Monday, July 20, 2015

மனிதனை கடவுளாக்கும் பாம்பு !

மனிதனை கடவுளாக்கும் பாம்பு !
அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........
=====================================
ஒரு குழந்தை எப்படி பிறக்கிறது என்று நமக்கு தெரியும். திருமணம் என்ற பந்தத்தில் ஆண் பெண் இருவரும் புகுந்து முறைப்படியான தாம்பத்திய உறவில் அவர்கள் ஈடுபட்டு ஆண்மகனின் சுக்கிலமும் பெண்மகளின் சுரோணிதமும் ஒன்றாக கலந்து கருப்பையில் குழந்தையாக வளர்ந்து ஏறக்குறைய முன்னூறு நாட்களுக்கு பிறகு ஒரு குழந்தை மண்ணில் பிறக்கிறது என்பதை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. ஆணும் பெண்ணும் இணையும் நாளை கருத்தில் கொண்டு குழந்தையானது எப்போது பிறக்கும் என்பதை கூட தெளிவாக கணித்துவிட முடியும். ஆனால் அந்த குழந்தை ஏன் எதற்காக பிறந்தது அதன் பிறப்பின் நோக்கம் என்னவென்று யாராலும் அறுதியிட்டு உறுதியாக சொல்ல முடியாது. அந்த குழந்தையே கூட நாளைக்கு பெரியவனாக வளர்ந்து நான் இதற்காகத்தான் பிறப்பெடுத்தேன் என்றும் கூற இயலாது. அந்த அளவு பிறப்பின் ரகசியம் மூடி மறைக்கப்பட்டு கிடக்கிறது.
ஒரு மனித ஜென்மா ஏன் பிறக்கிறது என்பது நம்மை போன்ற சாதாரண மனிதர்களின் அறிவுக்கு எட்டாது என்பதில் வியப்பில்லை ஆனால் படைப்பின் மூல கர்த்தாவாகிய இறைவனையே உணர்ந்த ஞானிகளுக்கு ஒரு மனிதன் ஏன் பிறந்தான் என்ற ரகசியம் தெரியாமலா போய்விடும். கண்டிப்பாக அப்படி போகாது. உலகத்தை கடந்து உடம்பை கடந்து உள்ளத்தையும் கடந்த ஞானிகளுக்கு தெரியாத இரகசியங்கள் எதுவுமே கிடையாது. அப்படி எல்லாவற்றையும் உணர்ந்த ஞானிகள் மனிதன் பிறந்ததற்கு இன்னது தான் காரணம் என்று தெளிவாக உணர்ந்து சொல்லி உள்ளார்கள். இடிவோசைக்கும் இனிய இசைக்கும் வித்தியாசம் தெரியாத நமது காதுகள். அவர்கள் மொழியை கேட்காமல் செவிடாக கிடக்கிறது.
ஒரு பயணம் நிறைவை அடைவது எப்போது? ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டவன் பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் பார்த்து முடித்த பிறகு மீண்டும் புறப்பட்ட ராமேஸ்வரத்திற்கே வந்து சேரும் போது தான் பயணம் பூரணமாக முடிந்தது என்று சொல்லலாம். மனிதனது பிறப்பும் வாழ்வும் பயணத்தை போன்றதே ஆகும். நமது பயணம் இறைவனின் திருவடிகளிலிருந்து துவங்குகிறது. ஆயிரம் ஆயிரம் பிறவிகள் எடுத்தாலும் அத்தனை பிறவிகளையும் முடித்து கடேசியாக எங்கே இருந்து பயணத்தை துவங்கினோமோ அங்கே அந்த இறைவனின் திருவடிகளிலேயே மீண்டும் வந்து ஐக்கியமாவது தான் ஒரு பிறப்பின் மூல காரணம்.
