Monday, September 23, 2013

குழந்தை இல்லாதவர்களுக்கு அடுத்த ஜென்மம் கிடையாது என்று கூறுவது உண்மையா?

குழந்தை இல்லாதவர்களுக்கு அடுத்த ஜென்மம் கிடையாது என்று கூறுவது உண்மையா?

ஜோதிடத்தில் மட்டுமின்றி சில சித்தர்களும் இதைப் பற்றிக் கூறுகையில், குழந்தை இல்லாதவர்களுக்கு “விட்டகுறை, தொட்டகுறை முடிந்து விட்டது; அவர்களுக்கு கொள்வினை, கொடுப்பினை” கிடையாது.


இதில் விட்டகுறை, தொட்டகுறை என்று கூறுவதை ரத்த சம்பந்தமான உறவுகளாகப் பார்க்கக் கூடாது. ஒருசிலரை ஏமாற்றி சொத்துக்களை அபகரிப்பது, குறுக்கு வழியில் சம்பாதிப்பது போன்றவையும் விட்டகுறை, தொட்டகுறைதான். எனவே, குழந்தையில்லை என்பதற்காக இந்த ஜென்மத்தில் எந்த அராஜகமும் செய்து கொண்டிருக்கக் கூடாது. இதுபோன்ற பாவங்களைச் செய்தால் அதனை அனுபவிக்க அவர்கள் மறுஜென்மம் எடுத்தாக வேண்டும்.
பந்தங்கள் இல்லாமல் இருக்கும் சில தம்பதிகள், வசதி வாய்ப்பு இருந்தாலும், எந்த அலட்டலும் இல்லாமல், எளிமையாக வாழ்க்கை நடத்தும் தம்பதிகளுக்கே முக்தி கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
ஒரு சில தம்பதிகள் தங்களுக்கு குழந்தை இல்லை என்றாலும் அதிகளவில் சொத்துக்களை சேர்த்துக் கொண்டு, எளியவர்களுக்கு வழங்காமல், தேவைக்கும் அதிகமான ஆடம்பரத்துடன் வாழ்வார்கள்.
எனவே, குழந்தை இல்லை என்ற ஒரு தகுதியை வைத்து மட்டும் அவர்களுக்கு அடுத்த ஜென்மம் இல்லை என்று கூற முடியாது. குழந்தை இல்லாதவர்களுக்கு அடுத்த பிறவி உண்டாகும். இதில் ஒரு சில தம்பதிகளுக்கு மட்டுமே குழந்தை பாக்கியம் இல்லாமலும் போய், முக்தியும் கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இவர்களுக்கு மோட்ச ஸ்தானம் (12ஆம் இடம்) நன்றாக இருப்பதே அதற்கு காரணம்.

No comments:

Post a Comment