Tuesday, March 31, 2015

வாழை மரத்தின் ரகசிய மாந்திரீக முறைகள்

வாழை மரத்தின் ரகசிய மாந்திரீக முறைகள்
(
1. தரித்திர பிணிகள் விலக
அமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும்.
2. திருமணம் தடை விலக
திருமணம் தடைப்பட்ட பெண்கள் வாழைப்பூ இதழில் மூன்று குண்டு மஞ்சளை வைத்து முடித்து, வாழை நாரினால் கட்டி முடியிட்டு, வாழை மரத்தின் இலை, குலை தள்ளும் இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். இது போன்று மூன்று சஷ்டி திதி அன்று செய்துவர, விரைவில் திருமணம் நடைபெறும், அதைப்போல் ஆண்கள், குண்டுமஞ்சளுக்கு பதில் கொட்டைப்பாக்கு வைத்து கட்ட வேண்டும்.
3. சர்வ தரித்திரங்கள் விலக
ஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்ம முகுர்த்த வேலையில் வாழை மரத்தின் வேர் பகுதியில் இருந்து (1/2 ) அறை அடிக்கு மேலே ஒரு மூங்கில் குச்சியில் குத்தினால் வாழை நீர் ( கங்கை நீர்) வழியும் அந்த நீரை மண் பாத்திரத்தில் பிடித்து கடல் நீருடன் கலந்து வீடுகளில், தொழில்கூடங்களில், நம்மீதும் தெளித்துக் கொண்டு வந்தால் சர்வ தரித்திரங்களும் விலகும். ( வாழை மரத்தை வெட்டினலோ அல்லது குத்தினாலோ அதிலிருந்து வடியும் நீர் கங்கை நதி நீருக்கு சமமானது, கைலாய கங்கை நீரில் மிதந்து கொண்டு தான் விஸ்வகர்மாவை நோக்கி தவம் புரிந்ததே இதற்கு காரணம்.)
4. குழந்தை பாக்கியம் பெற
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கடவுளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்து, வாழைமரக்கன்றை தானமாகக் கொடுக்கலாம். பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப்பழங்களை தானமாகக் கொடுக்கலாம். ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள ஏதாவது தெய்வத்திற்கு படைத்து, பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதயை நகம் படாமல் சுரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் கலந்து கணவன், மனைவி இருவரும் பருகிய பின் ஒன்று சேர்ந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
5. பித்ரு தோஷம் விலக

100 கிராம் கருப்பு எள்ளை வாங்கி அதை வெல்லத்துடன் கலந்து ஐந்து பாகங்களாக பிரிந்து, ஐந்து வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஐந்து வாழைக்காய் எடுத்து, ஒவ்வொரு வாழைக்காயில் உள்ள காம்பில் ஒவ்வொரு எள் மூட்டையை மஞ்சள் நூலினால் கட்டி பித்ருக்களை வேண்டி அமாவாசை திதியில் கடலில் விட்டால் பித்ரு தோஷம் விலகும்.
6. செல்லவம் மேலும் பெருக
சம்பள பணத்தையோ அல்லது சுப காரியய்த்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும் பணத்தையோ, வாழைப்பூ இதழில் வைத்து, வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து பின் பயன்படுத்தினால் வீண் விரையம் மற்றும் செலவுகள் வராது.
அதேபோல் புதிய தங்க நகை அல்லது வெள்ளி பொருட்களை வாங்கி வந்து, அதையும் வாழைப்பூ இதழில் வைத்து பூஜித்து எடுத்து கொண்டால் செல்லவம் மேலும் பெருகும்.
7. அன்ன தரித்திரம் விலக
அட்சய சக்தி மிகுந்த இந்த வாழை மரத்திற்கு மற்றொரு மகத்தான பெருமையும் உண்டு. அட்சயதிதி அன்று புதிய தங்கம் வாங்க செய்து, மஞ்சள் கலர் துணியில் முடிந்து, கிழக்கு முகமாக நின்று, ஆபரண மூட்டையை வாழை மரத்தில் கட்டி தீபம் காட்டி, சாம்பிராணி புகையிட்டு, பூஜை முடிந்த பின்பு எடுத்து அணிந்து கொண்டால் ஆபரணங்கள் பெருகும். அதைப்போல் நெல்மணிக்களை கட்டி பூஜித்து அரிசி மூட்டையில் போட்டு வைத்தால் அன்ன தரித்திரம் விலகும்.
8. வியாபார விருத்தி பெருக
இதைப்போல் பெளர்ணமி நிலவு ஒளியில், சுக்கிர ஓரை வேளையில், வடக்கு பக்கமாக உள்ள வாழை மரத்தின் வேரை நகமும். இரும்பு கத்தியும் படாமல் எடுத்து கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து, சிகப்பு நூல் கட்டி கருப்பு வெற்றிலையில் மடித்து, தொழில் நடக்கும் இடத்தில், பணம் வைக்கும் பெட்டியில் வைத்து சாம்பிராணி புகையிட்டுவந்தால் வியாபார விருத்தி பெருகும்.
9. வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெற
வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து முகுர்த்த நாளில் சுபவேலையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம் புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும். பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி நாற்பத்தியைந்து (45) நாட்கள் வாழைமரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும், பின்பு ஒரு முகுர்த்த நாளில் சுப வேலையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால். நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும், குடும்பம் சுபிக்ஷ்ம் பெருகும், பணம் வீன் விரையம் ஆகாது, தெய்வகுறைகள் விலகும், குள விருத்தி அடையும்.
10. பிள்ளைவரம் பெற
வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து அந்த மரம் வாழை குலை தள்ளுவதற்க்காக முளைவிடும் வேலையில் ஒரு சுபனாளில் சுபவேலையில் வாழை மரத்தின் வடக்கு திசை உள்ள வேர்பகுதியில் சிறு குழி எடுத்து மூன்று அங்குளம் உள்ள ஒரு வலம்புரி சங்கை வடக்கு திசை நோக்கினார் போல் குழியினுல் வைத்து பசும்பல் ஊற்றி குழியை மூடிவிட வேண்டும்.

நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம்.
பஞ்ச பூதங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலில் தோன்றும் அறிகுறிகளை இந்த படத்தில் பார்க்கலாம்.
உணவு [ நிலம் ] [ இரைப்பை , மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]
பசி இல்லாதபோது சாப்பிடக்கூடாது. [ வாயு தொந்தரவு, அல்சர், அஜீரணம், வயிற்று வலி, சுகர் / நீரிழிவு, இரத்த அழுத்தம், எலும்புத் தேய்மானம் போன்ற தொந்தரவுகளுக்கு அடிப்படை காரணமே பசி இல்லாதபோது சாப்பிடுவது தான் ] அப்படி பசி இல்லாதபோது சாப்பிட நேர்ந்தால் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் இனிப்பு சாப்பிட வேண்டும்
நாம் பால், டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்தாலே பசி ஒழுங்காக எடுக்கும்.
சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும்.
உணவில் ஆறு சுவைகள் [ இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம் ] இருக்குபடி பார்த்துகொள்ளுங்கள். ஆறு சுவையையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.
நாக்கால் சுவையை நன்கு ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும்.
சாப்பிடும்பொழுது கண்களை மூடி, உதட்டை மூடி, உதட்டை பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்று நம் ஜீரணத்திற்கு எதிரி. முடிந்தவரை சாப்பிடுவதற்கு அரைமணிநேரம் முன்பும் பின்பும் நீர் அருந்துவதை தவிருங்கள். தேவை ஏற்பட்டால் சிறிதளவு குடித்துக் கொள்ளலாம். ஏனென்றால் நீர் நம் ஜீரணத்திற்கு எதிரி .
குளித்த பின் 45 நிமிடத்திற்குப் பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு 2 ½ மணி நேரத்திற்குக் குளிக்க கூடாது. அப்படி குளித்தால் நம் உடம்பானது உணவை ஜீரணிபதர்க்கு பதிலாக உடலை வெப்பத்தை சமநிலை படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கும்.
பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ சாப்பிடக்கூடாது [ கவனம் சிதறாமல் இருப்பதற்காக ]கால்களைத் தொங்க வைத்து அமர்ந்து சாப்பிடக்கூடாது. முதல் ஏப்பம் வந்த உடனோ அல்லது உணவின் சுவை குறைந்து விட்டாலோ அல்லது போதும் என்ற உணர்வு வந்துவிட்டாலோ சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். அது தான் நாம் சாப்பிட வேண்டிய அளவு.
நீர் [நீர்] [ சிறுநீரகம், சிறுநீர்ப்பை, விதைப்பை (ஆண்களுக்கு), கர்பப்பை (பெண்களுக்கு) ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] தண்ணீரைக் கொதிக்க வைத்தோ அல்லது நீரை வடிகட்டியோ குடிபதால் அதில் உள்ள தாது உப்புக்களை இழக்க நேரிடும். அந்த தாது உப்புக்களுகாக தான் நாம் நீரையே அருந்துகிறோம். அதற்க்கு பதிலாக நீரை மண்பானையில் 2 மணிநேரம் வைத்தபின் பயன்படுத்தலாம். பின்னர் நீரை செம்பு குடத்தில் வைத்து அருந்தலாம்.
தாகம் எடுத்தால் உடனே தேவையான அளவு மெதுவாக வாய்வைத்து சப்பிக் குடிக்க வேண்டும்.
மினரல் வாட்டர் / Package Drinking Water / Cane Water பயன்படுத்தக் கூடாது. அப்படி குடிக்க நேர்ந்தால் உணவில் அதிக நீர் சத்து உள்ள உணவுகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பழச்சாறு [ பிரெஷ் ஜூஸ் ] போன்றவற்றை பருகலாம்.
தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. சிறுநீர் கழித்தால் உடனே தேவையான அளவு நீர் அருந்த வேண்டும். நீரை அன்னாந்து குடிக்கக் கூடாது. அப்படி குடித்தால் தேவைக்கு அதிகமாகவே குடித்துவிடுவோம். நீரை நிதானமாக வாய்வைத்து சப்பி குடிக்க வேண்டும்.
நாம் குடிக்கும் எந்த ஒரு நீரையும் / பானத்தையும் [ பிரெஷ் ஜூஸ், மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு,... ] அதில் உள்ள சுவையை நாக்கு உறிந்த பின் சுவை இல்லாத நீரை தான் விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும்.
பால் அருந்துவதை தவிர்த்தாலே நம் உணவு எளிதில் ஜீரணமாகும். நன்றாக பாசி எடுக்கும். அப்படி பால் அருந்த நேர்ந்தால் பசி எடுக்கும் வரை பொறுமையாக இருந்து உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாம் டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் . இல்லையென்றால் நம் எலும்புகள் எளிதில் வலுவிழந்துவிடும், சிறுநீரக செயலிழப்பு ஏற்படும், சிறுநீரக கற்கள் ஏற்படும்.
ஓய்வு [தூக்கம்] [ஆகாயம்] [ கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] முடிந்தவரை இரவு 10 மணிக்கு தூங்க முயற்ச்சிக்கவும். இரவு 11 மணி - 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த நேரத்தில் தான் நம் கல்லீரலும் பிதப்பையும் உடம்பிலுள்ள இரசாயண கழிவுகளை முழுவீச்சில் வெளியேற்றும்.
வடக்கே தலை வைத்துப் படுப்பதை தவிர்க்கவும். தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும். புகைபழக்கம் மற்றும் டீ, காபி, செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை அனைத்துமே நம் தூக்கத்திற்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும்.
இரவு 10 மணி நேரத்திற்குள் படுத்துவிட்டு விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.
படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.
குளிர் காலங்களில் வெறும் தரையில் படுக்கக் கூடாது. உடல் அதிகம் குளிர்ச்சியடைந்தாலும் தூக்கம் கெட்டுவிடும். உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணிநேரம் தூங்க வேண்டும். மூளைக்கு மட்டுமே வேலை கொடுப்பவர்கள் குறைந்தது 6 மணிநேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
இரவில் பல் விலக்கிப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். முடிந்தவரை வெறும் கையால் உப்பு கலந்த நீரில் விளக்கவும். ஈறுகளுக்கு மசாஜ் செய்தல் பற்களுக்கு வலிமை தரும். தாடைக்குக் கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். தலையில் உச்சிக்கும் சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
நாம் தூங்கும் இடங்களில் இயற்கையான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். இல்லையென்றால் இரவு முழுக்க கனவுகளால் அவதிப்படும் சுழல் உருவாகும். இரவில் எளிதில் ஜீரணமாககூடிய உணவை உண்டால் தூக்கமின்மை தொந்தரவு ஏற்படாது. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.
இரவு தூக்கம் வரவில்லையென்றால் அல்லது தூக்கம் கலைந்துவிட்டாலும் இரண்டு கைகளிலும் கையின் கட்டை விரல் (Thumb Finger) நுனியையும் நடு விரல் (Middle Finger) நுனியையும் தொடுமாறு வைத்துக்கொண்டு மற்ற அனைத்து விரல்களையும் நேராக வைத்துக்கொண்டு இருந்தால் (படத்தில் இருப்பதை போல) எளிதில் தூக்கம் வரும். இதற்காக மருத்துவரை தேடி ஓட வேண்டாம்.
காற்று [வாயு] [ நுரையீரல், பெருங்குடல் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] புகைபழக்கம்,கொசுவை விரட்டிகள் நம் சுவாசபாதை மற்றும் நுரையீரலை பலகீனப்படுத்தும். இவையே நமக்கு துக்க உணர்வையும் விரக்தியான மனநியையும் கொடுக்கும். மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும். கொசுவர்த்தி சுருள் மற்றும் கொசுவை விரட்டுவதற்காக நாம் உபயோகபடுத்தும் அனைத்து இரசாயணங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தக் கூடாது [ நச்சு கலந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க ] வீடு, அலுவலகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும் எப்பொழுதும் காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும்.
தூங்கும் பொழுது A/C ஐ பயன்படுத்தினாலும் ஜன்னல்களை அடைத்து வைக்கக் கூடாது [ நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க ]
தலையை போர்வையால் முழுமையாக போர்த்தி கொண்டு தூங்க கூடாது [ நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க ] மரங்கள் தான் காற்றை உருவாக்குகிறது மின்விசிறியோ / குளிர்சாதனமோ அல்ல என்பதை புரிந்துகொண்டு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு தூங்குங்கள். அப்படி கொசுத்தொல்லை இருக்கிறதென்றால் ஜன்னலில் கொசுவலையை வாங்கி மாடிக்கொள்ளுங்கள்.
சளி என்பது வியாதி கிடையாது. நம் நுரையீரலில் உள்ள கழிவுகளை நம் உடலானது தும்மல், மூக்கின் மூலம் நீராக, சளி முதலியவற்றின் மூலம் தான் வெளியற்றும். அதனால் இவற்றை அடக்க ஆங்கில மருந்தேதும் உண்ண கூடாது. அப்படி மருந்து உண்டால் முச்சுத்திணறல், மூச்சிறைப்பு, ஆஸ்துமா, வறட்டு இருமல், சைனஸ், மலச்சிக்கல், நிமோனியா... போன்ற பல வியாதிகள் உண்டாகும். சளியை வெளியேற்ற வேறு எந்த மருத்துவத்தை வேண்டுமானால் பயன்படுத்தலாம். எந்த உணவையும் உண்டால் சளி வரும் என்று ஒதுக்காதீர்கள். முடிந்தவரை எந்த பழங்கள் உண்டால் சளி வருகிறதோ அதை உண்ணவும். ஏனென்றால் சளிப்படலம் தான் நமக்கு குடற்புண் (Ulcer) வராமல் நம்மை பாதுகாக்கிறது. மற்றும் மலச்சிக்கல் இல்லாமல் மலம் எளிதில் வெளியேற உதவுகிறது. மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால் நமக்கு குடலிறக்கம், குடலில் புற்றுநோய் போன்ற தொந்தரவுகள் ஏற்படாது.
உழைப்பு [நெருப்பு] [ இருதயம், சிறுகுடல், இதயமேலுரை, மூவெப்பமண்டலம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். உழைப்புக்கேற்ற உணவு அல்லது உணவுக்கேற்ப உழைப்பு வேண்டும்.
தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும். இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிண நீர் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிணநீர் ஓட்டம் நன்றாக இருக்காது. இவை தான் நம் உடம்பில் தோன்றும் பல நோய்களுக்கு காரணம். தினமும் ஏதாவது உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஜாக்கிங் அல்லது ஏதாவது விளையாட்டில் ஈடுபடுவது நல்லது.
காய்ச்சல் என்பது நோய் அல்ல. நம் உடலில் தேங்கும் கழிவுகள் மலம், சிறுநீர், வியர்வை, சளி, வாந்தி போன்றவற்றின் மூலம் வெளியேற்ற இயலவில்லையெனில் நம் உடலே உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தி அழித்துவிடும். மேலும் நம் உடலில் கிருமிகளும் காய்ச்சலின்போது அளிக்கப்படும். காய்ச்சலை தடுக்க மருந்து உண்ணாமல் இருந்தால் ஒருமுறை நம் உடலில் வந்த கிருமிகள் நம் வாழ்வில் எப்போது வந்தாலும் நம் உடலே அதை அழிக்கும் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும்.
எனவே காய்ச்சல் வந்தால் ஓய்வு எடுத்து பசித்தால் மட்டுமே உணவு உண்டு தாகம் எடுத்தால் மட்டுமே நீர் அருந்தி நம் உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் கழிவுகளை வெளியேற்றவும் கிருமிகளை அளிக்கவும் உபயோகப்படுத்த நாம் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் தொலைகாட்சியில் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்படும் எந்த வியாதிக்கும் பயப்பட அவசியம் இல்லை.
நன்றி :-- முகநூல்

