Monday, February 24, 2014

யாரையும் குறை கூறாதீர்கள்:

நீங்கள் எதை செய்தாலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே உள்ளனரா உங்களுடன் இருப்பவர்கள்?அல்லது நீங்கள் பிறரை குறை கூறுபவரா?

பிறரை குறை காண்பதற்கு நாம் நிறைவான த...குதி பெற்றிருக்க வேண்டும். அந்த தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா என்று எண்ணி பார்த்து செயல்படுங்கள்.

இறைவன் ஒருவன் மட்டுமே குறை காணும் நிறையை பெற்றவர் என்றும், இறைவனுக்கு அடுத்தபடியாக குரு அந்த நிறையை பெற்றவர் என்றும் வள்ளலார் கூறுகிறார். இறைவனோ, குருவோ தன் பக்தனை அல்லது சீடனை முன்னேற்ற பாதையில் இட்டு செல்ல, அவனுடைய குறைகளை சுட்டி காட்டி உணர்த்துகின்றனர். உங்களுடைய நிறைகளை மட்டுமே கண்டு புகழ்ந்து செல்வார் எனில், உங்கள் குறைகள் குறைகளாகவே நின்று விடும். நீங்கள் முழுமை பெற்ற மனிதனாக வேண்டும் எனில் உங்கள் குறைகளை சுட்டி காட்ட வேண்டிய கட்டாயத்தில் இறைவனோ, குருவோ இருக்கின்றனர்.

உங்களை உங்களுடன் இருப்பவர் எவேரேனும் குறை கூறுவார் எனில், முதலில் அங்கே நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்று சிந்தியுங்கள். இறைவனே இவர் மூலமாக நம் குறையை சுட்டி காட்டுகிறார் என்று நீங்கள் சிந்தித்தால்; அறிந்தோ அறியாமலோ தவறு செய்திருப்பின் அதை திருத்தி கொள்ள முட்படுங்கள். எப்பொழுது உங்கள் சிறு சிறு பிழைகளை ஒப்புகொண்டு நீங்கள் மாற விரும்புகிறீர்களோ அங்கே குருவோ, இறைவனோ உங்களுக்கு வெகு அருகாமையில் இருந்து வழி நடத்துவர்.

அப்படியல்லாது அங்கே வெறுமனே அந்த குறை கூறுதல் நடந்திருப்பின், உங்களை குறை கூறுபவரை விஷ ஜந்தாக கருதி ஒதுங்கி விடுங்கள்.

"யாரையும் குறை கூறாதீர்கள்.
அப்படி குறை கூறுபவரை விஷ ஜந்தாக கருதி ஒதுங்கி விடுங்கள்..
இறைவன் ஒருவனே குறை காணும் நிறையை பெற்றவர்...
இரண்டாவது குரு...

No comments:

Post a Comment