Monday, December 30, 2013

12 வருடம் மலை ஏறமுடியுமா!

சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால்வைத்தாலே பாதி நோய்கள் தீர்ந்து விடும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகள் தொடர்ந்து, காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் "உலக உயிர்கள் அனைத்தும் ஒன்றே' என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறலாம். முருகனின் திருவடி நிழலில் வசிக்கும் வாய்ப்பும் இவர்களுக்கு உண்டு. பழநி முருகனுக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய்கள் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தம் (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது நவபாஷாண சிலை. கோயிலின் அமைவிடம் மலை. தீர்த்தம் சரவணப்பொய்கை. ஆக, எல்லா வகையிலும் உயர்ந்த முருகத்தலம் பழநி

No comments:

Post a Comment