மொட்டை போடுவது எதற்காக?

ஆசிரமத்திலும், வெளியில் பல இடங்களிலும் சந்நியாசிகள் தலைமுடியை மழித்து மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். ஒரு முடியைக் கூட வெட்டிக்கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள். இவ்விரண்டு வழக்கத்திற்குமான வேறுபாடு என்ன? சத்குரு: நீங்கள் ஒரு மரத்தின் பகுதியிலுள்ள கிளைகளிலுள்ள இலைகளைப் பறித்துவிட்டால், பத்து பதினைந்து நாட்களுக்குள்ளாக அவ்விடத்தில் முன்னைவிட அதிகமான இலைகள் தளிர்விட்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இலைகள் பறிக்கப்பட்ட பகுதியில் மரமானது தன் சக்தியை திருப்பிவிடுவதே இதற்கு காரணம். இதுபோலத்தான் உங்கள் உடம்பிலும் நிகழ்கிறது. சில குறிப்பிட்ட வகையிலான ஆன்மசாதனை செய்து கொண்டிருப்பவர்கள் இந்த வகையான சக்திப் பிரயோகம் நிகழ வேண்டும் என விரும்புகிறார்கள். நினைக்கும்போதெல்லாம் அவர்கள் தலைமுடியை மழித்துக் கொள்வதில்லை. எந்த நாளில் மொட்டை? அமாவாசைக்கு முந்திய நாளான சிவராத்திரியன்று இப்படிச் செய்கிறார்கள். ஏனெனில் அமாவாசையன்றும் அதற்கு மறுநாளும் மனித உடலின் சக்திநிலை மேல்நோக்கி எழும்புகிறது. அதை நாம் மேலும் தீவிரமாக்க விழைகின்றோம். எனவே தலைமுடியை இவ்வாறு மழித்துக் கொள்ளுவதானது, ‘சாதனா’ முறையோடு சம்பந்தப்பட்டதாகும். அப்படி இல்லாதபோது முடியை மழித்துக் கொள்வதால் பெரிய வேறுபாடு தெரியாது. இப்படி மழித்துக் கொள்ளும் பழக்கமில்லாதவர்கள் ஏதேனும் ஒரு சமயம் (குறிப்பாக பெண்கள்) அப்படிச் செய்தால் அவர்கள் தங்கள் சுயநிலையிலிருந்து சற்று தடுமாறி (பிறழ்ந்து) விடுவதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். சக்தியானது குறிப்பிட்ட அளவுக்கு மேலாக உடம்பிலிருந்து உறிஞ்சப்படும் காரணத்தால் பல யோகிகள் 35 வயது வாக்கில் இறந்துவிடுகின்றனர். ஏனெனில் தலைமுடியை மழித்துக் கொள்வதால் ஏற்படும் சக்தி ஓட்டம் ஒரு குறிப்பிட்ட இடம் நோக்கிப் பாய்வதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாதபடி ஆகிவிடுகிறது. ஏற்கெனவே மனநிலையில் பாதிப்பு உள்ளவர்களுக்கு இதனால் மேலும் பாதிப்பு அதிகமாகும். ஆனால் இந்நிகழ்வை சரியாக முறைப்படுத்தி அதோடு ஆன்மீகப் பயிற்சியையும் (சாதனா) இணைக்கும்போது அது அவர்களுக்கு நன்மை பயக்கிறது. ஆன்ம சாதகர்கள் பயிற்சி முன்னேற்றத்துக்காக மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட உயர்வான இலக்கை அடையும் நோக்குடன் இயற்கை தரும் ஒவ்வொரு வாய்ப்பையும் சிறு உதவியைக்கூட உபயோகித்துக்கொள்ள விரும்புகின்றனர். தலைமுடியை மழித்துக்கொள்ளும் வழக்கமும் அதன் ஒரு பகுதியே. சிலர் முடி வளர்ப்பது ஏன்? ஒருவரின் சக்தி சிரசை மீறிக் கொண்டு சென்று தேகத்திற்கு (வெளியே) மேலே உள்ள இரண்டு சக்கரங்களை செயல்படத் தூண்டும் நிலையை அடைந்துவிட்ட சாதகர்கள் தலைமுடியை மழித்துக் கொள்வதில்லை. மாறாக முடியை நன்கு வளர்த்து மேல்நோக்கி முடிச்சுப் போட்டுக் கொள்கிறார்கள். இது சக்தி நிலையை காப்புறுதி செய்கிறது. போதுமான அளவு சிரசில் முடியில்லை எனில் துணியை (தலைப்பாகை) பயன்படுத்துகிறார்கள். மேலே குறிப்பிட்டவாறு தேகத்திற்கு மேலுள்ள இரண்டு சக்கரங்களும் உயிர்துடிப்புடன் விளங்குகின்றவர்களுக்கு ஆன்மீக வழியில் மகத்தான வாய்ப்பும் அதேசமயம் ஸ்தூல உடல் பலகீனமான நிலையிலும் இருக்கும். ஆகவே சக்தியானது குறிப்பிட்ட அளவுக்கு மேலாக உடம்பிலிருந்து உறிஞ்சப்படும் காரணத்தால் பல யோகிகள் 35 வயது வாக்கில் இறந்துவிடுகின்றனர். சக்திநிலை மேம்படும்போது உடல் உறுதி இல்லாமை மற்றும் உடலின் இயக்கமுறை சூட்சுமம் அறியாமையினாலும் ஆகும். உடலை திடமாக்கும் ஹதயோகா! மனித உடம்பென்பது மிகவும் நவீனப்படுத்தப்பட்ட எந்திரம் (கருவி) ஆகும். இதை உருவாக்கியவன், நவீன மயமாகவும், அதேசமயம் சூட்சுமங்கள் நிறைந்ததாகவும் உருவாக்கியுள்ளான். எனவே நிறைய சாதனைகள் நிகழ்த்துகின்ற வாய்ப்புகள் இதன் மூலம் உள்ளது. திடமான உடம்பிருந்தால் அதன்மூலம் ஆனால் அதன் வரம்புகளைத் தாண்டிய நிகழ்வுகளுக்கு செல்லமுடியும். அத்தகைய ஒரு நிகழ்வு உடலை பலகீனமாக்கவோ அல்லது துறந்துவிட்டே போவதாகவோ இருக்கும். எனவேதான் உடம்பைத் திடமாக்கும் ‘ஹதயோகா’ பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது. இப்பயிற்சி தீவிர ஆன்மீக முயற்சிக்கு ஏற்றவாறு உடலை ஆற்றல் மிக்கதாக மாற்றிவிடுகிறது. 

Monday, March 30, 2015

தெய்வம் !

தெய்வம் !
தெய்வம் என்ற வார்த்தை, திவ்யம் என்ற சொல்லில் இருந்து பிறந்தது . ' ஒளிமயமானது ' என்று அர்த்தம் . இதனால்தான் தெய்வ தரிசனத்தை திவ்யதரிசனம் என்கிறோம் ; தெய்வத் திருத்தலங்களை திவ்யஷேத்திரம் என்கிறோம் .
' தெய்வீகமானது ' என்பதை ஆங்கிலத்தில் ' டிவைன் ' ( Divine ) என்கிறார்கள் . இந்த வார்த்தை, நமது சமஸ்கிருத மொழியின் ' திவ்ய ' என்ற சொல்லில் இருந்துதான் பிறந்திருக்கிறது . எல்லா மதங்களிலும், ஒளிக்கு பிரதான இடம் அளிக்கப்பட்டுள்ளது . எல்லா மதங்களும், சொர்க்கத்தை ஒளிமயமான இடமாகவும் சித்தரிக்கின்றன .
ஒவ்வொரு மதத்திலும், ' இருளில் இருக்கும் எங்களை ஒளிமயமாக மாற்றுவாயாக ! ' என்ற பிரார்த்த்னை இடம்பெற்றிருக்கிறது . இதன் உட்பொருள் : ' மனிதப்பிறவி எடுத்தவர்கள், தெய்வமாக முன்னேற வேண்டும் ! '.
ஒளி, பஞ்சபூதத்தில் ஒன்றான நெருப்பில் இருந்து பிறக்கிறது . நெருப்பின் விசேஷ தன்மை : இது மட்டுமே, மேல் நோக்கி எழும்பும் ! இதனால்தான் ஒவ்வொரு மதத்திலும் ஒளியேற்றி வழிபடும் பாரம்பரியம் இருந்து வருகிறது . ' மனிதத்தன்மை என்ற கீழ்நிலையில் இருந்து மேல் நோக்கி முன்னேறுங்கள் ' என்பதே ஒளிவழிபாட்டின் உட்பொருள்.