ஆயிர ஜென்மங்கள் எடுத்தாலும் கடேசியில் சேரவேண்டிய இடம் கடவுளின் பாதார விந்தங்களே அந்த இறுதி நோக்கத்தை எதற்காக கணக்கற்ற பிறவிகள் எடுத்து அல்லலுற்று கடேசியாக வந்து சேர வேண்டும். இதோ இப்போது கிடைத்திருக்கும் இந்த பிறவியிலேயே இறைவனை அடைவதற்கான முயற்சிகளை செய்யலாமே என்று நம்மீது இறக்கம் கொண்ட பல ஞானிகள் கருதுகிறார்கள்.
ஓடி ஓடி ஓய்ந்து போய்விட்ட சில மனிதர்கள் இனி பிறவி என்னும் துன்ப சாகரம் இதில் கிடந்தது உழலுவதற்கு இன்னும் தம்மால் ஆகாது எப்படியாவது கடலை கடந்து பிறப்பற்ற நிலையை அடைய வேண்டும் என்று விரும்பி அடைவதற்கு நான் தயாராக இருக்கிறேன் அதற்கான வழி என்ன என்று கேட்கிறார்கள் இறைவனை அடைவதே இறுதி லட்சியம் என்று நமக்கு அடையாளம் காட்டிய ஞானிகள் இறைவனை அடைய இது தான் பாதை என்று காட்டமலா போவார்கள் நிச்சயம் இல்லை. அப்படி அவர்கள் காட்டிய பாதையின் பெயர் தான்
வாசி யோகத்தின் சாக கலை
இத்தகைய அற்புதமான ஒரு செயல் வடிவத்தை மனித குலத்திற்கு முதல்முறையாக கண்டறிந்து வெளிபடுத்தியவர் பதஞ்சலி மகரிஷியே ஆவார். புவியீர்ப்பு விசையை நியுட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்பே அந்த ஈர்ப்பு சக்தி இருந்தது போல பதஞ்சலி மகரிஷி யோக மார்கத்தை நெறிபடுத்தி நமக்கு சொல்வதற்கு முன்பும் அது இருந்தது எனலாம். ஆனால் அதை ஒழுங்குபடுத்தி தந்தவர் என்பதனால் பதஞ்சலியை யோகத்தின் மூலவர் என்று அழைக்கிறோம். யோகம் செய்வதற்கான முத்திரைகளை சிந்துசமவெளி நாகரீக காலத்திற்கு முன்பே மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
வேதங்களிலும் புத்தமத நூல்களிலும் இதை பற்றிய விவரங்கள் நிறையவே இருந்தாலும். பதஞ்சலியை போல தெளிவான விளக்கங்களை தந்தவர்கள் யாரும் இல்லை. மனம் வாக்கு காயம் ஆகிய திரிகரனங்க்களை சுத்தபடுத்துகிற யோக சூத்திரங்களை மட்டுமல்ல உடம்பை உருதியடையை செய்யும் சரகசம்ஹிதை என்ற மருத்துவ நூலையும் மனித கருத்துக்களை இலக்கண முறைப்படி வெளிபடுத்துகிற பாணினியின் வியாகரனத்திற்கு மகாபாஷ்யம் என்ற சிறப்பான விளக்க நூலையும் பதஞ்சலி மகரிஷி தந்துள்ளார்.
பதஞ்சலி மகரிஷி இயற்றிய யோக சூத்திரம் சமாதிபாதம், சாதனாபாதம், விபூதிபாதம், கைவல்யபாதம் என்ற நான்கு பகுதிகளை கொண்டது. இந்த நூலில் 195 சூத்திரங்கள் இருக்கின்றன. இவற்றில்
அத யோகானு சாஷனம்
யோகஸ் சித்த வ்ருத்தி நிரோத
என்று எடுத்த எடுப்பிலேயே மனதை புலன்கள் வழி செல்லாமல் கட்டுபடுத்தி ஒருமுகபடுத்துவதே யோகம் என்ற விளக்கத்தை நமக்கு தெளிவாக தந்துவிடுகிறார். சதா சர்வகாலமும் அலைந்து கொண்டிருக்கின்ற மனதை அடக்கி ஒருதலை படுத்துவது சாதாரணமாக முடிகின்ற வேலை அல்ல. அதற்கு பிரம்ம பிரயத்தனம் தேவை. அந்த பிரயத்தனங்கள் என்னென்ன வென்று சாதனாபாதம் இருபத்தி ஒன்பதாவது சூத்திரத்தில் விளக்கம் தருகிறார்.
