Tuesday, February 10, 2015

கொடிச்சீலை:

கொடிச்சீலை:
-------------------
>> கொடிமரத்தில் ஏற்றப்பெறும் கொடிச்சீலையின் நீளம் தம்பத்தின் உயரத்தைப்போல் இரு மடங்கு உடையயதாக இருக்க வேண்டும்.
>> அதன் ஒன்பதில் ஒருபாகமாக எடுத்த சதுரத்தில் மேலந்தத்திலிருந்து அந்த ஆலய மூர்த்தியின் வாகனம் படத்தின் மையத்தில் வரையப்பெறும்.
>> அதன் முதுகில், அவ்வாலய மூர்த்தியின் அஸ்திரதேவர் வரையப்பெறும். இது ஆன்மா மலபரிகாரம் அடைந்ததைக் குறிக்கும்.
>> இவற்றைவிட சூரிய சந்திரர்களும், அஷ்ட மங்கலப் பொருள்களும் வரையப் பெற்றிருக்கும்.
சித்தாந்தக் கருத்துக்கள்:
---------------------------------
>> இப்படம் தெளிவாகத் தெரியும் வண்ணம் மேற்புறத்தில் குறுக்குச் சட்டம் ஒன்று கட்டப்பெற்று அதன்மேல் கொடியேற்ற உதவும் கயிறு கட்டப்பெறுவதற்கமைவாக மேற்பாகம் முடிச்சாக அ,ஐக்கப் பெறும்.
>> அம்முடிச்சு பிரம்மக் கிரந்தி எனப்பெறும். இதில் இணைக்கப்பெற்று கொடியை ஏற்றப் பயன்பெறுகின்ற மஞ்சட்கயிறு ஆன்மாவை இறைவனிடம் சேர்ப்பிக்கும் திருவருட்சக்தியாகும்.
>> கொடித்தம்பம் பதியாகிய இறைவனையும், கொடிச்சீலையிலுள்ள நந்தி (அல்லது அவ்வாலய மூர்த்தின் வாகனம்) பக்குவமடைந்த ஜீவான்மாவாகிய பசுவையும் குறிக்கும்.
>> இடையேகாணப்பெறும் தற்பைக்க்யிறு பாசமாகிய மும்மலங்களாகும். பக்குவான்மாவை வழிநடத்தும் திரோதான சக்தியை க் கொடிச்சீலை குறிக்கின்றது.
>> ஆன்மாவைப் பதிந்து நிற்கின்ற பாசமலங்கள்; ஆன்மா பக்குவமடைந்து திருவருட்டுணையால் இறைவனைச் சேரும்போது வலிகுன்றி வாளாவிருக்கும். (இல்லாமல் போவிடுவதில்லை) இடையே அங்கிருக்கும் தர்ப்பைக் கயிறு காட்டுகின்றது.
>> கொடியேற்றியதும், திருவருட் சக்தியாகிய நூற்கயிறும்,பாசமாகிய தர்ப்பைக் கயிறும், திரோதான சக்தியாகிய கொடிச்சீலையும் அதில் வரையப்பெற்றுள்ள ஆன்மாவாகிய நந்தியும் தம்பத்தோடு சுற்றப்பெற்று அதனோடு ஐக்கியமாகி மறைய, இறைவனை விட வேறாக ஒரு பொருள் இல்லை என்ற உண்மை தெளிவாகின்றது.

No comments:

Post a Comment