பதினெட்டு என்று கேட்டவுடன் அனைவரின் கவனமும் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

பதினெட்டு ...
பதினெட்டு என்று கேட்டவுடன் அனைவரின் கவனமும் ஒரு நிமிடம் நின்று செல்லும். 
அதில் அப்படி என்ன விசேஷம் உள்ளது? 
பெரியவர்களின் விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
பதினெட்டில் இருக்கும் ஒன்றும் எட்டும் இரு நிலைகளை குறிக்கும். ஒன்று சூரியனுக்கும் எட்டு சனிக்கும் உடைய எண்கள். மனித வாழ்க்கையில் அனைத்தையும் அருள்கிற சூர்யனும் வாழ்கையின் முடிவை தீர்மானம் செய்கிற சனியும் அனைவரையும் கட்டுப்படுத்துக்கிறார்கள். ஒன்றும் எட்டும் கூட்டினால் வருவது ஒன்பது. ஒன்பது மகாசக்திக்கு தொடர்பு உடைய எண். அஷ்டமா சித்திகளையும் அடைகிற சித்தர்கள் அதிலே நிற்காமல் அதற்கு மேலே செல்ல தவம் இருப்பார்கள். அதன் மேல்நிலைக்கு முதல் படி மகாசக்தி நிலை.
குண்டலினி யோகத்திலும், குண்டலினி சகஸ்ராரத்தை அடைந்த பிறகுமேலும் பதினெட்டு வித்யாக்களை கடக்க வேண்டி உள்ளது. இந்த பதினெட்டு மகா வித்யாக்களும் சகாஸ்ராரத்தை சுற்றி இருக்கும் சக்தி பெற்ற ஆதாரங்களாக விளங்குகின்றது. கடைசியில் குண்டலினி சிவத்தோடு கலக்கும் மய்துன யோகத்தில் இது நிலைக்கும். காக புசுண்டரின் பாடல் அதை தெளிவாக்குகிறது. "காணப்ப தலமெல்லாம் அண்ட வுச்சி, கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று".
தமிழ் சித்தர்கள் பதினெட்டு சித்தர்கள் என்றும் மகாசித்தர்கள் என்றும்அழைக்கப்பட காரணம் அவர்கள் தங்கள் குண்டலினி யோகத்தில் பதினெட்டு மகா வித்யாகளை கடந்து வந்தவர்கள் என்பதேஅகும்.
"வாலை" என்ற குண்டலினி சக்தியின் மேனியின் உறுப்புகளாகப் பதினெட்டு எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன என்று சட்டைமுனி சித்தர் கூறுகிறார்.
இதுகாறும் சித்தயோகதிலிருந்தும் சித்தமருதுவதிலும் காட்டபடுகின்ற அகச்சான்றுகளால் பதினெட்டு சித்தர் என்பதில் உள்ள "பதினெட்டு" என்பது சித்தர்களின் எண்ணிகையை குறிக்கவில்லை; அவர்கள் பெற்ற பேறுகளை குறிக்கின்றது.
சித்த மருத்துவத்தில் தேகம் என்பது கீழ்கண்ட பதினெட்டு உறுப்புகளை கொண்டதாகும். ஐந்து மகாபூதங்கள் (வான், வளி, தீ, நீர், மண்), ஐந்து ஞானஇந்திரியங்கள் (செவி, தோல், நாக்கு, கண், காது), ஐந்து புலனுணர்வுகள் கேட்டல், தொடுதல், காணல், சுவைத்தல், முகர்தல்) இவற்றோடு புத்தி, மனம், அகங்காரம் என்று மொத்தம் பதினெட்டு. இவை அனைத்தையும் வென்றவரும் சித்தர் என்று அழைக்கபடுவர்.
அஞ்செழுத்திலே பிறந்து
அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற
பஞ்ச பூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓரெழுத்தை
அறிந்துகூர வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்றுநாதன்
அம்பலத்தில் ஆடுமே!

உலகிலேயே உயர்ந்த நாமம் ராமநாமம்.

உலகிலேயே உயர்ந்த நாமம் ராமநாமம். “ஸ்ரீராமஜெயம்’ என ஒருமுறை சொன்னால் செய்த பாவங்கள் தீர்ந்துவிடும். ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தன. எல்லா வானரங்களும் கற்களை தூக்கி கடலுக்குள் போட்டன. ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின்மீது சரியாக அமர்ந்தது. ஆஞ்சநேயர் அந்தபணியை மேற் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார். அவர் மனதிலும் ஆசை ஏற்பட்டது. நாமும் இந்தவானரங்களுடன் இணைந்து கல்லை தூக்கிப்போட்டால் என்ன என கருதியபடியே, ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார். அந்தக்கல் சரியாக மற்ற கற்களின்மீது அமரவில்லை. அலை அடித்து சென்றுவிட்டது. ராமபிரானுக்கு வருத்தம்.
“இந்த குரங்குகள் போடும் கற்கள்கூட சரியாக மற்றொரு கல்லின்மீது அமர்ந்துவிட்டதே. நமது கல்லை அலைஅடித்து சென்றுவிட்டதே. இதற்கு என்ன காரணமாக இருக்கும்” என வருத்தப்பட்டார். ஆஞ்சநேயர் ராமனின் அருகில் வந்தார். அவர் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.
“ஆஞ்சநேயா! நான் செய்ததை நீ பார்த்துவிட்டாயா? எனக்கு ஒரு கல்லை போடக்கூட தெரியவில்லை. என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கிறது” என்றார்.
அதற்கு ஆஞ்சநேயர், “ஸ்ரீராமா! மற்ற குரங்குகள் எல்லாம் “ஸ்ரீராமஜெயம்’ என்ற உன் நாமத்தை சொல்லிக்கொண்டே கற்களை தூக்கிப்போட்டன. அவை சரியாக அமர்ந்தது. நீ ராமனாகவே இருந்தாலும் ராமஜெயம் சொல்லிக்கொண்டே போட்டிருந்தால் அது சரியாக அமர்ந்திருக்கும்” என்றாராம்.
ராம நாமத்தின் மகிமை அத்தகையது

சுப்பிரமணியம் என்பது என்ன ?

சுப்பிரமணியம் என்பது என்ன ?
நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கின்றது , இந்த ஜோதி மணியை ஷன்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.
நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கின்றது , இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள் .இந்த தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேக மென்பதையும் சண்முகம் என்பார்கள் , ஆயினும் சர்வ தத்துவங்கிளனது அந்தத்தில் உண்மணிக்கப்பால் சாந்த நிறைவாய் உள்ள ஆறு தலையாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம் .
ஆறு ஜோதியாயும் , ஆறு அறிவாயும் , ஆறு தலை உடையதாயும் இருப்பதால் முகம் ஆறு . கால் இரண்டென்பது தோன்றும் அறிவு , தோற்றுவிக்கும் அறிவு என்னும் இரண்டறிவாகிய விஷய உணர்ச்சியும் , நிர் விஷய உணர்ச்சியும் ஆகும் , கை பன்னிரெண்டு என்பது ஆறு ஆதாரங்களில் உள்ள பிரகாசம் , அப்ப்ரகாசமாகிய பன்னிரெண்டாம்.
தசாயுதம் , அபய வரதம் என்பது என்பவை யாவை எனில் வஜ்ஜிரம் என்பது தீக்ஷன்யா உணர்ச்சி , வேல் என்பது சக்தி , அருள் , அறிவு . மணி என்பது ஆன்ம விளக்கமாகிய நாதம் .த்வஜம் என்பது கீர்த்தி . சரசிஜம் என்பது தயவு . குக்குடம் என்பது மாச்சரியம் இல்லாத நிறைவு , பராகம் என்பது பாச நீக்கம் , தண்டம் என்பது வைராக்கிய அறிவு , பாணம் என்பது அன்பு , அபயம் என்பது சமாதான உணர்ச்சி வரதம் என்பது நிராபாரமாகிய ஆதரவென்னும் சகிப்பு , கடப்ப மாலை என்பது சர்வ தத்துவ கண்டனம் , பல வர்ணமுள்ளதும் , விசித்திர வடிவமானதும் , மறதி முதலிய குணங்களுக்கு காரணமானதும் ,, மாயைக்கு இருப்பிடமாயுள்ளதும் ஆன மூலப்ரகிருதியே மயில் என்பது .
மயில் மேல் சுவாமி எறிக்கொண்டிருத்தல் முதலியவற்றிற்கு காரணம் என்னவென்றால் பிண்டாண்டமாகிய இந்த தேகத்திலும் அண்டத்திலும் மூலக்ஞான காரணமாயுள்ள கேவலமாகிய பிரகிருதி மாயை இன் அசுத்தகேவலமாகிய அசுத்தாசுத்த மகா அகங்காரம் என்னும் ராக்ஷச அம்சமான சூரதத்துவம் அதின் சேதரமான மூவகைத் தத்துவத்தோடு , அக்ஞான திசையல் , ஆன்ம அறிவையும் , பிண்ட விளக்கமான தேவர்களயும் , விஷய விளக்கமான இந்திரியங்களையும் , நாடி விளக்கமான யந்திரங்களையும் , பிராண விளக்கமாகிய உயீர்யையும் , விழுங்கித் தன்னரசு செலுத்தும் .அந்த சூர தத்துவத்தை வதைக்கும் , தத்துவம் மகாமாயையாகிய மாமரமாயும் , மாச்சரியமாகிய கோழியையும் , விசித்திர மாயை என்னும் மயில் ஆகவும் மகாமதமாகிய யானை முகமாயும் , அதிக்ரோதமாகிய சிங்க முகமாயும் விளங்கும் .
சர்வ தத்துவங்களயும் தன்வசமாக்கி , அகங்கார கொடி கட்டி , அக்ஞான நாடகம் செய்த தத்துவ அகங்கரிப்பை அடக்கி , பதி , பசு , பாசம் , அநாதிநித்யம் என்னும் சித்தாந்தத்தை விளங்கிக் காட்டுவதற்காக , மாச்சரிய குக்குடத்தை போதமாகிய கையால் அடக்கியும் , விசித்திர மாயையாகிய மயிலைக் கீழ்படுத்தி மேலிருந்து அடக்கியும் , ஆபாச தத்துவங்களைச் சம்மரித்தும் , சுத்த விஷய புவனமாகிய தேவலோகத்தை நிலை பெறச் செய்தும் இந்தரபதியான ரூபேந்த்ரனுடைய பெண்ணாகிய தத்துவ என்னும் தெய்வானையை இடப்பாலமைத்தும் , இந்த்ரியங்கள் ஆகிய வேடர்களின் கண்ணிற் புலப்பட்டமான சமென்னும் மானினது கற்பத்திலுண்டான வள்ளியாகிய சுத்த மனதை வலத்தில் வைத்தும் , நவ தத்துவ காரணமாகிய , நவவைராக தத்துவமாகிய வீரர்களைச் சமீபத்திலிருத்தியும் , சகல கேவலங்களுக்கும் நினைப்பு மறப்புக்கும் இடையில் விவேக வடிவாயும் பாதம் முதல் நாபி வரையில் உஷ்ண உருவாயும் , நாபி முதல் கண்டம் வரையில் ஆதார நாடி உருவாயும் கண்டம் முதல் புருவமத்தி வரையில் மணி உருவாயும் உச்சியில் ஓளி உருவாயும் புத்தியில் சுத்த அறிவாயும் , அனுபவத்தில் நித்தியமாயும் , எங்கும் நிறைவாயும் , கோணத்தில் ஆறாயும் , ஜாதியில் ஆறின் கூட்டமாயும் விளங்குகின்ற உண்மைக்கடவுளே சுப்ரமணியம்.

ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது


குருக்ஷேத்திர யுத்தத்தில் !!
கண்ணன் அர்ஜுனனிடம் "அப்படியா!' என்றான். ஏன் இப்படி கேட்டான்? எங்கே கேட்டான்?
குருக்ஷேத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை.
பாண்டவ, கவுரவப்படைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். களத்திலே அன்று வில்லாதி வில்லர்களான அர்ஜுனனும், கர்ணனும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டிக் கொண்டிருக்கிறான்.
தேர் உச்சியில் இருந்த கொடியில், ஆஞ்சநேயர் அழகாய்ப் பறந்து கொண்டிருக்கிறார்.
அர்ஜுனனும், கர்ணனும் தங்கள் அம்புகளை ஒவ்வொருவர் தேர்களை நோக்கி எய்கின்றனர். அடேங்கப்பா! ஆற்றல் மிக்க அந்த அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவு தள்ளி விழச் செய்கிறது. அர்ஜுனனின் தேரைத் தாக்கிய அம்பு, அதை முப்பது கல் தொலைவில் விழச்செய்கிறது.
சுதாரித்து எழுகிறான் அர்ஜுனன். பெருமை பிடிபடவில்லை.
""கண்ணா! பார்த்தாயா! என் அம்பு கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவில் விழச்செய்தது. அவனது அம்போ, நம்மை முப்பது கல் தான் தள்ளி விட்டது. பார்த்தாயா! என் பராக்கிரமத்தை!'' என்று மார்தட்டிய போது தான், கண்ணன், ""அப்படியா!'' என்றானாம்.
சொன்னதோடு நின்றானா!
""அர்ஜுனா! எனக்கு கொஞ்சம் கீழே வேலையிருக்கிறது. சற்றுநேரம், நீ கர்ணனைத் தனித்து சமாளி! இதோ! உன் கொடியில் பறக்கிறானே, ஆஞ்சநேயன்! அவனிடம் ராமாவதார காலத்திலேயே, ஒரு ரகசியம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். முடியவில்லை. இப்போது, அதைச் சொல்லிவிட்டு வருகிறேன்,'' என்றவன், கொடியிலிருந்த ஆஞ்சநேயரை நோக்கி, ""மாருதி! வா போகலாம்,'' என்றான்.
ஆஞ்சநேயரும் கொடியில் இருந்து கீழே குதித்து விட்டார்.
இருவருமாய் மறைந்து விட்டார்கள். அப்போது, கர்ணன் ஒரு அம்பு விட்டான். அர்ஜுனனின் தேர் 150 கல் தொலைவில் போய் விழுந்தது. அதை நிமிர்த்தி, சிதறிக்கிடந்த கிரீடம், இதர பொருட்களை அள்ளி வருவதற்குள் அர்ஜுனனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது.
அவன் சுதாரித்து எழுந்தபிறகு, கண்ணனும், ஆஞ்சநேயரும் வந்துவிட்டார்கள். ஆஞ்சநேயர் கொடியில் தங்கி விட்டார். கண்ணன் தேரில் ஏறினான்.
""என்னப்பா இது! இவ்வளவு தூரம் தள்ளிக்கிடக்கிறாய். ஓ! கர்ணன் உன்னை பதம் பார்த்து விட்டானா!'' என்றதும், அர்ஜுனன் தலை குனிந்தான்.
அவனிடம் கண்ணன்,""அர்ஜுனா! ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது. உன்னிலும் வல்லவர் உலகில் உண்டு. நானும், ஆஞ்சநேயரும் பக்கபலமாக உன்னிடம் இருக்கும்போதே, முப்பது கல் தொலைவில் விழுந்த நீ பலவானா! யாருடைய துணையுமின்றி தனித்து முப்பத்தைந்து கல் தொலைவில் விழுந்த கர்ணன் பலவானா…யோசி,'' என்றார்.
அர்ஜுனன் அடுத்த கணம் கண்ணனின் காலடியில் கிடந்தான்

தான் வணங்கும் தெய்வத்தின் மீது பற்றுதல் இருக்கலாம். அதே நேரத்தில் பிற தெய்வத்தின் மீதோ, மதத்தின் மீதோ தூற்றுதலை பின்பற்றுபவனை, இறைவன் ஒருநாளும் கை தூக்கிவிடுவதில்லை


