Monday, November 30, 2015

பிரம்ம முகூர்த்தம் சிறப்பு தெரியுமா .

பிரம்ம முகூர்த்தம் சிறப்பு தெரியுமா .............
சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம 10 முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது. படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.
பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.
காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இதஎப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து
நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்
பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்
உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.
மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.
அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்
எமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம். இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது ..

வேள்வி, ஹோமம், யாகம் - ஓர் அறிமுகம்!

வேள்வி, ஹோமம், யாகம் - ஓர் அறிமுகம்!
வேள்வி, யாகம், ஹோமம், ஓமம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் சடங்கு முறை; நெருப்பினை ஏற்றி அதில் பலவேறு பொருட்களை இட்டு எரிப்பதன் மூலமாக இறைவனை வழிபடும் முறையே ஹோமம் என பொதுமைப் படுத்தி விடலாம். இந்து மரபியலில் வேதகாலத்தில் இருந்தே இத்தகைய சடங்கு முறைகள் வழக்கில் இருந்து வருகிறது. வேறு சில மதங்களிலும் இத்தகைய வழிபாட்டு முறைகள் வழக்கத்தில் இருக்கின்றன.
ஆதி மனிதனின் வாழ்வில் சூரிய வழிபாடு பிரதானமாய் இருந்தது. நெருப்பின் பயன்பாடு அறியப்பட்ட பின்னர், நெருப்பினை சக்திவாய்ந்த சூரிய கடவுளின் பிரதிநிதியாக கருதினர். இதன் தொடர்ச்சியாக தங்களை காத்துக் கொள்ளவும், தங்களது வேண்டுகோள்களை சூரிய கடவுளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஊடகமாய் நெருப்பு விளங்கத் துவங்கியது. இந்த புள்ளியில்தான் வேள்வி அல்லது ஹோமங்களின் ஆரம்பப் புள்ளி இருந்திருக்க வேண்டும். கடவுளுக்கு அர்பணிப்பதாக கருதி பொருட்கள், விலங்குகள் சமயங்களில் மனிதர்களைக் கூட யாகத்தில் இட்டு வழி பட்டிருக்கின்றனர்.
யஜுர்வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு தேவதைக்கும் என தனித்
தனியானயாகமுறைகள்கூறப்பட்டிருக்கிறது. யாகத்தில் இட வேண்டிய பொருட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மாறுபடும். யாகங்களின் மூலம் அந்தந்த தெய்வங்களை திருப்தி செய்து அதன் மூலம் நற் பலன்களைப் பெறலாம்; என்கிற கருதுகோளே காலம் காலமாய் இந்த பழக்கம் தழைத்திருக்க காரணம்.
மத நம்பிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் இந்த யாகங்களின் பின்னனியில் அறிவியல் வாதங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை நிறுவும் வகையில் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த ஆய்வுகளின் தெளிவுகள் அறிக்கைகளாய் பகிரப் பட்டிருக்கின்றன.
ஹோமம் செய்வதனால் உண்டாகும் சிறப்புகளை அகத்தியர் இந்த பாடலில் கூறியிருக்கிறார். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் பல இடங்களில் ஹோமம் பற்றிய வரிகள் காணக் கிடைக்கின்றன. அவை பின்வருமாறு...
"ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினாள்"
"வின்னா விளம்பிரை மேவிய குண்டத்துச்"
"நாடறிமண்டலம் நலவிக் நலவிக் குண்டத்தும்"
"நின்ற குண்டம் நிலையாறு கோணமாய்"
பழந் தமிழகத்தில் அறுவடை முடிந்த பின்னர் வயலில் எஞ்சியிருக்கும் பயிர்களை கொளுத்தி விடும் பழக்கம் இருந்தது.இன்றும் கூட சில இடங்களில் இதனைக் காணலாம்.இதன் பின்னர் மதம் சார்ந்த நம்பிக்கைகள் இருந்தனவா என்பது தெரியவில்லை.
ஆனால் அறிவியல் ரீதியாக இத்தகைய செயல்கள் நிலத்திற்குத் தேவையான சத்துக்களை தரும்.இதை இங்கே குறிப்பிட காரணம் வரப்புகள் சூழ்ந்த வயல்வெளியில் வளர்த்த தீயின் சுருங்கிய அல்லது சுருக்கிய வடிவமே ஹோம குண்டங்களாயிருக்க வேண்டும். ஏனெனில் ஹோமங்கள் பூமியின் மீதுதான் வளர்த்திட வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கிறது.
ஒலியும், ஒளியும் இல்லாத ஒரு வாழ்க்கையை நாம் நினைத்தே பார்க்கமுடியாது. இந்த இரண்டு சக்திகள் நமது வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கண்ணிழந்த, செவித்திறனற்ற நமது சகோதர, சகோதரிகளை பார்க்கும் போது எவரும் உணரமுடியும்.
ஒலியின் மூலம் அதிர்வுகள், ஒளியின் மூலம் வெப்பம். யாகம் என்பது இந்த இரண்டு சக்திகளை ஒருங்கினைக்கும் ஒரு நிகழ்வு. இந்த ஒருங்கினைப்பு மனித உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மை விளைவிப்பதோடு, யாகம் செய்யும் இடத்தின் சுற்றுப்புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாகவே இந்த அறிவியல் வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.
அமெரிக்க அறிவியலார் Dr.Howard steingull என்பவர் காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது ஒரு நொடிக்கு 1,10,000 ஒலி அலைகள் உருவாவதாக கூறுகிறார். இந்த அதிர்வானது உச்சரிப்பவரின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளையும் கூறியிருக்கிறார். இது மாதிரி ஒவ்வொரு மந்திரமும் தனித்துவமான அதிர்வுகளை உருவாக்கக் கூடியவை. இம் மாதிரியான மந்திரங்களை ஒத்திசைவுடன் குழுவாக சொல்லும்போது அவை உருவாக்கும் உணர்வுகளையும், அதிர்வுகளை அந்த சூழலில் இருப்பவர்கள் அனுபவித்தே அறியமுடியும்.
யாக தீயினால் உருவாகும் புகையானது மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் சுற்றுப் புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாக பல தெளிவுகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மும்பை மாநகரில் இயங்கிவரும் மருத்துவ ஆய்வு நிறுவனமான Haffkine Institute for Training, Research and Testing நிறுவனத்தை நிறுவிய Dr. Waldemar Mordecai Haffkine இது தொடபான பல தெளிவுகளை ஆதாரப் பூர்வமாய் முன்வைத்திருக்கிறார்.
சித்தர்கள் அருளிய ஹோமங்கள் பற்றிய தொடர் திசை மாறுவதாய் கருதிட வேண்டாம். பழமையின் அற்புதங்களை முன் வைக்கும் போது அவை தொடர்பான சமகால தெளிவுகளை இனையாக பகிர்ந்து கொள்வதனால் வாசிப்பனுபவம் மேலும் சுவாரசியமாகும் அல்லவா!. ஹோமங்கள் பொதுவாக ஏதேனும் ஒருவகையான எதிர்பார்ப்புகளை முன்வைத்தே செய்யப் படுகிறது. எண்ணிய எண்ணங்கள் ஈடேறிட, நோய் நொடிகளில் இருந்து காத்துக் கொள்ள, சமூக நன்மைகளை முன்வைத்து என எதிர்பார்ப்புகளே முன்னிலை வகிக்கின்றன.
ஹோமம் செய்வதன் மூலம் தெய்வங்களை திருப்தி படுத்தி பலன்களை அடைந்திடலாம் என்கிற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தையை ஆய்வறிக்கைகள் ஹோமத்தின் பலன்களை அறிவியல் ரீதியாகவும் நிறுவிக் கொண்டிருக்கிறது. ஹோமத்தில் இடும் பொருட்கள் எரிவதனால் உண்டாகும் வேதிவினைகளின் பலன்களாக பின்வரும் பயன்கள் பட்டியலிடப் படுகின்றன.
ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களில் நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிப்பதாகவும், மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், ஹோமம் நடக்கும் இடத்தை சுற்றியிருக்கும் நீர்நிலைகள், உண்வுப் பொருட்கள் ஆகியவை நச்சுத் தன்மை அடையாதவாறு பாதுகாப்பதாகவும், காற்றில் பரவியிருக்கும் கரியமிலவாயுவினை சிதைத்து ஆக்சிஜனை அதிகரிப்பதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஹோமத்தில் உருவாகும் புகையானது சூரிய ஒளியோடு கலந்து உருவாகும் ஒளிவேதி சேர்க்கையினால் கதிர் வீச்சுகளில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் பட்டியல் தொடர்கிறது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன, எதிர்காலத்தில் மேலும் பல புதிய தகவல்கள் நமக்கு வந்து சேரலாம் அவை ஆச்சர்யமாகவுமிருக்கலாம்.
இறுதியாக ஒரு தகவல், யாகம் செய்வதனால் மழை வருமா?, இந்த கேள்வியும் அது தொடர்பான வாத விவாதங்களும் முடிவில்லாதவை. நவீன அறிவியலில் செயற்கை மழை எவ்வாறு உருவாக்கப் படுகிறது என பார்த்தால் விமானங்கள் மூலம் மேகக் கூட்டத்தினிடையே சில்வர் அயோடைட் அல்லது உலர் பனிக் கட்டிகள் தூவப் படுகின்றன. இதன் பொருட்டு மேகங்கள் குளிர்ந்து மழை பெய்கிறது. இந்த உலர் பனிக் கட்டி(dryice) என்பது திண்ம கரியமில வாயுதான். வருணயாகம் என சொல்லப் படும் ஹோமத்தின் மூலம் இத்தகைய ஒரு அறிவியல் நிகழ்வே செயல்படுத்தப் படுகிறது என்கின்றனர். இது தொடர்பாக பகிர்ந்து கொள்ள நிறைய தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறேன். தனியே மின் நூல் ஒன்று எழுதிடும் உத்தேசமிருக்கிறது. அப்போது இந்த ஹோமங்களின் அறிவியலை விரிவாக பகிர முயற்சிக்கிறேன்.
ஹோமம் செய்ய என்னவெல்லாம் வேண்டும்?
யஜுர்வேதத்தில் முப்பது வகையான ஹோமங்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறது என்று முன்னர் பார்த்தோம். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான நோக்கத்தை முன்னிறுத்தி செய்யப் படுபவை. எனவே இவற்றில் பயன்படுத்தும் பொருட்களும் வெவ்வேறானவை.பொதுவில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களின் வகைகளை யஜுர்வேதம் பின்வருமாறு கூறுகிறது.
பலவகையான மர குச்சிகள் அல்லது விறகு, மூலிகைகள், பல வகையான தானியங்கள், பழங்கள், உலர்பழங்கள், திரவபொருட்களான நெய், பால், உண்வுப்பண்டங்கள், வாசனை திரவியங்கள், ஆடைகள், உலோகங்கள், நகைகள், கால்நடைகள் என பட்டியல் நீள்கிறது. இன்றைய பதிவில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களைப் பற்றி நமது சித்தர் பெருமக்கள் கூறியுள்ளதை மட்டும் பார்ப்போம்.
இந்த ஓமத் தீவளர்க்க தேவையான மூலிகைகளை சமித்துக்கள் என்கின்றனர். இனி இந்த சமித்துகள் விவரம் பின்வருமாறு...
ஆல், அத்தி, அரசு, அகில், கருங்காலி, புரசு, அருகு, பூவரசு, நெல்லி, நாவல், எருக்கு, கடுகு ரோகிணி, வன்னி, வெட்டிவேர், மூஞ்சுப்புல், தர்ப்பைப் புல், நாயுருவி, விளாமிச்சி வேர், சந்தனம், நொச்சி, தேவதாரி, மா, போன்ற பல மூலிகைத்தாவரங்களும், விலங்குக் கழிவுகளாய் பெறப்படும் வாசனை திரவியங்களும் அடங்கும்.
மேலும் இவற்றுடன், பசுப்பால், பசுத்தயிர், பசுநெய், கோசலம், மற்றும் கோமயம் பயன் படுத்தப்படுமாம். மேலும் இதில் அனைத்துவகை மூலிகை தாவரங்களும் பயன்படுத்தலாமாம். அத்துடன் தானிய வகைகளும், அனனம், எலுமிச்சை, பருத்தி ஆடைகள் மற்றும் நூல்களும் மேலும் பல பொருட்களும் வழிப்பாட்டின் தேவையைப் பொறுத்துப் பயன் படுத்தபடுகிறது என்கின்றனர்.

