Sunday, April 26, 2015

நிஷ்கபடமான பக்தி வேண்டும்

நிஷ்கபடமான பக்தி வேண்டும்
சாரதாரமணன்
பரமாத்மா சகல ஜகத்துக்கும் நியாயமானவன். சமஸ்த உலகத்தையும் சம்ரக்ஷிக்கக் கூடியவன். அந்தப் பரமாத்மா உண்மையாக ஒருத்தனே ஆக இருந்தாலும் பக்தகோடிகளை அனுக்ரஹம் செய்வதற்காக பலரூபங்களில் காட்சியைத் தருகிறான் என்கிறது சாஸ்த்திரனுடைய சித்தாந்தம். பகவான் ஒவ்வொரு சமயத்திலும் கூட ஒவ்வொரு ரூபத்தை எடுத்துக் கொண்டு ராக்ஷஸ ஸம்காரம் செய்து உலகத்தைக் காப்பாற்றினான் என்று புராணங்கள் சொல்கின்றன. அப்படி பகவானுடைய எத்தனையோ மூர்த்திகளில் பகவான் சுப்ரமண்யருடைய மூர்த்தியும் ஒன்று. அதுதான் கார்த்திகேயன், முருகன் என்கிற எத்தனையோ பெயர்களால் ப்ரசித்தியைப் பெற்றது.
பகவத் பாதாள் சொன்னார், நம்முடைய எல்லா இந்த்ரியங்கள் அந்த பகவானுடைய சேவையிலேயே இருந்து கொண்டு இருக்கட்டும் என்று சொன்னார். அதற்கு அவர் பகவத் சந்நிதியிலேயே நாம் இப்படி ப்ரார்த்தனை செய்யலாம் என்றார். “பகவானே! நான் என்னுடைய கண்களால் உன்னையே பார்க்கும்படி எனக்கு அனுக்ரஹம் செய். என்னுடைய காதால் உன்னுடைய ஸ்தோத்ரத்தைக் கேட்கும்படி அனுக்ரஹம் செய். என்னுடைய வாயால் உன்னுடைய நாமத்தையே உச்சாரணம் செய்யக் கூடிய ஓர் அனுக்ரஹம் செய். என்னுடைய கைகள் உன்னுடைய பூஜையைச் செய்யக்கூடிய ஒரு க்ருபையைச் செய். என்னுடைய சரீரம் உனக்குத்தான் சேவை செய்யக்கூடிய ஓர் அனுக்ரஹம் செய். இனி அது, இது என்று எதற்கு? என்னுடைய மனசிலே என்ன சிந்தனை வந்தாலும் அதெல்லாம் உன்னைப் பற்றித்தான் வரணும். இப்படி அனுக்ரஹம் செய்” என்று பகவத் பாதாள் நாம் பகவத் சந்நிதியிலே என்ன ப்ரார்த்திக்கணும் என்பதை நமக்கு சொல்லித் தந்தார். அது நாம் வந்து இந்த ப்ரார்த்தனையை பகவான் முருகன் சந்நிதியிலும் செய்யலாம். கணபதி சந்நிதியிலும் செய்யலாம். ஈஸ்வரன் சந்நிதியிலும் செய்யலாம். அம்பாள் சந்நிதியிலும் செய்யலாம்.
பகவான் கீதையிலே சொன்னார்:
“யோயுயாம் யாம் தனம்பக்த:
ஸ்ரத்தையா அர்ச்சிதம் யுத்சதி
தஸ்ய தஸ்ய அசலாம் ஸ்ரத்தாம்
தாமே வ விஜதாம் யஹம்”
என்றார். நமக்கு முருகன் மேலே பக்தி இருக்கு. ரொம்ப சந்தோஷம். முருகனுடைய உபாசனையிலே உனக்கு அந்தப் பக்தியே அதிகமாக இருக்கட்டும். அதிலேயே உனக்கு நிறைய பலம் வரும். இன்னொருத்தான் வந்து உன்னை ஆட்சேபம் பண்ணக்கூடாது. ‘நீ என்ன முருகன் உபாசனை பண்ணுகிறாயே! பெருமாள் கோவிலுக்குப் போவதில்லையா?’ அப்படி என்று யாரும் நம்மை ஆட்சேபம் பண்ணக்கூடாது. அதே உனக்குப் பெருமாள் பேர்ல ரொம்ப பக்தி இருந்தால் அதையே செய்யலாம். இன்னொருத்தன் வந்து உன்னை ‘நீ முருகன் கோவிலுக்குப் போறதில்லையா?’ என்று கேட்கக் கூடாது. ஏனென்றால் முருகன் கோவிலுக்குப் போனாலும் பெருமாள் கோவிலுக்குப் போனாலும் நமக்குப் பலம் கொடுக்கக்கூடிய பரமாத்மா ஒருத்தனேதான்.
பகவான் சொன்னார் அங்கே:
“ஸதயா ஸ்ரத்தையா றக்த: தஸ்யா ராதன மேஹதே
லபதேசதாக் காமான் மயை வ விஹ்தான் ஹிதான்”
நீ எந்தக் கோவிலுக்குப்போய் என்ன ப்ரார்த்தனை பண்ணினாலும் உனக்கு பலன் கொடுக்கக்கூடியது அந்த ஒரே பரமாத்மா. இந்த ரூபத்தில் இருந்து பலன் கொடுக்கிறான். அந்த ரூபத்தில் இருந்து பலன் கொடுக்கிறான். எந்த ரூபத்தில் இருந்தால் என்ன? ஒரே பரமாத்மா எந்த ரூபத்தில் இருந்து உனக்குப் பலன் கொடுத்தால் என்ன? கொடுக்கிறவன் ஒருத்தன் தானே? அப்போது அந்தப் பரமாத்மா எந்த ரூபத்தை உபாஸித்தால் நமக்கு என்ன? ஆனால் மனசுலே பரமாத்மாவைத் தவிர வேறு எதையும் நினைக்கக் கூடாது. ஏனெனில் லௌகீகமான விஷயங்களை நினைத்தால் அதனால் ப்ரயோஜனம் என்ன? ப்ரயோஜனம் என்பது ஒண்ணும் கிடையாது. அதனாலே வெறும் காலஹரணம் ஒன்றுதான். நம்முடைய பவித்ரமான காலம், சமயம் இந்த லௌகீகமான விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தால் வீணாப்போய்க் கொண்டு இருக்குமே தவிர அதனால் உபயோகம் ஒண்ணும் இல்லை.
