Monday, July 21, 2014

நந்திக்குப் பசு வெண்ணை பூசுவது ஏன்?

வேந்தன்பட்டியில் ஒரு பால்காரர் இருந்தார். இவரது குடும்பத்தில் ஒரே வறுமை. சில மாடுகள் திடீர் என்று செத்து விட்டன. பிள்ளைகள் நோயால் வருந்தினார்கள். இவர், "என் துயரஙக்ள் தீர்ந்து, என் மனம் குளிர்ந்தால், உன் உடல் முபவதும் பசு நெய் பூசி உன் உடலைக் குளிர்விக்கிறேன்'' என்று நந்தீஸ்வரரை வேண்டிக் கொண்டார்.

விரைவில் அவருக்கு நல்ல காலம் பிறந்தது. வேண்டியபடி நந்திக்குப் பசு வெண்ணைய் பூசினார். அதுமுதல் மற்ற பக்தர்களும் நந்திக்கு வெண்ணை பூசி பலன் பெற்றார்கள். இப்படியாக நந்திக்கு வெண்ணை பூசும் வழக்கம் தோன்றியதுடன், நந்தியும் "நந்தீஸ்வரர்'' என்று பெயர் பெற்றார்.

No comments:

Post a Comment