Monday, June 16, 2014

பெயருக்கான பொருளிலேயே இவர்களின் குணம் வெளிப்படுகிறது.

ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை ஆகியோர் உடன்பிறந்தவர்கள். இதில் விபீஷணனைத் தவிர மூவரும் அதர்ம வழியில் நடந்து ராமனுக்கு தீமை செய்தவர்கள். இவர்களின் பெயருக்கான பொருளிலேயே இவர்களின் குணம் வெளிப்படுகிறது.
ராவணன் என்றால், "அலறச் செய்பவன்'. கொடிய செயல்களால் அனைவரையும் கதற வைத்தவன் இவன். கும்பகர்ணன் என்றால் "குடம்போல காது கொண்டவன்'. சோம்பலின் இருப்பிடமான இவன் ஆறுமாதம் தூங்கவும், ஆறுமாதம் விழிக்கவும் செய்வான். ராவணனுக்காக ராமரை எதிர்த்து போரிட்டான். சூர்ப்பனகை என்பதற்கு, "முறம் போன்ற அகன்ற நகங்களைக் கொண்டவள்' என்பது பொருள். இவள், சீதையின் வடிவில் வந்து ராமனை அடைய விரும்பினாள். விபீஷணன் ஒருவனே நல்லவன். இவனுடைய பெயர் சிவசகஸ்ர நாமமாகிய ஆயிரம் திருநாமங்களில் ஒன்று. அவன் மட்டும் அரக்கனாக பிறந்தும் அநீதிக்கு துணை போகாமல் தர்மத்தை நிலைநாட்ட முடிவெடுத்து ராமனுக்குத் துணை நின்றான்.

No comments:

Post a Comment