Monday, March 31, 2014

அக்குபஞ்சர் புள்ளிகள்

அண்டத்தில் இயங்குகின்ற ஆற்றல்கள் பிண்டத்திலும் இயங்கும்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
"வாறான சனங்களுக்கும் ஐந்து பூதம்
மருவியதோர் தேவதைக்கும் ஐந்து பூதம்
தாறான அண்டமெலாம் ஐந்து பூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்து பூதம்
கூறான யோனியெல்லாம் ஐந்து பூதம்
குரும்பனே ஐந்தினால் எல்லாம் ஆச்சு'' - சட்டைமுனி
பிரபஞ்சம் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தும் , ஒன்றை ஒன்றும் கட்டுப்படுத்தியும் முறையாக இயங்கினால் மட்டுமே இந்த பிரபஞ்சம் நிலைக்கும். மாறாக.... ஏதேனும் ஒன்றின் ஆதிக்கம் அதிகமானாலோ, குறைந்தாலோ பிரபஞ்சம் சமநிலையை இழக்கும்... உதாரணமாக பஞ்ச பூதங்களில் நெருப்பு குறைவாக இருந்தால் தண்ணீர் அதனை அனைத்து விடும் , தண்ணீர் குறைவாக இருந்தால் நெருப்பு அதனை ஆவியாக்கி விடும் .., நெருப்பு குறைவாக இருந்தால் காற்று அதை அனைத்து விடும் ...., அதே நெருப்பு அதிகமாக இருந்தால் காற்று அதனை ஊதி ஊதி அதிகமாக்கும் ...
“பூத உடலுக்கு ஐம்பூதமே
நன் மருந்தாம்
பூத நிலை என்னாளும் போற்று”
நமது உடம்பை ஆட்சி செய்வதும் பஞ்ச பூதங்களேயாகும்.
இந்த பஞ்சபூத சக்திகளும் ஒரு குறிப்பிட்ட அளவில் , கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் . பஞ்சபூதங்களின் அளவில் ஒன்று மாறினாலும் உயிருக்கு ஆபத்து. அண்டத்தில் இயங்குகின்ற ஆற்றல்கள் பிண்டத்திலும் இயங்கும் என்பதே பொதுவான விதி.
நம் உடல் துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என அறுசுவைகளால் ஆனது. அறுசுவைகளில் ஒரு சுவை குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ மேற்கூறிய உறுப்புகளுக்கு கிடைக்கும் சக்தியின் அளவு குறைந்தோ அல்லது கூடியோ பெறப்படும்போது தான் உடலில் பல தொல்லைகள் தலை தூக்க ஆரம்பிக்கும்.
அப்படி உடலில் உறுப்புகள் அதிகமான (அ) குறைவான சக்தியுடன் செயல்பட்டால் அக்குபஞ்சர் புள்ளிகள் மூலம் சக்தியை சமன்படுத்தி உள்ளுறுப்புகளையும் சீராக்கலாம். நம் உடலுக்குள் அமைந்து இருக்கும் உறுப்புகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு இருப்பதோடு, உடலின் மேற்பகுதியுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இப்படி உள்ளுறுப்புடன் நேரடித்தொடர்புடைய உடலின் மேற்பகுதியில் அழுத்தம் (pressure) கொடுத்தோ, நுண்துளையிட்டோ (puncture) பாதிக்கப்பட்ட உள்ளுறுப்பை சரிசெய்து இயங்க வைப்பதே அக்குபஞ்சர் மருத்துவம்.
