Monday, October 28, 2013

பொருள் அற்ற பேச்சை தவிர்ப்போம்!

பொருள் அற்ற பேச்சை தவிர்ப்போம்!

உடம்பில் உள்ள உறுப்புகளில் வாய்க்குத் தான் அதிகமான வேலை கொடுக்கிறோம். சாப்பிடுவது மட்டுமின்றி பேசுவது என்று இரு செயல்களில் வாய் ஈடுபடுகிறது. 'வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி' என்பார்கள். இதில் சாப்பாடு, பேச்சு என்ற இரண்டு விஷயங்களும் அடங்குகின்றன.
நடைமுறையில் நாம் தேவைக்கு அதிகமாக வாய்க்கு வேலை கொடுக்கிறோம். நொறுக்குத்தீனி, பானம் என்று ஏதாவது ஒன்றை நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். வெறுமனே பொருள் இல்லாமல் பேசிக்கொண்டே இருக்கிறோம். இவ்விரண்டுமே நம்மை வேண்டாத பிரச்னைகளில் தள்ளிவிடும்.

-காஞ்சிப்பெரியவர்

No comments:

Post a Comment