ஐந்து தலை பாம்பின் ரகசியம்!

ந்து தலை பாம்பின் ரகசியம்!
சிவன் தனது தலை, கழுத்து, கைகளில் பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். இதற்கு விசேஷ காரணம் உள்ளது. மனிதனுக்கு கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐம்புலன்கள் உள்ளன. இவை தீயவழிகளில் ஈடுபடும் போது, விஷம் கக்கும் நாகம் போல துன்பத்திற்கு மனிதன் ஆளாக நேரிடும். இவற்றை அடக்கி நல்வழியில் செலுத்தி விட்டால் வாழ்விற்கு அழகூட்டும் ஆபரணமாக மாறி விடும். இதை நமக்கு உணர்த்தவே நாதனாகிய சிவன் ஐந்துதலை நாகப்பாம்பைஆபரணமாக அணிந்துள்ளார். பாம்பின் ஐந்து தலையும் ஐம்புலனைக் குறிக்கும். இதை வெளிப்படுத்தும் விதமாக தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாகத்தை லிங்கத்தின் மீது ஆபரணமாக சாத்துவர். நாக லிங்கத்தை தரிசித்தால் தீய ஆசைகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்.

தனிஷ்டா பஞ்சமி பற்றிய படித்த தகவல்

தனிஷ்டா பஞ்சமி பற்றிய படித்த தகவல்
தனிஷ்டா பஞ்சமி
பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. .
சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன. அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள்.தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது.
சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.
தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.
• அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.
• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.
• கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.
• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில்
இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.
முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.
கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள்.
கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.
இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேத ஆகம பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்

பொருள்

மும்மலம்:- ஆணவ மலம், கர்ம மலம், மாயா மலம்.
----பொருள்--------------------------------------------------------
(கீழே உள்ளவற்றை வேறு எந்த சித்தாந்ததுடனோ, வேறு யாருடைய கருத்துடனோ ஒப்பிடவேண்டாம். இருப்பதை இருக்கும்வண்ணம் எதனுடனும் ஒப்பிடாமல் படிக்கவும்.)
மலம் என்றால் அழுக்கு (அ) தேவையற்றது என்று
பொருள்.
மனிதன் தன் சுயவடிவான இறைநிலையை உணர மூன்று மலங்கள் மனிதனுக்கு தடையாய் உள்ளது.
அவை,
ஆணவம் (நான் என்னும் அஹங்காரம்),
கர்மம் (செயல்களை நான் செய்கிறேன் என்னும் பிரமை),
மாயை (இல்லாததை இருப்பதாய் பாவனை செய்வது).
--------------********--------------
இம்மலங்கள் யாவை, அவைகளினின்று விலகுவது எங்கனம் என காண்போம்!!
ஆணவ மலம்:-
-------------------------------
“நான்” என்னும் சிந்தனையே ஆணவம் எனப்படும். வடமொழியில் இதனை “அஹங்காரம்” என்பார்கள் “அஹம்” என்றால் “நான்” என்பது பொருள். “அநாதி அவித்யா அஹங்காரம்” என்று வசிஷ்டர் கூறுகிறார்.
அதாவது துவக்கமே அற்ற அறியாமை தான் “நான்” என்பது, என்று வாசிஷ்டத்தில் மகரிஷி வசிஷ்டர் கூறுகிறார்.
பிரபஞ்சம் சிருஷ்டி துவங்கியபோது தோன்றிய முதல் அறியாமையே இந்த “நான்” என்றும் கூறுகிறார்.
இந்த நான் என்பது என்ன என்பதனை புரிந்துகொண்டால், ஆணவ மலத்தை கடந்துவிடலாம்.
நாம் “நான்” என்று கூறும்போது சரியாகத்தான் கூறுகிறோம்.
ஆனால் அதன் பொருளைத்தான் தவறாக புரிந்து கொள்கிறோம்.
“நான்” என்னும் சொல்லை எப்பொழுது நாம் நம் உடலோடு சேர்த்து புரிந்துகொள்கிறோமோ அப்பொழுதே அது ஆணவமலமாக மாறுகிறது.
ஆனால் “நான்” என்பதோ பெயரும் குணமும் அற்ற “பிரம்மத்தை” குறிப்பதாகும்.
“இறைவனுக்கு மிகவும் பொருத்தமான பெயர் “நான்” என்று ரமணர் கூறுகிறார்.
ஒரு மின்விசிறி, ஒரு கிரைண்டர், ஒரு மின் அடுப்பு, ஒரு வாஷிங்மிஷீன் இவை நான்கும் உள்ளது.
இதில் மின்விசிறி என்ன சொல்லும்? “நான் சுற்றுகிறேன். நான் காற்றை வரவழைக்கிறேன்.” என்று சொல்லும்.
“நான் அரிசியை மாவாக அரைக்கிறேன்” என்று கிரைண்டரும்,
“நான் தண்ணீரை கொதிக்கச் செய்கிறேன்” என்று மின் அடுப்பும்,
“நான் துணிகளை துவைக்கிறேன்” என்று வாஷிங்மஷீனும் சொல்வதாக கற்பனை செய்துகொள்வோம்.
இதில் சற்றே கூர்ந்து நோக்கினால், இவைகள் நான்குமே உபயோகிக்கப்படும் திறன் நிறைந்த ஜடப்பொருள்கள் மட்டுமே.
இவைகளுக்கு உயிராக விளங்குவது மின்சக்தி ஆகும். மின்விசிறியில் சுழலும் ஆற்றல் சூன்யமாக (அ) மறைந்து உள்ளது. மின்சாரமே அதனை சுழலசெய்கிறது. அதே போலத்தான் மற்றவையிலும்.
இங்கு “நான் சுற்றுகிறேன்.
நான் காற்றை வரவழைக்கிறேன்.” என்று விசிறி கூறினால் அதில் “நான்” என்னும் சொல் ஜடப்பொருளான மின்விசிறியை குறிக்காது. அதற்கு உயிரான மின்சாரத்தை தான் குறிக்கும். அதேபோலத்தான் மற்றவையிலும்.
இப்பொழுது நம் கதைக்கு வருவோம்.
நம் சரீரம் எதனை எத்தனையோ ஆற்றல்களை கொண்டுள்ளது. ஆனாலும் நம் சரீரமும் அந்த மின்விசிறியும் ஒன்றுதான்.
ஆற்றல் சூன்யமாக (அ) வெளிப்படாமல் உள்ள நிலையில் நம் உடலும் ஜடம் தான்.
இறந்த பிரேதத்தைப் போல. . . .
நம் உடலுக்கு இயக்க சக்தியை தருவது இப்பிரபஞ்சம் ஆகும். எந்த பிரபஞ்ச சக்தி நக்ஷத்திரங்களை அந்தரத்தில் நிற்கச்செய்கிறதோ, எந்த பிரபஞ்ச சக்தி சூரியனை பிரகாசிக்கசெய்கிறதோ, எந்த பிரபஞ்ச சக்தி நிலவுக்கு குளிர்மையை தருகிறதோ, எந்த பிரபஞ்ச சக்தி புல்பூண்டு முதலியவை செழிக்கசெய்கிறதோ, அதே பிரபஞ்ச சக்திதான் இந்த உடலையும் இயக்குகிறது.
சரீரம் வெறும் ஜடம். இறந்த சவத்திற்கு சமம். அதற்கு உயிராய் இருந்து இயக்க ஆற்றலை தருவது பிரபஞ்ச சக்தியாகும். ஆகையால் இங்கு “நான்” என்பது பிரபஞ்ச சக்தியைத்தான் குறிக்கும்.
நான் ஓடினேன் என்று கூறும்போது, “பிரபஞ்ச சக்தி இவ்வுடலை ஓடச்செய்கிறது” என்றுதான் பொருள்.
அதேபோலத்தான் நம் செயல்கள் அனைத்துமே. “எப்பொழுது நாம் “நான்” என்னும் பதத்தை நம் சரீரமாக கற்பனை செய்கிறோமோ அப்பொழுது அது “ஆணவ மலம்” எனப்படும்.
எப்பொழுது “நான்” என்பது அந்த பிரபஞ்ச சக்தியை குறிக்கும் என்று உணருகிறோமோ அப்பொழுது அது “பிரஹ்ம ஞானாமாக” மிளிரும்”
ஜடமான சரீரத்தை “நான்” என்று எண்ணும் புரிதல் அற்ற சிந்தனைக்குப் பெயர்தான் “ஜீவன்” என்பதும்.
தவிர உயிர், ஜீவன், ஆத்மா என்று தனியே உடலில் எங்கும் இல்லை. மனதின் கற்பனை பாத்திரம் தான் “ஜீவன்”.
உண்மையில் அப்படி அல்ல நம்மை இயக்கும் ப்ரபஞ்ச சக்தியான ப்ரும்மமே அந்த ஜீவன்.
இல்லாத ஜீவனை இருப்பதாக எண்ணி, அந்த “ஜீவனே நான்” என்று புரிதல் இல்லாமல் கற்பனை செய்வதே “ஆணவ மலம்”.
பிரபஞ்சம் இயக்கினால் சரீரம் இயங்கும். இல்லாவிட்டால் செத்துப்போனதாக கருதப்படும். அவ்வளவுதான். இதில் உயிர், ஜீவன், ஆத்மா என்பவை மனதின் கற்பனை.
நான் என்று கூறுவது தவறல்ல. அது பிரபஞ்சத்தின் சொல். ஆனால் “நானை” உடலாக எண்ணுவது தான் தவறு.
ஜீவோ ப்ரும்ஹைவ நா பர: ...........
கர்ம மலம்:-
--------------------
வடமொழியில் “கர்மா” என்றால் செயல்கள் என்று  
பொருள்

