Friday, December 19, 2014

குறுகிய நாட்களில் சபரிமலைக்கு பயணம் சென்று வருவது எப்படி?

சபரிமலை யாத்திரை என்பது பொதுவாக 1 மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருந்து 48 மைல் நடந்து வந்து பம்பையில் சக்தி பூஜை செய்து இருமுடியுடன் 18 படி ஏறி நெய் அபிஷேகம் செய்து ஐயப்பனை வழிபடுவதுதான் நடைமுறை.

தீவிர ஐயப்ப பக்தர்களும், கன்னிசாமிகள் சிலரும் இதைத்தான் செய்து வருகிறார்கள். ஆனால், இந்த அவசர நாகரீக உலகத்தில் பெரும்பாலான பக்தர்களுக்கு மேலே சொன்ன நடைமுறை கஷ்டமாக உள்ளது. வியாபாரிகள், வக்கீல்கள், டாக்டர்கள் விடுமுறை கிடைக்காத ஆபீஸ் அலுவலர்கள் போன்றவர்கள் ஒருவாரம் விரதமிருந்து ஓரிரு நாளில் சபரிமலை வந்து செல்லவே விரும்புகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் இரவுப் பயணம் செய்து பம்பை வந்து அதிகாலை நீலிமலை ஏறி நெய் அபிஷேகம் செய்து விட்டு மதியமே திரும்பி மாலை ஊருக்குத் திரும்புகிறார்கள். எப்படியாவது சபரிமலை ஐயப்பனை நேரில் தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இத்தகைய ஓரிரு நாள் பயணம் ஆத்ம திருப்தி அளிக்கிறது

No comments:

Post a Comment