Friday, December 19, 2014

18 படிகளின் தத்துவம்

சிவன் 96 தத்துவங்களை கடந்தவர். முருகப்பெருமாள் 36 தத்துவங்களை கடந்தவர். தர்மசாஸ்தா ஐயப்பனோ 18 தத்துவங்களை கடந்தவர். எனவே தான் சபரிமலை கோவிலில் 18 படிகள் அமைந்துள்ளன. முதல் 5 படிகள் இந்திரியங்கள் ஐந்தையும் குறிக்கும்.

அடுத்த 8 படிகள் அஷ்டமாசித்திகளை குறிக்கும், 14,15,16-வது படிகள் 3 குணங்களையும் குறிக்கும்.17-வது படி ஞானத்தையும்,18-வது படி அஞ்ஞானத்தையும் குறிக்கிறது. புலன் ஐந்து,பொறி ஐந்து, பிராணன் ஐந்து, மனம் ஒன்று, புத்தி ஒன்று, ஆலங்காரம் ஒன்று ஆக மொத்தம் பதினெட்டு.

இவைகளை கடந்து கடவுளை காண வேண்டும் என்ற கருத்தின் படியே 18 படிகளும் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment