Saturday, December 21, 2013

புறநானூறு:

புறநானூறு:

புறநானூறு::::புறம் + நானூறு = புறநானூறு. இப்பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவர்களால் பாடப்பட்டவையாகும். இதன் மூலம் மூவேந்தர்களின் சிறப்பு, தமிழ்நாட்டின் சிறப்பு, கடை ஏழு வள்ளற்களின் சிறப்பு, வீரம் என பல தரப்பட்ட விவரங்களும், பலருடைய வரலாற்று குறிப்புகளும் அறியலாம்.

தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம்.உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப...்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.

தமிழ் இலக்கண முன்னூல் ஆன தொல்காப்பியம் நூல்கள் எழுதும் முறையை நான்கு வகையாக பிரித்து உள்ளது.
அவை
தொகுத்தல் - பல் வேறு விஷயங்களை தொகுத்து ஒருவர் எழுதுதல்;
விரித்தல் - இது ஏற்கனவே எழுதிய புத்தகத்திற்கு விளக்க உரை;
எழுதுதல்
தொகை - பல் வேறு கால கட்டங்களில் பல புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிடல்;
மொழி பெயர்ப்பு - இது வேறு மொழியில் உள்ள நூல்களில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுதுதல்;

தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.

" நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பற்று ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை"

எட்டுத்தொகை நூல்கள் அகம், புறம் ஆகிய இரண்டு பிரிவுகளை பற்றி மிகச்சிறப்பான பாடல்கள் கொண்ட தொகுப்பு ஆகும்.

No comments:

Post a Comment