Friday, April 24, 2015

காரணமில்லாமல் காரியமில்லை

ஒரு கல் விழுந்தால், ஏன் விழுகிறது? என்று கேட்கிறோம். காரணமில்லாமல் காரியமில்லை என்று எண்ணுவதால் தான் இந்த கேள்வியே எழுகிறது.ஏன் ஒரு காரியம் நடக்கிறது என்று எண்ணும்போதே நடப்பவை அனைத்திற்கும் ஒரு ஏன் இருக்கவேண்டும் என்று முடிவு கட்டிவிடுகிறோம்.

அதாவது அந்த காரியம் நடப்பதற்கு முன்னால்,அதைத் தொடங்குவதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும் என்று என்ணுகிறோம்.இந்த முன்னால் பின்னால் ஆகிய கருத்துக்களையே காரணகாரிய நியதி என்று அழைக்கிறோம்.இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்துமே மாறி மாறி காரணமாகவும் காரியமாகவும் இருக்கின்றன.

சில பொருட்களின் காரணமே பின்னால் காரியமாக வருகிறது. அந்த காரணமும் ஏற்கனவே இருந்த ஒன்றின் காரியம் ஆகும்.மதத்தைப்புரிந்து கொள்ள இந்த சிந்தனை மிக அவசியம்.

வேதாந்த மதத்தால் விஞ்ஞான உலகின் சவால்களை எதிர்கொள்ள முடியும்.மிகப் பெரிய பொதுநிலை மற்றும் பரிணாம வாதத்துடன் அதனால் தன்னை ஒப்பிட முடியும்.ஒரு பொருளின் விளக்கம் அதன் உள்ளிருந்தே வருகிறது என்ற நியதியையும் வேதாந்தம் திருப்தியாக பூர்த்தி செய்கிறது.

No comments:

Post a Comment