களில் செய்கிறோம்.
1.2 அரணிக்கட்டையுள் நெருப்பு மறைந்துள்ளது போல, மலரில் மணம் மறைந்துள்ளது போல ஈச்வரன் பிம்பத்தில் (லிங்கத்தில்) உள்ளார். பாலை விட, தயிரிலிருக்கும் நெய்யைக் கண்டெடுப்பது எளிது. உலகெங்கிலும் பாலில் மறைந்துள்ள நெய் போல் உறையும் இறைவன், ஆலயத்தில் தயிரினுள் மறைந்திருக்கும் நெய் போல எளிதில் நமக்கு முன் வந்து அருளக் காத்திருக்கிறான்.
1.3 ஆகமங்களில் விதித்துள்ள சிற்ப சாஸ்திரங்களுக்கொப்ப அமைந்துள்ள திருக்கோவில்களே பரம்பொருள் வீற்றிருக்கும் தேவாலயங்கள். ஆகம விதிப்படி அமையாத ஆலயங்கள் மடாலயங்கள் எனப்படும்.
1.4 சிவலிங்கம் இருக்கும் இடத்திலிருந்து நான்கு புறமும் 150 முழ தூரம் சிவ÷க்ஷத்ரம் ஆகும். இங்கு வசிப்பதுமச் சிவலோகவாசத்திற்கு காரணமாகும் என்று சுப்ரபேத ஆகமம் கூறுகிறது
1.5 முன் ஜன்மாவில் சிவ கைங்கர்ய உபகாரிகளாக வாழ்ந்தவர்கள், இந்த ஜன்மாவில், நல்ல உருவமும், தன ப்ராப்தியும் உடையவர்களாக காணப்படுவார்கள். சிவ தர்மத்தில் - பக்தியுடன், தன் சொத்துக்குத் தகுந்தபடி, ஆலயங்களை ஒவ்வொருவரும் செய்விக்க வேண்டும். அப்படிச் செய்தால், சிறிதாக அல்லது பெரிதாக செய்தாலும், தனவானுக்கும் ஏழ்மையானவர்களுக்கும், சமமான புண்யமே. பணக்காரராயினும், லோபமான மனஸுடன் பணத்தைக் குறைத்து சிவதர்மங்களைச் செய்பவர், அப்புண்ய பலனை அடைய மாட்டார். வாழ்வு நிலையற்றது; எனவே, ஒவ்வொருவரும் தன் சொத்தில் இரு பங்கு தர்மத்திற்கும், தனது வாழ்விற்கு ஒரு பங்குமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்கிறது ஜீர்ணோத்தார தசகம்.
1.6 மனத்தை ஒருவழிப் படுத்தவும், கீழ்ப்படிவு, நீதி வழி நிற்றல், தன்னலம் மறுப்பு, பணிவு, இரக்கம் ஆகிய பல சிறந்த பண்படுகளை உண்டாக்கி வளர்க்கவும், இறுதியாக மோக்ஷ ஸாம்ராஜ்யம் அடைந்திட வழி வகுக்கவும் திருக்கோயில் வழிபாட்டைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.
1.7 சாதாரணமாக, நம் கைகள் இரண்டு விரிந்து, வளைந்து, பற்பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவனுடைய ஸந்நிதானத்தில் கும்பிடும்போது, அத்தகைய செய்கைகள் எல்லாம் ஒழிந்து, கைகள் ஒன்று சேர்ந்து குவிகின்றன. அவ்வாறு குவிந்திடும் கைகள் ஆண்டவனே ! இனி என் செயல் என்று ஏதும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எல்லாம் உன் அருட் செயலே என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்துகின்றது.
1.8 ஆலயங்களில் விக்ரஹ ஆராதனை முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தில் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவது விக்ரஹம் என்ற சொல் (விஸேஷேண க்ருஹ்யதே ஸக்திஸமூஹ: அஸ்மின் இதி விக்ரஹ:) வி என்றால் விசேஷமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். க்ரஹிப்பது என்றால் ஈர்த்துக்கொள்வது. பல்வேறு மந்த்ர தந்த்ர யந்த்ர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும்போது, இறையருளை முன்வைத்து, இறைத்தன்மையை ஈர்த்துத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்குவோருக்கு அருள் புரியும் வல்லமை உள்ள பொருள்தான் விக்ரஹம்.
1.9 விக்ரஹங்கள் பல திறத்தன: பொருள் பொதிந்து விளங்குவன. எடுத்துக்காட்டாக, இறைவன் உருவமற்றவன்: அருவமானவன். அவனுக்கு அருவுருவமாகிய லிங்க ப்ரதிஷ்டை கருவறையிலே. அவனுக்கே, மாகேச்வர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படும் 25 உருவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. (அவையாவன: 1. லிங்கோத்பவர் 2. சுகாசனர் 3. சந்திதர மூர்த்தி 4. கல்யாண சுந்தரர் 5. அர்த்த நாரீச்வரர் 6. ஸோமாஸ்கந்தர் 7. சக்ரவரதர் 8. திரிமூர்த்தி 9. ஹரிமர்த்தனம் 10. சலந்தராரி 16. திரிபுராரி 17. சரப மூர்த்தி 18. நீலகண்டர் 19. திரிபாதர் 20. ஏகபாதர் 21. பைரவர் 22. இடபாரூடர் 23. சந்திரசேகரர் 24. நடராஜர் 25. கங்காதரர்). இவை 25 விக்ரஹங்களுள் ஒவ்வொன்றும், பற்பல தத்துவங்களை உள்ளடக்கியவை. மீண்டும் எடுத்துக்காட்டாக, சோமாஸ்கந்த மூர்த்தியை எடுத்துக் கொண்டால், ஸச்சிதானந்தமே சோமாஸ்கந்தம் என்கிறார் காஞ்சிப் பரமாச்சாரியார். அவர் கூற்றுவது: ஸத்-சித்-ஆனந்தம் என்று சொல்வார்களே அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேச்வரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிறது சித் அம்பாள்: இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப்ரமண்யர். சிவம் என்கிற மங்களமும், அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த மரம் பரம உத்க்ருஷ்டமான (உயர்வான) ஸ்தானம் அவர் (ஸுப்ரஹ்மண்யர்); ஸச்சிதானந்தத்தையே சோமாஸ்கந்தர் என்று தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம்.
1.10 இறைவனை அடையும் வழிகள் ஒன்பது என்பர்: (1) ச்ரவணம் - கேட்டல், இறைவன் புகழ் கேட்டல் - உதாரணம்: ஹனுமான், (2) கீர்த்தனம் - பாடுதல், நாதோபாஸனை - உதாரணம்: வால்மீகி, தியாகராஜ ஸ்வாமிகள். (3) ஸ்மரணம் - நினைத்தல், நின்றும் இருந்தும் கிடந்தும் அவனையே நினைப்பது - உதாரணம்; ஸீதாதேவி, (4) பாதசேவனம் - சேவித்தல் - உதாரணம்: பரதன், (5) அர்ச்சனம் - பூஜித்தல் - உதாரணம்: சபரி, கண்ணப்ப நாயனார், சாக்கிய நாயனார், (6) வந்தனம் - நமஸ்கரித்தல், வந்தித்தல் - உதாரணம்: விபீஷணன். (7) தாஸ்யம் - தொண்டு புரிதல் - உதாரணம்: லக்ஷ்மணன், திருநாவுக்கரசர். (8) ஸக்யம் - சிநேக பாவம் - உதாரணம்: சுக்ரீவன், அர்ஜுனன், சுந்தரர். (9) ஆத்ம நிவேதநம் - தன்னையே அர்ப்பணித்தல் - உதாரணம்: ஜடாயு. இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றை உறுதியாகப் பற்றுவதே இறைவனை அடைவதற்கு  போதுமானது. இவற்றுள் கடைசி இரண்டைத் தவிர, ஏழு முறைகளில் வழிபட ஆலயங்களே வகை செய்வது குறிப்பிடத்தக்கது.
1.11 இவ்வாறு ஆலய வழிபாட்டை மையமாக வைத்து அமைக்கப்பட்ட வாழ்க்கை முறையே சிவதன்மம் ஆகிறது. சிவதன்மம் என்றால் சைவ ஒழுக்கம் என்று பொருள். சிதம்பரம் மறைஞானதேசிகர் (கி.பி.1560) சிவாகம பரிபாஷா மஞ்சரி என்ற வடமொழி நூலில் சிவதன்மம் பத்துக் கோட்காடுகளைக் கொண்ட நெறி என்கிறார்: 1. அஹிம்சை. 2. தயை, 3. சத்யம், 4. அடக்கம் 5. வளம், 6. புலனடக்கம் 7. எளியோர்க்கு வழங்குதல், 8. தியாகம், 9. ஜபம், 10. தியானம் - அல்லது 1. அஹிம்சை, 2. சத்யம், 3. பிறர் பொருள் விழையாமை, 4. சிற்றின்பம் துறத்தல், 5. அவா ஒழித்தல், 6. க்ரோதம் தவிர்த்தல், 7. பெரியோரைப் போற்றுதல், 8. தூய்மை, 9. துயறுற்றலும் மகிழ்வுடன் இருத்தல், 10. நேர்மை என்றபடி. இக்கோட்பாடுகள் அனைத்தும் ஆலய வழிபாட்டு நெறிக்கும் இன்றியமையாததாக இருப்பது கவனிக்கத் தக்கது.
1.12 எனவே, ஆலயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையில், நீறு இல்லா நெற்றி பாழ்; சிவாலயம் இல்லா ஊர் பாழ்; சிவபூஜை இல்லா ஜன்மம் பாழ்; சிவனை அடையா வித்யை பாழ் என்று ஆகமங்கள் வலியுறுத்துகின்றன.

