Friday, November 29, 2013

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு -

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு.
...
- கடுவெளிச் சித்தர்

இதன் பொருளாக அடியேன் புரிந்து கொண்டது பின்வருமாறு...

"ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு"

பொறி ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி)

புலன் ஐந்து (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்)

ஐந்து பொறிகள் சூழ்ந்து இருக்கும் காடு... நம் உடல்...
இந்த பொறிகள் உண்டாக்கும் ஐந்து புலன்கள் (கரண அறிவு) சென்றடையும் நாடு.. ... நம் மனம்...

இந்த மனம் தான் நம்மை உண்மை அறிய விடாமல்... தடை செய்கிறது...

"முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு"

இந்த பொறி-புலன் சேர்க்கையில் சிக்காமல் உய்வதற்காக ஏங்க வேண்டும்... அவற்றை.. கடந்து.. உள்ளே செல்லும் மார்கத்தை தேட வேண்டும்...

உள் +கட = கடவுள்...

அதற்க்கு மூலமான பொருளை... (கடவுளை) உணர்ந்திடின்... முக்தி/வீடு-பேறு வாய்க்கும்...

இந்த கடைசி இரண்டு அடிகளுக்கு... யோக விளக்கமும் உண்டு...

"முந்தி... வரும்(தீ).. நீ தேடு..." (சுழுமுனை சுவாசத்தை / அக்னி நாடியை தேடு...)

அது உரையும்.. இடமான மூலாதாரத்தை அறிந்து விட்டாயானால்...

"(வா)முத்தி வீடு" - வாசியின் துணைகொண்டு... மூலக்கனலை.. மூலாதாரத்திலிருந்து... முக்தி வீடான... உச்சிக்குழிக்கு... (புருவமத்திக்கு).. எடுத்துச் செல்...

No comments:

Post a Comment