இதற்காகத்தான் பகவத் பாதாள் ஓர் இடத்திலே சொன்னார்:
“முகூர்த்த மாத்ரே அதிக்ராந்தே பகவத் சிந்தனம் வினா
ப்ஷ்யுர் முஷிகே நிர்யுக்தா மாக்ரஞ்தி இந்தவம்”
பகவானுடைய சிந்தனை இல்லாமல் ஒரு முகூர்த்த காலம் - முகூர்த்தம் என்று சொன்னால் 48நிமிஷம் (இன்றைய நம் கணக்கில்) 2நாழிகை ஒரு முகூர்த்தம் ஒரு நாழிகை என்றால் 24நிமிஷம் அப்படி ஒரு முகூர்த்த காலம் - பகவத் சிந்தனை இல்லாமலே போய்விட்டது என்று சொன்னால் அவன் ரொம்ப வருத்தப்படவேண்டும். என்னுடைய ஜீவனத்துலே இப்படி ஒரு சமயம் பகவத் சிந்தனை இல்லாமலே போய்விட்டதே! எப்படி உங்களுடைய ஒரு பொருள் எவனாவது ஒரு திருடன் திருடிக் கொண்டு போனால் எவ்வளவு வருத்தம் உங்களுக்கு வருமோ அவ்வளவு வருத்தம் வரணும்.
“தஸ்புன் முதிதே ஏவ யுக்த மாத்ரம் திதும் துவம்”
நம்முடைய பொருளை ஒரு திருடன் திருடிக் கொண்டு போனால் எவ்வளவு வருத்தம் வருமோ அவ்வளவு வருத்தம் வரணும். ‘ஐயோ! என் பொருள் போய்விட்டதே! நகை போய்விட்டதே! பணம் போய்விட்டதே! அது போய்விட்டது. இது போய் விட்டது என்று வருத்தப்படுவோமே! ஏன் வருத்தப்படுவோம்? ரொம்ப மதிப்பான பொருள் போய்விட்டது அப்பா! எல்லாவற்றையும் மதிப்பான பொருள் என்று சொன்னால் சமயம் இந்த தொலைந்து போன பொருள் மறுபடி எப்படியாவது கிடைக்கலாம். நீங்கள் முயற்சி செய்தால் கிடைக்கும். அந்த நகையோ, அந்தப் பணமோ, அது எதுவானாலும் கூட முயற்சி செய்தால் கிடைக்கும். ஆனால் இந்தச் சமயம் என்பது மட்டும் கிடைக்காது. ஆனால் போனது போனதுதான். உங்களுக்கு பகவான் நூறுவயசு ஆயுசு கொடுத்திருந்தாலும் ஒரு நாள் போய் விட்டது என்றால் இனி உங்களுக்கு தொண்ணூற்று ஒன்பது வருஷம் 11 மாசம் 29 நாள்கள்தான். இனி அந்த முப்பதாவது நாள் போயாச்சு. அதற்கு நீங்கள் ஒரு கோடிரூபாய் கொடுத்தாலும் வராது. ஆகையால் மனுஷ்யனுடைய ஜீவிதத்தாலும் வராது. ஆகையால் மனுஷ்யனுடைய ஜீவிதத்துலே ரொம்ப அமுல்யமான வஸ்து என்று சொன்னால் சமயம். அந்தச் சமயத்தை வீணாக்கக் கூடாது. நாம் முக்கியமாக அமுல்யமான சமயத்தை வீணாக்குவது, சார்த்தகமாக்குவது என்றால் எப்படி? என்று சொன்னால் பகவத் சிந்தனையிலே அந்தச் சமயம் கழிந்தால் அது ஸார்த்தகம். பகவத் சிந்தனை இல்லாமல் வேறு சிந்தனையில் இந்தச் சமயம் போனால் அது வீண். அதனால் நம்ம ஜீவிதத்துலே அமுல்யமானது சமயம். அதிலேயும் கூட அந்தச் சமயத்திலே நமக்கு நம்முடைய வயிற்றுப் பிழைப்புக்காக வேறு விதமாகவே அந்தச் சமயத்தை விநியோகம் பண்ண வேண்டியிருக்கிறது. அதனால்தான் முன்னோர் ஒரு கணக்குப் போட்டார்கள். நிஜமா மனுஷன் தன்னுடைய ஜீவனத்திலே எவ்வளவு சமயத்தைத் தர்மாசரணத்துக்கு ஒதுக்க முடியும் என்று சொல்லி கணக்குப் போட்டுப் பார்த்தார்கள்.
