Tuesday, March 11, 2014

ஒழுக்கம் என்பது யாதெனில்







எல்லா மதங்களும் ஒன்றே...!!!!! அணைத்து சமயங்களும் சொல்லும் ஒரே விடயம் தனிமனித ஒழுக்கம்!! அனைவருக்குமானது !!!!

ஒழுக்கம் என்பது யாதெனில் ...
நாவடக்கம் முதல் தொடங்கி
மனதடக்கம் அதையும் சேர்த்து
உள்ளுணர்வும் வெளியுனர்வும்
ஒழுக்கமாய் பேணுதலே ...........

தீய செயல் செய்யாமல்
தீய எண்ணம் கொள்ளாமல்
தீய வார்த்தை உதிர்க்காமல்
தீயவரோடு சேராமல் .........

மனதளவில் தொடங்கி
உடலளவில் வரைக்கும்
கட்டுபாட்டிற்குள் கட்டுண்டு
கடமைதவராது வாழ்தல் .............

சக ஜீவனை துன்புறுத்தாமல்...
பிறருக்கு தீங்கு நினைக்காமல் ......
பிறரின் புகழ் மீது பொறமை கொள்ளாமல்.....
நமக்கு தீங்கு செய்வோருக்கு , அவர் வேட்கப்படும் வகையில் நன்மை செய்து .....

ஒழுக்கத்தை உயிராய் மதித்து
உணர்வுகளை நல்லதாய் விதைத்து
நற் சிந்தனைகளை மனதில் வளர்த்து
ஒழுக்கத்தோடு வாழ முயற்சி ........

தீயவரோடு கூட்டு சேர்ந்து
தீய பழக்கம் அதை வளர்த்து
நியாயமின்றி வாழும் வாழ்வை
இன்றோடு நிறுத்திவிடு ...........

குறைகளை மற .... நிறைகளை நினை ....
குறைகளை நிறைகளாக மாற்று ....

வயதை மீறும் காம சிந்தனை
வரம்பு மீறும் அற்ப ஆசையை
அறிவாள் உணர்ந்து அதனை அடக்கி
ஒழுக்கம் பேணி உயிர் வாழ் ............

மனதை மயக்கும் மது பழக்கம்
உடல் கெடுக்கும் உணர்வை இழக்கும்
ஒழுக்கம் கெடுக்கும் மதியை குழப்பும்
நிலமையை உணர்ந்து நீயும்தேர் ............

புகையிலை பழக்கமும்
புகைக்கும் பழக்கமும்
ஒழுக்கும் குறைக்கும் பின்பு உயிரை குடிக்கும்
விழித்துக்கொண்டு வாழமுயலு.........

எப்படியோ பிறந்தோம் எப்படியோ வாழ்ந்தோம்
என்பது இல்லை மானிட வாழ்வு
தனிநபர் ஒழுக்கம் தலையாய கொண்டு
தரணியில் வாழ்வோம் ஒழுக்கம் போற்றுவோம்!

>> ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ சில விஷயங்களில் அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும்.

>> நன்மை தரக்கூடிய விஷயங்களில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.

>> பொறாமை, சந்தேகம் போன்றவற்றை முற் றிலும் ஒழிக்க வேண்டும். நல்லவர்களாக இருக்கவும், நன்மையைச் செய்யவும் முயற் சி செய்ய வேண்டும்.

>> ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளை ச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மனிதனை மேம்படுத்தும் விஷயங்களாகும்.

>> கற்பு நெறியிலிருந்து ஆண்களும், பெண்களும் தவறுவதுதான் ஒரு நாட்டின் அழிவி ற்கு முதல் அறிகுறியாகும். சமுதாயத்தில் கற்புநெறி தவறுதல் என்னும் கேடு நுழைந்து விட்டால் அச்சமு தாயத்திற்கு முடிவுக் காலம் நெருங்கி விட்டதென்று பொருள்.

>> இதை யாராலும் தடுக்க முடியாது. அதனால், தனி மனித ஒழுக் கத்தின் அடிப்படையில் தான் சமுதாயத்தின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது என்பதைச் சொல்லத்தேவையில்லை.

>> ஒரு செயலின் பயனில் கருத்தைச் செலுத்தும் அளவிற்கு, அந்த செயலை ச் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். செல்ல வேண்டி ய பாதையில் கவனம் வைத்தால் அடைய வேண்டிய குறிக்கோளை அடைவதற் கான வெற்றி ரகசியங்கள் ஒவ் வொன்றாக திறக்க ஆரம்பிக்கும்

No comments:

Post a Comment