தான் வணங்கும் தெய்வத்தின் மீது பற்றுதல் இருக்கலாம். அதே நேரத்தில் பிற தெய்வத்தின் மீதோ, மதத்தின் மீதோ தூற்றுதலை பின்பற்றுபவனை, இறைவன் ஒருநாளும் கை தூக்கிவிடுவதில்லை
ஒரு ஊரில் சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்ட ஒருவன் இருந்தான். அவன் சிவபெருமானைத் தவிர இதர தெய்வங்களை வழிபட மறுத்ததோடு அன்றி, அந்தத் தெய்வங்களை தூற்றியும் வந்தான். ஒரு நாள், அவன் முன்பாக தோன்றிய சிவபெருமான், ‘நீ மற்ற தெய்வங்களைத் தூற்றிக் கொண்டிருக்கும் வரையில், உன் மீது எனக்குப் பிரியம் உண்டாகாது’ என்று எச்சரிக்கை விடுத்து மறைந்தார்.
தான் விரும்பி வழிபடும் இறைவனே நேரில் வந்து இக்கருத்தைக் கூறிய பிறகும் கூட, அவனால் மற்ற தெய்வங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிவபெருமான் கூறிய கருத்தை அவன் ஏற்கும் மனநிலையில் இல்லை. ஆகவே பிடிவாதமாக தனது கொள்கையை மாற்றிக்கொள்ளாது, மற்ற தெய்வங்களை இழிவாகவே பேசி வந்தான்.
தன் மீது பெரும் பக்தி கொண்ட பக்தன் திருந்துவதற்காக, மற்றொரு சந்தர்ப்பத்தை சிவபெருமான் ஏற்படுத்தினார். அதன்படி மீண்டும் ஒருமுறை அந்த பக்தனின் முன்பாக அவர் தோன்றினார். ஆனால் இந்த முறை சிவபெருமானாக அல்ல.. சங்கர நாராயணராக!. அந்த தோற்றத்தைக் கண்டதும் பக்தன் பாதி மகிழ்ச்சியும், பாதி வெறுப்பும் அடைந்தான்.
அவன் சிவபெருமான் வடிவில் உள்ள பாகத்துக்கு மட்டும் நைவேத்தியங்கள் செய்து வழிபட்டான். விஷ்ணுவின் வடிவம் தாங்கிய பாகத்தைப் புறக்கணித்தான். சிவவடிவம் கொண்ட உருவத்தின் முன்னால் நறுமணம் கமழும் ஊதுவத்திகளை ஏற்றி வைத்தான்.
ஆனால் அந்த நறுமணத்தை விஷ்ணு அனுபவிக்காதபடி, அவரது பாகத்தில் அடங்கிய மூக்கை தனது கைவிரல்களால் அழுத்தமாக மூடினான். அவனது மூடத்தனத்தை கண்ட சிவபெருமான், ‘எல்லாத் தெய்வங்களும், ஒரே பரம்பொருளின் பல்வேறு தோற்றங்களே என்பதை உனக்கு உணர்த்துவதற்காகவே சங்கர நாராயணனாகக் காட்சி தந்தேன்.
ஆனால் நீ அதை உணர்ந்து கொள்ளாமல், பேதம் காட்டும் உனது பிடிவாதக் கொள்கையை வலுவாக பற்றிக்கொண்டிருக்கிறாய். இந்தக் குற்றத்துக்காக நீ துன்பப்படப் போகிறாய்’ என்று கூறி மறைந்தார். அதற்கடுத்த சில நாட்களில் அந்த மூட பக்தன், வேறொரு ஊரில் குடியேறும் நிலை ஏற்பட்டது.
அந்த ஊருக்குச் சென்ற பிறகும், சிவனை உயர்த்தியும், மற்ற தெய்வங்களை தாழ்த்தியும் பேசி வந்தான். அவன் முன்பைவிட மதவெறி அதிகரித்தவனாக மாறிப்போனான். அவன் பிற மத துவேசியாக இருப்பதைக் கண்டு, அந்த ஊர் சிறுவர்கள் அவனது காதுகளில் விழும்படியாக தங்களது தெய்வங்களின் கீர்த்தனைகளை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தனர்.
சிறுவர்களின் செயல்களும், தொந்தரவும் அந்த மனிதனுக்கு வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தின. ஆகவே அவன் மற்ற தெய்வங்களின் கீர்த்தனைகளும், நாமங்களும் தன் காதில் விழாமல் இருப்பதற்காக, இரண்டு காதுகளிலும் இரண்டு மணிகளைத் தொங்கவிட்டுக்கொண்டான். யாராவது கீர்த்தனை பாடினால், தலையை ஆட்டி மணிகளை ஒலிக்கச் செய்வான்.
இதனால் அவனை அனைவரும் ‘கண்டா கர்ணன்’ (மணி தொங்கும் காதுடையவன்) என்று அழைத்தனர். இறுதிவரை அவன் தன் நிலையை மாற்றிக்கொள்ளாமலேயே வாழ்ந்து, அனைவராலும் தூற்றப்பட்டு முடிவில் நரகம் சென்றடைந்தான். தெய்வ பேதமும், மத பேதமும் இருக்கக் கூடாது. அனைத்து தெய்வங்களையும் சமமாக பாவித்து கைதொழுவதே முறையாகும்.
தான் வணங்கும் தெய்வத்தின் மீது பற்றுதல் இருக்கலாம். அதே நேரத்தில் பிற தெய்வத்தின் மீதோ, மதத்தின் மீதோ தூற்றுதலை பின்பற்றுபவனை, இறைவன் ஒருநாளும் கை தூக்கிவிடுவதில்லை. அந்த பாவிக்கு ஒருபோதும் இறையருள் கிடைக்காது. அவன் அனைவராலும் தூற்றப்பட்டு, அவமானத்துடனேயே வாழ்வான் என்பதே உண்மை.

Friday, March 27, 2015

தோஷங்களை அழிக்கும் பூசணிக்காய் !!!

தோஷங்களை அழிக்கும் பூசணிக்காய் !!!

தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைக் கடைந்தெடுத்தப் பின் அசுரர்கள் ஏமாற்றப்பட்டு அமிர்தம் அவர்களுக்குக் கிடைக்காமல் போயிற்று. ஆகவே அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் பகை தொடர்ந்து கொண்டே இருந்தது. அவ்வப்போது சிவபெருமான் மற்றும் விஷ்ணு போன்ற கடவுட்களிடம் இருந்து பல அறிய வரங்களைப் பெற்றுக் கொண்டிருந்த சில அசுரர்கள் தமது பகை உணர்வைக் காட்ட அவ்வப்போது தேவர்களுக்கு தொல்லைத் தந்தவண்ணம் இருந்தார்கள். ஆனால் அவர்கள் பெற்றிருந்த வரங்களின் காரணமாக அவர்களை தேவர்களால் வெற்றிக் கொள்ள முடியாமல் போனதினால் அந்த வரம் பெற்றிருந்த அசுரர்கள் தங்கி இருத்த சில இடங்களுக்கு , அது தேவ லோகமாகவே இருந்தாலும் தேவர்களினால் செல்ல முடியாமல் போயிற்று.
தேவர்கள் மற்றும் அசுரர்கள் என்ற பிரிவினை சில இயற்கைக் காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதாவது இந்த உலகில் தீமை மற்றும் நன்மைகளைக் குறிக்கும் விதத்திலேயே தீய குணங்களை அசுரர்கள் என்றும், நல்ல குணங்களை தேவர்கள் என்றும் கூறப்பட்டு எப்பொழுதுமே நன்மைக்கு எதிராக தீமைகள் உள்ளதாகவும், அந்த தீமையை அழித்து நல்ல பண்புகளைக் கொள்ளும்போது ஒருவன் தேவபுருஷர்கள் ஆகி விடுவார்கள், அதாவது பரிசுத்த மனத்தை அடைந்து விடுகிறார்கள், அப்போது அவர்கள் இறைவீகத்தின் வாயிலில் சென்று விடுவதான நிலை ஏற்ப்படும் என்ற அடிப்படை தத்துவத்தை உணர்ச்சிபூர்வமாக பூலோக மனிதர்களுக்கு எடுத்துக் காட்டவே பரமாத்மன் என்பவர் அசுரர்கள் மற்றும் தேவர்கள் என்பவர்களைப் படைத்து அவர்கள் மூலம் சில நாடகங்களை நடத்திக் காட்டுகிறார். ஆகவே அசுரர்களும் சரி, தேவர்களும் சரி, அனைவருமே மேலுலகில் இருந்துதான் வந்துள்ளவர்கள் என்பதும், அனைவரும் அடிப்படையில் தேவ கணங்களே, சில சாபங்களின் காரணமாக அசுரர்களாக பிறந்து இருந்தார்கள் என்பதே உண்மை.
இந்த பின்னணியில் அறிய வரங்களைப் பெற்றிருந்த அசுரர்கள் தமக்கு சொல்லொண்ணாத் துயரங்களைத் தருவதைக் குறித்து பலமுறை தேவர்கள் சிவன், பிரும்மா மற்றும் விஷ்ணுவிடம் முறையிட்டும் அவர்கள் ஒன்றும் கூறாமலேயே சென்று விடுவார்கள். ஆனால் அதே சமயத்தில் அசுரர்கள் தேவர்களுக்கு அநீதி இழைத்து கொடுமை செய்வதை தக்க நேரத்தில் சிவபெருமானோ அல்லது விஷ்ணுவோ அழிக்கத் தயங்கியது இல்லை. ஆனால் அதற்கான காலம் வரும்வரை, அதாவது அசுரர்களுக்கு அழிவு காலம் வரும் வரைப் பொறுத்திருந்து பார்த்தப் பின் அதை செய்தார்கள். ஏன் என்றால் அவர்களாலும் அவர்களே படைத்திருந்த நியதிகளை மீற முடியவில்லை. வெகு காலத்திற்கு முன் இப்படியாக இருந்த நிலையில் தேவர்களும், அசுரர்களும் தீராப் பகை கொண்டிருந்தனர் என்பதினால் அடிக்கடி அவர்கள் ஒருவரை எதிர்த்து ஒருவர் போர் செய்தபடியே இருந்தனர். போரில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களையும், வரங்களையும் வைத்திருந்தனர்.
தேவர்களுக்கும், மேலுலகத்தில் வசித்து வந்த அசுரர்களுக்கும் அவர்கள் நினைத்த இடங்களுக்கு, அது தேவலோகமோ இல்லை பூலோகமோ அல்லது பாதாளமோ அங்கெல்லாம் செல்லும் சக்தி இருந்தது. சில கர்மாக்களின் வினையாக சில தெய்வீக கணங்களே அசுரர்களாக பிறவி எடுத்து கர்மாக்களை அழித்துக் கொள்ள வேண்டி இருந்ததினால்தான், அந்த கணங்கள் அசுரர்களாக உருவெடுத்து மேலுலகில் வாழ முடிந்தது. சாபம் பெற்ற வேறு சில கணங்கள் பூவுலகில் அரக்கர்களாக பிறவி எடுத்து அந்த சாபங்களை விலக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது அவை ராக்ஷசர்கள் மற்றும் பிரும்ம ராக்ஷசர்கள் போன்ற பிறவிகளை பூமியில் எடுக்க வேண்டி இருந்தது. அடிப்படையில் தேவ கணங்களான அவை ராக்ஷச மற்றும் பிரும்ம ராக்ஷச பிறப்புக்களை எடுத்திருந்தாலும், அந்த நிலையில் தேவ லோகத்துக்கு செல்ல முடியாமல், ஆனால் பூவுலகில் சில சக்திகளைக் கொண்டு இருந்தன.
தேவலோகத்தில் அசுரர்களாக இருந்தவர்கள் பூவுலகில் பிறவி எடுத்திருந்த ராக்ஷசர்கள் மற்றும் பிரும்ம ராக்ஷசர்களை சந்தித்து விட்டு செல்லும் பழக்கத்தைக் கொண்டு இருந்தன. அப்படி வந்திருந்தபோது தாம் எந்தெந்த தேவர்களினால் ராக்ஷச மற்றும் பிரும்ம ராக்ஷச பிறப்புக்களை எடுத்து பூமியில் வந்து அவதிப்பட வேண்டி உள்ளது என்பதை தேவலோக அசுரர்களிடம் கூறியபோது அதைக் கேட்டு கோபமடைந்த அசுரர்கள் தேவலோகத்தில் இருந்த தேவர்களை துன்புறுத்தத் துவங்கினார்கள். இதனால்தான் தேவர்களுக்கும், தேவலோக அசுரர்களுக்கும் முடிவற்ற வகையில் பகை பெருகிக் கொண்டே இருந்தது.
இந்த பின்னணியில்தான் தேவலோகத்துக்கு அடிக்கடி விஜயம் செய்து வந்த விஷ்ணு பக்தனான கூஷ்மாண்டன் ( சில கதைகளில் அவனை கூச்மாண்டன் என்கிறார்கள்) எனும் அசுரன் அங்கிருந்த தேவர்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்கி வந்திருந்தான். பல தெய்வங்களிடம் இருந்து அறிய வரங்களைப் பெற்று இருந்த அசுரன் கூஷ்மாண்டன் வேண்டும் என்றே தேவலோகத்தில் இருந்த தேவர்களிடம் வம்பு செய்து அவர்களை துரத்தி அடிப்பதும், தமது இருப்பிடத்திற்கு இழுத்து வந்து சிறையில் வைத்து கொடுமைகளையும் செய்து வந்தான். இத்தனைக்கும் அவன் அடிப்படையில் ஒரு கூஷ்மாண்டா எனும் ஒரு தேவியின் பக்தனாவான். அந்த தேவியோ விஷ்ணுவினால் படைக்கப்பட்டவள். கூஷ்மாண்டாவுக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை ஆகும். அவள் மங்களத்தைத் தருபவள் என்பார்கள். அது போலவே கூஷ்மம் என்றால் முட்டை அல்லது அண்டம் என்றும் பொருள் தரும். முதன் முதலில் இந்த பிரபஞ்சம் தோன்றியபோது அது ஒரு முட்டை உருவில் வெளி வந்தது. அதில் இருந்து வெளிவந்த விஷ்ண்வை சுற்றி பல தேவிகளும் இருந்தார்கள். அதில் ஒருவளே கூஷ்மா என்பவளும் ஆவாள். ஆகவேதான் கூஷ்மாவின் பக்தனான கூஷ்மாண்டனுக்கு விஷ்ணுவின் அரிய வரங்கள் கிடைத்து இருந்தன. கூஷ்மாண்டன் பக்தி மார்கத்தில் அதாவது தனக்கு வரமளித்த தெய்வங்களிடம் அதிக ஈடுபாடு கொண்டு அவர்களை மறவாது அனுதினமும் வணங்கி துதித்தே வந்தவன். அதனால்தான் அவனுக்கு அத்தனை கர்வம் இருந்தது.
இதனால் கூஷ்மாண்டனின் பலம் ஓங்கி, அட்டகாசம் அதிகமாகி, தேவலோகத்திலிருந்து அனைவரும் விரட்டியடிக்கப்பட்டார்கள். தேவேந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் பிரம்மனிடம் அடைக்கலம் புகுந்தனர். ஆனால் பிரம்மனாலும் அவர்களின் துயரைத் தீர்க்க முடியவில்லை என்பதினால் அனைவரும் தம்மை கூஷ்மாண்டனின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு வேண்டிக் கொண்டு பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தார்கள்.
அவர்கள் கூறியதைக் கேட்ட விஷ்ணு பகவான் சினம் அடைந்தார். கூஷ்மாண்டனுக்கு சாப விமோசனம் தரும் காலம் நெருங்கி விட்டதையும், தன்னுடைய பக்தனான அவனுக்கு அவன் மரணம் அடையும் முன்னால் ஏதாவது வழியில் பெருமையும் தர எண்ணி இருந்த நாளும் நெருங்கியது என்பதையும் உணர்ந்தார். விஷ்ணு பகவான் கூறியவாறு தேவர்கள் பெரும் படையுடன் கூஷ்மாண்டான் ஆண்டு வந்த பூமிக்கு சென்று அவனுடன் போரிட்டார்கள். அதில் விஷ்ணுவும் கலந்து கொண்டு அந்தப் படையின் ஒரு பிரிவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். யுத்தம் நடந்திட விஷ்ணுவிடம் நேரடியாக மோதும் கட்டத்தை கூஷ்மாண்டன் எட்டினான்.
தன்னை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது என்ற அகம்பாவத்தில் இருந்த கூஷ்மாண்டன் யுத்தத்தில் விஷ்ணுவை தாக்க முயன்றபோது அவரை சுற்றி அரணாக இருந்திருந்த தீக்கணங்கள் பெரும் தீ நாக்குடன் அவனைத் தாக்க அப்படியே சுருண்டு விழுந்தான் கூஷ்மாண்டன். உயிர் பிரிகின்ற நேரம்....தான் யார், இந்த ஜென்மத்தில் என்னென்ன பாவங்கள் செய்தேன் என அனைத்தையும் உணர்ந்தான். மரணத் தருவாயில் கரம் கூப்பி விஷ்ணுவை வணங்கி, அவர் மீது தோத்திரம் பாடி தனக்கு நற்கதி தருமாறும், வேறு நல்ல பிறவி எடுக்க அருள் தருமாறும் கேட்டான். அவன் நிலைக் கண்டு பரிதாபப்பட்ட நாராயணன் கேட்டார் '' கூஷ்மாண்டா, இந்த பிறவியில் தேவர்களும் கடவுளின் அவதாரங்களே, அவர்களும் தெய்வ கணங்களே என்பதை மறந்து போய் அவர்களை ஹிம்சித்து வந்ததின் மூலம் பெரும் தவறுகளை செய்துள்ளாய் என்றாலும் அந்த நிலையிலும், மரணத் தருவாயிலும் நீ தெய்வ பக்தியோடு இருந்துள்ளாய் என்பதினால் உனக்கு நல்ல கதி கிடைக்க உள்ளது. ஆகவே உன் வாழ்க்கையின் மூலம் பூலோகத்தில் உள்ளவர்கள் பயன் அடையும் வகையில், நீ பூலோகத்தில் ஒரு இந்த அகண்டத்தை பிரதிபலிக்கும் உருவில் உள்ள பூஷணிக்காயாக அவதரிப்பாய். உன்னைக் கொண்டு எந்த ஒருவரும் தமது தோஷங்களை விலக்கிக் கொள்ள முடியும் என்ற வரத்தை உனக்கு அருளுகிறேன்.
இந்த ஓவியத்தை கட்டுரைக்காக வரைந்தவர் 
Ranjani Ramesh
எப்படி உன்னை இப்போது நான் பூமி மீது மோதி விழ வைத்து மரணத்தைக் கொடுத்தேனோ அது போலவே தோஷங்களை விலக்கிக் கொள்ள உன்னை பூஜிக்கும்போது அங்குள்ள அனைத்து துஷ்ட ஆத்மாக்களையும் நீ உன்னுள் உறிஞ்சிக் கொண்டு அவற்றை உள்ளேயே அழிப்பாய் (பூஷணிக்காயின் உள்ளே). அதன் பின் அவற்றுக்கு உயிர் இருக்காது. அந்த நிலையில் பூஷணிக்காயாக உள்ள உன்னை பூமி மீது மோத விட்டு உடைத்தால் உன்னால் மரணம் சம்பவிக்கப்பட்ட அனைத்து துஷ்ட ஆத்மாக்களும் அவற்றுடன் ஒட்டிக் கொண்டுள்ள தோஷங்களுடன் பூமியிலே புதைந்து போகும். அந்த நிலையைக் காட்டும் விதத்தில்தான் பூஷணிக்காயை உடைக்கும் முன்பாக அதை சிறிது வெட்டி உள்ளே குங்குமத்தைக் கொட்டி பூஜித்தப் பின் அதை உடைப்பார்கள். அதை நீயும் உனக்கு அவர்கள் செய்யும் பூஜையாக ஏற்பாய். இன்று முதல் உன்னைக் கண்டாலே தீய தோஷ ஆவிகள் பயந்து ஒளியும் என்ற அளவு உனக்கு சக்தி தருகிறேன். தீய தோஷங்களை நீ பூஷணிக்காய் உருவில் இருந்தபடி அழிப்பாய் .
கூஷ்மாண்டா, உன்னை தானமாக தந்தால் அதைத் தந்தவனின் துயரங்கள் விலகும், அவனது தீய தோஷங்களும் விலகி ஓடும். முக்கியமாக அமாவாசை, பித்ருக்களின் திதி போன்ற நாட்களில் பூசணியாக பிறந்துள்ள உன்னை தானம் செய்தால் கஷ்டங்களும் வியாதிகளும் விலகி ஓடும். ஆனால் அதே சமயத்தில் பூஷணிக்காயை இலவசமாக பெற்றுக் கொள்பவர்கள், யாரிடம் இருந்து அதைப் பெற்றுக் கொள்வார்களோ அவர்களது பாவங்களையும் தமது வாழ்க்கையில் சேர்த்துக் கொள்வார்கள். '' என்று அருள் புரிந்தார்.
அதனால்தான் பூஷணிக்காயை பூஜை செய்து உடைப்பதின் மூலம் தீய ஆவிகளை கூஷ்மாண்டனிடம் அனுப்பி விடுவதாகவும், அவற்றை அவன் கொன்றுவிட்டதைக் குறிக்கும் வகையில் குங்குமம் அந்தக் காயின் உள்ளே உள்ள தண்ணீருடன் கலந்து விட, அந்தக் காயை உடைத்ததும்- தீய ஆத்மாக்களை கொன்று விட்ட நிலையைக் குறிக்கும் விதத்தில், அந்தக் காய் சிவப்பு நிறத்தில் உடைந்து விழுகிறது என்றும், அந்த நேரத்தில் அங்கு சுற்றித் திரியும் தீய ஆவிகள் பூஷணிக்காயில் இருந்து வெளிவரும் அந்த சிவப்பு நிறத்தைக் காணும்போது, தம்மையும் அதனுள் உள்ள கூஷ்மாண்டன் கொன்று விடுவான் என பயந்து கொண்டு அங்கிருந்து ஓடி விடுமாம். அதனால்தான் தீய அவைகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் தோஷங்கள் விலகி ஓட பூஷணிக்காயை வீட்டின் வாயிலில் முதலில் கட்டி தொங்க வைத்து சில நாட்களுக்குப் பின்னர் அதை எடுத்து பூஜை செய்து உடைப்பதும் ஐதீகம் ஆயிற்று. பூஷணிக்காயில் அமர்ந்து கொண்டு கூஷ்மாண்டன் பார்த்துக் கொண்டு இருப்பதினால்தான் கண்திருஷ்டி தரும் தீய ஆவிகள் அங்கிருந்து விலகி ஓடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.
அது போலவே பணம் தராமல் பூஷணிக்காயை தானமாக பெறலாகாது .அப்படி தானம் பெற்றாலும், தானத்தைப் பெறும்போது, 'இன்று என் செய்கையினால் நான் பெற்ற ஒருநாள் நல்ல பலனை உனக்கு தருகிறேன் ' என்று தானம் தந்தவருக்கு கூறி விட்டோ அல்லது அதற்கு ஈடாக அரைக்காசு நாணயத்தையாவது தந்து விட்டு அதைப் பெற்றுக் கொண்டால் அது தானமாக பெற்றதாகாது. தீய பலன் தானம் பெற்றவரை சேராது என்பது ஐதீகமாகவும் ஆயிற்று. இதனால்தான் இப்படிப்பட்ட குணாதிசயத்தைக் கொண்ட பூஷணிக்காயை சாதாரணமாக யாரும் திருடுவது இல்லை.

புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது

புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ..
மஞ்சள் - தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது. புதிய ஆடைகள் அணிந்திருக்கும்போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை. இதுமட்டுமல்லாமல், மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம் ! எனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பார் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப்பார் என்பதை நாம் அறியலாம். புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம் உடையதனால், மஞ்சளை அதன்மேல் தடவுவதன் மூலம் அனைத்துவித தீயவையும் விலகி நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது.

பித்ருக்களுக்கு செய்யும் உதவி தானமே

பித்ருக்களுக்கு செய்யும் உதவிகளில் மிகவும் முக்கியமானது நிறைய பொருள்களை தானம் செய்வதுதான். ஒருவர் இறக்கும்போது அவருடன் யாரும் கூடச் செல்வதில்லை. ஆனால் இந்த உலகில் இறந்தவரை உத்தேசித்து செய்யப்படும் தானங்களே இறந்தவருக்கு- நண்பனாக - உறுதுணையாக மறு உலகத்திலும் வந்து காப்பாற்றும். ஆகவே பித்ருக்களுக்கு தானமே சிறந்த நண்பன் என்கிறது சாஸ்திரம்.

* பித்ருக்கள் மேல் உலகில் படும் கஷ்டங்களிலிருந்து காப்பாற்றவே பூலோகத்தில் நமஸ்காரம் செய்யும் நபரால் இறப்பவரின் நலனுக்காக என்று கூறி நிறைய தானங்கள் செய்யப்பட வேண்டும்.

* அவ்வாறு தானங்கள் செய்யாமல் இருந்தால் பித்ருக்கள் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறுகிறது ஸ்ரீ வேத வ்யாஸ மஹர்ஷியால் இயற்றப்பட்ட கருட மகாபுராணம். இறக்கும் ஜீவன் மேல்உலகம் செல்லும் வழி முழுவதும் அதிகமான சூட்டினால் கொதிக்கின்ற மணலும், புழுதிகளும், கூறான முட்களும் இருக்கும்.

அதன் மேல்தான் எமதூதர்கள் ஜீவனை நடந்து வரச்செய்து அழைத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் எமதூதர்களுக்கு (தர்மராஜாவின் அனுகிரகத்தால்) எந்த ஒரு சிரமும் ஏற்படாது. ஆனால் அந்த ஜீவன் கால் சூட்டினாலும் பசி தாகத்தினாலும் அதிகமான வெப்பத்தாலும் மிகவும் கஷ்டப்படும்.

செல்லும் வழியில் தங்கி இளைப்பாறுவதற்கு மரமோ, மரத்தின் நிழலோ, வீடுகளோ, காடுகளோ, ஆசிரமமோ, தோட்டங்களோ, அல்லது தாகத்தைத் தணிக்க ஓடையோ, கிணறோ எதுவும் கிடையாது. அந்த சமயத்தில் நம்மை இந்த கஷ்டத்திலிருந்து யார் காப்பாற்றுவார்கள்? என்று ஜீவன் ஏங்கித் தவிக்கும்.

அப்போது பூலோகத்தில், இறந்தவருக்கு கர்மா செய்யும் நபர் பித்ருக்காக அன்னதானம் உள்பட பற்பல தானங்களைச் செய்தால் தானம் செய்யப்பட்ட அந்த அனைத்து பொருட்களும், மேல் உலகத்தில் எமலோகம் நோக்கி அழைத்துச் செல்லும் ஜீவனிடம் உடனுக்குடன் தரப்பட்டு, அந்த கஷ்டங்களிலிருந்து பித்ருக்களை காப்பாற்றும்.

அப்போது அந்த பித்ரு மிக்க சந்தோஷத்தோடு, தனக்காக தானங்களைச் செய்த மகன் முதலிய வாரிசுகள் அனைவரும் நல்லா இருக்கட்டும் என்று அனுகிரகம் செய்யும்

தை அமாவாசை அன்று திதி கொடுப்பது நூறு அமாவாசைகளில் திதி கொடுப்பதற்குச் சமம்

தை அமாவாசை அன்று திதி கொடுப்பது நூறு அமாவாசைகளில் திதி கொடுப்பதற்குச் சமம். இதனால் நமது முன்னோர் மிகவும் திருப்தியுற்று நம்மை வாழ்த்திச் செல்வார்கள்.

முன்னோர் நம்மிடம் எதிர்பார்ப்பது எள்ளும் தண்ணீரும்தான். வேறு எதையும் அவர்கள் நம்மிடம் கேட்பது இல்லை. அவற்றைத் தவறாமல் அவர்களுக்கு வழங்கி நமக்கு அசிர்வாதம் செய்யும்படி வேண்டிக் கொள்வோம்.

பித்ரு வழிபாடு செய்வது பற்றிய 20 தகவல்கள்


. ஒரு வருடம் நாம் பித்ருபூஜை செய்யாவிட்டாலும் பித்ருக்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

2. தர்ப்பணங்களை எப்போதும் காலை 7 மணிக்குள் கொடுத்து விடுவது நல்லது.

3. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பே எழுந்து அதிகாலைக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது.

4. எள்ளுடன் தண்ணீரும் கலந்து அளிக்கப்படும் தர்ப்பணம் பித்ருக்களுக்கு அமிர்தமாக கருதப்படுகிறது.

5. பித்ரு காரியத்துக்குள் தர்ப்பைப் புல் பயன்படுத்துவது நல்லது. தர்ப்பைப் புல்லில் சூரிய ஒளி ரூபத்தில் பித்ருக்கள் வந்து அமர்வதாக ஐதீகம்.

6. நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை சுவதாதேவி, தர்ப்பைப்புல் மூலம்தான் பித்ருலோகத்துக்கு எடுத்து செல்வதாக ஐதீகம்.

7. புண்ணிய நதிகளின் கரைகளில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு எப்போதுமே சக்தி அதிகமாகும்.

8. நம் முன்னோர்கள் மரணம் அடைந்த நேரம், திதியை மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன்களை தரும்.

9. தர்ப்பணம் செய்யும் போது தாய், தந்தை வழியில் 6 தலைமுறைக்கு முன்பு மறைந்த முன்னோர்களுக்கும் சேர்த்து செய்தால், அவர்களது ஆசிகளும் கிடைக்கும்.

10. அமாவாசை, சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போது செய்யப்படும் தர்ப்பணத்துக்கு மிக அதிக சக்தி உண்டு.

11. அமாவாசை நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டியது மிக, மிக முக்கியமாகும்.

12. மறைந்த முன்னோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி, மகாளயபட்ச நாட்களில் ஆசி வழங்க நம்மை நிச்சயம் தேடி வருகிறார்கள். இதை புரிந்து கொண்டு அவர்களது ஆசிகளைப்பெற வேண்டியது நமது பொறுப்பாகும்.

13. தர்ப்பணத்தை சரியான நேரத்தில் உரிய முறைப்படி செய்தால் நம் வாழ்வில் கஷ்டங்கள் என்பதே வராது.

14. பித்ருக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணமானது பல யாகங்களுக்கு சமமானது.

15. கன்யா ராசியில் சூரியன் இருக்கும்போது செய்யப்படும் சிரார்த்தம் பித்ருக்களை ஓராண்டு காலத்துக்கு திருப்தி அடைய செய்யும்.

16. தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாக பிறப்பான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

17. ஒரு ஆண்டில் ஒருவர் 96 தடவை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.

18. புண்ணிய ஆத்மாக்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணம் அவர்கள் மேலும் இறையருள் பெற உதவும்.

19. தர்ப்பணம், சிரார்த்தும் செய்யாவிட்டாலும், நம் பித்ருக்கள், நமக்கு உதவுவார்கள். ஆனால் தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் முழுமையான ஆசி கிடைக்கும்.

20. பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனைத் திரவியங்களைத் தவிர்ப்பது நல்லது.

தை அமாவாசை அன்று காகத்திற்கு உணவிடுங்கள்

காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால் பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்தும் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதவன் என்றும் சொல்வதுண்டு.

காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர்.

அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்து பின்னரே காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

தை அமாவாசை அன்று வீட்டில் படையல் செய்வது எப்படி?

மறைந்தவர் படத்தை சுத்தம் செய்து வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைத்து கொள்ள வேண்டும். சந்தனம், குங்குமம் இடவும். படத்திற்கு துளசி மாலை, வில்வ மாலை சாற்றுவது நல்லது.

* சிறு தட்டில் மறைந்தவர் பயன்படுத்திய துணி, நகை, கண்ணாடி வைக்கவும்.

* 2 குத்து விளக்குகள் வைத்து ஒரு முகம் ஏற்றவும். மறைந்தவருக்கு பிடித்த இனிப்பு, காரம், பழங்கள் படையில் வைக்க வேண்டும்.

* தங்கள் குலவழக்கப்படி முழு தலை வாழையிலை படையல் போடவும்.

* ஒட்டலில் உணவு ஏற்பாடு செய்திருந்தாலும் படையலுக்காக வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்வது நல்லது.

* கோதுமை தவிடு 2 கிலோ, அகத்திகீரை, வெல்லம்  1 கிலோ, வாழைப்பழம் 3 ஆகியவற்றை கலந்து முந்திய நாளே ஊற வைத்து தெவசம் அன்று காலையில் பசுவிற்கு தானம் செய்யவும்

உள்ளத்தில் இறைவனை பாருங்கள்

நமது ஐம்புலன்கள் வழியாக வரும் இன்பம் முடிவில் சிக்கல்களாகவும், நோய்களாகவும், நெருக்கடிகளாகவும் மாறி நம்மை சேதப்படுத்தி விடும். இதனால் ஐம்புலன்களின் கதவை மூடிக் கொண்டு உள்ளத்தில் இறைவனை பார்க்க பழகிக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

இதனால் அமைதியும், ஆனந்தமும் நமக்கு கிடைக்கும் சிவன் என்பவர் இறைவன், இறைவனுக்கு ஆறு குணங்களை உடையவர் என்று பொருள் உண்டு. இறைவனாகிய பகவானை உள்ளத்தில் வைத்து அடிக்கடி பூஜிப்பவர்களுக்கு அவரின் ஆறு குணங்களாகிய ஞானம், ஐஸ்வர்யம், சக்தி, பலம், வீரியம், தேஜஸ் என்பன சேர்ந்துவிடும்.

கல்வி, தொழில் இவற்றில் வெற்றி பெறவும், பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் பலர் இறைவன் மேல் பக்தி செலுத்துகிறார்கள். அதே நேரத்தில் சிலர் ஞானம் பெறவும், மறுமையில் உயர்வு பெறவும், மூல மந்திரம் கூறி பகவான் மேல் பக்தி செலுத்துகின்றனர். பகவான் மேல் பக்தி செலுத்துவதாலும், மந்திரம் கூறி இறைவனை அடிக்கடி நினைப்பதாலும் எடுத்த காரியம் கைகூடி விடும்.

மன வலிமையும் இறை நினைப்பும் உடையவர் நல்ல சந்தர்ப்பத்தை உண்டு பண்ணுகிறார். மந்திரம் கூறி தொடங்கும் வேலை வெற்றியாகும். அத்துடன் தொடர்ந்து மந்திரம் கூறி வந்தால் பிரச்சினைகள் நீங்கும் அற்புதங்கள் நடக்கும். எனவே மந்திரம் சொல்வதை மறவாதீர்கள். குடும்பத்தில் இருந்து கொண்டே ஞானம் பெற முயற்சிப்பவர்களுக்கு இந்து மதம் அருள்பாலிக்கிறது.

கல்வியில் உயர்வு, தொழிலில் விருத்தி, உலகியல் வாழ்வில் முன்னேற்றம் பெற தொடர்ந்த இறை நினைப்போடு மானசீக பூஜை செய்ய வேண்டும். அத்துடன் மந்திரம் கூறி பிரார்த்தனை செய்து பகவானை வழிபடுபவர்களுக்கு இந்து மதம் அருளும் பொருளும் பெற வழி காட்டியுள்ளது. அந்த நல்ல வழியை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆறுகால மானசீக பூஜை செய்யும் நேரங்கள் :

நாள் தோறும் இனிது இந்து மதம் கூறும் ஆறுகால மானசீக பூஜையை உங்கள் உள்ளக் கோவிலில் செய்து வாருங்கள்.

மானசீக பூஜை செய்யும் முறை : உங்கள் மனதிற்கு பிடித்த கோவிலை அடிக்கடி எண்ணத்தில் கொண்டு வந்து அங்கே பகவானுக்கு கோவிலில் குருக்கள் பூஜை செய்வது போல மந்திரம் கூறி இறைவனை வலம் வந்து பகவானின் திருப்பாதங்களில் பூப்போட்டு வணங்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பிரச்சினைகள் தீரும். செய்யும் தொழில் உயர்வு பெறும். ஆத்மா வெற்றி பெறும்.

ஆறுகால மானசீக பூஜை செய்யும் நேரங்கள் :

அதிகாலை - 4.30 மணி முதல் 6 மணிக்குள்
காலை -9 மணி முதல் 10.30 மணிக்குள்
மதியம்-12 மணி முதல் 1.30 மணிக்குள்
மாலை - 4 மணி முதல் 5.30 மணிக்குள்
இரவு - 7 மணி முதல் 8.30 மணிக்குள்
மற்றும் இரவு உறங்கச் செல்லும் முன்பு.

இவ்வாறு செய்தால் பிரச்சினைகள், தீரும், செய்யும் தொழில் உயர்வு பெறும். ஆத்மா பெற்றி பெறும். குழந்தைகளையும் இவ்வாறு தொடர்ந்து செய்ய வைத்தால் அவர்களது எதிர்காலம் அருளும் பொருளும் நிறைந்த பொற்காலமாக மாறும்.

ஸ்ரீவீரபத்திரருக்கு பிடித்த மலர்கள்

சம்பங்கி, செம்பருத்தி :

ஸ்ரீவீரபத்திரருக்கு உகந்த பூக்கள் சம்பங்கியும் செம்பருத்தியுமே. இப்பூக்களைக் கோவில் நந்தவனத்திலிருந்து ஸ்ரீவீரபத்திர உபாசகர் தாமே தம் கைகளால் பறித்துக் எடுத்துவர வேண்டும். மலர்களை ஸ்ரீவீரபத்திர உபாசகர் தாமே தம் கைகளால் மாலையாகத் தொடுக்க வேண்டும்.

இரண்டு சம்பங்கிக்கு ஒரு செம்பருத்தி என்ற எண்ணிக்கையில் மாலை தொடுக்க வேண்டும். மாலை தொடுக்கும் போதோ தொடுத்த மாலையை இறைவனுக்குச் சூடும்போதோ மூச்சுக்காற்று படுதல் கூடாது. ஸ்ரீவீரபத்திரருக்குச் சூட்டிய மாலையை எடுத்து எவருக்கும் கழுத்திலும் கரத்திலும் சூட்டக்கூடாது.

ஸ்ரீவீரபத்திரரை வணங்கும் அடியவர்களுக்கு இம்மாலையிலிருந்து இரண்டு பூக்களை மட்டுமே எடுத்து அளிக்க வேண்டும். பூக்களைப் பிரசாதமாகப் பெற்றவர்கள் அப்பூவினைத் தலையில் சூடலாம். ஆனால் அப்பூக்கள் எக்காரணம் கொண்டும் கீழே விழுதல் கூடாது. எவர் காலிலும் படுதல் கூடாது.

எனவே பூக்களைப் பெற்ற அன்பர்கள் அப்பூக்களை இறைவன் அளித்த வரமாகக் கொண்டு பயபக்தியுடன் பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜை மாடத்தில் வைப்பது நல்லது. திருக்களும்பூர் ஸ்ரீரண வீரபத்திரர் கோவிலில் உள்ள ஸ்ரீவீரபத்திரருக்கு அனைத்து வகையான மலர்களையும் சூடுகிறார்கள். பெருந்துறையில் உள்ள ஸ்ரீவீரபத்திரருக்கு, சிவப்பு மலர் மாலையும், வில்வ மாலையும் சூட்டுகின்றனர்.

தும்பைப்பூ :

வீரபத்திரர் தும்பை மாலை சூடிப்போருக்குச் சென்றார் என்று தக்க யாக பரணி கூறுகிறது. எனவே வெற்றிக் கடவுளான வீரபத்திரர் தும்பை மாலையைச் சூட்டி வழிபடுகின்றனர். ஆணவம் அகற்றி பிறவியறுத்தல் என்ற மருந்தைத் தருபவர் ஸ்ரீவீரபத்திரர். இதற்காக தும்பையை மாலையாகச் சூட்டுகின்றனர்.

வீரபத்திரர் பத்திரகாளிக்குத் தும்பைப்பூ மாலைகளை அணிவித்து வழிபட்டால் அவர்கள் நமது எதிரிகளைத் தொலைத்து துன்பத்தை நீக்கி நல்வாழ்வு அளிப்பார்கள் என்று நம்புகின்றனர். பவானி சங்கமேசுவரர் கோவில் உள்ள வீரபத்திரரைக் குல தெய்வமாகக் கொண்டோர் தும்பைப்பூ சூடி வழிபடுகின்றனர்.

கொன்றை மலர் :
வீரபத்திரருக்குப் பொன்னிறமான கொன்றை மலர் மாலையை அணிவித்து வழிபடும் வழக்கமும் உள்ளது. மாடக்குளம், வீரபத்திரர் கோவில் உள்ள ஸ்ரீவிரபத்திரருக்குக் கொன்றை மாலை சூட்டுகின்றனர்.

காக்கைக்கு உணவு வைத்தால் கஷ்டங்கள் விலகும்

காக்கைக்கு தினமும் உணவு வைப்பது நல்லது. காலையில் நம் வீட்டு ஜன்னலில் காகம் வந்து நின்று கா... கா.... என்று கத்திய பிறகுதான் அதற்கு உணவு வைக்க வேண்டும் என்பதல்ல. நீங்களே காகத்தை அழைத்து உணவு படைப்பது மிகவும் நல்லது.

நாளை சனிக்கிழமை என்பதால், எள் மற்றும் நல்லெண்ணை கலந்த உணவு வகைகளை வைக்கலாம். இதனால் நம் கஷ்டங்கள் பனி போல விலகும் என்பது ஐதீகமாகும்.

கோவில்கள் தோன்றியது எப்படி?

உலகில் மனித இனம் தோன்றிய போதே இறை ஞானமும் ஏற்பட்டு விட்டது. மனிதன் பரிணாம வளர்ச்சிப் பெற்று, ஆறு அறிவையும் பயன்படுத்தியபோது, கோவில்களுக்கான அவசியம் தானாகவே உருவாகியது. இறைவனை சரண் அடைய, சரியான இடம் கோவில்தான் என்பதை உணர்ந்தான்.