ஏதோ ஒரு கர்ம பலன், இந்த ஜென்மா கிடைத்துள்ளது

ஒரு சமயம் பார்க்கவர் என்ற முனிவர், தன் புத்திரன் ஜடமாக இருப்பதைப் பார்த்து,
"நீ ஏன் இப்படி ஜடமாக இருக்கிறாய்? வேதம் படித்தும், குரு சிஷ்ருதை செய்தும்,
பிச்சை எடுத்தும் ஆத்ம லாபம் தேடிக்கொள்...' என்றார்.
அதற்கு அந்தக் குழந்தை, "தந்தையே... நான் இதற்கு முன், எத்தனையோ ஜென்மாக்கள்
எடுத்தாகி விட்டது.
பூர்வ ஜென்மத்தில் பரமாத்மாவிடம் என் ஆத்மாவை வைத்து, ஆத்ம விசாரணை
செய்து ஞானம் பெற்றேன்.
இப்போது இந்த ஜென்மா கிடைத்துள்ளது.
இனி, நான் எதையும் கற்றுணர வேண்டும் என்பதில்லை. இந்த ஜென்மாவில்,
மேலும் ஞானத்தால் பகவானை அடைவேன். இனி, பிறவி இராது.
"பூர்வ ஜென்மங்களின் புண்ணிய வசத்தால், எனக்கு பூர்வ ஜென்மங் களில்
நிகழ்ந்தவை ஞாபகம் உள்ளது.
பல ஜென்மங்களுக்கு முன், நான் ஒரு வைசியனாக இருந்த போது,
ஒரு பசுவை கட்டிப்போட்டு, தண்ணீர் கொடாமல் இருந்து விட்டேன்.
அந்தப் பாவத்துக்காக, எனக்கு நரகலோக வாசம் ஏற்பட் டது.
நரகத்தில், என்னைப் போல் பல பாவிகளும் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
"இங்கிருந்து எப்படி விடுதலை கிடைக்கும் என்று எல்லாருமே ஏங்கி அழுது கொண்டு
இருந்தோம்.
அந்த சமயம், திடீரென்று, குளிர் காற்று வீசியது. இது எப்படி ஏற்பட்டதென்று பார்த்தேன்.
அப்போது எம தூதர்கள், ஒரு புண்ணிய புருஷனை அங்கு அழைத்து வந்தது தெரிந்தது.
அந்த புண்ணிய புருஷன் வந்ததால், இங்கு குளுமையான காற்று வீசியதாக தெரிந்து
கொண்டேன்.
அந்த எம தூதன், புண்ணிய புருஷனுடன் வரும்போது, நரகலோகத்தை காண்பித்தபடி
வந்தான்.
"நரகவாசிகள், அந்த புண்ணிய புருஷனிடம், "ஐயா... நீங்கள் போய் விடாதீர்கள்.
இங்கேயே இருங்கள்.
நீங்கள் இருப்பதால், இங்கு எங்களுக்கு குளிர்ச்சியும், சுகமும் ஏற்படுகிறது...'
என்று கூறினர்.
அவரும் அப்படியே நின்று, எம தூதர்களை பார்த்து,
"நான் பல யாக யக்ஞங்கள் செய்துள்ளேன். தான தர்மம் செய்திருக் கிறேன்.
நான் விபச்சித் என்ற அரசனாக இருந்த போது, குடிமக்களை நீதியுடன் பரிபாலனம்
செய்தேன்.
அப்படி இருக்கும்போது, என்னை ஏன் நரக லோகத்துக்கு அழைத்து வந்தீர்...'
என்று கேட்டார்.
"அதற்கு எம தூதன், "ஐயா... நீர் சொல்வதெல்லாம் உண்மை! ஆனாலும், நீர்
உம்முடைய மனைவி ஒருத்திக்கு, தவறு செய்து, துக்கப்படும்படி செய்து விட்டீர்.
ஒரே ஒரு சமயம் தான் அப்படி செய்தீர். இருந்தாலும், அது பாவம் தான்.
அதனால்தான் உமக்கு நரகலோக வாசம் இல்லாவிட்டாலும், நரகலோகத்தை
பார்க்கும்படியான சின்ன தண்டனை கிடைத்து உள்ளது.
இப்போது பார்த்தாகி விட்டது. இனி, நீர் செய்த புண்ணிய பலனை அனுபவிக்கலாம்.
அதோ விமானம் வருகிறது...' என்றான் எமதூதன்.
"அதற்கு அந்த புண்ணியவான், "ஐயா... நான் இங்கிருப்பதால் இத்தனை பேர்களுக்கும்
சுகம் ஏற்படுகிறது.
ஆகவே, நான் இங்கேயே இருந்து விடுகிறேன்.
நரகமானாலும், பிறருக்கு உதவி செய்வதற்காக நான் இங்கேயே இருந்து
விடுகிறேன்...' என்றார்.
"இவர்களுக்கு ஏதாவது புண்ணியம் இருந்தால் இங்கிருந்து விடுதலை கிடைக்கும்.
புண்ணியமில்லாத போது, நரக வாசம் தான்!
நீங்கள் வந்து விமானத்தில் ஏறி, சுவர்க்கம் செல்லுங்கள்...' என்றான்
எம தூதன்.
"அதற்கு அந்த புண்ணியவான், "ஐயா... நான் செய்த புண்ணியங்களில்
ஒரு பகுதியை இவர்களுக்கு அளிக்கிறேன்.
இவர்களை நரகத்திலிருந்து விடுதலை செய்யுங்கள்...' என்றார்.
அதேபோல் புண்ணியத்தில் ஒரு பகுதியை தானம் செய்தார்.
அந்த புண்ணிய பலன் கிடைத்ததும், பாவிகளுக்கு விடுதலை கிடைத்தது,
அந்த புண்ணியவானும் விமானம் ஏறி சுவர்க்கம் சென்றார்.
அந்தக் கூட்டத்தில், நானும் ஒருவனாக இருந்ததால் நரகத்திலிருந்து எனக்கும்
விடுதலை கிடைத்தது.
"அதன் பின், பல ஜென்மங்கள் எடுத்து, நல்ல புத்தியோடு வாழ்ந்து, பகவானை
வழிபட்டு, ஞானம் வர ஆரம்பித்தது.
பூர்வ ஜென்மத்தை நல்ல முறையில் வாழ்ந்து, ஞானத்தை வளர்த்தேன்.
ஏதோ ஒரு கர்ம பலன், இந்த ஜென்மா கிடைத்துள்ளது...' என்றது
அந்தக் குழந்தை.

வாஸ்து சாந்தி

வாஸ்து சாந்தி: வாஸ்து என்கிற சொல்லுக்கு, வசிக்கும் இடம் என்றும், பூமி, நிலம் என்றும் பொருள் ஆகிறது. அந்தகன் என்கிற அசுரன், சம்காரம் செய்யப்பட்ட காலத்தில், சிவபெருமானின் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளி பூமியில் விழுந்து மீண்டும் ஓர் அசுரனாக மாறி பூமியை விழுங்க முற்பட்டபோது, சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி அந்த அசுரனை கீழே தள்ளச்செய்து, அவன் மீது பிரம்மன் முதலான ஐம்பத்து மூன்று தேவதைகளை வசிக்கும்படி பணித்தார். அவனது கோரப்பசி தீர்வதற்காக, உலக வடிவமான பூசணிக்காயை உணவாகக்கொடுத்தார். அந்த அரக்கன்தான் வாஸ்து புருஷன். வாஸ்து புருஷனையும் அவரது அதிதேவதையான பிரம்ம தேவரையும், சக்திகளையும் பூஜித்து ஏனைய தெய்வங்களையும் வழிபட்டு திருப்திசெய்வதே வாஸ்து சாந்தி. மகிழ்வித்த வாஸ்து புருஷனை ஹோமாக்னியால் எரியூட்டி, ஆலயம் முழுவதும் இழுத்து சென்று சுத்திகரித்து இறுதியாக புண்யாஹவாசன நீரினால் அவ்விடங்களை சுத்தி செய்கின்றனர்.
பிரவேச பலி: ஓரிடத்தில் கோயில் எழுப்பப்பட்டிருக்கும்போது, சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் உள்ள பூத பிசாச பிரம்மராக்ஷஸர்கள், துர்தேவதைகளுக்கு பலி கொடுத்து அவற்றை ஏற்றுக்கொண்டு வேறு இடம் செல்லுமாறு அவர்களை வேண்டி, இடையூறுகளை நீக்கிக்கொண்டு பிறகு எண் திசைக் காவலர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலானவர்களை அவரவர்களுக்குரிய திசைகளில் வரவழைத்து வழிபட்டு, ஆலயத்தைக் காத்திடும்படி வேண்டுவதற்கு பிரவேச பலி என்று பெயராகும்.
ரக்ஷோகண ஹோமம்: புறத்தே இருக்கும் தேவதைகளை அகற்ற பிரவேச பலி போல ஆலயத்தின் உள்ளே இருக்கக்கூடிய துர்தேவதைகளை சாந்தி செய்து அகற்றிட ரக்ஷோகண ஹோமம் செய்யப்படுகின்றது ரட்சோ _ அரக்கர்கள். க்ணம்_ஒடுக்குதல்.
ஸ்ரீசூக்த ஹோமம்: மகாலக்ஷ்மியைக் குறித்து செய்யப்படுகின்ற இந்த யக்ஞத்தை, ரிக்வேதத்திலுள்ள ஸ்ரீ சூக்த மந்திரங்களைச் சொல்லி, திருமகளின் கருணை வேண்டி வழிபடல் வேண்டும். இதனால் கும்பாபிஷேகப் பணிகளில் ஈடுபட்டிருப்போரின் வீடுகளில் லக்ஷ்மி கடாட்சம் ஏற்படுமென்பது ஐதிகம்.
சாந்தி ஹோமம்: அமைக்கப்பட்டுள்ள யாக குண்டங்களில் பாசுபதாஸ்திர மந்திரங்களைக் கூறி, கலசத்திலும் ஆவாஹனம் செய்து, அஸ்திர மந்திரங்களால் ஹோமம் செய்து, கலச நீரை அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்து, ஆலயக்கட்டுமானப் பணிகளில் குறைகள் ஏதும் இருப்பின், அவற்றிற்குப் பரிகாரமாக செய்வது சாந்தி ஹோமம்.
மூர்த்தி ஹோமம்: அடுத்ததாக கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக எழுந்தருளும் தெய்வ பிம்பங்களுக்கு சக்தியூட்டும் விதமாக ஹோமம் செய்வது, மூர்த்தி ஹோமம் எனப்படுகிறது.
சம்ஹிதா ஹோமம்: சிவபெருமானுக்குரிய பெருமைகளைக் கூறி நடத்தும் இந்த யக்ஞம், இது பரிகார யக்ஞம் ஆகிறது.