Wednesday, September 25, 2013

அறம்¨,பொருள், இன்பம்,வீடு

அறம் என்பது இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுதலாகும். பொருள் என்பது நேர்மையான முறையில் நியாயமாக சம்பாதிப்பதாகும். இன்பம் என்பது உண்மை அன்பில் கருத்தொருமித்து தம்பதியராய் வாழ்வதாகும். வீடு என்பது இம்மூன்றையும் மறந்து கடவுளைச் சிந்திப்பதாகும்.
-அவ்வையா

குருவுக்கு மரியாதை செய்வோம்!

குருவுக்கு மரியாதை செய்வோம்!
---------------------------------------------
மாதா, பிதாவால் நம் ஜனனம் நிகழ்கிறது. இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள் நம் ஆசிரியர்களே! குருவருளால் தான் திருவருள் – இறைவனின் அருள் கிடைத்து நிம்மதியாக வாழ முடியும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, “அ’வில் துவங்கி, உயர்கல்வி வரை கற்றுத் தந்து அவர்களை சீர்திருத்தும் சிற்பிகள் ஆசிரியர்களே! ஆசிரியர்கள் சொன்னதைக் கேட்டு எந்த ஒரு மாணவன் தன்னை சீர்படுத்திக் கொள்கிறானோ, அவன் பிற்காலத்தில் நிம்மதியாக இருப்பான்....

பகவான் கிருஷ்ணரும், குசேலரும் பள்ளிக்கூட நண்பர்கள். அக்காலத்தில் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள், அங்கேயே தங் கிப் படிக்க வேண்டும்; பள்ளி நேரம் தவிர, மற்ற சமயங்களில் குரு இடும் கட்டளைகளைச் செய்ய வேண்டும். ஒருநாள், இவர்களது குரு சாந்தீபனி முனிவரின் மனைவி, கிருஷ்ணரையும், குசேலரையும் சமைப்பதற்கு விறகு பொறுக்கி வரச்சொல்லி விட்டாள்.

குருவின் மனைவியின் கட்டளையை ஏற்ற அந்தக் குழந்தைகள், காட்டில் சென்று விறகு பொறுக்கினர். மழை வந்துவிட்டது. விறகு நனையாமல் இருக்க, ஒரு மரப்பொந்தில் அதை வைத்துவிட்டு, மழையில் நனைந்தபடி நின்றனர். இருட்டி விட்டது. குழந்தைகளைக் காணாத குரு, மனைவியைக் கடிந்து கொண்டு குழந்தைகளைத் தேடிச்சென்றார்.