ஆனால் இந்த உணர்தல் என்பது நம் மூதாதையர்களிடம் உடனே ஏற்பட்ட ஒன்றல்ல. பழந்தமிழகத்தில் இயற்கையோடு இயைந்த வழிபாட்டு முறையே இறைவழிபாட்டின் தொடக்க நிலையாக இருந்தது. முதலில் சூரியன் உதிப்பதை கண்டு பயந்து அதை பார்த்து கையெடுத்து கும்பிட்டனர். பிறகு எதைப் பார்த்தாலும் புனிதமாக வணங்கத்தக்கவையாக கருதினார்கள்.

மலை, ஆறு, கடல், குளம், மரம், செடி, கொடி, சூரியன், சந்திரன், காற்று, தீ, வெயில், மழை, கால் நடைகள்... என எல்லாமே இறைவனது அம்சம் என்று நம்பினார்கள். இந்த இயற்கை வழிபாட்டின் பரிணாம வளர்ச்சியே, பிற்காலத்தில் பஞ்ச பூதத் தலங்களாக ஆங்காங்கே மாறின என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

நீர் நிலை ஓரங்களிலும், மலைகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில் அதிக சக்தி கிடைப்பதாக குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் ஆய்வு செய்து கண்டு பிடித்துள்ளனர். அந்த வகையில் பழந் தமிழர்கள் முதலில் மரங்களையே தெய்வமாகப் போற்றி வணங்கினார்கள். மரங்களில் தெய்வங்கள் குடி கொண்டிருப்பதாக நம்பினார்கள்.

சங்க கால இலக்கியங்களில் இதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகள் உள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய 5 வகை நிலங்களுக்கும் உரிய மரங்கள் தங்களை பாதுகாப்பதாக ஆதி தமிழர்கள் உறுதியாக நம்பினார்கள். மரங்கள் அழிந்தபோது, அதில் உறைந்துள்ள தெய்வங்களும் இல்லாமல் போய் விடுமோ என்று ஒரு கட்டத்தில் பயந்தனர்.

எனவே மரங்களில் இருந்து கடவுளை பிரிக்கும் முடிவுக்கு வந்தனர். அதன்படி மரம், செடி கொடிகளின் அடியில் கடவுள் உறைந்துள்ளார் என்ற நம்பிக்கையை பரவச் செய்தனர். இதனால் காடுகள் கடவுள் நிறைந்துள்ள பகுதி என்று பழந் தமிழர்களிடம் கருத்து பரவியது. இவைதான் இன்றும் ஆரண்ய (கானகம்) தலங்களாக உள்ளன என்கிறார்கள்.

ஒரு காலக் கட்டத்துக்குப் பிறகு மரங்களின் அடியில் தங்களுக்கு பிடித்த கடவுள் திருவுருங்களை அமைத்து வழிபட தொடங்கினார்கள். இந்த காலக் கட்டம்தான் இந்து மதத்தின் தலையாய மாற்றமாக கருதப்படுகிறது. ஒன்றுமே இல்லாத காலத்தில், இறைவனை அருவமாக வழிபட்டு வந்த அவர்களுக்கு, தங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் வடிவமாக மாற்றி, பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தத் தொடங்கினார்கள்.

அந்த தெய்வ உருவங்களைப் பார்த்ததும் புலவர்களுக்கு கொண்டாட்டமாகி விட்டது. மன்னனை புகழ்ந்து பாடிய புலவர்கள், இறை வடிவங்களையும் புகழ்ந்து பாட ஆரம்பித்தனர். மன்னனை புகழ்ந்து பாடினால் உணவும், பொருளும்தான் கிடைக்கும். இறைவனை புகழ்ந்து பாடினால் நமக்கு எல்லாம் கிடைக்கும் என்று நினைத்தனர்.

சில நூற்றாண்டுகளில், இறைவனை பாடினால் ஆன்ம பலம் உண்டாகும். ஆத்மாவுக்கு உயர்வு கிடைக்கும் என்ற உண்மை பழந்தமிழர்களுக்கு புரிய வந்தது. தெய்வ திருவுருவங்கள் மழையில் நனைவதும், வெயிலில் காய்வதையும் கண்ட நம் முன்னோர்கள், மர இலை, தழைகளைக் கொண்டு பந்தல் அமைத்தனர்.

மரத்தை சுற்றி இலை பந்தல் இருந்தால் அங்கு கடவுள் இருக்கிறார். அது வழிபட வேண்டிய இடம் என்ற எண்ணம் ஏற்பட்டது. கற்கோவில்கள் அமைக்கப்படுவதற்கு இவைதான் முன்னோடியாக இருந்தன. இவைதான் கோவில்கள் தோன்ற காரணமாக இருந்தன. மக்களின் சிந்தனை வட்டம் விரிவடைய, விரிவடைய இலை பந்தல் ஆலய வழிபாட்டிலும் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின.

தங்களுக்கு விருப்பமான இடங்களில் எல்லாம் இறை உருவங்களை அமைத்தனர். மலைகள், கடலோரங்கள், ஏரிக்கரை ஓரங்கள், அடர்ந்த காடுகளுக்கும் சென்று இறைவன் உருவங்களை அமைத்தனர். இதற்கு பிறகுதான் இறை வழிபாட்டில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்தது. மலை, காடு, ஏரி, குளம், கடலோரம் போன்ற பகுதிகளில் உள்ள கடவுளை ஊருக்குள் அழைத்து வந்து எழுந்தருள செய்ய விரும்பினார்கள்.

இந்த வழிபாடு மாற்றத்துக்கான குறிப்புகள் சங்ககால பாடல்களில் உள்ளன. இது ஊர்கள் தோறும் இறை வழிபாட்டை வியாபிக்கச் செய்தது. எங்கெல்லாம் இறை திருவுருவங்களை பிரதிஷ்டை செய்தார்களோ, அங்கெல்லாம் கோவில் கட்டினார்கள். அந்த கோவில்களில் எழுந்தருளி உள்ள கடவுளுக்கு தினம், தினம் தடபுடல் விருந்து கொடுத்து வழிபட்டனர்.

உயிர்களை பலியிடுதல் என்பது இதில் இருந்துதான் தோன்றியது. பின்னர் இறை வழிபாடுகளில் போட்டியும், புதுமையும் சேர்ந்தன. பலியிடுதல், மலர் தூவுதல், நைவேத்தியம் படைத்தல், பண் இசைத்து பாடுதல், வெறியாட்டு நடத்துதல் என்று தங்களது விருப்பங்களை எல்லாம் இறை வழிபாட்டில் புகுத்தினார்கள்.

பிறகு ஒரு காலக் கட்டத்தில் கடவுள் வடிவங்களை வீதி, வீதியாக எடுத்துச் செல்லும் பழக்கம் தோன்றியது. மக்கள் தங்கள் வீடு முன்பு நின்று கடவுளை வரவேற்று, உபசரித்து மனநிறைவு பெற்றனர். இதைத் தொடர்ந்து வந்த காலங்களில் மக்கள் சிந்தனை பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப சுயநலமாக மாறி இருந்தது.

தெருவில் வந்து செல்லும் இறைவன் நிரந்தரமாக தம் வீட்டுக்குள்ளேயே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்தனர். அதன் விளைவு மரத்தில் தோன்றி, மலைக்காடுகளில் தவழ்ந்து, ஊருக்குள் புகுந்த தெய்வம், வீடுகளுக்குள்ளும் வந்து விட்டது. அப்படி வந்த இறை திருவுருங்களை அரசர்கள், வசதி உள்ளவர்கள் வெளியில் அனுப்ப சம்மதிக்கவில்லை.

காலம் செல்ல.... செல்ல.... இது எங்கள் குல தெய்வம் என்று வரையறுத்துக் கொண்டனர். இதனால்தான் பல நூறு ஆண்டுகள் கடந்தும், பல தலைமுறைகளை கண்ட பிறகும் பல ஊர்களில் இன்றும் குல தெய்வ வழிபாடு உச்சத்தில் இருப்பதை பார்க்க முடியும். ஆக, இயற்கையோடு இயைந்த நம் முன்னோர்கள் வழிபாடு, மாறி, மாறி, அருவம், உருவ நிலைக்கு வந்து, அந்த உருவத்தை சுற்றி கோவில் எழுந்ததை புரிந்து கொண்டிருப்பீர்கள்.

ஐ வகை நிலங்களுக்கும் தனி தனி தெய்வங்கள் இருந்ததை சங்க காலத்தில் உறுதி செய்தனர். காலம் மாறியது. சங்க காலம் மறைந்து, சங்கம் மருவிய காலம் உதயமானது. இந்த மாற்றத்தால் இறை உருவம் தரும் சக்தியால் கடவுள் தங்களிடம் பேசுவதாக மக்கள் கருதினார்கள். அந்த கால புலவர்கள் இவற்றை சற்று கற்பனை சேர்த்து சுவைபட பாடினார்கள்.

இதற்கிடையே வேத சடங்குகள் எனும் வேள்வி முறை தோன்றியது. காடுகளிலும், நீர் நிலை ஓரங்களிலும் வேள்விகள் நடத்தப்பட்டன.  வேள்வி நடத்தப்பட்ட இடங்கள் புனித பகுதிகளாக கருதப்பட்டன. அந்த இடங்களில் எல்லாம் பழந்தமிழர்கள் கோவில்களை கட்டினார்கள். அதனால்தான் தமிழ்நாடு முழுவதும் கோவில்களாக உள்ளது.

உலகில் உள்ள கோவில்களில் பாதிக்கு மேல் இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் உள்ள கோவில்களில் 60 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. சமீபத்திய ஒரு கணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டில் அரசு சார்பு புராதன கோவில்கள் 34 ஆயிரத்து 491 உள்ளன. தனியார் பராமரிக்கும் பழைய ஆலயங்களையும் சேர்த்தால் தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சம் பழைய ஆலயங்கள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

பழந்தமிழர்கள் தாங்கள் அறிந்திருந்த நடனம், இசை, ஓவியம் உள்ளிட்ட எல்லா நுண்கலைகளை கோவிலோடு தொடர்புபடுத்தி யதால்தான், கோவில்கள் எண்ணிக்கை இந்த அளவுக்கு பெருகி விட்டது. சமூக அமைதி, நிலையான, மகிழ்ச்சியான வாழ்வு, நேர்மையான அரசாட்சி, கலை உணர்வு, திட்டமிட்ட சுகாதாரமான வாழ்க்கை நெறிமுறை போன்றவை தமிழர்களின் கோவில் கட்டும் ஆர்வத்துக்கு உறுதுணையாக இருந்தன.

மன்னர்கள், குறுநில மன்னர்கள் போட்டி போட்டு ஆலயங்களை பிரமிப்பு ஏற்படுத்தும் வகையில் கட்டினார்கள். அரசனுக்கு செய்யப்படும் எல்லா உபாசாரங்களும் கோவில்களுக்கு இடம் மாறின.

இதனால்தான் கடவுளை பூபாளம் பாடி துயில் எழுப்புவதும், நீராடி, அபிஷேகம் செய்து ஆராதனைகள் புரிவதும், பிறகு மன்னன் நகர் உலா போவது போல கடவுளும் வீதி உலா எழுந்தருள்வதும், இரவில் நீலாம்பரி பாடி இறைவனை தூங்க வைப்பது போன்றவை நடைமுறைக்கு வந்தன. அந்த காலத்தில் அரசனின் முடிசூட்டு விழா, திருமண விழா பிரமாண்டமாக நடைபெறும்.

இறை உருவங்களுக்கும் இவை செய்யப்பட்டன. மன்னருக்கு தேர் இருப்பது போல கடவுளுக்கும் தேர் செய்யப்பட்டது. கோவில்கள் பெருகிய பிறகு வேள்வி மத சடங்குகள் முக்கியத்துவம் இழந்தன. விக்கிரக வழிபாட்டுக்கான ஆகம சடங்குகள் முன்னிலைப் பெற்றன. நியமம், கோட்டம், நகரம், பள்ளி என்ற பெயர்களில் எல்லாம் அழைக்கப்பட்டு வந்த வழிபட்டுத் தலங்கள் கோவில்கள் என்று மாறின.

மாட வீதிகள், பிரகாரங்கள் தோன்றின. தினசரி பூஜை வழிபாடுகள், சிறப்பு விழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. தேவாரம், திருவாசம், நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் மத புராணங்கள் உருவாகின. கடவுளையும், ஆலயங்களையும் புகழ்ந்து எழுதப்பட்ட இந்த இலக்கியப் பாடல்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்கிறார்கள்.

இதன் மூலம் உலகில் முதன் முதலாக மக்களை கோவிலுக்கு அழைத்து வந்து, கடவுளை வழிபட வைத்தது, இந்து மதம்தான் என்பது உறுதியாகிறது. அது மட்டுமின்றி இந்த இலக்கியங்கள் உருவாவதற்கு முன்பே தமிழ்நாட்டில் வளமான ஆலய வழிபாடு இருந்தது என்பதும் உறுதியாகிறது. இந்த ஆலயங்களை எல்லாம் நம் முன்னோர்கள், சும்மா இஷ்டப்படி கட்டி விடவில்லை.

ஒவ்வொரு ஆலயத்துக்குள்ளும், ஒவ்வொரு வித ஆகம, ஐதீக ரகசியங்களை ஏற்படுத்தினார்கள். குறிப்பாக ஆலய அமைப்பில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ராமாயணம் எழுதப்படுவதற்கு முன்பே இருந்த ராமேசுவரம் கோவிலை இதற்கு உதாரணமாக சொல்லலாம். கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆகம விதிப்படியிலான கோவில்கள் அதிகரித்தன.

அவை, 'உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்' என்பதாக உள்ளன. அதாவது நம் முன்னோர்கள் நம் உடலே கோவில் என்றனர். நமது உடலுக்கும் ஆலய அமைப்புக்கும் அப்படி ஒரு அரிய ரகசியம் இருக்கிறது. 

தீப வழிபாட்டின் சிறப்பு

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் ஒரு சமயம் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டனர். அப்போது மகாவிஷ்ணு அவர்களுக்குள் புகுந்து கொண்டு நெருக்கத்தை ஏற்படுத்தினார்.

