Sunday, February 15, 2015

ஸ்ரீ சக்ரா நாயகி -

ஸ்ரீ சக்ரா நாயகி -
ஜகன் மாதவான அம்பாளை உபாசீத்தவர் பன்னிரெண்டு பேர். அவர்களின் உபசனா பேதங்களினால் ஸ்ரீ வித்யை 12 வகையாயிற்று. ஸ்ரீ. வித்யா உபாசகர்களில் அகஸ்தியரும் ஒருவர். ஸ்ரீ. ஹாயகிரிவரால் அம்ம்பாள் உபாசனையை அகஸ்தியர் உபதேசமாக பெற்றார். அவருடய வழியிலேயே அம்ம்பாள் எப்போதும் பூஜிக்க படுகிறாள். அழகே வடிவான சர்வ சக்தி படைத்த அன்னை சுதாசாகற மத்தியில், கதம்ப வனத்தில் சிந்தாமணி கிரஹத்தில் வசிப்பவள் ஸ்ரீ. சக்ரத்தின் நாயகி. நான்கு கரங்களுடன் திகழ்பவள். அனுகிரஹம் என்னும் பாசத்தை கையில் ஏந்தீயவள். கரும்பு வில்லையும் பற்றியுள்ளாள். இந்த கரும்பு வில்லின் பஞ்ச பாணங்கள் : கமலம், கைரவம், கல்ஹாரம், இந்திவரம், ஸஹகாரம். இவை பஞ்ச குணங்களையும் குறிக்கின்றன. சக்தியே, லக்ஷ்மியாகவும் சரஸ்வதியாகவும் மூன்று ரூபத்தில் நமக்கு அருள்கிறாள். லலிதா சஹாஸ்ரநாமம் ஜபம் படிப்பதால் இவர்கள் அனைவரூடய அருளை பெறலாம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. முடிந்தால் தினமும் அல்லது செவ்வாய், வெள்ளி கிழமைகளில் 'லலிதா சஹஸ்ரநாமத்தை' படித்து பயன் பெறலாம்.

No comments:

Post a Comment