குரு பத்தினியின் கட்டளையை நிறைவேற்ற விறகை மறைத்து விட்டு, மழையில் அவர்கள் நனைந்தது கண்டு கண்ணீர் வடித்தார். “நீங்கள் மிக நன்றாக இருப்பீர்கள்…’ என ஆசிர்வதித்தார். அவரது ஆசிர்வாதம் பலித்தது. துவாரகையின் மன்னரானார் கிருஷ்ணர்; ஏழையான குசேலர், தன் நண்பனின் உதவியால் பெரும் செல்வந்தரானார்.

குருவின் சொல்லை இளமையில் கேட்டு நடப்பவர்கள் எதிர்காலத்தில் செல்வந்தர்களாக விளங்குவர்.

குரு வணக்க நாள், ஆடி மாத பவுர்ணமியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் பஞ்சாங்கம் கணிப்பதில் மாறுபாடு ஏற்படுவதை ஒட்டி, ஆனிமாதக் கடைசியில் வரும் பவுர்ணமியில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த நாளில், அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டும். நீராடி, திருவிளக்கேற்றி, அதன் முன் அமர்ந்து, தங்களுக்கு கற்றுத்தந்த குருமார் மற்றும் தங்கள் ஆன்மிக குருக்களை மனதில் எண்ணி வணங்க வேண்டும்.

“த்யான மூலம் குரோர் மூர்த்தி

பூஜாமூலம் குரோர் பதம்

மந்த்ரமூலம் குரோர் வாக்யம்

மோக்ஷமூலம் குரோக்ருபா!’

என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். சமஸ்கிருத உச்சரிப்பு வராதவர்கள், “தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்; பூஜிக்கத் தகுந்தது குருவின் திருப்பாதங்கள்; மந்திரத்திற்கு உகந்தது குருவின் வாக்கியங்கள்; குருவின் அருள், மோட்சம் நல்குகிறது…’ என்று சொல்ல வேண்டும்.

துறவிகளை வணங்க வேண்டும்; ஆன்மிக சொற் பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அன்று பகலில் பழம், பால் மட்டுமே சாப்பிட வேண்டும். மகான்கள் படம் இருந்தால், அதற்கு பூஜை செய்ய வேண்டும்.

ஆன்மிக ரீதியாக குரு இல்லாதவர்கள், மகாபாரத ஆசிரியர் வியாசரை தங்கள் குருவாக எண்ண வேண்டும். அவர் நான்கு வேதங்கள், பதினெட்டு புராணங்கள், ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றை உலகுக்கு தந்து உலக மக்களுக்கு தர்மத்தின் பாதையைக் காட்டியவர். அவரை இந்நாளில் பூஜிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அவருக்கு சன்னதி உள்ளது. அங்கு சென்று அவரைப் பூஜித்து வரலாம்.

நம் அறிவைப் பிரகாசிக்கச் செய்த குருமார்களுக்கு வியாசபூஜை நன்னாளில் மரியாதை செய்வோம்.

செலவுஎதுவுமில்லாமல், புண்ணியம்கிடைக்குமே.

செலவுஇல்லாமல்புண்ணியம்கிடைக்குமா ?
---------------------------------------------------------
புண்ணியத்தைசுலபமாகத்தேடிக்கொள்ள, பகவான்நாமாவைசொல்லிக்கொண்டிருந்தாலேபோதும்; அடிக்கடிசொல்லமுடியாவிட்டாலும், ஒருநாளைக்கு, ஒருதடவைசொன்னாலும்போதும். வாழ்நாள்முழுவதும்சொல்லமுடியாவிட்டாலும், கடைசிகாலத்தில்சொன்னாலும்போதும்... சகலபாவங்களும்அகன்று, புண்ணியலோகம்கிடைக்கும். இதற்குபுராணத்தில், "அஜாமிளன்சரித்திரம்' என்றுஒன்றுஉள்ளது. வேதசாஸ்திரம்அறிந்தவர்அஜாமிளன். தினமும்காட்டுக்குசென்றுசமித்து, தர்ப்பைஎல்லாம்எடுத்துவந்து, பூஜை, வழிபாடுஎல்லாம்முறையாகசெய்துவருபவர். இப்படிஅடிக்கடிகாட்டுக்குப்போகும்போது, ஒருசமயம்அங்கிருந்தவேடப்பெண்ணைக்கண்டார். ஏதோஒருமனமாற்றம்; அவளிடம்ஈடுபாடுகொண்டார்.
நாளடைவில்இந்தசிநேகம்வலுப்பெற்றது. இவரதுஆசாரஅனுஷ்டானம்குறைந்தது. கடைசியில்வீடு, மனைவியாவற்றையும்விட்டுவிட்டு, அந்தவேடப்பெண்ணுடனேயேதங்கிவிட்டார். அதுமட்டுமா? அவள்மூலமாகநாலைந்துபிள்ளைகளையும்பெற்றுக்கொண்டார். கடைசிபிள்ளைக்கு, "நாராயணன்' என்றுபெயரிட்டார். காலம்ஓடியது. இவரதுமரணகாலம்வந்தது; படுத்துவ...ிட்டார். இவரைஅழைத்துப்போகவந்துவிட்டனர்எமதூதர்கள். அவர்களைக்கண்டதும், அஜாமிளன்நடுங்கிப்போய், பயத்தில்தன்பிள்ளையாகியநாராயணனை, "நாராயணா!' என்றுகூப்பிட்டுவிட்டார். அவ்வளவுதான், தேவலோகத்தில்இருந்துஇவரைஅழைத்துப்போகஅங்கேவந்துவிட்டனர்விஷ்ணுதூதர்கள்.
இவர்களைப்பார்த்தஎமதூதர்கள், "அடடா... நீங்கள்இங்கேவரலாமா? இவன்மகாபாவி. இவனைஅழைத்துப்போகநாங்கள்வந்திருக்கிறோம்; நீங்கள்போய்விடுங்கள்...' என்றனர். அதற்கு, "இவனாபாவி? இவன்மகாபுண்ணியசாலி. அதனால்தான்இவனைஅழைத்துப்போகநாங்கள்வந்திருக்கிறோம். இவன்கடைசிகாலத்தில், "நாராயணா!' என்றுசொன்னதால், இவனுக்குவிஷ்ணுலோகபதவிகிடைக்கிறது...' என்றனர்விஷ்ணுதூதர்கள். இப்படிஎமதூதர்களும், விஷ்ணுதூதர்களும்வாக்குவாதம்செய்துபார்த்துவிட்டு, சரி... இதைநம்தலைவரிடமேகேட்டுவிடலாம்என்றுபோய்விட்டனர். நடந்தவைகளைபார்த்துக்கொண்டிருந்தார்அஜாமிளன்.
அப்போதுதான்அவருக்குஞானம்உண்டாயிற்று... "அடடா... நாம்இவ்வளவுகாலம்எவ்வளவுபாவம்செய்துள்ளோம். இந்தநாராயணநாமமல்லவாநம்மைக்காப்பாற்றியது. அதன்பெருமையைஇவ்வளவுநாளும்தெரிந்துகொள்ளாமலிருந்துவிட்டோமே...' என்று, வருத்தப்பட்டார். வீடு, மனைவி, வேடச்சி, பிள்ளைகள்எல்லாவற்றையும்விட்டுவிட்டு, பத்ரிகாச்ரமம்சென்றுநாராயணனைக்குறித்துதவம்செய்து, முக்திபெற்றார்என்பதுசரித்திரம்.
பகவான்நாமாவைமறக்காமல்சொல்லுங்களேன்... செலவுஎதுவுமில்லாமல், புண்ணியம்கிடைக்குமே.