இல்லறம் ... இன்பமா .. ? இல்லை ..... துன்பமா ...?

இல்லறம் ... இன்பமா .. ?
இல்லை ..... துன்பமா ...?
விட்டுக் கொடுத்தல் தான் இல்லற இன்பம்.!
இதுவே குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு சரியான வழி ..!!
~~~
ஒரு முறை கபீர்தாசரிடம் அவருடைய பக்தர் அறிவுரை கேட்க வந்திருந்தார்.
அவர் கபீர்தாசரிடம், “எனக்கு இல்லற வாழ்க்கை இன்பமாக இல்லை! என்னுடைய மனைவியும் நானும் இன்பமாக குடும்பம் நடத்தவில்லை! எப்பொழுதும் சண்டைதான்! நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை" என்றார்.
கபீர்தாசர் “சரி இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள்”, என்று சொல்லிவிட்டு, உள்ளே போய் ஒரு பெரிய நூல் கண்டை எடுத்து கொண்டுவந்து வீட்டிற்கு வெளியே வெளிச்சத்தில் உட்கார்ந்தார்.
அந்த பெரிய நூல்கண்டு சிக்கலாயிருந்தது. அதனாலே கபீர்தாசர் அதில் உள்ள சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்தெடுத்தார். நல்ல வெளிச்சமாகத்தான் இருந்தது.
மனைவியிடம் விளக்கை எடுத்துக் கொண்டுவா என்றார். அந்த அம்மாவும் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டுவந்து அவர் பக்கத்திலே வைத்துவிட்டு உள்ளே போய்விட்டார்கள். “இவ்வளவு வெளிச்சத்தில் விளக்கு எதற்கு என்று எதுவும் கேட்கவில்லை”.
சிறிது நேரம் கழித்து அந்த அம்மா இரண்டு டம்ளர் பாலைக் கொண்டுவந்து அவர்கள் முன்னால் வைத்தார்கள். இரண்டு பேரும் அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்கள். வந்திருந்தவரின் முகம் சுருங்க ஆரம்பித்தது… பாலை அவரால் குடிக்க முடியவில்லை. ஏனெனில், அந்த அம்மா பாலில் சர்க்கரைக்குப் பதிலாக
தவறுதலாக உப்பைப் போட்டு இருந்தார்கள்.
ஆனால் கபீர் முகத்திலே எந்த வித்தியாசமும் இல்லை. அவர் அதை அப்படியே குடித்துவிட்டார். அந்த அம்மா, “பாலுக்குச் சர்க்கரை போதுமா?” என்று கேட்கிறார்கள்! அதற்கு கபீர்தாசர், “போதும்! இனிப்புச் சரியாக இருக்கு!” என்கிறார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு எதிரில் இருந்தவர், “இன்னும் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லவில்லையே!” என்று கபீர்தாசரைப் பார்த்து விளவினார். அதற்கு கபீர்தாசர், “நான் இப்பொழுது என் மனைவிக்கு என்ன பதில் சொன்னனோ அதுதான் உங்கள் கேள்விக்கும் பதில் என்றார்”.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்..
கபீர் வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டு விளக்கை கேட்டபோது, அவர் மனைவி ஏதும் கேட்காமல் விளக்கை கொண்டு வந்து வைத்தார்.
கபீரின் மனைவி பாலில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பை போட்டிருந்த போது, கபீர் ஏதும் கூறாமல் அதைக் குடித்தார்.
இதுவே இல்லற இன்பம் .....
நானும் என் மனைவியும் குடும்பத்திலே ஒருவரை ஒருவர் ரொம்ப “விட்டுக் கொடுத்து” நடந்து கொள்வோம்.அதனால் எங்களுக்குள் மனஸ்தாபம் வருவதே இல்லை என்றார் கபீர்.
வந்தவருக்கு இல்லறம் இன்பம் எதுவென புரிந்தது ..!
நீங்கள் மணமானவரா .. உங்களை துணைவருக்கு விட்டுக் கொடுப்பீர்களா .. ஆம் என்றால் சரி .. இல்லையென்றால் இன்றிலிருந்து விட்டுக் கொடுத்துப் பாருங்கள் ..!

கடும் சோதனைகள் வருவது ஏன் ...? கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் ...?

கடும் சோதனைகள் வருவது ஏன் ...? 
கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் ...? 

சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.
கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும் நமக்கு நம் தலைவிதியை இறை வழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்.
நாம் கடவுளின் சோதனை என்று சொல்வது, நமக்கு நாமே, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகளேயன்றி வேறல்ல.
மக்களிடம் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கஷ்டங்களை அனுபவிக்கும்போது, ஏன் எனக்கு, என்பவர்கள், அவர்கள் வளர்ச்சி யடைகையில், எனக்கு ஏன் இந்த வளர்ச்சி, என்று கேட்பதேயில்லை ... !
எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என்பவர்கள், என்றாவது எனக்கு மட்டும் ஏன், இந்த மாருதி கார், ஹீரோ ஹோண்டா பைக், சாம்சங் கலக்ஸி மொபைல், லேப் டாப், ஐ.டி கம்பனி வேலை, வங்கியில் பணம் ,வீடு, நகை, வெளிநாட்டுப் பயணம், என்று கேட்டதுண்டா .. ?
வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது, மின்னாது, தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது. நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள், ஆனால் வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள் அவர்களை சிறப்பிக்குமே தவிற கசப்பிக்காது.
ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.அதே போல பிறந்த தேதியிலி ருந்து இறுதிவரை சந்தோஷத் துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது.
கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்த வர்களுக்கு, ஆண்டவன் ஒரு நாள் உதவாமற் போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று, யாரையும் ஆண்டவன் அப்படியே விட்டுவிட மட்டான்.
விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் பாடங்களே போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன வலிமை வரும். சோதனைகள் என்பது மனோதி டத்தை அதிகரிக்க உதவும்
சில சமயங்களில், அவர் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில், நாம் அவரைக் காண முடிவதில்லை. சோதனை வேளை களில் நாம் காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார். அவருடைய கண்கள் நம்மீது எப்போதும் நோக்கமாயி ருக்கின்றன.
எனவே, நற் சிந்தனையுடன், அவரது நாமமே ஜபித்து, அவரை வணங்கி, அவரிடம் சரண் அடைந்தால், நாம் நமது சோதனைகளையு ம், கர்ம வினைகளையும், பயமின்றி கடந்து சாதனையாக்கலாம்.
உங்கள் பிரச்சனை பெரிதாக இருந்து, அதை சமாளிக்க கூடிய கொள்ளளவு உங்களிடம் இல்லையென்றால், சோர்ந்து விடாதீர்கள், உங்களது அனைத்து முயற்சி களும் தீர்ந்து போகும் போது, கடவுளின் கருணை ஆரம்பமாகும்.
கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்ளுங்கள்...
நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகுங்கள்....
வருங்காலத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்....
கிடைக்காததையும் தவறவிட்டதையும் நினைத்துத் தளராதீர்கள்...
பயத்தைக் களைந்து நம்பிக்கையை தக்க வையுங்கள்...
சந்தேகங்களை நம்பாதீர்கள்
நம்பிக்கையை சந்தேகிக்காதீர்கள்.
உங்களுக்கு கிடைத்த வரங்களை எண்ணில் கொள்ளுங்கள்.
கடவுளை நம்புங்கள் அவர் நல்லவர்களைக் கை விட மாட்டார்...!

Saturday, November 28, 2015

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?
நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், எமக்கு பிடித்தவர்கள், பிரபலங்கள் போன்றோர் இறந்தால், சில நேரங்களில் எமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும். அவ்வாறு வருவதால் ஏற்படும் பலன்கள் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.
ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.
இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம்.
வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை

உண்மையான ஆன்மீக வாழ்கை

உண்மையான ஆன்மீக வாழ்கை
ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.
அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.
ALL IS NOT GOD, BUT GOD IS ALL
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

மனிதன் விட வேண்டிய 21 தீய குணங்கள்!

மனிதன் விட வேண்டிய 21 தீய குணங்கள்!
மனிதன் அன்றாட வாழ்வில் 21 தீய குணங்களை கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்று கூறுகின்றனர். அவை ..
1.தற்பெருமை கொள்ளுதல்
2.பிறரைக் கொடுமை செய்தல்
3.கோபப்படுதல்
4.பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல்.
5.பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்
6.பொய் பேசுதல்
