Thursday, May 29, 2014

தாயும் தந்தையும் இல்லாமலே வந்த அதிசய அவதாரம்

பாகவதத்தில் ஏழாவது பிரிவான சப்தம ஸ்கந்தத்தில் நரசிம்மரைப் பற்றி, ""அத்ருச்யத அத்யத்புத ரூபம்' என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கு "அற்புதம் பல நிகழ்த்திடும் நரசிம்மாவதாரம்' என்பது பொருள். இதற்கு காரணம் மற்ற அவதாரங்களில் தான் எங்கு பிறக்க வேண்டும்? தனக்கு தாய், தந்தையாகும் தகுதி யாருக்கு இருக்கிறது என்றெல்லாம் பகவான் முன்கூட்டியே திட்டமிட்டு பூலோகத்தில் அவதரித்தார். ஆனால், நரசிம்மராக வந்த போது, பிரகலாதனைக் காக்க அவருக்கு அவகாசம்(நேரம்) சிறிதும் இல்லை. அவசரமாகத் தூணைப் பிளந்து கொண்டு வந்து இரண்யனைக் கொன்றழித்தார். தாயும் தந்தையும் இல்லாமலே வந்த அதிசய அவதாரம் அவர். அதனால், ஆச்சார்யார்கள், விஷ்ணுவின் "அவசர' திருக்கோலமான நரசிம்மரை வழி பட்டால், எந்த துன்பமும் உடனடியாகத் தீரும் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர்

No comments:

Post a Comment