பிறவிகள் ஏழு

பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார்களே! ஏழு பிறவியிலும் மனிதனாகவே பிறப்பெடுக்க முடியுமா? அப்பிறவிகள் என்னென்ன என்பதைக் குறிப்பிடுங்கள்:

தேவர், மனிதர், விலங்கு, பறவை,ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள். இதை
""புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி
பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக்...
கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
எம்பெருமான்'' என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்

ஏன் வேண்டும் சைவம் ? எதனால் வேண்டாம் அசைவம் ?

ஏன் வேண்டும் சைவம் ? எதனால் வேண்டாம் அசைவம் ?


விஞ்ஞான ரீதியாகவும் , மெய்ஞான ரீதியாகவும் (ஆன்மீக) சைவ உணவே சாலச் சிறந்தது என்று நிருபிக்கப் பட்டுள்ளது. ஏன்? எத...னால் ? வேண்டும் சைவம், மற்றும் வேண்டாம் அசைவம் என்று ஆன்மீக அன்பர்களுக்கு விளக்கமளிப்பது இக்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். அது ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் கடமையும் ஆகும்.

சைவ உணவு உண்ணும் மனிதர்களின் உடல் அமைப்பும் தாவர உணவுகளை மட்டும் உண்ணும் விலங்குகளின் உடல் அமைப்பும் ஒன்றை ஒன்று ஒத்துப் போவதாகவே இருக்கின்றது.

ஆனால் அசைவ உணவினை உட்கொள்ளும் புலி, சிங்கம், நாய், பூனை மற்றும் சைவ உணவினை உட்கொள்ளும் விலங்குகளோடு சிறிதும் ஒத்துப் போகாமல் பல்வேறு மாறுபட்ட ஜீரண உறுப்புகள் மற்றும் உடல் அமைப்பினைக் கொண்டதாக உள்ளது.

மனிதன் மற்றும் சைவ உணவு உண்ணும் விலங்குகளின்
கடவாய்ப் பற்கள் தட்டையாக அரைத்து விழுங்குவதற்கு ஏற்றதாக உள்ளது.
உமிழ்நீர் உணவின் ருசிக்கு ஏற்றபடி குறைந்த அளவு சுரப்பதோடு அதில் கார சக்தி அதிகம் உள்ளதாகவும், ஜீரண சக்தியினை தரும் வகையில் பெரிய உமிழ் நீர் சுரப்பிகளைக் கொண்டதாகவும் உள்ளது.
உதடுகளால் நீரினை உறிஞ்சிக் குடிக்கும் வண்ணம் வாய் அமைப்பினை பெற்றிருக்கிறது.
உணவினை இரவிலோ அல்லது இருளிலோ பார்க்கும் தன்மை சைவ உணவு விரும்பிகளுக்கு இல்லை.
கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகங்கள், இரைப்பை, போன்ற வயிற்றின் உள்ளுறுப்புகள் சைவ உணவு விரும்பிகளுக்கு சிறியவைகளாகவும் உள்ளது.
மேலும் உணவுக் கழிவுகளை அதிக அளவில் வெளியேற்ற இயலாதவாறு உள்ளது.
இன்னும் கெட்டுபோன உணவுகள் பல சமயங்களில் விஷமாகவிடுவதால் மேற்படி உறுப்புகள் அந்த விஷத்தில் இருந்து தன்னையும் (தன் உறுப்புகளை), உடலையும் பாதுகாக்க முடியாமல் செயல்பாடுகளில் தோல்வி அடைகின்றன.
இந்த நிலையில் மருந்தின் உதவியாலோ அல்லது உண்ணா நோன்பினாலோ அந்த ஜீரணக் கருவிகள் சரி செய்யப்படுகின்றன.
மேலும் மனித உடலின் தன்னைத் தானே காத்துக்கொள்ளும் அமைப்பின் படி இயல்பாகவே உடல்கோளாறுகள் சரி செய்யப்படுகின்றன.
மேலும் ஜீரண மந்தம் வயிற்று உபாதைகள் வருகின்றபோது ஜீரண கருவிகளுக்கு வேலைப்பளு ஏற்படாமல் தவிர்க்க பசியற்ற நிலை உணவில் விருப்பமின்மை, ஆகியவைகளால் உணவு மறுப்பு செயல்கள் இயல்பாக நிகழ்கின்றன.

