Monday, March 10, 2014

ஆன்மீக வீரம்

ஆன்மீக வீரம்
இந்தியாவின்மீது படையெடுத்து வந்த சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர்யின் ஆசிரியர், அவரிடம் இந்தியாவில் உள்ள முனிவர்களைப் போய் பார்க்குமாறு சொன்னார். வெகுநேரம் தேடிய பிறகு ஒரு தொண்டு கிழவர் பாறை ஒன்றின்மீது உட்கார்ந்திருப்பதைச் அலெக்ஸாண்டர் பார்த்தார். சிறிதுநேரம் அவருடன் பேசிய போது, அந்த முனிவரின் அறிவுத்திறன் அலெக்ஸாண்டர்யை மிகவும் கவர்ந்தது. தம்முடன் தமது நாட்டிற்கு வருமாறு அவர் அந்த முனிவரை அழைத்தார்.
அதற்கு அந்த முனிவர், 'நான் வர விரும்பவில்லை. இந்தக் காட்டிலேயே நான் ...சந்தோஷமாக இருக்கிறேன்' என்று சொன்னார். 'நான் உங்களுக்குச் செல்வம், பதவி எல்லாவற்றையும் அளிக்கிறேன். நான் இந்த உலகத்திற்கே அதிபதி' என்றார் அலெக்ஸாண்டர். 'அந்த பொருட்களிலெல்லாம் எனக்கு ஆசை கிடையாது' என்று அந்த முனிவர் பதிலளித்தார். உடனே அலெக்ஸாண்டர், 'என்னுடன் வரவில்லை என்றால் உம்மைக் கொன்றுவிடுவேன்' என்று கூறினார். அந்த முனிவர் அமைதியாக புன்னகைத்துவிட்டு, 'சக்கரவர்த்தியே நீ பேசியவற்றுள், வடிகட்டிய முட்டாள்தனமான பேச்சு இதுதான். உன்னால் என்னைக் கொல்ல முடியாது. சூரியனால் என்னக்காயச் செய்ய முடியாது. நெருப்பு என்னை எரிக்க முடியாது. வாள் என்னைக் கொல்ல முடியாது. பிறப்பு இறப்பற்ற, எப்போதும் நிலைத்திருக்கின்ற, சர்வ வல்லமை படைத்த, எங்கும் நிறைந்த ஆன்மா நான்' என்று சொன்னார். இதுதான் ஆன்மீக வீரம்.
1857- ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கழகத்தின் போது, முகமதிய வீரன் ஒருவன், மகாத்மாவான ஒரு துறவியைப் பலமாக கத்தியால் குத்திவிட்டான். இந்து விடுதலை வீரர்கள், குத்தியவனைப் பிடித்து அந்தத் துறவியிடம் கொண்டுவந்து, அவனைக் கொல்வதற்கு அனுமதி கேட்டார்கள். ஆனால் அந்தத் துறவி அமைதியாக முகமதியனைப் பார்த்து, 'சகோதரா, நீ பரம்பொருளே, நீ அவனே!' என்று சொல்லியபடியே இறந்துவிட்டார். இது ஆன்மீக வீரத்திற்கு இன்னொரு உதாரணமாகும்.

No comments:

Post a Comment