Monday, December 23, 2013

கடனே என பணி செய்யாதீர்கள்!

 
கடனே என பணி செய்யாதீர்கள்!

* கடவுள் நமக்கு கை, கால், கண் என்று எல்லா உறுப்புகளையும் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சிந்திப்பதற்கு புத்தியும் கொடுத்திருக்கிறார். அந்த புத்தியால் இது நல்லது இது கெட்டது என்று செயலின் விளைவை யோசித்து அணுகவேண்டும்.
* எச்செயலைச் செய்தாலும் அதனை முறையோடு செய்யப் பழகுதல் அவசியம். முறை தவறி செய்தால் துன்பம் தான் உண்டாகும். பெரியவர்கள் வகுத்துக் கொடுத்திருக்கும் நியாயமான வழியில் நடப்பவர்கள் எப்போதும் முறை தவறுவதில்லை.
* ""என் கடன் பணி செய்து கிடப்பதே'' என...்பது தான் வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். கடன் என்றால் வேண்டா வெறுப்பாகச் செய்வது என்று நாம் அர்த்தம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், கடமை என்பது தான் இங்கு பொருள். அதனால், எச்செயலையும் ஆர்வத்தோடு இதயப்பூர்வமாகச் செய்யவேண்டும்.
* துக்கம் நம் உடன்பிறப்பு. மனதில் உண்டாகும் துக்கங்களை எல்லாம் ஞானம் என்னும் தண்ணீரில் மூழ்கடியுங்கள். அப்போது துக்கம் தண்ணீரில் இருக்கும் பாரம் போல பரம லேசாகி விடும்.


காஞ்சிப்பெரியவர்
 
 
 
 

No comments:

Post a Comment