Tuesday, June 9, 2015

கடவுள் எங்கே இருக்கிறார்?

கடவுள் எங்கே இருக்கிறார்?
ஆச்சார்ய வினோபாபாவே ஒரு கூட்டத்தில் அற்புதமான ஒரு கேள்வியைக் கேட்டார். ""கிராமம் கிராமமாக பஜனை நடக்கிறது. இது நல்லதுதான். ஆனால் பகவான் எங்கிருக்கிறார்? காசியிலும் கைலாசத்திலும் இருக்கிறாரா? நமது மந்திரிகளும் அதிகாரிகளும் நீலகிரி, கொடைக்கானல் முதலிய இடங்களுக்குப் போவது போல கடவுளும் வெயில் காலத்திற்கு கைலாசத்திற்கும், மாரி காலத்தில் காசிக்கும் வருகிறாரா? அல்லது நம் நாட்டில் குழந்தைகளுக்குப் பால் இல்லாதிருக்கும்போது அவர் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறாரா?'' என்று கேட்டார். யாருமே பதில் சொல்லவில்லை! ""நீங்கள்தான் சொல்ல வேண்டும்'' என்று பெரியவர் ஒருவர் கூறவே வினோபாபாவே பதிலளித்தார்.
""கடவுள் நம் சமீபத்திலும் சமீபமாக இருக்கிறார். நமது புத்தியே கைலாசம்! விசாலமான இதயமே திருப்பாற்கடல்! எதற்கும் அசையாத கைலாச கிரியைப் போல ஸ்திரபுத்தி உடையவர்களாக, கடலைப் போல் விசால இதயமுடையவர்களாக இருக்க வேண்டும். அப்போது நம் அறிவிலும் உள்ளத்திலும் சச்சிதானந்த சொரூபியாகிய ஆண்டவன் அமர்ந்திருக்கிறார்''
இதைக் கேட்ட எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
(ஆதாரம்: மேதைகள் வாழ்வில்)

No comments:

Post a Comment