அங்கங்களான அஷ்டாங்க வகைகளாகும். இதில் யம என்பது மன அடக்கத்துடன் கூடிய ஒழுக்கத்தை குறிக்கும். நியம என்பது உடல் தூய்மையையும் இறைவழிபாட்டையும் குறிக்கும். ஆசன என்பது உடல் பயிற்சி ப்ரணாயாமம் என்பது சுவாச பயிற்சி பிரத்தியாஹாரம் என்பது புலன்களை அடக்கும் பயிற்சி தாரணா என்பது மனதை ஒரே பொருளில் நிலை நிறுத்தும் பயிற்சி. தியானம் என்பது எண்ணங்களை கடந்து போக செய்யும் பயிற்சி சமாதி என்பது தன்னை இழந்து இறைவனை பெரும் உணர்ச்சியாகும்.
இந்த அஷ்டாங்க பயிற்சிகளை மேற்கொள்ளுகின்ற போது மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிப்பூரகம் அனாகதம் விஷுத்தி ஆக்ஞா ஆகிய ஆறு ஆதாரங்களில் வழியாக மனித உடம்பிற்குள் உறங்கி கொண்டிருக்கும் இறை சக்தியானது எழுந்து ஒன்றன்பின் ஒன்றாக ஆதாரங்களை கடந்து இறுதி நிலையாகிய கபாலத்தில் உள்ள பிரம்ம கமலத்தில் வெளிப்படும் என்று பதஞ்சலி சொல்கிறார்.
உடம்பிற்குள் உறங்கும் இறை சக்தியின் பெயர் குண்டலினி இந்த குண்டலியனது உருவகபடுத்தி காட்டும் பொழுது பாம்பு வடிவத்தில் காட்டபடுகிறது. குண்டலினி பாம்பு மூலாதாரத்தில் உறங்கி கொண்டிருப்பதாகவும் அதை தட்டி எழுப்புவதன் மூலம் இறை தரிசனத்தை நேருக்கு நேராக பெறலாம் என்று யோக மார்க்கம் சொல்வதாலும் மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்துவதற்கு நாக வடிவம் கொடுக்க பட்டிருப்பதாலும் நாக வழிபாட்டிற்கு இந்து மதத்தில் அதிமுக்கியத்துவம் இருக்கிறது. மேலும் இந்து மத கடவுள்களின் உருவத்தில் வடிவமைக்க பட்டுள்ள பாம்புகள் வெறும் பாம்புகளை குறிப்பது அல்ல குண்டலினி பாம்பை சுட்டி காட்டுவதே ஆகும். குண்டலினி சக்தியை ஆபரணமாக கொண்டவர் சிவன் என்பதே அவரின் நாகாபாரண தத்துவம் குண்டலினி சக்தியின் மீது நாராயணன் இருக்கிறான் என்பதை காட்டுவதே திருமாலின் பாம்பனை கோலம் இன்னும் இருக்கின்ற அனைத்து தெய்வங்களின் நாக ஆபரணங்கள் குண்டலினி சக்தியை முக்கியபடுத்தி காட்டுவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது .
ஒரே ஒரு தலையுடைய பாம்பை வேண்டுமானால் குண்டலினி சக்தியின் அடையலாம் என்று எடுத்து கொள்ளலாம். ஐந்து தலையுடைய பாம்புகளை இந்து மத கடவுள்கள் வைத்திருக்கிறார்களே அதற்கு என்ன விளக்கம் சொல்ல போகிறீர்கள். என்று சிலர் கேட்பது நமக்கு புரியாமல் இல்லை. நான் மீண்டும் சொல்வது காரணங்கள் இல்லாத காரியங்கள் எதுவுமே இந்து மதத்தில் எப்போதுமே கிடையாது என்பதாகும். ஐந்து தலை பாம்பை உருவகபடுத்தி காட்டுவதற்கு அழகான ஆழமான தத்துவங்கள் இருக்கின்றன.
மனிதன் ஒவ்வொருவனுக்கும் பரிசம், சுவை, பார்வை, நுகர்வு, கேட்டல் என்ற ஐந்து புலன்கள் இருப்பது நமக்கு தெரியும். இந்த ஐந்து புலன்களும் சில புற பொருள்களால் ஈர்க்கப்பட்டு மனிதனை மயக்கமடைய செய்கின்ற போதே அவன் பாவங்களை துணிந்து செய்பவனாக இருக்கிறான்.
வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்து அகத்தே நகும்
என்று வள்ளுவர் மிக அழகாக சொல்கிறார். இப்படி பாவங்களை செய்ய தூண்டும் புலன்களை அடக்கி ஒடுக்கி அடிமையாக வைத்து கொள்ள வேண்டும் என்பதே நமது கடவுள்கள் ஐந்து தலை பாம்பை வைத்திருப்பதன் ரகசியமாகும். ஒரு தலையுடைய பாம்பின் விஷமே பல உயிர்களை போக்கவல்லது என்றால் ஐந்து தலையிலிருந்து வருகின்ற விஷம் எத்தகைய கொடூரமானதாக இருக்கும் என்பதை நினைத்தால் ஐந்து புலன்களின் ஆட்டம் எத்தகைய அழிவை தரும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். எனவே புலன்கள் ஐந்தும் அடக்கப்பட்டு நமக்கு கருவிகளாக நாம் சொல்வதை செய்யும் பணியாளர்களாக இருக்க வேண்டும் என்பதே இந்துமதம் காட்டும் ஐந்து தலை பாம்பின் தத்துவம்.
எனவே பாம்பு என்பது மண்ணின் ஊர்ந்து செல்லுகின்ற சாதாரண ஜந்துவாக இருந்தாலும் கூட அவற்றிற்குள்ளும் அரிதான விஷயங்களை தேடி போக வேண்டும் அப்படி சென்றால் அற்புதமான மாணிக்க கற்கள் கிடைக்கும் என்பதே இந்து மதத்தில் நாக வழிபாடு கூறுகின்ற நெறிமுறையாகும். நாகம் என்பது நஞ்சியுடையது அதனால் அதை அச்சப்பட்டு வணக்க வேண்டும் என்பதற்காக வந்தது அல்ல பாம்புகளை வணங்கும் பழக்கம் மனிதனை இறைவனோடு சேர்க்கின்ற சக்தியின் வடிவமே பாம்பு தான் எனவே அதை வணங்கினால் யோக நெறி காட்டிய இறை அனுபவத்தை எவர் வேண்டுமானாலும் பெறலாம்.
நன்றி மறப்பது நன்றன்று !
இடுகாட்டு மாடனும் ஈசனின் வடிவே !
கன்னிகளுக்கு கன்னி பூஜை !
ஒரு மனிதனுக்கு இரண்டு பிறப்பு!
இந்த வழியில் போனால் கடவுளை காணலாம்
தூலப் பாம்பு விஷம் கக்கும்.
யோகப்பாம்பு அமுதம் கொட்டும்
இல்லறம், துறவறம் என்று அனைத்தும் பாங்கிலும் இருக்கும் மனிதற்கு பதஞ்சலி யோகம் ஒரு அருமையான வரப்பிரசாதம் என்பதை தவிர வேறென்ன சொல்ல முடியும்.

No comments:

Post a Comment