சைவ உணவு உட்கொள்கின்ற மனித மற்றும் விலங்கினங்களின் குடல் அவைகளின் உடல் நீளத்தைப் போல 10 மடங்கு அதிகமாக அமையப் பெற்றிருக்கிறது.
தாவர உணவினில் இருந்தும், பெறப்பட வேண்டிய வெவ்வேறு உயிர்ச் சத்துக்கள் , தாதுக்கள், உடலில் முழுமையாக சேரும் வண்ணம் அந்த உணவு உண்ட பிறகு நீண்ட நேரம் குடலில் தங்குகிறது.
அவ்வாறு தங்குவதால் தாவர உணவினை தவிர வேறு கடினமான மாமிச உணவை எடுத்துக் கொள்ளும்போது அந்த உணவு நீண்ட நேரம் குடலில் தங்குவதால் விஷத் தன்மை பெற்று அந்த விஷம் சிறிது சிறிதாக உடலில் சேர்வதால் பல வித நோய்களுக்கு மனிதன் ஆளாகின்றான்.
நீர்க் கழிவுகள் தொடர்பான வரையில் வியர்வை மூலம் வெளியேறும் வகையில் தோல் அமைப்பில் நுண்ணிய பல லட்சம் துளைகளின் மூலம் வெளியேற்றப் படுகின்றது.
இந்த அமைப்பு மாமிச பட்சிணிகளுக்கு இல்லை. அவைகள் உடலில் விஷ நீர் வெளியேற்றத்திற்கு தனது நாக்குகளை தொங்கப் போட்டு, வெளியே தொங்க வைத்து அதன் மூலம் வடிகால் நிகழ்வு நடைபெறுகின்றது.
இன்றைய விஞ்ஞான உலகின் மக்கள் தொகை , அதிக அளவு உணவின் அவசியம் மற்றும் குறைந்த கால உற்பத்தி என்ற நோக்கில் ரசாயன உரம் தாவரங்களுக்கு அளிப்பதால் அவற்றின் விஷத் தன்மை தாவர உணவின் மூலம் மனித உடலுக்கு கேடு தருகின்றவையாக இருக்கத்தான் செய்கிறது.

இதன் காரணமாக உரங்களின் விஷத் தன்மை மனித மற்றும் இதை உண்ணும் உயிர்கள் அனைத்தும் சிறிது சிறிதாக உடல் பாதிப்பை பெறுகின்றன.

இதன் தீர்வாக ரசாயன உரத்திலிருந்தும் விலகி இயற்கை உரத்திற்கு மாறுதலுக்கு உரிய சூழல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் நேரடியாகவே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அசைவ உணவினை பற்றிய ஒரு நீண்ட கட்டுரையினை பல்வேறு விளக்கங்களுடன் மனித நலம், நேயம் கருதி ஸ்வார்த்தம் சத் சங்கம் வெளியிட முனைகிறது.
இதனுடைய வரவேற்பு ஒரு விளம்பர செய்தியாக இல்லாமல் மனித உயிரிகளின் விலையினை உணர்வோர்கள் நிச்சயம் இதற்கு வரவேற்பு அளிப்பார்கள் அத்துடன் அந்த நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். பலன் பெறுவார்கள் என்ற நம்பிக்கை பெரிதும் எங்களுக்கு இருக்கின்றது.
ஏன் வேண்டும் சைவம் ? எதனால் வேண்டாம் அசைவம் ?
விஞ்ஞான ரீதியாகவும் , மெய்ஞான ரீதியாகவும் (ஆன்மீக) சைவ உணவே சாலச் சிறந்தது என்று நிருபிக்கப் பட்டுள்ளது. ஏன்? எதனால் ? வேண்டும் சைவம், மற்றும் வேண்டாம் அசைவம் என்று ஆன்மீக அன்பர்களுக்கு விளக்கமளிப்பது இக்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். அது ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் கடமையும் ஆகும்.
சைவ உணவு உண்ணும் மனிதர்களின் உடல் அமைப்பும் தாவர உணவுகளை மட்டும் உண்ணும் விலங்குகளின் உடல் அமைப்பும் ஒன்றை ஒன்று ஒத்துப் போவதாகவே இருக்கின்றது.
ஆனால் அசைவ உணவினை உட்கொள்ளும் புலி, சிங்கம், நாய், பூனை மற்றும் சைவ உணவினை உட்கொள்ளும் விலங்குகளோடு சிறிதும் ஒத்துப் போகாமல் பல்வேறு மாறுபட்ட ஜீரண உறுப்புகள் மற்றும் உடல் அமைப்பினைக் கொண்டதாக உள்ளது.
மனிதன் மற்றும் சைவ உணவு உண்ணும் விலங்குகளின்
கடவாய்ப் பற்கள் தட்டையாக அரைத்து விழுங்குவதற்கு ஏற்றதாக உள்ளது.
உமிழ்நீர் உணவின் ருசிக்கு ஏற்றபடி குறைந்த அளவு சுரப்பதோடு அதில் கார சக்தி அதிகம் உள்ளதாகவும், ஜீரண சக்தியினை தரும் வகையில் பெரிய உமிழ் நீர் சுரப்பிகளைக் கொண்டதாகவும் உள்ளது.
உதடுகளால் நீரினை உறிஞ்சிக் குடிக்கும் வண்ணம் வாய் அமைப்பினை பெற்றிருக்கிறது.
உணவினை இரவிலோ அல்லது இருளிலோ பார்க்கும் தன்மை சைவ உணவு விரும்பிகளுக்கு இல்லை.
கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகங்கள், இரைப்பை, போன்ற வயிற்றின் உள்ளுறுப்புகள் சைவ உணவு விரும்பிகளுக்கு சிறியவைகளாகவும் உள்ளது.
மேலும் உணவுக் கழிவுகளை அதிக அளவில் வெளியேற்ற இயலாதவாறு உள்ளது.
இன்னும் கெட்டுபோன உணவுகள் பல சமயங்களில் விஷமாகவிடுவதால் மேற்படி உறுப்புகள் அந்த விஷத்தில் இருந்து தன்னையும் (தன் உறுப்புகளை), உடலையும் பாதுகாக்க முடியாமல் செயல்பாடுகளில் தோல்வி அடைகின்றன.
இந்த நிலையில் மருந்தின் உதவியாலோ அல்லது உண்ணா நோன்பினாலோ அந்த ஜீரணக் கருவிகள் சரி செய்யப்படுகின்றன.
மேலும் மனித உடலின் தன்னைத் தானே காத்துக்கொள்ளும் அமைப்பின் படி இயல்பாகவே உடல்கோளாறுகள் சரி செய்யப்படுகின்றன.
மேலும் ஜீரண மந்தம் வயிற்று உபாதைகள் வருகின்றபோது ஜீரண கருவிகளுக்கு வேலைப்பளு ஏற்படாமல் தவிர்க்க பசியற்ற நிலை உணவில் விருப்பமின்மை, ஆகியவைகளால் உணவு மறுப்பு செயல்கள் இயல்பாக நிகழ்கின்றன.
சைவ உணவு உட்கொள்கின்ற மனித மற்றும் விலங்கினங்களின் குடல் அவைகளின் உடல் நீளத்தைப் போல 10 மடங்கு அதிகமாக அமையப் பெற்றிருக்கிறது.
தாவர உணவினில் இருந்தும், பெறப்பட வேண்டிய வெவ்வேறு உயிர்ச் சத்துக்கள் , தாதுக்கள், உடலில் முழுமையாக சேரும் வண்ணம் அந்த உணவு உண்ட பிறகு நீண்ட நேரம் குடலில் தங்குகிறது.
அவ்வாறு தங்குவதால் தாவர உணவினை தவிர வேறு கடினமான மாமிச உணவை எடுத்துக் கொள்ளும்போது அந்த உணவு நீண்ட நேரம் குடலில் தங்குவதால் விஷத் தன்மை பெற்று அந்த விஷம் சிறிது சிறிதாக உடலில் சேர்வதால் பல வித நோய்களுக்கு மனிதன் ஆளாகின்றான்.
நீர்க் கழிவுகள் தொடர்பான வரையில் வியர்வை மூலம் வெளியேறும் வகையில் தோல் அமைப்பில் நுண்ணிய பல லட்சம் துளைகளின் மூலம் வெளியேற்றப் படுகின்றது.
இந்த அமைப்பு மாமிச பட்சிணிகளுக்கு இல்லை. அவைகள் உடலில் விஷ நீர் வெளியேற்றத்திற்கு தனது நாக்குகளை தொங்கப் போட்டு, வெளியே தொங்க வைத்து அதன் மூலம் வடிகால் நிகழ்வு நடைபெறுகின்றது.
இன்றைய விஞ்ஞான உலகின் மக்கள் தொகை , அதிக அளவு உணவின் அவசியம் மற்றும் குறைந்த கால உற்பத்தி என்ற நோக்கில் ரசாயன உரம் தாவரங்களுக்கு அளிப்பதால் அவற்றின் விஷத் தன்மை தாவர உணவின் மூலம் மனித உடலுக்கு கேடு தருகின்றவையாக இருக்கத்தான் செய்கிறது.

