Thursday, May 29, 2014

குழந்தைகளுக்கு கண்ணாடி காண்பிக்க கூடாது என்பது ஏன்?

குழந்தைகளுக்கு கண்ணாடி காண்பிக்க கூடாது என்பது ஏன்?
பிறந்த குழந்தையை போட்டோ எடுத்து பேஸ் புக்கில் போடும் இந்தக் காலத்தில் தங்கள் கேள்வி வேடிக்கை என்று சொல்வார்கள்.
உருவத்தை காட்டும் கண்ணாடியின் பிரதிபலிப்பால் குழந்தைக்கு பாதிப்பு உண்டாகலாம் என்பதால் அப்படி சொல்லி வைத்தார்கள். கிராமங்களில், கண்ணாடி பார்க்கும் குழந்தை, தான் இங்கே இருக்க, ஏதோ ஒரு இடத்தில் தன் உருவம் இருப்பது போல் தெரிகிறதே என்ற அதிர்ச்சியில் பேசும் திறனை இழந்து விடும் என்று சொல்வார்கள். காரணமின்றி பெரியோர் எதையும் சொல்வதில்லை. இந்தக் காலத்தில் மொபைலில் படம் எடுக்கிறார்கள். இதன் கதிர்வீச்சு குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்வது நல்லது

No comments:

Post a Comment