சாதாரணமாக ஜீவனத்திலே என்னமோ ராத்திரி வேளையில் தூங்க வேண்டியிருக்கிறது. அதனால் அந்த ஏழு, எட்டு மணி நேரம் ப்ரதி தினமும் வேறு ஒண்ணும் பண்ண முடியாது. தூக்கத்தில்தான் போய் விடுகிறது. அப்போது ஜீவிதத்திலே உங்களுக்கு ஒரு நூறு வயசு ஆயுசு என்றால் அதிலே மூன்றாவது ஒரு பங்கு தூக்கத்திலே போய்விடுகிறது. ஒரு 33 வருஷம் தூக்கத்துக்காக எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. 100 வயசு (வருஷம்) இருக்கு என்று வைத்துக் கொண்டால் அது இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்தக் காலத்திலே 100 வருஷம் இருக்க முடிந்தாலும் அதிலே மூணாவது பங்கு தூக்கத்துக்குப் போய் விடுகிறது. மீதியிலே எவ்வளவு என்று கேட்டால் பால்யத்திலே கொஞ்சம் போய்விடுகிறது. ஏனெனில் சிறு வயசுலே ஒண்ணும் பண்ணமுடியாது. முதலில் கொஞ்ச நாள் பேச்சே வராது. அப்புறம் பேச்சு வந்த பின்பு கொஞ்சம் விளையாட்டு புத்தி இருக்கும். அப்புறம் ஸ்கூலுக்குப் படிக்கப் போகணும். அப்படி பால்யத்திலே ஒரு பத்து, பதினைந்து வருஷம் அதிலே போய் விடுகிறது. வயசானத்துக்கு அப்புறம், 70, 75 வந்த பிற்பாடு ஒண்ணும் பண்ண முடியாது. அதிலே கொஞ்சம் போய் விடுகிறது. இனி நடுவிலே கொஞ்சம் மிச்சம். அதிலே வந்து சரி வயிற்றுப் பிழைப்பு. ஆபீஸுக்குப் போகணும். அதுக்குப் போகணும், இதுக்குப் போகணும். இதிலே கொஞ்சம் பேர் என்னப்பா ஸந்த்யாவந்தனம் செய்தாச்சா? “என்றால் எங்கே ஸந்த்யா வந்தனம்? ஏழு மணிக்கு ஓடவேண்டியிருக்கே ஆபீஸுக்கு? நீங்க ஸந்த்யாவந்தனம் பண்ணச் சொல்றேள். ஏழு மணிக்கு ஆபீஸ்க்கு ஓட வேண்டியிருக்கிறது. அதனால் ஆபீஸுக்கு ஓட வேண்டியிருப்பதால் ஸந்த்யாவந்தனத்துக்கு அவகாசம் இல்லை.” என்பர். ஆபீஸுக்கு ஓடுவதை நிறுத்தற சமயத்துலே வயசாகி விட்டது என்று சொல்றேள். ஆபிஸுக்கு ஓடுவதற்கு முன்னாடி வயசு சின்னவயசு என்று சொல்றேள். இடையிலே ஆபீஸுக்கு ஓட வேண்டியிருக்கு என்கிறீர்கள். ஆனால் இதெல்லாம் கணக்கு போட்டுப் பார்க்கிறபோது மனுஷ்யனுக்கு தர்மாசரணம் பண்ணுவதற்கு பகவத் சிந்தனை பண்ணுவதற்கு எவ்வளவு சமயம் கிடைக்கிறது என்றால் ரொம்ப அல்பமாகத்தான் இருக்கிறது. அந்தக் கிடைக்கிற சமயத்திலும் இனி வெவ்வேறு வ்யவகாரங்கள். ஊரில் இருக்கிற வ்யவகாரங்கள் அவ்வளவும் வேண்டியிருக்கிறது அவனுக்கு. பகவத் சந்நிதிக்கு வந்து உட்கார்ந்தால் பூஜை நடந்து கொண்டு இருந்தால் ஊர் வ்யவகாரங்கள் எல்லாம் பேச ஆரம்பிப்போம். வந்திருக்கிறது பூஜை பார்ப்பதற்காக. ஆனால் அது இல்லை. அது என்ன ஆச்சு? இது என்ன ஆச்சு? எலெக்ஷன் என்ன ஆச்சு? அவன் ஜெயிச்சுட்டானா? இவன் தோற்றுவிட்டானா? அந்தச் சமயத்தில் அது நமக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத விஷயம் அது. இதைத்தான் சாஸ்த்ரத்திலே
அசந்தப்ய ப்ரலாபதஸச வான் மயம்ச்யாஜயதன்விதம்
அதிலே “அசந்தப்ய ப்ராலப்:” என்று பெயர் சொல்லி இருக்கிறது சாஸ்த்ரத்துலே. சம்பந்தம் இல்லாத பேச்சு என்று அர்த்தம். பகவத் சந்நிதியிலே வந்து அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஊர் விவகாரங்களைப் பற்றிப் பேசினால் பின்பு அது அசந்தப்ய ப்ரலாபம் ஆகாமல் வேறு என்ன ஆகும்? இப்படி அசந்தப்ய ப்ரலாபத்துலே கொஞ்சம் சமயம் போகிறது என்பதால் இனி நமக்கு பகவத் சிந்தனைக்கோ, தர்மாசரணத்துக்கோ அவகாசம் எங்கே? சில கவிகளைப் பார்த்து ஒருத்தர் சொன்னார். இந்தக் கவிகள், பண்டிதர்கள் எல்லாரும் இருக்கிறார்களே இவர்கள் வந்து இராஜாக்களை ஸ்தோத்ரம் பண்ணுவார்கள். ஏனெனில் அவர் ஏதாவது கொடுப்பார் என்பதற்காக. இன்று இராஜாக்களுக்குப் பதிலாக பணக்காரர்கள். அவர்களைப் போய் ஸ்தோத்ரம் பண்ணினால் நீங்கள் இந்த்ரத்வம், ப்ரும்மத்வம், விஷ்ணுத்துவம், ருத்ரத்வம், வாயுஸ்தவம், சந்த்ரமான, என்று சொன்னால் சரி அவர்கள் ஏதாவது கொடுப்பார்கள் (என்று நினைத்து) ஆனால் இந்தப் பணக்காரர்கள், இந்த இராஜாக்கள் இவர்களுடைய ஸ்திதி வாஸ்தமாக எப்படி என்று கேட்டால்
“சௌஜன்யாம் மருஸ்தலி ஜனதா ஆலேக்ஷ்ய த்வியுக்தி: குளர் ஸ்யோத்ஸ்னா க்ருஸ்ணசதுர்த்தசி ஸ்மரணதா யோக ஸ்வதுஸ்ச சடா ய யுயுர் ஏஷா விதுரா ஸதா கவிவரை:
ராஜா வளி சேவ்யதே தேஷாம் சூலினி பக்தி மாத்ர சுலபேசேவா கியத் கோசலம்”
இந்தப் பணக்காரர்கள், இராஜாக்கள் இவர்களைப் போய் ஸ்தோத்ரம் பண்றோம். வாஸ்தவமாக அவர்களுடைய ஸ்திதி எப்படி இருக்கிறதென்றால் சௌஜன்யாம் ‘மருஸ்தலி’ ‘சௌஜன்யம்’ என்று சொன்னால் ஒரு நல்லமனசோடு பேசக்கூடிய தன்மை. அவர்களுக்கு எப்போதும் அந்தப் பணத்தின் அஹங்காரத்திலேயே இருந்து ஒரு நல்ல மனசோடு பேசக்கூடிய தன்மையே இருக்காது. எப்போதும் அவனை ஸ்தோத்ரம் பண்றவா அவனைச் சுற்றி இருக்கணும். அவர்களுக்கு ஏதாவது கொஞ்சம் தூபம் போட்டுக் கொண்டு இருக்க வேண்டும். அவர்கள் ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டிருப்பார்கள். அதற்காகவா இவர்களிடம் போகவேண்டும்? அவர்களிடம் ஏதாவது நல்லகுணங்கள் இருக்கிறதா? “குணத்யோத்ஸ்னா க்ருஷ்ண சதுர்த்தசி” க்ருஷ்ண சதுர்த்தசி அன்று இரவு அந்தச் சந்த்ரிகை எவ்வளவு அழகாக இருக்குமோ எவ்வளவு நன்றாக இருக்குமோ எவ்வளவு அதிகமாக இருக்குமோ அவ்வளவு ஸத்குணங்கள் அவர்களிடம் இருக்கு. அந்த அளவுக்கு இருக்கு. க்ருஷ்ண பக்ஷத்து அமாவாஸைக்கு முதல் நாள் அந்தச் சந்த்ரிகை இருக்கின்ற அளவுக்கு இவர்களுக்கு ஸத்குணங்கள் இருக்கு “சரலத் யோகாஸசய புஸ்சத்சடா”
நேர்மாறாக இருப்பார்களா? ஆமாம் நேர்மையாக இருப்பார்கள். நாய் வால் மாதிரி என்று சொன்னார். அவர்கள் நேர்மையாகத்தான் இருப்பார்கள் நாய்வால் மாதிரி. அது எவ்வளவு நேர்மை என்று பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி இருந்தும் கூட அவர்களையே போய் ஸ்தோத்ரம் பண்ணுவார்களே இந்தக் கவிகள், பண்டிதர்கள். நிஜமாக இவர்களுடைய இந்த பாண்டித்யத்தை அந்தப் பரமேஸ்வரன் ஸ்தோத்ரத்திற்கு விநியோகம் பண்ணினால் இவர்களுக்கு முக்தியே வராதா?
“ஏரே ஷா துதி ரா ஸதா கவி வரை. ராஜாவளி சேவ்யதே”
இவர்கள் போய் இப்படி ஒருவிதமான சௌஜன்யம் இல்லாமல் ஒரு ஸத்குணம் இல்லாமல் ஒரு நேர்மை என்பது இல்லாமல் இருக்கிற இந்த ராஜாக்களைப் போய் ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு பதிலாக அதே பரமாத்மாவை ஸ்துதித்தால் “தேஹாம் சூலினி பக்தி மாத்ர சுலபே” பரமாத்மாவை சந்தோஷப் படுத்துவதற்கு நாம் ரொம்ப ஸ்ரமப்பட வேண்டியது இல்லை. பகவான் ரொம்ப ஒரு பக்தியினாலே அவனுக்கு என்ன அர்ப்பிச்சாலும் அதற்கு சந்தோஷப் படுவான். பகவானைச் சந்தோஷப்படுத்துவதற்கு நீங்கள் ஒரு ச்ரமமும் படவேண்டியது இல்லை. “அர்க்கத்ரோண ப்ராருதி குஸுமைர் அர்ச்சனை தேவிதேபம் ப்ராப்யந்தே நஸ் ரம ஹர பலம்மோஷ சாம்ராஜ்ய லக்ஷ்மீ;
“அர்க்கத்ரோண ப்ரவ்ருதி குஸுமைர் ரர்சனை தேவிதேபம்”
பகவானுக்கு பரமேஸ்வரனுக்கு பூஜை பண்ணுவதற்கு ஒண்ணும் ஸ்ரமம் இல்லை. அந்தப் பரமேஸ்வரனுக்கு இஷ்டமான பூக்கள் நீங்கள் எங்கேயிருந்து கொண்டு வரணும் என்று நீங்கள் ஒன்றும் ச்ரமப்படவேண்டாம். எருக்கம் பூ, தும்பைப்பூ இதிலேயே பகவான் சந்தோஷப்படுவான். அது எல்லா இடத்திலேயும் கிடைக்கும்.
“ப்ராப்யந்தே நஸ்ரம ஹரபலம் மோஷ சாம்ராஜ்ய லக்ஷ்மீ”
அப்படி பக்தியோடு நாம் பகவானுக்கு அர்ச்சனை பண்ணினால் பகவான் நமக்கு முக்தியே கொடுப்பார். ஆனால் நாம் பக்தியாக அந்த அர்ச்சனை பண்ணுவது கிடையாதே! பக்தியாகப் பண்ணுகிற அர்ச்சனைக்குத்தான் பலன் சொல்லி இருக்கிறது. இதை நாம் மறக்கக்கூடாது. பக்தியில்லாமல் பண்ணின அர்ச்சனைக்குப் பலன் இருக்காது. நான் அர்ச்சனை பண்றதை எல்லாரும் பார்க்கிறார்களா? என் பெயரை எல்லாரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களா? என்னுடைய பெயர் நல்ல ப்ராயத்திலே இருக்கா? அதற்காக நான் அர்ச்சனை பண்றேன் என்று நீங்கள் நினைத்து அர்ச்சனை பண்ணினால் அது ஒண்ணும் ப்ரயோஜனப்படாது. அதை இன்னொருத்தன் பார்க்கிறானா? என் பெயர் சொல்கிறானா? என் பெயர் பேப்பரில் வருகிறதா இல்லையா என்பது நமக்குத் தேவையே இல்லை. நாம் செய்யக்கூடியது நம்முடைய நன்மைக்காக. பகவானுடைய க்ருபைக்காக நாம் செய்கிறோம். இதில் இன்னொருத்தன் நம்மைப் பற்றி ப்ரஸம்ஸை ஏன் பண்ணனும்? இன்னொருத்தன் நம்மைப் பற்றி தூஷணை பண்ணினால் நமக்கு என்ன?