மகாவிஷ்ணுவால் தான் தங்களுக்குள் நெருக்கடி உண்டாகிறது என்பதை உணராத பொய்கையாழ்வார் பூமியை தீபமாகவும், நீரை எண்ணெய்யாகவும் கருதி பதிகம் பாடினார். பேயாழ்வார் சூரியனை தீபமாக எண்ணி பதிகம் பாடினார். பூதத்தாழ்வாரோ, அன்பை தீபமாகவும் ஆர்வத்தை எண்ணெய்யாகவும் உருகும் மனதை திரியாகவும் வைத்து பதிகம் பாடினார்.

இவ்வாறு மூன்று ஆழ்வார்களும் தீபத்தை வைத்து பதிகம் பாடியதை கேட்ட மகாவிஷ்ணு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மறு வினாடியே ஆழ்வார்கள் முன்பு தோன்றி மகாவிஷ்ணு காட்சி கொடுத்தார். தீப வழிபாட்டால் இறைவனை எளிதில் அடைய முடியும் என்பதை ஆழ்வார்கள் இந்த நிகழ்ச்சி மூலம் உணர்த்தி உள்ளனர்.

தீப வழிபாட்டுக்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். நாளை மகாவிஷ்ணு சன்னதியில் தீபம் ஏற்றும் போது இதை மனதின் ஒரு ஓரத்தில் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

தானத்தின் பலன்கள்

ஒருவர் கொடுக்கும் சிலவகை தானங்களால் மறு பிறவியில் அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் கூறப்பட்டுள்ளது. அவற்றை இங்கு பார்க்கலாம்.

* திருக்கோவில்களை புனரமைப்பதற்கு உதவி செய்வதால், பூரண ஆரோக்கியம், உத்தமியான மனைவி, நற்குணம் நிறைந்த குழந்தைகள் கிடைப்பார்கள்.

* தங்கத்தை தானமாக வழங்குவதால், குறைவில்லாத ஐஸ்வரியம் உண்டாகும்.

* வெள்ளியை தானம் செய்வதால் அழகான சரீரம் கிடைக்கப்பெறுவர்.

* எள் தானம் செய்வதன் மூலம் பித்ருக்களின் ஆசி, சந்தான பாக்கியம், சந்ததி விருத்தி போன்ற நலன்கள் கிட்டும்.

* தானியங்களை தானம் செய்தால், குறைவில்லாத அன்னம் கிடைக்கும்.

* கோமாதா தானம் செய்வதால் உத்தமமான குடும்பத்தின் பிறப்பு, தாயன்பு வந்தடையும்.

* பிராணிகளின் தாகம், பசியை போக்கினால் நோயற்ற வாழ்வு வந்து சேரும்

வில்வத்தில் அதிர்வை உணரலாம்

சிவாலயங்களில் உள்ள லிங்கத்தில் இருந்து, இந்த பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள சக்தி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த சக்தி அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இதனால்தான் பழமை சிறப்புமிக்க ஆலயங்களுக்குள் நாம் செல்லும்போது அதிர்வை உணர முடியும். சிவன் உறைந்துள்ள லிங்கம் மீது நாம் வில்வ இலைகளைப் போட்டு பூஜை செய்யும்போது, லிங்கத்தில் இருந்து வெளியாகும் அதிர்வு வில்வ இலைகள் மீது பதியும். இதையடுத்து அந்த அதிர்வுகளை வில்வ இலைகள் முழுமையாக ஈர்த்து தக்க வைத்துக் கொள்ளும்.

அந்த ஆற்றல் வில்வ இலைகளுக்கு இருக்கிறது. லிங்கமூர்த்தி மீது வைத்து எடுக்கப்படும் வில்வ இலைகளை, நீங்கள் அர்ச்சகரிடம் இருந்து கையில் வாங்கியதுமே, அந்த அதிர்வை உணர்வீர்கள். அந்த அதிர்வு உங்கள் உடல், மனம், ஆரோக்கியத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் மகிமை கொண்டது.

இதனால்தான் வில்வ இலையை புனிதமாக கருதுகிறார்கள். அடுத்தத் தடவை சிவனை வழிபட்டு முடிந்ததும், மறக்காமல் வில்வ இலையை கேட்டுப் பெறுங்கள்.

சிவபெருமானை மகிழ்விக்கும் வில்வ இலை அர்ச்சனை

மகா சிவராத்திரி தினமான இன்று, சிவபெருமானின் அருள் பெற விதம், விதமான அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் கோலாகலம் நிறைந்துள்ளது.

அபிஷேகப் பிரியரான சிவனுக்கு, மகா சிவராத்திரி தினத்தன்று அன்னை பார்வதி தேவி சிறப்பாக அபிஷேகம் செய்து வழிபட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இன்று நாம் சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் சகல தோஷங்களும், துன்பங்களும் நீங்கும். நோய் நீங்கி, மனதில் புத்துணர்ச்சியும், தெளிவும் உண்டாகும்.

இன்று முதல் ஜாமத்தில் சோமாஸ் கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தெட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் ஜாமத்தில் லிங்கோத் பவரையும், நான்காம் காலத்தில் சந்திர சேகரையும் வழிபட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த 4 கால பூஜைகளிலும் கலந்து கொள்பவர்களுக்கு முக்தி கொடுத்து அருள வேண்டும் என்று சிவபெருமானிடம், பார்வதிதேவி வரமே வாங்கி இருக்கிறார்.

இவ்வளவு சிறப்பு மிக்க சிவராத்திரியன்று சிவாலயங்களில் அபிஷேக, ஆராதனைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். நிறைய செலவு செய்து, அபிஷேகப் பொருட்கள் வாங்க முடியவில்லையே என்று சிலர் நினைப்பதுண்டு. அந்த மனக்குறையே வேண்டாம். ஏனெனில் சிவனுக்கு மிக, மிக பிடித்தமானது மிக குறைந்த விலையில் கிடைக்கும் வில்வ இலையே.

இந்துக்களின் வழிபாட்டில் வில்வ இலைக்கு முக்கிய பங்கு உண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாக கருதப்படுகிறது. இந்த வில்வம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. வில்வ மரத்தின் இலைகளைப் பார்த்தால் அவை மூன்று, மூன்றாக இருப்பதை அறியலாம்.

இந்த மூன்று இலைகள், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை குறிப்பதாக ஐதீகம். வில்வத்தின் இடது பக்கஇலை பிரம்மா. வலது பக்க இலை - விஷ்ணு. நடுவில் இருக்கும் இலை சிவன். வில்வ இலைகளை நாம் பயன்படுத்தும் தினத்துக்கு ஏற்பவும் பலன்கள் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் வில்வ இலை கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.

அரச மரம் போல வில்வமும் நிறைந்த மகிமை கொண்டது. வில்வ மரத்தின் எல்லா பாகங்களும் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. சைவர்கள் சிவனை வழிபட வில்வத்தை முக்கிய அர்ச்சனைப் பொருளாக பயன்படுத்துவது ஐதீகம். வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும்.

பாற்கடலில் லட்சுமி தோன்றிய போது அவளுடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும். வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி கோடி ருத்திரர்கள். சிவனிற்கு பிரியமான வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் சிவனின் திருவருளை பெறமுடியும்.

வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். ஒரு வில்வஇலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது லட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை.

வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.. கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.

வில்வ இலையை சாலி கிராம் உருவம் என்பார்கள். இதன் அடிப்படையில் பார்த்தால் சிவனுக்கு நாம் செய்யும் வில்வ இலை அர்ச்சனையால், நமது ஆத்மாவை, நாம் பரமாத்மா எனப்படும் சிவனிடம் அர்ப்பணிக்கிறோம் என்று அர்த்தமாகும். இதனால் நாம் சுத்தியைப் பெறுகிறோம். திருவையாறு, திருவெரும்பூர், ராமேஸ்வரம் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது.

சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம் ஒரு கற்ப மூலிகையாகும்; இது அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மையுடையது. வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது. திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டு இலைகளைக் கொண்டு அமைந்துள்ளது.

அதாவது 5, 7, 9 என்று இலைகளின் எண்ணிக்கை அந்த மரத்தின் உச்சியில் அதிகரித்துக் கொண்டே போகும். இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும், பிரம்ம வில்வம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்படுகின்றன. வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும் போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும்.

சிவனின் அருளைப் பெறமுடியும் என்று சொல்லப்படுகிறது. ஏழரை சனி பீடித்திருப்பவர்களுக்கு சரியான பரிகாரம் வில்வம்தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வில்வ இலையை தமிழ் மாத பிறப்பு, திங்கட் கிழமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.

வில்வ தளம் என்பது மூன்று இலைகள் சேர்ந்தது. அவற்றை தனித்தனியாகக் கிள்ளக் கூடாது என்பது ஐதீகம்.வில்வத்திற்கு கூவிளம், கூவிளை என்ற மற்ற பெயர்களும் உண்டு. இதனை “சிவமூலிகைகளின் சிகரம்“ எனவும் அழைப்பர். இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரணாக இருப்பதுமான வில்வ இலை கொண்டு இன்று அர்ச்சனை செய்து நன்மைகள் பெறலாம்.

மகிழ்ச்சி அதிகரிக்க மகா சிவராத்திரியைக் கொண்டாடுங்கள்

உலகம் சிவமயமாக இருக்கின்றது என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். மாசி மாதம் என்றாலே மகம் நட்சத்திரம் தான் நினைவிற்கு வரும். அது போல சிவராத்திரி திருநாளும் மறக்கமுடியாத மகத்துவம் நிறைந்த நாளாகும். அம்பிகைக்கு உகந்த நாள் நவராத்திரி. அது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகின்றது.

அணிதிகழும் சிவனுக்கு கொண்டாடும் விழா சிவராத்திரி விழா. அது ஓரிரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடப்படுகிறது. உமாதேவி விளையாட்டாக சிவபெருமான் கண்களைத் தன்னுடைய கரங்களால் மூடியதால் உலகமே இருளால் சூழப்பெற்றது. அந்த நாளே 'சிவராத்திரி' என்றும் புராணங்கள் சொல்கின்றன.

அந்த இரவில் ஒளிவேண்டித் தவித்த தேவர்களுக்கெல்லாம் ஒளிகொடுக்கச் சொன்ன சிவன் தன் நெற்றிக் கண்களைத் திறந்ததாகவும் கருதப்படுகின்றது. எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற எல்லோருமே இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். சிவராத்திரியன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும்.

அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். வலம்புரிச்சங்கால் அபிஷேகம் செய்து, வில்வ இலையால் அர்ச்சித்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் வைத்து சிவனுக்குரிய பாடல்களைப் பாடி, பஞ்சாட்சர மந்திரத்தைப் பலமுறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் சேரும். சிவனுக்குரிய ராத்திரி சிவராத்திரி.

அன்றைய தினம் சிவபெருமானை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபடுவதன் மூலம் சிறப்புகள் அனைத்தும் வந்து சேரும். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிவுடைய அன்னை பார்வதி தேவியையும் அன்று வணங்கினால் ஊரும், உறவும் போற்றிக் கொண்டாடும் விதத்தில் உங்கள் வாழ்க்கை அமையும்.

எல்லா உயிர்களுக்கும் அம்மையாகவும், அப்பனாகவும் விளங்கும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாட்களில் சிவராத்திரியும் ஒன்றாகும். இந்த விரத நாளில் மனமுருகி வழிபட்டால் தினமும் தித்திக்கும் செய்திகள் வந்து சேரும். மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தசி திதியில் வருவதாகும்.

அன்று இரவு நான்கு சாமங்கள் சிவபூஜை செய்து விரதம்இருந்தால் நாள்தோறும் நற்பலன்கள் நடைபெறும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் நான்காவது சாமத்தில் பூஜையை முடித்து, விடியற்காலையில் நீராடிய பிறகு உணவு உண்பது உத்தமம். திருவண்ணாமலையில் அடிமுடி தேடி அலுத்துத் திரும்பிய பிறகு அடிபணிந்த திருமாலுக்கும், பிரம்மனுக்கும் ஜோதிவடிவாய்க் காட்சி தந்தார் சிவபெருமான்.

அந்த நிகழ்ச்சி நடைபெற்றது சிவராத்திரி நாளில் தான். கோவில்களில் பெருச்சாளி ஓடி, ஆடித் திரிவதைப் பார்த்திருப்பீர்கள். சிவன் வீற்றிருந்து அருள் வழங்கும் கோவில் ஒன்றில் இதே போல் ஒரு பெருச்சாளி திரிந்தது. அந்தக் கோவிலில் எரிந்து கொண்டிருந்த நெய் விளக்கின் நெய் வாசனை பெருச்சாளியின் மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது.

அதைச் சுவைப்பதற்காக விளக்கின் மேல் ஏறியது. மங்கலாக எரிந்து கொண்டிருந்த விளக்கின் ஒளி அருகே எலி வந்தது. எலியின் மூக்கு திரியில் பட்டது. உடனே மங்கலாக எரிந்த விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. எலியின் மூக்கில் வெப்பம் பட்டதால் அது தாவி ஓடி விட்டது. எலி தன்னை அறியாமலேயே திரியை மூக்கால் தூண்டிவிட்டது.

இதனால் ஒளி பிரகாசமானது. இந்த சம்பவத்திற்கு காரணமான பெருச்சாளியை மூவுலகையும் ஆளும் மகாபலிச் சக்கரவர்த்தியாக மறுபிறவியில் இறைவன்   படைத்தார். எனவே சிவாலயத்தில் நாம் சிவராத்திரி அன்று செய்யும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொருகைங்கரியமும் நம்மை உயர்த்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

'நமச்சிவாயத்தை' நான் மறவேனே! என்று சிவராத்திரியன்று 'சிவாய நம' என்று சிந்தித்து இருந்தால் அபாயம் ஒரு நாளுமில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். மங்கல நாளான சிவராத்திரியை மறவாமல் கொண்டாடுவோம்.

மகிழ்ச்சியை அனைவரும் வரவழைத்துக் கொள்ள மகேசன் அருள்புரியட்டும். சிவராத்திரியன்று மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிவரை ஒவ்வொரு காலங்களிலும் சகல சிவாலயங்களிலும் பூஜைகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு சிவன்-உமையவள், நந்தி ஆகியோரின் நல்லருளைப் பெற்று நலமுடன் வாழலாம்