Friday, January 31, 2014

சூலம்(வார சூலை) என்பது என்ன? -


சூலம்(வார சூலை) என்பது என்ன? -



---------------------------------------------- நாம் பயன்படுத்தும் நாட்காட்டிகளிலோ,பஞ்சாங்களிலோ ஒவ்வொரு கிழமைக்கு ஒவ்வொரு திசையில் ...சூலம் என போட்டியிருக்கும்.இதற்கு வாரசூலை என்ற மற்றொரு பெயரும் உண்டு.பெரும்பாலனவர்கள்ஒரு காரியமாக புதுவிஷயமாக செல்வது என்றால் அன்று நாம் செல்லும் திசையில் சூலம் உள்ளதா? என்பதை பார்த்து தான் காரிய முயற்சி செய்வார்கள். இதற்கான அடிப்படை காரணம் என்னவெனில்,இந்த உலகை ஆளும் சிவபெருமான் தன் சூலாயுத்தை ஓய்வுக்கு கொடுக்க ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு திசையில் சற்று நேரம் தரையில் வைத்து வைப்பார்.அப்போ நாம் அதை எதிர்கொண்டு போக்க்கூடாது எனபதால் தான் வார[ தினம் ] சூலம் வாரசூலை உருவானது. சிவனின் சூலம்.., ஞாயிறு = மேற்கு. திங்கள் = கிழக்கு. செவ்வாய்= வடக்கு. புதன்= வடக்கு. வியாழன்= தெற்கு. வெள்ளி= மேற்கு. சனி= கிழக்கு. சிவனின் சூலம் கூட காலையில் 5 நாழிகை தான் பூமிமீது வைப்பார் , 2 மணி நேரம் மட்டுமே காலையில் வாரசூலை கணக்கிடவும், பின் 2 மணிநேரத்திற்க்கு மேல் மேற்கொண்டு அந்த திசையில் பயணிக்கலாம் என்பதே பொருள் ஆகும்

No comments:

Post a Comment