ஒன்று இந்தக் காலத்திலே சில பையன்கள் “ஏண்டா நீ ஸந்தியாவந்தனம் பண்றியா?” என்று கேட்டால் “எனக்கு பண்ண வேண்டும் என்று தான் இருக்கு. ஆனால் என் கூட இருக்கிறவர்கள் யாருமே பண்ணமாட்டேன் என்கிறார்கள். நான் எப்படி பண்ணுவது?” என்பான். அட உன் கூட இருக்கிறவர்கள் பண்ணினால் பண்ணாவிட்டால் உனக்கு என்னடா? சரி உன் கூட இருக்கிறவா யாரும் சர்க்கரை சாப்பிடமாட்டேங்கிறார்கள் என்பதற்காக நீ சர்க்கரை சாப்பிடாமல் இருப்பாயா? இல்லை அவர்கள் சாப்பிடாவிட்டால் எனக்கு என்ன? சர்க்கரை போடு என்று உன் அம்மாவிடம் சண்டைபோட்டுக் கொள்கிறாயா இல்லையா? சாப்பிடுகிறாயா இல்லையா? ஸந்த்யாவந்தனம் விஷயம் வரும்போது மட்டும் கூட இருக்கிறவர்கள் யாரும் பண்ணுவதில்லை அதனால் நான் எப்படி பண்ணுவது என்கிற ப்ரச்னை நீ எப்படி கேட்கலாம்? ஸந்த்யாவந்தனம் பண்ணுவது உன்னுடைய நன்மைக்காக. கோவிலுக்குப் போவது உன்னுடைய ஸ்ரேயஸுக்காக. பகவான் சந்நிதியில் நமஸ்காரம் பண்ணுவது உன்னுடைய நன்மைக்காக. அதற்கு இன்னொருத்தன் போனால் என்ன? போகாவிட்டால் உனக்கு என்ன? இந்த விஷயத்திலே இன்னொருத்தன் போகிறானா என்பது உனக்குத் தேவை இல்லை. உன்னுடைய ஸ்ரேயஸுக்குக் காரணமான விஷயங்களை அதிலே இன்னொருத்தன் என்ன பண்றான் இன்னொருத்தன் உன்னை தூஷணை பண்றானா? உன்னை நிந்தனை பண்றானா? உன்னை ப்ரஸம்ஸை பண்றானா? என்பது எதையும் நீ கவனிக்க வேண்டியது இல்லை. ஏனென்றால் அவன் ப்ரஸம்ஸை பண்ணினான், அவன் தூஷணை பண்ணினான் என்று சொல்லி நீங்கள் பூஜை பண்ணவோ பண்ணாமலோ இருந்தால் அதிலிருந்து உனக்குத்தானே வரக்கூடியது பலன்? நீ பூஜையை விட்டுவிட்டால் உனக்குத்தானே அஸ்ரேயஸு? அதனால் இந்த விஷயத்திலே இன்னொருத்தனுடைய அபிப்ராயத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது.
நமக்கு இந்த விஷயத்துலே ப்ரமாணம் வேதம், சாஸ்த்ரங்கள், குருவாக்யம், வேதம் என்ன சொல்கிறது? நம் சாஸ்த்ரம் என்ன சொல்கிறது? குரு என்ன சொல்கிறார்? இவர்கள் சொல்வதை செய்தால்தான் நமக்கு ஸ்ரேயஸு கிடைக்குமே தவிர அதிலே இன்னொருத்தனுடைய அபிப்ராயத்துக்கு நாம் கொஞ்சமும் மதிப்பு கொடுக்கக்கூடாது. விலை கொடுக்கக்கூடாது. அவன் பூஜை பண்ணவில்லை என்றால் அது அவனுடைய தலையெழுத்து. உனக்கு எதற்கு? அவன் ஸந்த்யாவந்தனம் பண்ணலை என்றால் அது அவனுடைய தலையெழுத்து. அதற்கு நீ கொஞ்சமும் கூட மனசுலே ஒரு கவலைப் படக்கூடாது. நீ உன்னுடைய தர்மத்துலே இருக்கணும். ஏனென்றால் அது உன்னுடைய தர்மம். உன்னுடைய தர்மத்தை ஆசரிக்காமல் போனால் அது தவறாகிவிடும். உன் தர்மத்தை நீ ஆசரிச்சால் நீ ஸ்ரேயாவான் ஆகலாம். “ஸ்ரேயான் ஸ்வர்தர்மோ விபுண அன்யே பவேசமாக” அதற்கு இவர் ஒரு வார்த்தை சொல்கிறார். ஒரு பண்டிதன் “நீ ரொம்ப தபஸு பண்ணி இருக்கிறாய். அதனால்தான் இவ்வளவு சுகமான வாழ்க்கை உனக்கு கிடைத்தது” என்று சொன்னால் நமக்கு இப்படி சுகமாக வாழ முடியவில்லையே? என்ன சுகமாக உங்களுக்கு வாழ முடியவில்லை? என்று கேட்டால் நாங்களா இந்தப் பணக்காரர்களை ஸ்தோத்ரம் பண்ண வேண்டியிருக்கு?
“மனுஷாம் கர்வ வச ஸ்றாணோ ஷி
நபுண | தாம் ப்ரர்ய ஹோ தாவதி”
அவர்களுடைய அஹங்கார பூர்வமான வார்த்தைகளைக் கேட்க வேண்டிய தேவை உனக்கு இல்லை. அவர்கள் பின்னால் ஓடவேண்டிய தேவை உனக்கு இல்லை.