7.கெட்ட சொற்களைப் பேசுதல்
8.நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை
9.புறம்பேசுதல்
10.தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்
11.பாரபட்சமாக நடத்தல்
12.பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல்
13.பொய்சாட்சி கூறுதல்
14.எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
15.வாக்குறுதியை மீறுதல்
16.சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
17. குறை கூறுதல்
18.வதந்தி பரப்புதல்
19.கோள் சொல்லுதல்
20.பொறாமைப்படுதல்
21.பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்.

பொறாமையால் ஏற்படும் தீங்கு என்ன

பொறாமையால் ஏற்படும் தீங்கு என்ன?
கை, கால், காது, கண், நாக்கு, என, அனைத்து உறுப்புகளும் நன்றாக இருப்போர், அங்கஹீனம், காது கேளாமை, பேச்சு இழந்தோர், பார்வையற்றோர் ஆகியோரைப் பார்க்கும் போது, ஆண்டவா... எந்தக் குறையும் இல்லாமல் என்னைப் படைத்தாயே... என்று, இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்து விடுகிறோம். அதே சமயம், தெருவில், யாராவது சிரித்து பேசி செல்வதைப் பார்த்தால், சிரிப்பைப் பார்... சிரிப்பை! என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு... என்று, சிலருக்கு மனம் வெம்முகிறது.
அடுத்தவர்கள் சற்று மகிழ்ச்சியாக இருந்தால் கூட, இவர்களால் பொறுக்க முடிவதில்லை. இந்த பொறாமை குணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது. திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்கு, அரண்மனை வாழ்வு, ஆள், அம்பு, சேனை, ராஜபோகம், பணிப்பெண்கள் என, அனைத்து வசதிகளும் இருந்தன. திருதராஷ்டிரன் தம்பியான பாண்டுவின் மனைவி குந்தியோ, காட்டில் ஒரு வசதியும் இல்லாத சூழலில் வசித்து வந்தாள். இந்நிலையில், குந்திதேவிக்கு, காந்தாரிக்கு முன்னரே, குழந்தை பிறந்து விட்டது. இச்செய்தி, நாட்டில் வாழ்ந்த காந்தாரிக்கு தெரிந்ததும், அவளுக்கு பொறுக்க முடியவில்லை. அவள் உள்ளத்தில் பொறாமைத் தீ, எரிமலை குழம்பாய் வெடித்து, வழிந்தது. அதன் விளைவாக, காந்தாரி, ஒரு அம்மி குழவியைக் எடுத்து, தன் வயிற்றில் இடித்துக் கொண்டாள். அவள் கரு சிதைந்து, ரத்தம் கலந்த சதை கூறுகளாக சிதறின.
வியாசர் அந்தச் சதை கூறுகளை, நூற்றியொரு குடங்களில் இட, துரியோதனன் முதலான நூறு பேர்களும், துச்சலை என்ற ஒரு பெண்ணும் உருவாயினர். காந்தாரியின் இத்தகைய பொறாமை குணத்தின் காரணமாகவே, கவுரவர்களும் இயல்பிலேயே பொறாமை குணம் படைத்தோராக விளங்கி, பாண்டவர்களின் மேல் கொண்ட பொறாமையால் அழிந்தனர். நாம் யாரைக் கண்டு பொறாமைப்படுகிறோமோ, அவர்களுக்கு ஒன்றும் நேராது; பொறாமைப்பட்ட நமக்குத்தான் கேடு விளையும். எனவே, பொறாமையை மனதிலிருந்து துரத்தி, நற்சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். நடப்பவை, நல்லனதாகவே அமையும்

Friday, November 27, 2015

சிவாஜி..!

சிவாஜி..!
நட்புக்கரம் நீட்டி வரவைழத்த ஒளரங்கசீப், நயவஞ்சகமாகத் தன்னையும் தன் மகைனயும் கைதுசெய்து சிறையில் அடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத மராட்டிய மாவீர‌ன் சிவாஜி, அடிபட்ட புலி போல ஆக்ரா சிறையில் உறுமிக்கொண்டு இருந்தார்.
மகன் சம்பாஜியிடம், ‘‘ஒவ்வொரு வியாழனும் ஏராளமான பழங்கள் வைத்து பூஜித்து, அதைத் தானம் செய்வது வழக்கம் என்று சிறை அதிகாரிகளிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்’’ என்றார்.
‘‘தந்தையே! நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இப்போது எதற்காக பூஜை?’’ என்று மகன் கேட்க, ‘‘மகனே! நீ அச்சத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டாய் என நினைக்கிறேன். அச்சப்பட்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. நான் இங்கிருந்து தப்பிக்கத்தான் வழி சொல்கிறேன்’’ என்றார் சிவாஜி.
‘‘முகலாயர்களிடம் இருந்து தப்புவதா... அது முடியுமா?’’ என மீண்டும் மகன் சந்தேக‌த்துடன் கேள்வி எழுப்ப, ‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ என்றார் சிவாஜி உறுதியோடு!
அதன்பின், சிறைகுப் பழக்கூடைகள் வருவதும் போவதும் வழக்கமாயிற்று. அந்தக் கூடைக்குள் அமர்ந்துதான் சிவாஜியும் சம்பாஜியும் ஒருநாள் தப்பித்தார்கள்.
பூனேவுக்கு அருகே, 1630-ல் சிவானி கோட்டையில் பிறந்தார் சிவாஜி. தந்தை ஷாஜி, பூனே சுல்தானின் படைப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி வந்ததால், தாய் ஜீஜாபாய் மற்றும் தளபதி ஷாயாஜியின் மேற்பார்வையில் வளர்ந்தார் சிவாஜி. சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட் போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்துக்கைள அடக்கி ஆண்ட முகலாய ஆட்சியின் மீது அவருக்கு இயல்பாகேவ வெறுப்பு இருந்தது. தாய் ஜஜீ போய் சொன்ன வீர‌ க் கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும், இந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஆர்வமும் ஊக்கமும் தந்தன.
‘‘மாபெரும் படை கொண்ட முகலாயர்கைள என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்டேபாது, அவரது தாயும், சுவாமி ராமதாசரும் ஒரு சேரச் சொன்ன பதில்... ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.
பூனாவுக்கு அருகே மலைகளில் வசித்து வந்த ‘மாவலி’ மக்களிடமிருந்து இளைஞர்கைளத் திரட்டி, ‘கொரில்லா’ படை அமைத்தார் சிவாஜி. முகலாயர்களின் பிடியில் இருந்த ரோஹிதேசுவரர் ஆலயத்தையும், தேரான் கோட்டையையும் கைப்பற்றினார். சிவாஜியின் இந்த வெற்றி, இந்துக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தேவ, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது படையில் இணைந்தார்கள். அதன்பின் குபா கோட்டை, இந்திரபுரி, ஜாவ்லி என கிட்டத்தட்ட முந்நூறு கோட்டைகள் சிவாஜி வசமாயின. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை... துணிந்தவனுக்குத் தொல்வியில்லை’’ என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி.துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.
ஒருமுறை, சிவாஜியின் கோட்டை முன் பெரும் கடெலன முகலாயர் படை நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால், சிவாஜி நிராயுதபாணியாக தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வரேவண்டும் என அழைப்பு விடுத்தான் தளபதிஅப்சல்கான். தனிமையில் போக‌வண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,
‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னைகத்தவாறு பகைவனைத் தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தஅப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா இத்தனை படையுடன்வந்திருக்கிறேன்’’ என்றபடி சரேலென‌ தன்னுடைய வாளை உருவி, சிவாஜியின் மார்பில் செலுத்தினான். உள்ளே கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து, தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதி’ என முடிசூடினார் சிவாஜி.
1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்கிற அவரது தாரக மந்திரம்தான்.

ஐயப்பனின் வரறு

ஐயப்பனின் வரறு
லாமகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார்.
சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.
தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் சூட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.
எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். அவனுக்கு ராஜராஜன் என்று பெயர் சூட்டினர். மணிகண்டனின் வருகையால் தான் தனக்கு எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன், மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த மந்திரி, மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும், வசதிகளும் போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது சூழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான்.இது சூழ்ச்சி என்று தெரிந்தபோதிலும், மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறினர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை வென்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.
ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாது என்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயன் அருள் செய்தார்.
மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.
மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழுந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.
மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.
ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.
ஐயப்பனின் வாழ்வில் வாபரின் பங்கு
வாபர் ஒரு இஸ்லாமியர். கொள்ளைக்காரனாக இருந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்தார். அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை. எனவே அவர்கள் ஐயப்பனிடமே இதுபற்றி முறையிட்டனர்.
ஒருமுறை ஐயப்பன் வாபரை காணச்சென்றார். குழந்தையாக இருந்த ஐயப்பன் வாபருக்கு எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால் உன்னை அழித்துவிடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்லுவேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் வாபரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றார்.
அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலுக்கு வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

Monday, November 23, 2015

பகவானுக்கு நன்றி

பகவானுக்கு நன்றி 
பகவானால் படைக்கப்பட்டது தான் இந்த உலகமும், உலகில் உள்ள புழு, பூச்சி முதல் மனிதன் வரை சகலஜீவராசிகள் யாவுமே. இந்த ஜீவன்கள் ஜீவிப்பதற்காகவே நீர், நெருப்பு, காற்று இவைகளையும், மரம், செடி, கொடி, புல், பூண்டு, காய், கனி, கிழங்கு போன்றவைகளையும் படைத்தான்.
மனிதர்களுக்காக இவ்வளவையும் படைத்துள்ள பகவானுக்கு, மனிதன் நன்றி தெரிவிக்க வேண்டாமா? அவனை நினைத்து துதிக்கலாம்; பூ, பழம் முதலியவற்றை அவனுக்கு அர்ப்பணம் செய்யலாம்; அவன் நாமாவளியைச் சொல்லிச் சொல்லி நன்றி தெரிவிக்கலாம். இந்த நன்றியை அவன் எதிர்பார்க்கிறானா, இல்லையா என்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். படைத்தல், அழித்தல், காத்தல் என்ற மூன்று காரியங்களையும் அவன் கடமையாகச் செய்கிறான்; நன்றியை எதிர்ப்பார்ப்பதில்லை. ஆனாலும், நன்றி செலுத்த வேண்டியது மனிதனின் கடமை.
பகவான், ரொம்பவும் எளிமையானவன். அவனிடம் பக்தியோடு இருப்பவர்களுக்கு தன் சுய ரூபத்தைக் காண்பிக்கிறான்; பக்தரல்லாதவருக்கு உக்ரமான ரூபத்தோடு தோன்றுகிறான். பிரகலாதனுக்கு நாராயணனாகவும், அவனது தந்தையான இரணியனுக்கு நரசிம்மனாகவும் காட்சியளித்தான். பக்தனை ரட்சித்தான்; துஷ்டனை சம்காரம் செய்தான்.
எந்த சின்ன பொருளை பகவானுக்கு, அர்ப்பணம் செய்தாலும், அதை மிகப் பெரியதாக எண்ணி, ஏற்று சந்தோஷப்படுகிறான். மனமுவந்து அவனுக்கு எந்த விதத்திலாவது நன்றி செலுத்துபவர்களை அவன் தன் பக்தனாக பாவிக்கிறான். பக்தர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான்; செய்கிறான்.
சபரி என்கிற வேடுவ ஸ்த்ரீ, பகவானிடம் பக்தியோடு இருந்தாள். காட்டில் உள்ள கனிகளை சேகரித்து பகவானின் வரவுக்காக காத்திருந்தாள். அவளது ஆசிரமத்தைத் தேடிச் சென்று அவள் அளித்த பழங்களை உண்டு மகிழ்ந்து, அவளுக்கு முக்தியும் அளித்தார் ராமர்.
பாண்டவர்களுக்காக தன் பெருமைகளை மறைத்து, தூதுவனாக சென்றான்; பார்த்தனுக்கு தேரோட்டியாக இருந்தான் பார்த்தசாரதி! என்ன காரணம்? பக்திக்குக் கட்டுப்பட்டான். பக் தனுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும் என்பது அவனது கொள்கை.
இதே நாராயணன் தானே மீனாகவும், ஆமையாகவும், பன்றியாகவும், நரசிம்மனா கவும் உருவெடுத்தான்! எதற்காக? பக்த ரட்சணம்! ஆகவே, அவன் சிறுமையாகவும் இருப்பான்; பெருமையாகவும் இருப்பான். அவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் நாமும் ஏதா வது ஒரு வழியில் அவனிடம் ஈடுபாடு கொண்டு விட்டால் அவன் அருள் செய்வான்!
“சாமியாவது, பூதமாவது…’ என்று சொன்னால் சாமி வராது; பூதம் தான் வரும்!

மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை

மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை
v தோழிப்பெண் (தோழிமாப்பிள்ளை) முன்செல்ல மணமகள் (மணமகன்) தொடர்ந்து வர மணவறையை ஒரு முறை வலம்வந்து மணவறையில் நின்று வருகையாளர்களுக்கு வணக்கம் செலுத்தி வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் பின்னர் மரமணையின் மேல் அமரவும்
v மணமகன் வேஷ்டி (பேன்ட் தவிர்க்கவும்) அனிந்து முன்நாள் பயண்படுத்திய மாலையை சாற்றி வரவும்
v மணமக்கள் ஒவ்வொரு முறை மணவறையில் நுழையும் பொழுதும் வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் வருகையாளர்களை பார்த்து தலைவணங்கி வணக்கம் செலுத்தவும்
v திருமண சடங்கு முடியும் வரை சிரித்த முகத்துடன் காட்சியளிக்கவும்
v தோழி, நன்பர்கள் சிலரை தங்கள் அருகில் திருமண சடங்கு முடியும் வரை இருக்கசொல்லவும்
v யார் அருகில் வந்தாலும் தலைவணங்கி வணக்கம் செலுத்தவும்
v திருக்கோயில் போன்று மிகவும் புணிதமான இடம் மணவறை ஆகும் எனவே அதற்குரிய மரியாதையினை தரவும்
v கைத்தொலைபேசியை மணமேடையில் பூஜையின் பொழுது பயண்படுத்த வேண்டாம்
v மணமேடையில் ஆடை விலகாமல் பார்த்துக்கொள்ளவும்
v தாலிகட்டும் பொழுது தங்களின் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்யவும்
v திருமண சடங்குகள் முடியும் வரை மனதில் இறைவனது நாமங்களை உச்சரிக்கவும்
v இறைஉணர்வான ஒரு இந்த நிகழ்ச்சியின் பொழுது தங்களின் குல வழக்கப்படி நெற்றியில் நாமம் அல்லது விபூதி இடவும். இதில் கூச்சப்படவேண்டிய அவசியம் இல்லை
v தங்களின் பாரம்பரிய உடை (பஞ்சகச்சம்) உடுத்தினால் தான் திருமணத்திற்கு அழகு, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் புனிதமான வாய்ப்பு ஆகும்
v மாதா பிதா குரு தெய்வம் எனவே திருமணத்திற்கு உங்களின் ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களை வருகைதந்து வாழ்த்த அழையுங்கள், மணமேடைக்கு அவர்களை வரவழைத்து உரிய மரியாதை செலுத்துங்கள்
v வாழ்க்கையில் 100 ஆண்டு சேர்ந்து வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்து முதன்முறையாக மணமகளின் கைப்பற்றி அக்னியை வலம் வரும் பொழுது இடையில் யாரேனும் கைகுலுக்க முனைந்தால் கட்டாயம் அன்பாக பேசி தவிர்க்கவும் (இணந்தகைகளை பிரிக்ககூடாது)
v திருமண சடங்கை எடுக்கத்தான் புகைப்படம் (புகைப்படத்திற்க்காக நடக்கும் சடங்கு திரைப்படம்)
v பாதஅணியுடன் வரும் நட்பு, உறவுகளுடன் மணமேடயில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவும், திருமண சடங்கு முடிந்ததும் மணமேடைக்கு முன்னர் தரையில் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும்
v தோழி மாப்பிள்ளை பட்டு அல்லது கதர் வேட்டி கட்டிக்கொள்ள சொல்லவும் அதுதான் அழகு, மரபும்கூட
v பெரியவர்கள் மேடையில் வந்து ஆசிர்வாதம் செய்யும் பொழுது கூச்சப்படாமல் தலைவணங்கி, பாதம் தொட்டு மரியாதை செலுத்தவும்
v திருமணத்தின் பின்னர் இருவீட்டாரின் நன்பர்களும், உறவினர்களும் பொதுவானவர்களை எனவே மணமகள் உறவினர், மணமகன் உறவினர் என பாகுபாடு இன்றி வணக்கம் தெரிவிக்கவும்
v மணமக்கள் தங்களின் உறவினர்கள் மேடைக்கு வரும்பொழுது பரஸ்பரம் உறவுமுறை சொல்லி அறிமுகம் செய்யவும்
v மெட்டி போடும் பொழுது மணமகளின் பாதங்களை இருகைகளால் தாங்கி அம்மியின் மீது பதிக்கவும்

Sunday, November 22, 2015

அஸ்வத்தாமா இறக்கவில்லை. அஸ்வத்தாமாக்களுக்கு என்றும் சாவி ல்லை!

அஸ்வத்தாமனின் மனம் எரிந்துகொண்டிருந்தது. தனிமையும், துக்கமு ம், நிராசையும், கோபமும் அவனை அலைக்கழிக்க தன்னை துரும்பாய் உணர்ந்தான். அவன் விழிகள் கண்ணீரும் ஆற் றாமையின் சுவாலையு ம் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன.