இயற்கை பல அரிய விஷயங்களை அளித்திருந்தாலும் மனிதன் மட்டுமே மிகப்பெரிய சக்தியாக, அனைத்தையும் கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் ஆற்றல் பெற்றவனாக திகழ்கிறான். ஒரு மனிதனின் நிரந்தர மூலதனம் ஆரோக்கியம் மட்டுமே. இயற்கையோடு ஒன்றி வாழும் யாரும் அத்தனை சீக்கிரம் நோய்வாய்ப்படுவதில்லை. ஆனால் இன்றைய சமுதாயம் வாழ்வின் ஆதாரமான ஆரோக்கியத்தை இழந்து தவிக்கிறது. செலவே இல்லாமல் ஒரு மனிதனால் வீட்டிலேயே ஆரோக்கிய வாழ்வு வாழ முடியுமா என்றால் ..... முடியும். ருசிக்காக உண்ணாமல் பசியறிந்து உண்டு வந்தாலே வியாதியை அப்புறமாக தள்ளி வைக்கலாம்.
ஒரு நோயாளி வந்தாலே அவரின் குணாதிசயங்கள், உணவுப்பழக்கங்கள், போன்றவற்றை வைத்தே அக்குபஞ்சர் முறைப்படி அவரின் வியாதியை அறிந்து கொள்ளலாம். சிகிச்சைக்கு வருபவரிடம் எதுவும் கேட்காமல் நோயை கண்டுபிடிப்பவரே, மிக சிறந்த அக்குபஞ்சர் மருத்துவர். நம் உடலில் தோன்றும் நோயின் காரணங்கள் என்னவென்று ஆராய்ந்து அதிலிருந்து விடுபட்ட சீரான உணவு முறையும், பழக்கவழக்கங்களும், ஊசியை உடலின் மேல்பகுதியில் செலுத்தி தடைப்பட்ட இயக்கத்தை சமநிலைப்படுத்தினால் உடல் பூரண குணமாகும்.
அக்குபஞ்சர் மருத்துவமானது மிக சிறப்பான மருந்தில்லா மருத்துவம். உடலில் தோன்றி உள்ள நோயின் மூல காரணத்தை கண்டு சரியான முறையில், முற்றிலும் தீர்வு காண முடியும். ஆனால் இந்த மருத்துவத்தை முழுதும் கற்று அறியாமலும், உண்மையான தத்துவங்களை புரிந்துகொள்ளமலும், உடற்கூறு, அதன் இயக்கங்களை பற்றிய அறியாமையாலும் இன்னும் இதன் வளர்ச்சி முழுமை பெறாமலே இருக்கிறது. அக்குபஞ்சர் சிகிச்சையில் ஒரு ஊசியைக் கொண்டே ஒரு நோயாளியின் உடலில் தோன்றி உள்ள அனைத்து விதமான நோய்களையும் நீக்கி விட முடியும் . உறுப்புகளின் செயல் குறைபாடே நோயாக வெளிப்படுகிறது. எந்த உறுப்பின் இயக்கம் குறைந்துள்ளது என்பதை கண்டறிந்து, அதோடு தொடர்புடைய மற்ற உறுப்புகளின் இயக்கம் எந்த அளவில் உள்ளது என்று கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி, இப்போது மருந்தே உணவாக மாறிவிட்டது. உடலை வலுவாக்கும், நோயை நெருங்க விடாத தற்காப்பையும் கொடுக்கும் சிறுதான்ய வகைகளை மறந்தும் வாழ்வதால் இன்று நம் அனைவரின் நிலையம் கீழிறங்கிக் கொண்டிருகிறது. நம் முன்னோர்கள் உருவாக்கிய பாரம்பரிய மருத்துவ உணவுகள் ஏராளம். அவற்றில் அறுசுவகளும், உயிர் சக்திக்கு தேவையான மொத்த சத்துக்களும் நிறைந்து உள்ளன.
இதனை உணராமல் இரசாயன மருந்துகளால் நோயை விரைவில் குணமாக்கி, இலவச இணைப்பாய் கொஞ்சம் பக்கவியாதிகளையும் கொடுக்க கூடிய மருந்துகளின் பிடியில் இருந்து மக்களை மீட்டு, முறையான உணவுப்பழக்கத்தால் நோய்கள் வராமல் பாதுகாக்கவும், அப்படியான உணவு முறையால் அறுசுவைகளில் ஏதேனும் ஒரு சுவை குறைந்து அதன் மூலம் ஏதேனும் நோய்கள் வந்தாலும் கூட ரசாயன மருந்தின் துணையின்றி அக்குபஞ்சர் மருத்துவத்தின் மூலமே பக்கவிளைவுகள் ஏதும் இல்லாமல் அவற்றை சரிசெய்து மக்களை நோய் நொடியின்றி வாழவைக்கும்

No comments:

Post a Comment