Sunday, July 20, 2014

ஒரு கல், ஒரு கண்ணாடி

ஒரு கல், ஒரு கண்ணாடி
************************************
ஓர் இளம் ஜென் துறவி தியானத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது அவருடைய குருநாதர் அந்த வழியாக வந்தார். தியானத்தில் இருக்கும் சீடரைத் தொந்தரவு செய்யாமல் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார்.
சிறிது நேரம் கழித்து சிஷ்யர் கண் விழித்தார். குருவை வணங்கினார்.
‘நீ இவ்வளவு நேரமாக என்ன செய்துகொண்டிருந்தாய்?’ என்று கேட்டார் குருநாதர்.
‘தியானம் செய்துகொண்டிருந்தேன் குருவே!’
‘எதற்காக தியானம் செய்கிறாய்?’
‘நான் புத்தராக விரும்புகிறேன்!’ என்றார் சிஷ்யர்.
‘நல்லது’ என்று எழுந்துகொண்டார் குருநாதர். சிறிது தூரம் நடந்தவர் கீழே இருந்த ஒரு கல்லைக் கையில் எடுத்துக்கொண்டார். அதை வேகமாகத் தேய்க்க ஆரம்பித்தார்.
‘குருவே, என்ன செய்கிறீர்கள்?’
‘நான் இந்தக் கல்லைத் தேய்த்துத் தேய்த்துக் கண்ணாடியாக மாற்றப்போகிறேன்!’
சீடர் சிரித்தார். ‘என்ன குருவே, உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? நீங்கள் எவ்வளவுதான் தேய்த்தாலும் கல் எப்படிக் கண்ணாடியாகும்?’
‘நிறைய தியானம் செய்கிறவன் புத்தராக மாறும்போது, கல் கண்ணாடியாக மாறாதா என்ன?’ என்றார் குருநாதர். அவருடைய சிஷ்யர் யோசிக்க ஆரம்பித்தார்.
Baso, Nangaku என்ற இரு ஜென் துறவிகளின் வாழ்க்கையில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் கதை இது. சில நோக்கங்களை, எதிர்பார்ப்புகளை முன்வைத்துத் தியானத்தில் ஈடுபடக்கூடாது. அந்த விநாடியைச் சுவைத்து வாழ்வதுதான் நம் ஒரே நோக்கமாக இருக்கவேண்டும் என்கிற கருத்தை விவரிக்கிறது.
மாயக் கண்ணனும் கீதையில் இதைத்தானே சொல்கிறார்? ‘கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே

No comments:

Post a Comment