Thursday, May 29, 2014

ஐந்து மூர்த்திகள்

ஆகம விதிப்படி அமைந்த பெரிய கோயில்களில் குறைந்த பட்சம் ஐந்து மூர்த்திகள் இருக்கவேண்டும் என்பது நியதி. கருவறையில் லிங்க வடிவில் இருப்பவர் மூலவர். யதா ஸ்தானம் என்னும் உற்ஸவர் மண்டபத்தில் இருப்பவர் சோமாஸ்கந்தர். இவரே விழாக்
காலத்தில் வீதியுலா வருவார்.சிவபார்வதியாக இறைவனும், இறைவியும் இருக்க நடுவில் முருகன் இருக்கும் கோலம் இது. மூன்றாவதாக இருப்பவர் சந்திரசேகரர். இவர் ஆண்டில் சில நாட்களில் மட்டுமே பவனி வருவார். மாதத்தில் இருமுறை பிரதோஷ அபிஷேகம் முடிந்தததும், ரிஷபத்தில் எழுந்தருள்பவர் பிரதோஷ நாயகர். திருவிழா முடிந்ததும், கடைசி நாளில் தீர்த்தவாரிக்காக குளத்திற்கு எழுந்தருளும் மூர்த்திக்கு அஸ்திர தேவர் என்று பெயர்.

No comments:

Post a Comment