இதன் காரணமாக உரங்களின் விஷத் தன்மை மனித மற்றும் இதை உண்ணும் உயிர்கள் அனைத்தும் சிறிது சிறிதாக உடல் பாதிப்பை பெறுகின்றன.

இதன் தீர்வாக ரசாயன உரத்திலிருந்தும் விலகி இயற்கை உரத்திற்கு மாறுதலுக்கு உரிய சூழல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நேரடியாகவே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அசைவ உணவினை பற்றிய ஒரு நீண்ட கட்டுரையினை பல்வேறு விளக்கங்களுடன் மனித நலம், நேயம் கருதி ஸ்வார்த்தம் சத் சங்கம் வெளியிட முனைகிறது.

இதனுடைய வரவேற்பு ஒரு விளம்பர செய்தியாக இல்லாமல் மனித உயிரிகளின் விலையினை உணர்வோர்கள் நிச்சயம் இதற்கு வரவேற்பு அளிப்பார்கள் அத்துடன் அந்த நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். பலன் பெறுவார்கள் என்ற நம்பிக்கை பெரிதும் எங்களுக்கு இருக்கின்றது.

மோட்ச தீபம் என்றால் என்ன?


 
 

 
மோட்ச தீபம் என்றால் என்ன? ஆலயங்களிலும் அஞ்சலி நிகழ்வுகளிலும் மறைந்த பெருந்தகைகளுக்காக நாம் தீபம் ஏற்றி அஞ்சலி செய்கிறோம்.

மோட்சம் என்றால் விடுதலை. இவ்வுடலிலிருந்து உயிர் விடுதலை பெற்று இறைவனடி சேர்வதை மோட்சம் என்பார்கள். வானுலகம் செல்லும் உயிருக்கு நல்ல கதி கிடைப்பதற்காக இறைவனுக்கு ஏற்றப்படும் தீபமே மோட்ச தீபம்.

அன்னதானம் செய்வது ஏன்?

அன்னதானம் செய்வது ஏன்?

அன்னதானம் என்பது உணவற்ற ஏழைகளுக்கும்,வரியோருக்கும் பசிக்கு உணவளிப்பதே அன்னதானம் ஆகும்.பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள்.நோய்களில் கடுமையானது பசி ஆகும்.பசி வந்தால் ஒருவன் தன்னிலை இழப்பான்.

மனித மனமே எதிலும் முழுமையாக திருப்தியடையாது.மனமானது ஒன்றை பெற்றுவிட்டால் அடுத்ததிற்கு ஏங்கும்.பசித்த ஒருவன் சாப்பிடும்பொழுது மட்டும்தான் வயிறு நிறைந்தவுடன் மனமும் நிறைகிறது.

உலகத்தில் சிறந்த பரிகாரங்களுள் ஒன்று மனித மனத்தை குளிர்விப்பது ஆகும்.ஒருவருக்கு பொன்னாலும்,பணத்திலானாலும் திருப்தி படுத்த முடியாவிட்டாலும் நாம் உணவு அளிக்கும்போது அவர் மனதை திருப்திபடுத்திவிடலாம்.அதனால்தான் அன்னதானம் செய்வது மிகப்பெரிய தர்மம் ஆகும்.

வெள்ளிகிழமையில் பெண்குழந்த பிறப்பது சிறப்பாகும்

செவ்வாய்,வெள்ளி மகிமை;
--------------------------------------
செவ்வாய் கிழமையை பெரும்பாலனவர்கள் ராசில்லாத நாளாகவும்,வெறும்வாய் என்பார்கள் அது முற்றிலும் தவறாகும...்.செவ்வாயை எந்த சாஸ்திரத்திலும் சொல்லவில்லை.அறிவியல் பூர்வமாக இது ஒரு சிறந்த கிழமையாகும்.