“காலே பாலத்றாணா நி கா தசி
பரம் நித்ரா ஸு நித்ராயனே
தன் மேத்ரு குரங்குத்ரபவதா
கிம் நாமதப்தம் தப”
என்னமோ காலகாலத்துலே புல் சாப்பிடுகிறாய். தூங்குகிறாய். வேறு ஒன்றும் எங்களை மாதிரி கஷ்டம் உனக்குக் கிடையாது. நீ ரொம்ப தபஸு பண்ணினாய் என்று தோன்றுகிறது. என்ன தபஸு பண்ணினாய் என்று சொல்லு. நாங்களும் அந்த தபஸு பண்ணனும் என்று கால்நடைப் பிராணிகளைப்பற்றி நினைக்கிறோம். அதாவது அதற்கு அர்த்தம் மனுஷ்யனாக நான் வந்து இப்படி இந்தப் பணக்காரர்கள் பின்னாடி ஓடவேண்டியிருக்கிறதே. வாஸ்தவமாக பக்தனானவனுக்கு அது தேவையில்லை. அவன் சொன்னான், ஒரு பக்தன்
ஷீணேது நஸதாம் ச பாலன கலாம் கோ
கர்வான லக்ஷுப் சு லஷீப் ஷுப்ர நரேந்த்ர
சாதுரசனாம் தன்யான்ன மன்யாமஹே
அவர்கள் பின்னாடி போவதற்கு நாங்கள் தயார் இல்லை. என்ன அவர்களுடைய சக்தி? என்ன அவர்களுடைய ஐஸ்வர்யம்? என்ன கதை? அவர்கள் எங்களுக்கு என்ன கொடுக்கப் போகிறார்கள்? முதலில் அவர்களுக்கு இருப்பது என்ன? அதில் நமக்கு என்ன கொடுக்கப் போகிறார்கள்? அப்போது நீ யாரிடம் கை நீட்ட வேண்டும் என்று பார்க்கிறாய்?
“தேவன் சேவித மேவநி ஸ்தின
மஹே யோசௌ தயாளு
புரா தானா முஷ்டி முசே
குசேல முனயே தத்தேஸ்ம
வித்தே சதாம்”
ஒரு மஹாப்ரபுவிடம் நாங்கள் கேட்கப்போகிறோம். அவரிடம் கைநீட்டுவோம். அவரை ஆஸ்ரயிப்போம். யாரு என்று கேட்கிறீர்கள்? “யோ சௌதயாரு புராதானா முஷ்டி முசே குசேல முனயே தத்தேஸ்ம வித்தே சதாம்.”
எங்கள் மஹா ப்ரபு எப்படி என்று கேட்டால் பரம தரித்ரனான குசேலன் என்கிற ஒரு பரம பக்தனுக்கு மஹா ஐஸ்வர்யம் கொடுத்து விட்டார். அந்தக் குசேலன் அந்தப் பகவானுக்கு எவ்வளவு பூஜை பண்ணினான் அப்பா! எத்தனை பூஜை திரவியங்களைக் கொண்டுவந்து பூஜை பண்ணினார் என்பதற்கு பூஜா திரவியங்கள் ஒன்றுமே இல்லையே. பரமதரித்திரன் ஆயிற்றே! அப்போது என்ன பண்ணினார்? ஒன்றும் இல்லை. ஒருபிடி அவல் கொண்டு கொடுத்தார். அவ்வளவுதான். “தானா முஷ்டி முசே குசேல முனயே தத்தேஷ்ம வித்தே ஸதாம்” ஆனால் அவன் அந்தப் பொருளைப் பரம பக்தியோடு கொண்டு போனான். பகவான் சொன்னார் இல்லையா கீதையிலே “யோ மே பக்த்யா ப்ரயச்சதி” ததஹம் பக்திப்ரஹ்ருதம் அஸ்மாமி ப்ரயதாத்மன:”
பக்தியோடு எனக்கு எதைக் கொண்டு வந்து கொடுத்தாலும் அதை நான் சந்தோஷமாக ஸ்வீகரிப்பேன் என்று பகவான் சொன்னார் இல்லையா? அந்தக் குசேலன் என்ன கொடுத்தான் என்பது பெரிசில்லை. எந்த பாவத்தோடு கொடுத்தான் என்பதுதான். பரம பக்தியோடு கொடுத்தான். அதைப் பகவான் ஸ்வீகரிச்சான். குபேர ஐஸ்வர்யம் கொடுத்து விட்டார் அவனுக்கு. அப்படியேற்பட்ட ஒரு மஹா ப்ரபுவைத்தான் நாங்கள் ஆஸ்ரயிப்போமே தவிர இந்தச் சாதாரண மனிதர்களை நாங்கள் ஆஸ்ரயிக்க மாட்டோம் என்று இது ஒரு பக்தனுடைய மனசிலே இருக்கக் கூடிய பாவம். அப்பேர்ப்பட்ட ஒரு பக்தி பாவம் நமக்கு ஏற்படணும். அதிலே ஒருவிதமான கபடம் இருக்குக் கூடாது. நாம் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். கபடமான பக்தி. ஆசார்யாள் எதிரில் ரொம்ப பக்தியாய் நடனம் பண்ணுவார்கள். பின்னாடி அவர்களுடைய பேச்சுகள் எல்லாம் பார்க்கணும். எதிரில் வந்திருக்கும் போது ரொம்ப பக்தி என்ன, என்ன வினயம், என்ன கதை, ஆசார்யாளிடம் பேசும்போது அவ்வளவு வினயமாகப் பேசவேண்டியது. அந்த இடுப்புக்கு துணியைக் கட்டிக் கொண்டு, கையைக் கட்டிக் கொண்டு நிற்க வேண்டியது, அதெல்லாம் ரொம்ப ஆச்சர்யமாயிருக்கும். ஆனால் பின்னாடி அவர்கள் வந்து பேசக்கூடிய பேச்சுகள் அவர்களுடைய ஒரு ப்ரவர்த்தை, ஸ்வபாவம் ரொம்ப விசித்ரமாக இருக்கும். அதுசரியில்லை. எப்போதும் கூட ஒரே தினுசாக, ஒரே போல இருக்க வேண்டும். எதிரில் ஒரு மாதிரி, பின்னாடி ஒரு மாதிரி இருந்தால் அது ஏமாற்றுவது அல்லவா? நாம் குருவையே அப்படி ஏமாற்றலாமா? குருவையே ஏமாற்றுபவன் இனி யாரை ஏமாற்ற மாட்டான்? அவன் உலகத்தையே ஏமாற்றுவான். அதனால் பக்தி என்பது நிஷ்கபடமான பக்தியாய் இருக்கணும். நிஷ்கபடமான பக்தி இருந்தால் அதுதான் உத்தமமான பக்தி. அதற்கு அவன் நிஷ்கபடமான மனுஷ்யனாக இருக்க வேண்டும். முதலில் அந்தக் கபடம் இருக்கக் கூடாது. இந்தப் பண்டிதர்கள் வந்து இந்த வார்த்தைகளுக்கு எப்படியெல்லாமோ அர்த்தங்கள் சொல்லுவார்கள்.