‘துரோகத்தால் என் வாழ்வு சிதைக்கப்பட்டு விட்டது. நான் தனியனானே ன். எல்லோரும் என்னைக் கொண்டாடிய காலம் கனவாய்ப் போய்விட்டது. இன்று நான் யாருக்கும் உப யோகமின்றி சிறு துரும்பென நிற்கிறேன். குரு ஷேத்திரக் களத்தில் ஒவ்வொரு ஷத்திரியனு ம் தன் பங்கை நடத்தி அழியாப்புகழ் பெற்று சுவர்க்கம் அடைந்தனர். தந்தையே! என்னை ஏன் விட்டுச் சென்றீர்? துரியா! என் உயிரே! நண்பா! என்னால் ஏதும் கையாலாகாது என்றெ ண்ணித் தூங்குகிறாயா? சற்றே விழி நண்பா! என் விழிகளில் இருந்து உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? என்ன செய்வேன் இனி?’
அது குருஷேத்திரத்தின் பதினெட்டாம் நாள் படுகளம். எங்கும் மரணஓலம் மட்டுமே எஞ்சி இருந்தது. குருஷேத்திரம் எனப்படும் ஸமந்த பஞ்சகத்தின் ஓரமாய் இருந்த குள க்கரையில் துரியோதனன் வீழ்ந்து கிடந்தான். ராஜ்யக் கனவுகள் கலை ந்து மரணத்தில் சாயை கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகத்தில் கவியத் துவங்கி இருந்தது. துரிய னின் உதடுகள் வெடித்துக் கிடந்தன. இமைகள் கிறங்கி இருந்தன. துரிய னின் தலையைத் தாங்கி இருந்த அஸ்வத்தாமன் சிறிது நீரள்ளி துரியனின் உதடுகளில் தடவினான்.
“துரியா! என் அரசே! என் தோழனே! கொஞ்சம் கண்திற! எனக்குக் கட்ட ளை இடு” பதற்றத்தோடு கெஞ்சினான் அஸ்வத்தாமன்.
துரியன் மெல்ல இமை திறந்தான்.
“அஸ்வத்தாமா! எல்லாரும் மாண்டார்களா? என் பந்துமித்திரர் எவரேனும் எஞ்சி இருக்கிறா ர்களா? தர்மத்தின் பக்கம் நின்று என் ராஜ்யம் காக்க நான் முன்னெடுத்த போர் முடிந்ததா? குந் தியின் புத்திரர்கள் எப்படி நண்பா குருவம்சத்தின் ராஜ்யபாரத்தை சொந்தம் கொண்டாட முடியும்? கடைசியில் அதர்மம் வென்றதா? எல்லாரும் மாண்டபின் நான் மட்டும் ஏன் இன்னும் உயிர் த்திருக்கிறேன்?”
“இல்லை துரியா! இன்னும் யுத்தம் பாக்கி இரு க்கின்றது. உன் கட்டளை க்காகத்தான் காத்தி ருக்கிறேன். ஒரு சொல்… பாண்டவரின் வம்ச த்தை வேரறுத்து வருகிறேன். இந்த யுத்தத்தி ன் இறுதிப்பலியாக பாண்டவர்களின் தலைக ள் இருக்கட்டும். கட்டளையிடு நண்பா!”
துரியன் முகத்தில் உயிரின் மலர்ச்சி துளிர்த் தது. சற்றே உடலை அசை த்து எழுந்தான். பிளக்கப்பட்ட தொடையின் வாதையில் அவன் முகத்தி ல் வேதனையின் ரேகைகள். தன் குருதி கலந்த குளத்து நீரள்ளி அஸ்வ த்தாமனின் கைகளில் தெளித்தான். “இக்கணம் முதல் கௌரவசேனை யின் இறுதி சேனாதிபதியாக நீயிருப்பாய் அஸ்வத்தாமா. வஞ்சம் முடி த்து வா! உன் வரவுக்காய் என் மூச்சு காத்துக் கொண்டிருக்கும்”
அஸ்வத்தாமா எழுந்தான். மிச்சமிருக்கும் தன் ஆயுதங்கள் அனைத்தும் சேகரித்தான். அபாண்டவம் என்னும் தன் அஸ்திரத்தைக் கையிலெடுத் தான். மீதம் நடக்க இருப்பவற்றையும் காணச் சகியாத சூரியன் தன் மறை விடம் புகுந்தான்.
இரவு எல்லாவற்றையும் விழுங்கிக் கொள்கி றது. அது தன் கர்ப்பப்பையில் எல்லா ஜீவராசி களையும் பாதுகாக்கிறது. அதன் கதகதப்பில் அ னைத்தும் துயில் கொள்கின்றன. ஆனால் நிராசையின், துயரத்தின், தனிமையின், துரோகத்தின் தகிப்பை, வெக்கையை உணர்ந் தவர் இரவின் கதகதப்பில் உறங்குவதில்லை. அவர்கள் இமைகள் மூடா நெடுங்கத வமாகி இரவை விழுங்கிச் செரித்துவிட முயன்று கொண்டே இருக்கின் றன. அவர்களின் துக்கம் பெரும் ஓலமாகி தனிமையின் நிசப்தத்தை விரட்டிவிட முயன்றுகொண்டே இருக்கின்றது.
அஸ்வத்தாமன் அந்த இரவில் விழித்திருந்தான். பாண்டவர் பாசறை யில் புகுந்தான். எதிர்த்தவர், உறங்கியவர் என வேறுபாடற்று இருக்கஇமைகளை மூடிக்கொண்டே தன் ஆயுதங்களைப் பிரயோகித்தான். எங்கும் எழுந்த மரணஓலம் அவனை உன்மத்தனாக்கி இருந்தது. மானு டத்தின் ஆதிச் சுவையான வன்முறையை, குருதிச் சுவையை அவன் பரிபூரணமாக ருசிக்கத் துவங்கி இருந்தான். ஒவ்வொரு தலை வீழும் போதும் அவன் கரங்களுக்குள் புதிய ஜீவன் பாய்ந்தது. அவன் புலன்க ளனைத்தும் பரிபூரண விழிப்பில் இருந்தன. அவை மரணத்தின் விளை யாட்டை உணர்ந்து கிளர்ந்தன.
அன்றைய பகலின் இழப்பைவிட அஸ்வத்தாமன் இரவில் தனித்து நட த்திய வேட்டை குரூரமாக இருந்தது.
அதோ உறங்கிக் கொண்டிருக்கின்றனர் என் ஜென்மசத்ருக்கள்! என் பழி முடிக்கும் காலம் இதோ…’
அஸ்வத்தாமனின் வாளின் நுனியில் அறுந்து விழுந்தன ஐந்து தலை கள். ஆவேசத்துடன் பாய்ந்து அள்ளிக்கொண் ட அஸ்வத்தாமா காற்றி னும் கடிதாய் விரைந்தான்.
“துரியா! இதோ பழிமுடித்தேன். இதோ உன் எதிரிகளின் உயிரற்ற தலை களைப் பார்! யுத்தம் முடிந்தது. முடித் தவன் அஸ்வத்தாமன்! நீ கடைசி யில் ஜெயித்துவிட்டாய் துரியா! திற! உன் விழிகள் நிறைய நிரப்பிக் கொள் இந்தத் தலைகளை!”
பழிதீர்க்கக் காத்திருப்பவர் எப்போதும் ஒரு தவமாகவே அதைக் கைக் கொள்கின்றனர். அவர்களின் புலன்களனைத்தும் ஒரு புள்ளியில் ஒடுங்கி இருக்கின்றன. வஞ்சம் தீர்க்கும் அந்த ஒற் றைப்புள்ளியை நோக்கியே அவர்களின் பாதை நீள்கிறது. பாதையெங்கும் நிறைந்திருக்கும் ஓலமும், குருதியின் வீச்சமும் அவர்களை உண்டு அவ்ர்களை உரமூட் டுகின்றன. இறுதிப் புள்ளியில் வஞ்சம் தீர்ப்பவரது அத்தனை புல ன்களும் ஊழிக்காலப் பெருவெள்ளமாய்த் திறக் கின்றன. அதன் வீர்யத்தில் அத்தனை சாஸ்திர ங்களும், தர்மங்களும் தாமாகவே ஒடுங்கிப் போய் விடுகின்றன. பழிதீர்த்தலின் உச்சத்தில் அவன் ஸ்கலிதம் நீக்குகிறான். லேசாக நடு ங்குகிறான்.
துரியன் விழித்தான். துரியனது குரல் அஸ்வத்தாமனை பூமிக்கு இழு த்து வருகின்றது.
“மூடனே! ஆத்திரத்தில் அறிவிழந்து போனாயோ! இந்தத் தலைகளைப் பார்! அட மடையா! இவர்களின் இளமைவடியும் முகங்களைப்பார்! இளம்பஞ்சபாண்டவர்களைக் கொன்று அவர்க ளின் தலையைக் கொண்டு வந்திருக்கிறா யே! மூர்க்கனே! பாண்டவர்களைக் கொன்று வருகிறேன் என்று கூறிய வார்த்தைகளை நம்பி மோசம்போனேனே! என் இறுதிப் பார்வையை நிராசைப்பார்வையாக்கிவிட் டாயே!”
வேதனையுடன் மூடிய துரியனின் விழிகள் அதன்பின் திறக்கவே இல் லை.
அஸ்வத்தாமன் விதிர்விதிர்த்துப்போனான். ‘பாண்டவர்களுக்குப்பதில் அவர்கள் பிள்ளைகளையா கொன்றேன்? பாவிகள் இப்போதும் தப்பித்தார்களா?’ மடங்கி அழத்தொடங்கியவனின் தோள்தொட்டான் கிருஷ்ண ன்.
“அஸ்வத்தாமா! யுத்தம் முடிந்தது. இன் னும் ஏன் வஞ்சத்தோடு திரி கிறாய்! நீ பிராம ணன்… கடமையை முடிப்பது மட்டும்தான் உன் பணி! இதோ சுற்றிலும்பார்… மகா பாரதமெங்கும் நிறைந்துகிடக்கின்றனர் நிரா சையும், தனிமையும், துரோகமும் பீடிக் கப்பட்டோர்! அதோ பார்! ஏக லைவனை… உன் தந்தையின் துரோகத்தால் வனமெங்கு ம் பித்தனாய் த்திரிந்து கொண்டிருப்பதை… இன்னும்… இன்னும் துக்கத்தாலும், துரோ கத்தாலும் புறக்கணிப்பாலும் எத்தனை பே ர்… அம்பை தொடங்கி, சிகண்டியும், அரவா னும், கர்ணனும்… இதோ உத்தரை முடிய… வேண்டாம் அஸ்வத்தா மா… உன் வஞ்சத்தை இதோ இந்த ஸமந்தபஞ்சகத்தோடு இறக்கி வைத்துவிடு. இல்லையேல் அது உன்னைத் தின்று செரித்து விடும்.”
அஸ்வத்தாமா கைகூப்பினான். ” இல்லை கிருஷ்ணா! என்னால் இனி உறங்கமுடியாது. பாரதயுத்தம் நெடுகிலும் பாண்டவர்கள் துரோகத் தாலும் வஞ்சனையாலும் மட்டுமே வென்று வந்திருக்கிறார்கள். அஸ் வத்தாமா இறந்தான் என்று பொய் யுரைத்து குருத் துரோகத்தின் மூலம் என் தந்தையைக் கொன்றா ர்கள். ஆண்மையற்ற சிகண்டியை முன்னிறுத்தி குலத்தின் பிதாமக னான பீஷ்மனைக் கொன்றார்கள். நிராயுதபா ணியான கர்ணனைக் கொ ன்றார்கள். மற்போரில் இடுப்புக்குக் கீழே தாக்குதல் முறையல்ல என்று தெரிந்தும் இதோ என் ஆருயிர் துரிய னை வஞ்சகமாய்க் கொன்றார்கள். இன்னும்… இன்னும் பாரதயுத்த மெங்கும் துரோகம் மட்டுமே ஆட்சி செய்து வந்தி ருக்கின்றது. கிருஷ்ணா! இனி நீயிருக்கும் வரை பாண்டவ ர்களைக் கொல்ல முடி யாது என்று எனக்குத் தெரியும். நான் போ கிறேன் கிருஷ்ணா! இன்னும் சொல்கிறே ன் கேள்! சலனமற்று ஓடும் நதிபோன் ற வாழ்க்கையில் துரோகம் ஒரு சுழிப்பை ஏற்படுத்திச் செல்கிறது. அத ன் சுழலில் சிக்குபவர் எப் போதும் இறப்பதி ல்லை. அவர் கண்கள் என் றும் மூடுவதில்லை. துரோ கிக்கப்பட்டவரது தீனக்குரலால்தான் பூமி யெங்கும் நிரம்பியிருக்கின் றது. அதன் ஒலியி ல் நான் கலந்திருப்பேன் கிருஷ்ணா! பாண்டவர்களின் செவிப்பறையை அந்த ஒலி காலாகாலத் துக்கும் கதவ டைத்துப் போட ட்டும். அவர்களின் நெஞ்சம் இருளால் பீடிக்கப்பட்டதாய் இருக்கட்டும்”
அஸ்வத்தாமா காற்றோடு கரைந்து போனான். யுகாந்திரங்களைத் தாண் டியும் அவன் அலைந்துகொண்டே இருக்கின்றான். துரோகத்தாலும் வஞ் சனையாலும் யாரெல்லாம் பீடிக்கப் பட்டிருக்கின்றனரோ அவர்களில் தன் னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கி றான்.
