Saturday, July 11, 2015

தங்கத்தில் வாசம் செய்கிற மகாலட்சுமி :

தங்கத்தில் வாசம் செய்கிற மகாலட்சுமி :
மகாலட்சுமி மிகவும் விரும்பி தங்கும் இடங்களில் தங்கமும் ஒன்று. எனவேதான் பெண்கள் கண்டிப்பாக
ஏதாவது ஒரு தங்க ஆபரணம் அணிந்திருக்க வேண்டும் என்கிறார்கள். தங்க ஆபரணங்கள் உடலுக்கு ஒரு புனிதத் தன்மையை தருவதாக சான்றோர்கள் சொல்லி உள்ளனர்.
தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிற காரணத்தால் அதை ஆபரணங்களாக கால்களில் அணியக் கூடாது. கொலுசு, மெட்டி போன்றவற்றை வெள்ளியில்தான் அணிய வேண்டும். இடுப்பில் தங்க ஆபரணங்கள் அணியலாம். தங்க ஆபரணங்கள் அணிவது அழகுக்காக என்றே பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.
சிலர் தங்கள் வசதியை வெளிச்சம் போட்டுக் காட்ட அளவுக்கு அதிகமாக தங்க நகைகள் அணிவது உண்டு. ஆனால் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் என்னென்ன ஆபரணங்கள் அணிய வேண்டும்? எவ்வளவு நகை அணிய வேண்டும்? என்பதற்கெல்லாம் சாஸ்திர விதிமுறைகள் உள்ளன.
உதாரணத்துக்கு கம்மல் போடும் காதில் 6 வகையான ஆபரணங்கள் அணிய வேண்டும் என்று விதி உள்ளது. அதன் மூலம் உடல் அக்கு பஞ்சர் முறையில் எப்படி ஆரோக்கியம் பெறும் என்பதை நமது முன்னோர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தங்க நகைகளை அணிவதால் நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை சங்க கால நூல்கள் அழகாக கூறியுள்ளன.தங்க நகை அணிந்தால் நம் மனதில் தெளிவும் உறுதியும் இருக்கும். இயற்கையாகவே தங்கத்துக்கு உறுதித் தன்மை அதிகம். அது நம் உடலோடு ஓட்டி கிடப்பதால் நமக்கு மன பலம் உண்டாகும்.
தங்கமானது தன்னம்பிக்கை உணர்வைத் தரும் சக்தி கொண்டது. நீங்கள் தங்க மோதிரம் அல்லது தங்க சங்கிலி அணிபவராக இருந்தால் நிச்சயமாக சில விஷயங்களில் உங்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும். இதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் தாலியை தங்கத்தில் செய்யும் மரபை உண்டாக்கினார்கள்.

1 comment: