Saturday, December 28, 2013

இறைவன் மேல் பக்தி சித்திப்பதற்கு ஏழு சாதனங்கள் வேண்டியிருப்பதாக சாத்திரமானது வலியுறுத்துகின்றது

இறைவன் மேல் பக்தி சித்திப்பதற்கு ஏழு சாதனங்கள் வேண்டியிருப்பதாக சாத்திரமானது வலியுறுத்துகின்றது அவையாவன
விேவகம் விமோகம் அப்பியாசம் க்கிரியா கல்யாண அனுத்தாசம் அனுவசானம் இந்த ஏழும் அவையாகும்
விவேகம் என்றால் தர்மா தர்மங்கள் குறித்த ஞானம் சரீர சக்தி மனச்சக்தி வாக்ச்சக்தி இதையெல்லாம் விவேகவான்கள் தேடிக் கொள்வார்கள்
விமோகம் என்பது என்னவென்றால் உலக இன்பங்களில் பற்றில்லாமல் பகவத் விடயங்களில் பற்றுடன் இருத்தல் ஆகும்
அப்யாசம் என்பது இந்த முதல் கூறிய இருவிடயங்களையும்... இடைவிடாது கடைப்பிடித்தலாகும்
க்கிரியை என்பது அதற்குன்டான காரியங்களைச் செய்தல்
எப்பொழுதும் பகவத் விடயத்திலே ஈடுபடும் படியான காரியங்களைச் செய்தல்
கல்யாண என்பது பகவானுடைய திருக்கல்யாண குணங்களை எப்பொழுதும் சிந்தனை பண்ணிக் கொண்டே இருப்பது
அந்தப் பகவானின் திருக்கல்யாண குணங்கள் ஒவ்வொன்றும் நம்மை இழுத்துக் கொண்டே போய்விடும் ஒரு குணத்தை அனுபவித்து முடிந்தாலல்லவா எல்லா குணங்களையும் அனுபவிப்பது குறித்து யோசிக்கலாம் எல்லா குனங்களும் ஏற்றமுடையவை எப்போதும் அவற்றையே சிந்தனை பண்ணிக் கொண்டிருப்பது
அனவசாதனம் என்றால் பாகவதஉத்தமர்களிடத்திலே ஆசூயைப் படக்கூடாது இறைவனிடத்திலே பிரபக்தியோடு இருக்க வேண்டும் அதிலும் நம் போன்ற பக்தர்களிடத்திலே அன்யோன்யமான பரேமையுடனும் அன்புடனும் அடியேன் அடியேன் என்று பணிந்து முந்தி நிற்க வேண்டும் அவ்வாறு நாம் பகதியோடு இருப்பதைத்தான் பகவான் விரும்புகின்றான்
அனுத்தாசம் பசி தூக்கத்தைப் பொறுக்கும் திறன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அவற்றிலே நாட்டம் கொள்ளக் கூடாது
உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே என்று அந்த எம்பெருமானையே நினைத்திருக்க வேண்டும் பசி தாகம் என்பன போன்ற இத்யாதி லோக கர்மாககளுக்கு இடம் கொடுக்கக் கூடாது

No comments:

Post a Comment