செவ்வாய் என்பது சிவந்த வாய் என்பதின் சுருக்கம்.இந்த கிரகத்தின் நிறம் சிவப்பு அத்னால் அந்தகாலத்தில் ரிஷிகள் இந்த பெயரை வைத்தார்கள்.வடஇந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்பார்கள்.இந்த நாளில் பூமி சம்பந்தபட்ட காரியங்கள் செய்யலாம்.விவசாய வேலைகள் செய்யலாம்.மங்கல காரியங்கள், தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்நாள் உகந்தது.செவாய் முருகனுக்கு உகந்த நாளாகும்.இந்த நாளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.வாழ்வு வளம் பெறும்.

மகாலெஷ்மியின் அம்சம் பொருந்திய கிழமை வெள்ளிகிழமை.இந்த கிழமையில் அம்மனுக்கு விரதம் இருந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவி மந்திரத்தை கற்ற சுக்கிரச்சாரியார் அமசம் பெற்றது இந்த கிழமை.

சுப காரியங்கள்,திருமண காரியங்கள்,தெய்வ காரியங்கள் இந்த கிழமையில் செய்வது மிகவும் சிறப்பாகும்.அதேபோல் வெள்ளியில் பெண்குழந்த பிறப்பதும் சிறப்பாகும்.

பஞ்சலோகத்தில் தண்டை அணிந்தால் அது பயனளிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை

பஞ்சலோகம்
------------------
சிறு வயதில் காலில் தண்டை அணிவது வழக்கம் . இதிலுள்ள உட்கருத்துக்கள் அறியாமல் தங்கள் நிதி வசதிகேற்ப தங்கத்திலோ,வெள்ளியிலோ தண்டை செய்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அணிவிக்கின்றனர்.இதனால் எந்த பலனும் கிடைப்பதில்லை என்பதே நிஜ நிலை. பதிலாக பஞ்சலோகத்தில் தண்டை அணிந்தால் அது பயனளிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை .தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம்.

நாம் வாழும் பிரதேசத்தில் பொதுவாக உலோக அம்சம் குறைந்த மண் காணப்படுகிறது .இந்த குறை இயற்கையிலும் இங்கு வசிக்கும் மனிதரிலும் பிரதிபலிக்கும் .இதை புரிந்து கொண்டதனால் பண்டைய மக்கள் பஞ்சலோகத்தின் உபயோகத்தை பரிந்துரை செய்தனர் என்பதில் சந்தேகமில்லை .பஞ்சலோகத்தின் சக்தி மனித உடலை சுற்றி வரும் பிராண சக்தியை பலப்படுத்தி உடலில் உலோக சக்தியை அதிகரிக்கவும் செய்யும் .இதற்காகவே சிறுவயதில் பஞ்சலோகம் அணிவது சிறந்தது

விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?

விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?

நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.

தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது

Tuesday, September 24, 2013

ஸ்வஸ்திக் என்பது மங்கலச்சின்னம்

ஸ்வஸ்திக் என்பது மங்கலச்சின்னம். செங்கோணவடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லு...ம் கோடுகளே ஸ்வஸ்திக். விநாயகரின் சின்னமாக விளங்கும் இதனைப் பூஜையறையிலும், வாசலிலும் கோலமாக இடுவர். வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு. "ஸ்வஸ்தி' என்றால் "தடையற்ற நல்வாழ்வு'. ஸ்வஸ்திக்கில் உள்ள எட்டு கோடுகளும் எட்டுத் திசைகளைக் குறிக்கும். எட்டுத்திசைகளிலும், நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பர்யம்.

கிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!

 
கிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!
----------------------
எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும்! இந்த ஆசை யாருக்குத்தான் இருக்காது?
அதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான் என்கின்றன புராணங்கள்.
இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அது எப்படி முடியும்? என்கிறீர்களா?...
முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார்.
திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.
ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

திங்கட்கிழமை
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

செவ்வாய்க்கிழமை
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

புதன்கிழமை
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

வியாழக்கிழமை
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

வெள்ளிக்கிழமை
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

சனிக்கிழமை
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!

வழிபாட்டில் உயர்ந்தது எது!

வழிபாட்டில் உயர்ந்தது எது!

* உண்ணாமல் இருக்கலாம், உறங்காமல் இருக்கலாம்; ஆனால் கடவுள் சிந்தனை இல்லாமல் இருக்கக்கூடாது.
* கடவுள் இல்லை என்பவனுக்கு அனைத்தும் இல்லாமல் போய்விடும். கடவுள் உண்டு என்பவனுக்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
* அறிவையும், அன்பையும் கெடுக்கக்கூடிய ஆகாரத்தை சாப்பிடுவதை விட, தூய உணவை சாப்பிட்டு, தூய குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* உலகம் நிலையற்றது, தர்மம் நிலையானது. தர்மத்தால் தான் நற்கதியடைய முடியும். தர்மம் இறைவனுடைய மூத்த மகன்.
* இறைவனுடைய கருணையைப் பெறத்துடிக்கும், ஒவ்வொருவரும் பிற உயிர்களிடம் கருணை காட்ட வேண்டும்.
* உடம்பும் நாமும் வேறு, வேறு. ஆனால் சிவமும் சக்தியும் அப்படியல்ல. மலரும் மணமும் போன்று இணைந்திருப்பது.
* இறைவனுக்கு செய்யும் வழிபாட்டை விட, ஏழைகளுக்குச் செய்யும் வழிபாடே உயர்ந்தது.
- வாரியார்

நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?''

""நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?''
."நாரம்' என்றால் "தண்ணீர்'. "அயனன்' என்றால் "சயனித்திருப்பவன்'. கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா? அதனால் நாராயணன் என்ற பெயர் ஏற்பட காரணமாயிற்று

விவேகானந்தரின் விளக்கம்!

விவேகானந்தரின் விளக்கம்!
---------------------------------------
ராஜபுதனத்தில் ஆழ்வார் என்று ஒரு சமஸ்தானம் இருந்தது. ஒரு தடவை சுவாமி விவேகானந்தர் அந்த சமஸ்தான மன்னரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார்.

