Wednesday, March 12, 2014

குரு "

குரு "
நம்மிடம் நான்கு மனேபாவங்கள் உள்ளன.
 ஒன்று நம்மைப்பற்றி நாம் பிறரிடம் கூறுவது
இரண்டு நம்மைப் பற்றி நாம் வெளியில் மறைப்பது
மூன்று நம்மைப்பற்றி பிறர் அறிந்தது.
நான்காவது நம்மைப் பற்றி நமக்கே தெரியாதது...

இந்த நான்காவது மனோபாவத்தை அறிந்து திறப்பவர் தான் குரு.
குரு என்ற வார்த்தையில் " கு" என்றால் இருளைப் போக்குவது . "ரு" என்றால் ஒளியைத்தருவது. குருவைத்தமிழில் ஆசிரியர் என்போம். ஆசு என்றால் குற்றம் ; இரியர் என்றால் இல்லாதவர்; நீக்குபவர். நம்மிடம் உள்ள ஆணவமே இருள் என்றும் குற்றம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த இருளை நீக்கி ஞானத்தை தருபவன் ஞானாசிரியன். இறைவனையும் அவனை அடையும் வழியையும் ஒருவனுக்கு ஏற்றபடி உணர்த்துபவனே ஞானாசிரியன். - ஞானகுரு -. ஒருவனுக்கு ஆசிரியர் பலர் இருக்கலாம் ஆனால் ஞானாசிரியர் ஒருவன்தான் அவன் இறைவன்தான்.
நம் மனம் பக்குவப்பட்டதை அருகில் உள்ள எவரும் உணரார். நம்முள் உள்ள இறைவன் மட்டுமே உணர்வான் . ஆக அவனே " மனித வடிவில் " வெளிப்பட்டு ஞானத்தை தருவான். அவன் நமக்கு சொல்வதை , உணர்த்துவதை நாம் வேதமாக கொள்ள வேண்டும். நம் மனம் பக்குவப்படுவதை உணரும் இறைவன் ஒரு மனித வடிவில் வெளிப்படுவான் ஆகவே ஞானகுருவைத் தேடி நாம் எங்கும் அலையவேண்டாம் இறைவனே நம்முன் மனித வடிவில் குருவாக வருவான் வேதாந்த கருத்துக்கள் மூலம் நம் ஆணவ இருளை அகற்றி நம்மனம் பக்குவப்படுத்துவார், அப்போது நம்மனம் பக்குவப்படும் நிலையை உணர்வேண்டும்.

No comments:

Post a Comment