Thursday, January 23, 2014

எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்?





எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்?
நன்றி-குமுதம் பக்தி.

பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலைச் செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும்.
அதேசமயம் எந்த தினத்தில் எதைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்!...
எந்தக் கிழமை, என்ன செய்யலாம்? இதோ...

ஞாயிற்றுக்கிழமை: சுபகாரியத் தொடக்கம், ஹோமங்கள், யாத்திரை புறப்படுதல், பதவி ஏற்றல், சிகிச்சை மேற்கொள்ளல், விதை விதைத்தல் கிரகப்ரவேசம், வாகனங்கள் வாங்குதல், சூரியன் அல்லது அனுமன் வழிபாடு செய்து தானமளித்தல் செய்யலாம்.

திங்கட்கிழமை: வர்த்தக ஆரம்பம், திருமணம், புராணங்கள் படித்தல், தானிய சேமிப்பு, யாகங்கள், கிணறு வெட்டுதல், மாங்கல்யத்திற்குப் பொன் உருக்குதல், கோயிலுக்குத் திருப்பணி தொடங்குதல், சிவனை வணங்கி அன்னதானம் செய்தல் ஆகியன செய்யலாம்.

செவ்வாய்கிழமை: போருக்கான ஏற்பாடுகள் செய்தல், நெருப்பு சார்ந்த பணிகளைத் தொடங்கிடல், வாகனங்களுக்கு பூஜையிடல், அஸ்திரவித்தைகள் பழகுதல், முருகப்பெருமானை வணங்கி ஏழைகளின் திருமணத்துக்கு உதவிடல் ஆகியவை செய்யலாம்.

புதன் கிழமை: திருமாங்கல்யம் செய்தல், ஹோமசாந்தி செய்தல் மருந்து உண்ண ஆரம்பித்தல், நீதி, தர்மம் பரிபாலித்தல், கல்வி, கலை கற்கத் தொடங்குதல், புதிய வாகனத்தில் பயணம் செய்தல், பெருமாளை வணங்கி ஆடை தானம் அளித்தல் செய்யலாம்.

வியாழக்கிழமை: கடவுள் படங்கள், சிலைகள் வாங்குதல், பிதிஷ்டை செய்தல், சுபகாரியங்கள் செய்தல், குழந்தைகளுக்கு பெயர் சூட்டல், தியானம் பழகத் தொடங்கல், போர்வெல்-கிணறு போடுதல், வேதம் கற்றிடத் தொடங்குதல், தட்சிணாமூர்த்தியை வணங்கி அன்னதானம் வழங்குதல், அறிஞர்கள் உரை கேட்டல், மகான்களை தரிசித்தல் ஆகியன செய்யலாம்.

வெள்ளிக்கிழமை: விவாகம், சுமங்கலி பூஜைகள், கிரகப்பிரவேசம், குழந்தைகளுக்கு சோறு ஊட்டல், தர்ம ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல், குழந்தையைத் தொட்டிலில் இடுதல், வளைகாப்பு நடத்துதல், காதுகுத்துதல், மகாலட்சுமியை வணங்கி மங்களப் பொருடகளை தானமளித்தல் ஆகியன செய்யலாம்.

சனிக்கிழமை: பருத்தி விதைத்தல், இரும்பு சார்ந்த பணிகளைத் தொடங்குதல், தீட்சை வாங்குதல், வளர்ப்புப் பிராணிகள் வாங்குதல், இயந்திரங்கள் தொடர்பான பணிகளைச் செய்தல், சனிபகவானை ஆராதித்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.


No comments:

Post a Comment