ஒரு பண்டிதர் சொன்னார். நிஷ்கபடமாக இருக்கணும் என்று சொல்கிறார்கள் இல்லையா? நாமெல்லாம் நிஷ்கபடமாகத்தானே இருக்கிறோம். அப்படியென்றால் என்ன அர்த்தம்? “யர் கதம் ஜம் யஸ்மாத் நிஷ்கம். படம் யஸ்யஸ:” கம் என்றால் தத், ஜலம் நிஷ் என்றால் போனது என்று அர்த்தம். படம் என்றால் துணி என்று அர்த்தம். ஈரத்துணி போட்டுக் கொண்டவன் கபடன். நாங்கள் ஈரத்துணி போட்டுக் கொள்ளவில்லை. அதனால் நிஷ்கபடம். கம் என்றால் ஜலத்துக்குப் பெயர். நிர்கதம் கம் யஸ்மாத் தர் நிஷ்கம். அது ஈரத்துணி அல்லாதது, காய்ந்த துணி. அதுதான் போட்டுக் கொண்டு இருக்கிறோம். நாங்கள் நிஷ்கபடமாகத்தான் இருக்கிறோம். என்ன சொல்றேள்? இந்த அர்த்தமெல்லாம் பகவான் எதிரில் சரிவராது. நீங்கள் இன்னொருத்தரை ஏமாற்றுவதற்குத்தான் இந்த அர்த்தங்கள் எல்லாம். உங்களுக்கு பகவான் சந்நிதியிலே இந்த அர்த்தங்கள் எல்லாம் சரிவராது. உங்களுடைய பாண்டித்யம் இதுக்காக வந்த பாண்டித்யம் இருக்கிறது உங்களுக்கு.
“வாக்வே ஷரிஸப்த ஜரி சாஸ்த்ர வ்யாக்யான கௌசலம்
வாவிஷ்யம் விதி ஷாம் தத் வது புக்தயே ந து முக்தயே”
பகவத்பாதாளே சொல்லி விட்டார். இப்படி வ்யாக்யானம் பண்றவாள் எல்லாரையும் இவர்கள் வந்து இராமாயணத்துக்கு அர்த்தம் சொல்கிறவர்கள் இல்லை. அர்த்தத்துக்கு இராமாயணம் சொல்கிறவர்கள். இதெல்லாம் வந்து “புக்தயே தான் நது முக்தயே” நாம் பகவத் விஷயத்துலே எந்த விதமான கபடம் இல்லாமல் நிஷ்கபடனாக இருக்கணும். பகவத் விஷயத்துலேயும் சரி. குருவின் விஷயத்துலேயும் சரி. அந்த நிஷ்கபடமான பக்தியோடு நாம் செய்யக் கூடிய சேவை அது பகவானுக்கு ப்ரீதிகரமாக இருக்கும். அது குருவுக்கும் ப்ரீதிகரமாக இருக்கும். அப்போதுதான் பகவானும், குருவும் நமக்கு அனுக்ரஹம் பண்ண முடியும். அவர்களுடைய க்ருபைக்கு நாம் பாத்திரமாக முடியும். அதனால் எதற்கு சொல்ல வந்தோம் என்று கேட்டால் நம்முடைய ஜீவிதத்துலே அமுல்யமானது சமயம் என்பது இந்தச் சமயத்தை வீணாக்கக் கூடாது. இதை ஸார்த்தகமாக்கணும். இதை ஸார்த்தகம் ஆக்குவதற்கு ஒரே ஒருவழி பகவானுடைய சேவை. நம்முடைய சகல இந்த்ரிய வ்ருத்திகள். அந்த பகவத் சேவையிலேயே ஈடுபட வேண்டும். அதுதான் பகவத் பாதாள் சொன்னார். “குஹே ஸந்து லீனாம் மமா அசேஷ பாவா” அதுதான் நாம் ஆரம்பித்த விஷயம். “குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா” என்னுடைய ஸமஸ்த இந்த்ரிய வ்ருத்திகள் பகவத் சேவையிலேயே இருக்கட்டும். அப்படி பகவானே நீ அனுக்ரஹம் பண்ணு என்று நீ பகவானை வேண்டிக்கணும். அப்போதுதான் உன்னுடைய ஜன்மா தன்யமாகும் என்று சொன்னார் பகவத் பாதாள்.
