Monday, September 23, 2013

திதி, தர்ப்பணம் கொடுக்கும் பழக்கம் எப்படி தோன்றியது?


திதி, தர்ப்பணம் கொடுக்கும் பழக்கம் எப்படி தோன்றியது?

திரேதா யுகத்தில் தாயை இழந்த ஒரு குழந்தையை மகரிஷி ஒருவர் பாசத்துடன் வளர்த்தார். வயதான பிறகு அவர் மரணம் அடைந்தார். அப்போது அவர் வளர்த்த குழந்தை முனிகுமாரனாக மாறி இருந்தான். தனக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்த மகிரிஷி மரணம் அடைந்ததை முனிகுமாரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தன் தந்தை உயிரை பறித்த சூரியன் மீது அவனுக்கு கோபம் ஏற்பட்டது. எனவே தன் தவ வலிமையால் சூரியனை தடுத்து நிறுத்தினான். இதனால் உலகம் இருண்டது. மும்மூர்த்திகளும் தேவர்களும் முனிகுமாரனை சமரசம் செய்தனர்.

அவர்கள் அவனிடம் இனி ஒவ்வொரு ஆண்டும் உன் தந்தை இறந்த அதே நாளில் திரும்பி வருவார். அவருக்கு நீ உணவளிக்கலாம். அதை அவர் ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார். பிறகு பித்ரு லோகத்துக்கு திரும்பிச் சென்று விடுவார்'' என்றனர்.

இதற்கு முனிகுமாரன் சம்மதித்தான். ஒவ்வொரு ஆண்டும் அவன் தந்தை இறந்த திதியில் வரத் தொடங்கினார். இப்படித்தான் மறைந்த முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் பழக்கம் ஏற்பட்டது. பித்ரு பூஜையினால் நம் குலம் தழைக்கும். பித்ருக்கள் நம் பூலோகத்தில் இருந்து தென் திசையில் உள்ளனர். இதனால் அவர்களை தென் புலத்தார் என்று அழைக்கிறார்கள்.

No comments:

Post a Comment