Saturday, June 13, 2015

சம்ஸ்கிருத மொழியை இறந்த பாஷை ( dead language) என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சம்ஸ்கிருத பாஷை''
நண்பர்களே, சம்ஸ்கிருத பாஷைக்கு அமரவாணி,தேவ வாணி,தேவ பாஷா என்ற வேறு பெயர்களும் உண்டு. தெய்வத் தன்மையை கொடுக்கக் கூடியதும் ,அமரத் தன்மையை கொடுக்கக் கூடியதுமான , வேத-புராண இதிகாசங்களுடைய சப்தங்களை நாம் உச்சரிப்பதால் அந்த பாஷையை தேவவாணி,தேவபாஷை என்று கூறுவார்கள். சம்ஸ்கிருத பாஷையில் எல்லாவிதமான தத்துவங்கள் அன்றும் இன்றும் உண்டு.சம்ஸ்கிருத பாஷையில் உள்ள தத்துவங்கள் ஒரு நாளும் அழியவில்லை.அந்தந்த தத்துவங்களை சம்ஸ்கிருத பாஷையில் படித்தவர்கள் ,அனுபவித்தவர்கள்,மிகச்சிலர் தமக்குள்ள பேசிக்கொண்டார்கள்.எழுதிக் கொண்டார்கள். சம்ஸ்கிருத மொழி ஒரு நாளும் சாதாரண பேசும் பாஷையாக இருந்ததில்லை . ஆனபடியினால் முன்பு பேசினார்கள் இப்ப சமஸ்கிருதத்தில் பேசுவதில்லை என்று சொல்ல முடியாது. எப்போதும் தத்துவ, விசாரங்களுக்கு மட்டுமே அன்றும் இன்றும் சம்ஸ்கிருத மொழி பேசப்பட்டு வந்துள்ளது. இந்த விபரங்களை அறியாத சிலர் சம்ஸ்கிருத மொழியை இறந்த பாஷை ( dead language) என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நன்றி:''இந்து தர்மங்கள்''

No comments:

Post a Comment