Monday, June 16, 2014

தீய பழக்கங்களும் அதை நாம் விட்டாலும், அது நம்மை விடாது

ஒரு கிராமத்தில் பெருமழை பெய்து வெள்ளக் காடானது. மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஒரு சிலர் நீரில் மிதந்த கட்டையைப் பிடித்துக் கொண்டு தப்ப முயன்றனர். இவர்களில் இரண்டு இளைஞர்களும் அடக்கம். அதில் ஒருவனுக்கு வெள்ளத்தில் மிதந்த மூட்டை கண்ணில் பட்டது.
கையோடு அதையும் இழுத்துச் சென்றால் லாபமாகுமே என்று எண்ணி கைகளால் பிடித்தான். மற்றொருவன், எப்படியோ தப்பி கரையேறினான்.
அவன், தன் நண்பன் எதையோ இழுத்துச் கொண்டிருப்பதைப் பார்த்து ""டேய்! என்னடா பண்றே! இழுக்க முடியாட்டி, மூட்டையை விட்டுட்டு வா'' என்று குரல் கொடுத்தான்.
""ஐயோ! நான் அப்போதே விட்டுட்டேன். ஆனால், அது விட மாட்டேங்குதே'' என்றான் அவன்.
உண்மையில் ஆற்றில் வந்தது மூட்டை அல்ல. அது ஒரு கரடி. இளைஞன் தொட்டதும் கெட்டியாக அவனைப் பற்றிக் கொண்டது.
அவன் விட்டாலும் அது விடுவதாக இல்லை. பரிதாபமாக இளைஞன் தண்ணீருக்குள் மூழ்கினான்.
இந்த கரடி போல் தான் தீய பழக்கங்களும்! அவற்றை விளையாட்டாக நினைத்தால் கூட அது நம்மைத் தொற்றிக் கொண்டு விடும். அதை நாம் விட்டாலும், அது நம்மை விடாது

No comments:

Post a Comment