விவேகானந்தரின் ஆன்மிகப் பெருமையையும், அவருடைய அறிவாற்றலையும் கேள்விப்பட்டிருந்த மன்னர், விவேகானந்தரை தனது அரண்மனையிலேயே தங்கவைத்து மிகுந்த உபசாரம் செய்தார்....

அந்த சமஸ்தான மன்னருக்குப் பொதுவாக இந்து மதத்தின் மீது பற்றும், நம்பிக்கையும் இருந்தாலும், பலவிதமான மூட நம்பிக்கைகளால் இந்து மதத்தின் சிறப்புக்கு மாசு ஏற்படுகிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

இந்து மதத்தில் வழக்கமாக உள்ள கடவுள்களின் திருவுருவ வழிபாடு என்பது ஓர் அர்த்தமற்ற மூடநம்பிக்கை என்பது மன்னரின் அழுத்தமான எண்ணம்.

ஒருநாள் மன்னரும், விவேகானந்தரும் இந்து மதத் தத்துவங்கள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது மன்னர் விவேகானந்தரை நோக்கி, “சுவாமி, இந்து மதத்தில் நடைமுறையில் இருக்கும் தெய்வத் திருவுருவ வழிபாட்டைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உயிரற்ற கற்களாலும், உலோகங்களாலும் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்களில் ஏதோ மகிமை இருப்பதாக எண்ணிக்கொண்டு அவற்றுக்குப் பூஜை செய்வதும், வழிபாடு மேற்கொள்வதும் அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் அல்லவா? கல்லிலும், செம்பிலுமான உருவங்களில் கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.

மன்னரின் அந்தக் கேள்வியைக் கேட்டு சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் பூத்தார்.

மன்னருக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை வெறும் வாய்விளக்கமாகக் கூறிப் போக்க முடியாது என்று அவர் நினைத்தார்.

வேறு எந்த வழியில் மன்னரின் ஐயத்தைப் போக்குவது என்று யோசித்த விவேகானந்தரின் கண்களில், சுவரில் மாட்டியிருந்த மன்னரின் தந்தையின் பெரிய திருவுருவப் படம் கண்களில் பட்டது.

“அது யாருடைய உருவப் படம்?” என்று விவேகானந்தர் வினவினார்.

“என் தந்தையின் படம் இது” என்றார் மன்னர்.

“இது என்ன படமா? எவ்வளவு அவலட்சணமான உருவம்! இந்தப் படத்தை இந்த இடத்தில் மாட்டி வைத்திருப்பதால் இந்த அறையின் அழகே கெட்டுப் போய்விடுகிறது. இதைக் கழற்றி சுக்குநூறாக உடைத்துக் குப்பைத் தொட்டியில் வீசுங்கள்!” என்று கூறினார் விவேகானந்தர்.

அவர் சொன்னதைக் கேட்டு மன்னர் ஆவேசமடைந்து விட்டார்.

“சுவாமி… என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்! இதே சொற்களை வேறு யாராவது சொல்லியிருந்தால் இந்நேரம் அவர் தலையை வெட்டி வீழ்த்தியிருப்பேன்! என் தந்தையை நான் தெய்வமாகவே கருதி வழிபட்டு வருகிறேன். அவருடைய திருவுருவப் படத்தைப் பற்றி நீங்கள் எவ்வாறு இழிவாகப் பேசலாம்?” என்று ஆர்ப்பரித்தார்.

விவேகானந்தரோ மிகவும் நிதானமாக மன்னரை நோக்கி, “மன்னவரே, உமது தந்தை மீது எனக்கு எவ்விதத் துவேஷமும் கிடையாது. அவரை இழிவுபடுத்துவதும் எனது நோக்கமல்ல. தெய்வத் திருவுருவ வழிபாட்டைப் பற்றி உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விளக்குவதற்காகவே நான் இவ்வாறு நாடகமாடினேன்.

உங்கள் தந்தையாரின் உருவப் படத்துக்கு உயிர் இல்லை. இது ஓர் ஓவியரால் வரையப்பட்ட ஓவியம்தான். இந்த ஓவியத்தினுள் உங்கள் தந்தை ஒளிந்துகொண்டிருக்கவில்லை. ஆனால் உங்கள் தந்தை மீது உங்களுக்கு இருக்கும் அன்பு, மதிப்பு, மரியாதை காரணமாக இதை ஓர் நினைவுச்சின்னமாகப் போற்றி வருகிறீர்கள். தெய்வத் திருவுருவங்களை இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் வழிபடுவதன் நோக்கமும் இதுதான். இறைவனை நோக்கி வழிபடும்போது இறை சிந்தனையை நோக்கி மனதை ஒன்றுபடுத்துவதற்கு அந்த உருவங்கள் பயன்படுகின்றன” என்றார் விவேகானந்தர். சந்தேகம் நீங்கித் தெளிவுபெற்றார் மன்னர்

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!

"மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா...
யாமலக முண்ணமுறை யால்"
-தேரையர்.

நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

பொருள்

முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர். அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:

நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

தமிழ்ச் சித்தர்கள் கண்டுபிடித்த ஆமை

தமிழ்ச் சித்தர்கள் கண்டுபிடித்த ஆமை அதிசயம்!

ஒருமையுள் மை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடத்து
-திருக்குறள் 126-...

ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்.

ஆனால் திருமூலர் மட்டுமே ஆமையையும் ஆயுள் நீட்டிப்பையும் இணைத்துப் பேசுகிறார். இதை இன்றைய உயிரியல் விஞ்ஞானமும் கின்னஸ் சாதனை நூலும் உறுதிப்படுத்தி விட்டன.

ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் என்று கூறி விடலாம். ஆனால் திருமந்திரம் இதற்கு மேலாக ஒரு படி செல்கிறது.

இன்றைய உயிரியல்(Biology) படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும் பிராணி ஆமை தான் என்று தெரியும். இதை கின்னஸ் சாதனை நூலிலும் காணலாம்.


இதையே திருமூலரும் கூறுகிறார்:-

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே
-திருமந்திரம் 2264, 2304-

மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் - ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்:

வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில் நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம்.

இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும். ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்.

மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும். திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கையும் உண்டு.