அதனால் நாம் இந்த மாதிரி ஒரு பவித்ரமான வாழ்க்கையை நடத்தினால் இந்த மானவ ஜன்மம் வந்ததற்கு ஸார்த்தகம் ஆகும். இல்லாவிட்டால் இந்த அமுல்யமான, துர்லபமான மனுஷ ஜன்மம் வந்ததற்கு ப்ரயோஜனம் என்ன? நான் முன்பு சொன்ன மாதிரி ஏதோ தூங்குகிறோம். தூக்கத்திலே கொஞ்சம் போய் விடுகிறது. பால்யத்திலே கொஞ்சம், வார்த்தகத்திலே கொஞ்சம், யௌவனத்திலே கொஞ்சம், அதிலே கொஞ்சம், இதிலே கொஞ்சம் கடைசியிலே தர்மத்துக்கோ, பகவத் பக்திக்கோ கொஞ்சமும் அவகாசம் பண்ணிக் கொள்வது இல்லை என்று சொன்னால் அப்போது ஜன்மம் வீணாகும். இந்த ஜன்மம் வீணாகக் கூடாது. இந்த ஜன்மம் ஸார்த்தகம் ஆகணும் என்று எப்போதும் மனசுலே இந்த பாவம் இருந்து கொண்டே இருக்கவேண்டும். எந்தக் கார்யத்துலே எந்த வேலையிலே இருந்தாலும் சரி, எந்த வ்ருத்தியிலே இருந்தாலும் சரி அந்த வ்ருத்தி என்பது ஒரு பக்கம். அப்புறம் உட்கார்ந்து நான் என்ன பண்ணினேன்? சாஸ்த்ரம் சொல்றது, தினம்தோறும் ஒரு முறை நீ உன்னைக் கேட்டுக்கோ. நீ யாருக்கும் ஜவாப் சொல்ல வேண்டாம். இன்றைய தினம் எனக்கு எப்படி கழிந்தது? நான் இன்றைய தினம் என்ன பண்ணினேன்? ஏதாவது நல்லதுபண்ணினேனா? ஏதாவது பகவத் சேவை பண்ணினேனா? “ப்ரத்யகம் ப்ரத்ய வேஷேத நரசரித மாத்மன இன்னமே பசு வி துல்யம் இன்னு ஸத்புருஷே ரிவ”
இன்றைய தினம் எனக்கு எப்படி கழிந்தது? ஏதோ சாதாரண ப்ராணிகள் மாதிரியே ஆகிவிட்டதா? அதாவது ஸத்புருஷர்கள் மாதிரி ஏதாவது ஒரு கார்யம் பண்ணினேனா? ஒண்ணும் பண்ணவில்லையா? பண்ணவில்லை என்றால் ஐயோ என் ஜீவனத்துலே இன்றைய தினம் வீணாகிவிட்டதே என்கிற ஒரு வருத்தம் வரனும். அப்போது நாம் அவசியம் சன்மார்க்கத்துலேதான் போவோம். இந்த ஸ்மரணை இருக்கிறவனுக்கு இந்த சிந்தனை இருக்கிறவனுக்கு ஸன்மார்க்கத்துலதான் அவனுடைய புக்தி போகும். ஏனென்றால் அவனுக்கு அந்தப் பயம் இருந்து கொண்டு இருக்கும். நான் தப்பு கார்யம் பண்ணினால் நான் என்னுடைய ஜீவனத்தை வ்யக்தமாக ஆக்கினால் அப்புறம் திரும்ப எனக்கு மனுஷ்ய ஜீவிதம் கிடைக்கும் என்று என்ன தீர்மானம்? இது துர்லபம், துர்லபம் என்று சொல்றோம். அப்போது துர்லபமானது கிடைத்திருக்கிறது. இந்த சரீரம் போனதுக்கு அப்புறம் திரும்ப இதேமாதிரி மனுஷ்யசரீரமே வரும் என்று என்ன தீர்மானம்? எண்பத்துநான்கு லக்ஷம் கோடி ப்ராணி இருக்கு. இதில் மனுஷ்ய சரீரம் தவிர வேறு எது வந்தாலும் என்ன செய்ய முடியும்? ஒண்ணும் பண்ணமுடியாது. திரும்ப அந்த எண்பத்து மூன்று லக்ஷத்து தொண்ணூற்று ஒன்பது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஜாதியிலே பிறக்காமல் மனுஷ்யனாகத்தான் பிறக்கணும் என்று சொன்னால் அது எவ்வளவு துர்லபமானது? அதனால் இந்த ஜன்மத்தை நான் வீணாக்கக் கூடாது. இந்த சரீரத்திலேயே ஏதாவது ஸத்கர்மாசரணம் செய்து பகவானைச் சேவித்து பகவானுடைய பரமக்ருபைக்குப் பாத்ரம் ஆக வேண்டும் என்கிற ஒரு த்ருடமான பாவத்தோடு த்ருடமான தீர்மானத்தோடு இருந்து நம்முடைய வாழ்க்கையை நடத்த வேண்டும். அப்போதுதான் மனுஷ்யன் அகார்யங்களைச் செய்ய மாட்டான். ஸத்கார்யங்களிலேயே ஈடுபடுவான். அகார்யங்களைச் செய்வதற்கு எப்போது மனம் வரும்? அதிலிருந்து தனக்குத் துஷ்பலம் வரப்போகிறது என்கிற தீர்மானம் இல்லாவிட்டால் வரும். நெருப்பிலே கையை எப்போது வைப்பான்? இதிலே வைத்தால் கை சுடும் என்கிற பாவம் இல்லாதபோது. நெருப்பில் கை வைத்தால் சுடும் என்று தெரிந்த பின்பும் அவன் எப்படி வைப்பான் என்று கேட்கவில்லை. அதே போல் துஷ்கர்மாக்களைச் செய்தால், அகார்யங்களைச் செய்தால் இதனுடைய பலமான மஹா பாபத்தை, நரக துக்கத்தை நான்தான் அனுபவிக்க வேண்டியது வரும் என்கிற த்ருடமான ப்ரபாவம் மனசுல வந்தால் இனி அவன் எப்படி துஷ்கர்மாக்களைச் செய்வான் அப்போது செய்கிறானே? என்று கேட்டால் அவனுக்கு அந்தபாவம் வரவில்லை. அதனால் அவன் செய்கிறான். அந்த பாவம் வந்தால் நிச்சயமாகச் செய்ய மாட்டான். அந்தப் பாவம் நமக்கு வரணும். அப்போது நம்மால் துஷ்கர்மாக்கள் நடக்காது. அக்ருத்யங்கள் நடக்காது. நாம் ஸத்புருஷர்களாகவே வாழலாம். நம்முடைய ஜன்மத்தை தன்யமாக்கிக் கொள்ளலாம். எல்லாரும் கூட இந்த நம் முன்னோர் நமக்கு கொடுத்த இந்த உபதேசத்தை இந்த ஸந்தேகத்தை எப்போதும் மனத்தில் வைத்துக் கொண்டு தங்களுடைய ஜீவனத்துலே பகவத் சேவை தர்மாசரணம் இதுதான் முக்யம் என்கிற ஒரு பாவத்தோடு இருந்து தங்களுடைய ஜன்மத்தை ஸார்த்தகமாக்கிக் கொள்ள வேண்டியது என்று நான் சொல்ல விரும்புகிறேன்.

No comments:

Post a Comment