அஸ்வத்தாமா இறக்கவில்லை. அஸ்வத்தாமாக்களுக்கு என்றும் சாவி ல்லை!

அஸ்வத்தாமன்

குருக்ஷேத்திரப் போரின் இறுதிக் கட்டமான 18-ஆம் நாள். பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடந்த கதாயுத யுத்தத்தில், துரியோதனன் தொடை பிளக்கப்பட்டு, குற்றுயிராகக் களத்தில் வீழ்ந்து கிடந்தான். அதர்மத்தையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து, கொடுமைகளையே செய்து வந்த அவனுக்கு இப்படியரு கோர முடிவு ஏற்பட்டது. நல்ல மரணம் அவனைத் தழுவுவதில் தாமதம் நிகழ்ந்தது. குற்றுயிராக அவன் சித்ரவதைப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போதும்கூட, அவன் பூரணமாகத் தன் தவற்றை உணரவில்லை. இந்த நிலையில், யாருமின்றித் தனியனாகக் களத்தில் விடப்பட்ட துரியோதனனை, போரில் மடியாமல் இருந்த அஸ்வத்தாமன் சந்தித்தான்.
அஸ்வத்தாமன் கௌரவர்களின் குருவான துரோணாச்சார்யரின் மகன். பிறப்பால் அந்தணன். தந்தையைப்போல அஸ்திர சாஸ்திரத்தில் திறமை மிக்கவன். மந்திர- தந்திர சாஸ்திரங்களில் தந்தையையும் மிஞ்சியவன். பாண்டவர்களுக்குத் துரியோதனன் இழைத்த தீங்கையும் அநீதியையும் நன்கு உணர்ந்தவன்தான் அவன். ஆனாலும், செஞ்சோற்றுக்கடன் கழிக்க வேண்டி, துரியோதனனுக்கு ஆதரவாக அதர்மத்தின் பக்கம் நின்றான். தன் தந்தை துரோணரைக் கொன்ற காரணத்தால், அவன் பாண்டவர்களைப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருந்தான்.
தன் அருமை நண்பன், கௌரவச் சக்கரவர்த்தி கோரமாக யுத்தக்களத்தில் வீழ்ந்து கிடக்கும் காட்சியைக் கண்ட அஸ்வத்தாமனின் மனம் கொதித்தது. சிரத்தைக் கொய்யாமல், தொடையில் கதையால் அடித்து, அவனைச் சிறுகச் சிறுகச் சாகும்படி செய்த பாண்டவர்கள் மீது துரோண புத்திரன் அஸ்வத்தாமன் கடும் கோபம் கொண்டான். செஞ்சோற்றுக் கடனுக்காக, தான் என்ன செய்ய வேண்டும் என்று துரியோதனனிடம் கேட்டான் அஸ்வத்தாமன்.
‘எப்படியாவது பாண்டவர்களைப் பழி வாங்க வேண்டும்’ என்று அஸ்வத்தாமனிடம் முறையிட்டான் துரியோதனன். மரணத்தின் வாயிலில் நின்றுகொண்டு, நன்றிக்கடனாக தன்னிடம் வேண்டிக்கொள்ளும் கௌரவச் சக்கரவர்த்தியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதைத் தன் முக்கிய கடமையெனக் கருதினான் அஸ்வத்தாமன். ஏற்கெனவே, தன் தந்தையின் மரணத்துக்காகப் பாண்டவர்கள் மேல் வெறுப்புற்றிருந்தவனுக்கு, இப்போது அதற்கும் சேர்த்து பழிவாங்கும் எண்ணம் மேலோங்கியது. துரியோதனன் விரும்பிய வண்ணமே செய்வதாக வாக்களித்துவிட்டுப் புறப்பட்டான்.
இரவு நேரம்… எதிரிகளின் பாசறைக்குச் சமீபமான வனத்தின் ஓர் ஆலமரத்தடியில் வந்து அமர்ந்தான். பாண்டவர்களை எப்படி அழிப்பது என்று தீவிரமாகச் சிந்தித்தான். அந்த மரத்தின்மேல் இருந்த கூட்டில் காக்கைகள் உறங்கிக் கொண்டிருந்தன. அப்போது, ஒரு கோட்டான் அங்கே வந்து, உறங்கிக்கொண்டிருந்த காக்கைகளைக் கொத்தித் தின்றது. இரவில் கண் தெரியாமல், எதிரி யாரென்றும் அறியாமல், எதிர்க்கவும் முடியாமல், காக்கைகள் உயிர் விட்டன. அந்தக் கோட்டான், காக்கைகளைக் கொன்றதுபோல உறங்கிக்கொண்டிருக்கும் பாண்டவர்களையும், பாண்டவ புத்திரர்களையும் கொன்று, பாண்டவ வம்சத்தையே இரவோடு இரவாகப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டான் அஸ்வத்தாமன்.
பாண்டவர்களின் பாசறைக்குச் சென்று, உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின் புத்திரர்களை ஒவ்வொருவராக வெட்டிச் சாய்த்தான். பாண்டவர்கள் மட்டும் அந்த நேரம் அங்கில்லாமல் போகவே, அவர்கள் உயிர் தப்பினார்கள். பொழுது புலரும் நேரத்தில் பாசறைக்குத் திரும்பிய பாண்டவர்கள், தங்கள் புத்திரர்கள் அனைவரும் கோரமாக மடிந்து கிடப்பதைக் கண்டனர். இது அஸ்வத்தாமன் வேலை என்றறிந்த ஐவரும் கொதித்து எழுந்தனர். வனத்தில் ஓடி, மறைந்திருந்த அஸ்வத்தாமனை தேடிச் சென்றனர். போருக்கு அறைகூவினர். நேருக்கு நேர் போர் செய்ய இயலாத அஸ்வத்தாமன், ஒரு தர்ப்பையை மந்திரித்து, அதனையே அஸ்திரமாக்கி, பாண்டவர்களின் சந்ததி அனைத்தையும் அழிக்கும்படி ஆணையிட்டு அதை ஏவினான்.
காலசர்ப்பம் போல விஷத்தைக் கக்கிக்கொண்டு புறப்பட்டது அந்த தர்ப்பை அஸ்திரம். பாண்டவர்கள் அதை எதிர்த்து அஸ்திரங்களைத் தொடுத்தனர். ஆனால், அந்த தர்பாஸ்திரம் தங்களைத் தாக்காமல் காத்துக்கொள்ள முடிந்ததே தவிர, அவர்களால் அந்தத் தர்ப்பையை அழிக்க முடியவில்லை. ஆதிபராசக்தியின் அழிக்கும் சக்தியை ஆதார மந்திரமாக்கி, தர்ப்பையை மந்திரித்து ஏவியிருந்தான் அஸ்வத்தாமன். அது சீறிச் சென்ற இடத்தில் நின்றிருந்த பாண்டவ சந்ததியினர் அனைவரும் மடிந்து வீழ்ந்தனர். முடிவாக மீதி இருந்தது ஒரே ஒரு பாண்டவ சந்ததிதான். அர்ஜுனனின் புதல்வன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்திலிருந்த சிசுதான் அது.
உத்தரை, விராட மன்னனின் புதல்வி. அபிமன்யுவின் மனைவி. அம்பிகையிடம் தீவிர பக்தி கொண்டவள். அபிமன்யுவின் திருமணத்தன்றே அவளுக்கு காத்யாயினி என்கிற துர்கையை உபாஸிக்கும் மந்திரத்தை உபதேசித்திருந்தான் கண்ணன். அவளும் தீவிரமாக தேவி உபாஸனை செய்து வந்தாள். தன் மங்கலச் சின்னங்கள் நீடித்திருக்க, அவள் அன்னை ஆதிபராசக்தியை தினமும் ஆராதித்தாள். ஆனால், பாவம்… அவள் கணவன் அபிமன்யு திருமணமான முதல் ஆண்டிலேயே யுத்தகளத்தில் பலியாகிவிட்டான். உத்தரை உடன்கட்டை ஏற முயன்றாள். ஆனால், அப்போது அவள் கர்ப்பவதியாக இருந்ததால், உடன்கட்டை ஏறுவது பாவம் என்று தடுத்து நிறுத்தி, அவளைக் காப்பாற்றிவிட்டான் கண்ணன்.
‘அன்னை ஆதிபராசக்தியை ஆராதித்து என்ன பயன்? உத்தரையின் மாங்கல்யத்துக்கே பங்கம் வந்துவிட்டதே?’ என்று மற்றவர்கள் கூறினார்கள். உத்தரை மனம் தளரவில்லை. தீவிர வைராக்கியத்துடனும் பக்தியுடனும் அன்னையைத் தொடர்ந்து ஆராதித்தாள். அதற்குப் பலன் கிடைக்கும் நேரம் வந்தது. கண்ணனின் ஆணைப்படி கர்ப்பரக்ஷ£ மந்திரத்தை ஜபித்து காத்யாயினியை பக்தியோடு பூஜித்து வந்தாள் உத்தரை.
அஸ்வத்தாமன் அனுப்பிய தர்பாஸ்திரத்தைக் கண்ணனே ஓர் ஆயுதத்தால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் ‘பாரதப் போரில் ஆயுதம் எடுக்கமாட்டேன்’ என்று கண்ணன் இரு தரப்பினருக்கும் வாக்களித்திருந்தான். அவன் வாக்குத் தவற விரும்பவில்லை. அதேநேரம்,  அவன் தர்மம் தவறவும் தயாராக இல்லை. உத்தரையின் கர்ப்பத்தில் வாழும் பாண்டவர்களின் சந்ததிக்கான சிசுவைக் காப்பாற்ற சங்கல்பித்தான் கண்ணன். உத்தரை அன்றாடம் உபாஸிக்கும் அன்னை காத்யாயினி வேறு யார்? அவள் கண்ணனின் சகோதரிதானே! தன் சகோதரி காத்யாயினிடமே அந்தப் பணியைத் தந்தான் கண்ணன்.
இதற்காகவே அவன் உத்தரைக்கு காத்யாயினியை உபாஸனை செய்யும்படி ஏற்கெனவே உபதேசித்திருந்தான்.
அஸ்வத்தாமன் அனுப்பிய அஸ்திரம் மரண தேவதையாக உத்தரையின் உடலை நெருங்கிய அதே விநாடி, அவள் கர்ப்பத்தில் இருந்த சிசுவை அங்கிருந்து அகற்றி, கண்ணன் திருக்கரத்தில் வைத்துவிட்டு, அந்த இடத்தில்தானே அமர்ந்துகொண்டாள் தேவி காத்யாயினி.
அஸ்வத்தாமனின் மந்திர தர்ப்பை, ஆதிபராசக்தியைத் தாக்கியதுமே அது சக்தியிழந்து பஸ்பமானது. அந்த விநாடியே தான் இருந்த இடத்தில் மீண்டும் உத்தரையின் சிசுவை கண்ணனிடமிருந்து வாங்கி வைத்துவிட்டு, வெளியில் வந்தாள் காத்யாயினி.
மாயவன் கண்ணன், மாயை எனும் அவன் சகோதரி துர்கை இருவரும் அனுக்ரஹித்து, பாண்டவ வம்சத்தைக் காத்து, உத்தரையின் கர்ப்பத்தில் உயிர்காத்துத் தந்த அந்த சிசுதான், பரீக்ஷித்து மஹாராஜன். அதனாலேயே இன்றும் பெண்கள் கர்ப்பத்திலுள்ள சிசுவைக் காத்து, நல்ல சந்தானம் பெறுவதற்கு அம்பிகையை உபாஸிக்கிறார்கள்.
அம்பிக்கைக்கு ‘கர்ப்ப ரக்ஷ£ம்பிகை’ அதாவது ‘கர்ப்பத்தில் உள்ள சிசுவைக் காப்பவள்’ என்ற பெயர் உண்டு.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்கருகாவூர் எனும் புண்ணிய ஸ்தலத்தில், ஸ்ரீமுல்லைவனநாதர் ஆலயம் உள்ளது. இங்கே உள்ள அம்பிகையின் திருநாமம் கர்ப்ப ரக்ஷ£ம்பிகை. இந்த ஸ்தலத்தை தரிசித்து, கர்ப்ப ரக்ஷ£ம்பிகையை வழிபட்டால் சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை.
‘காத்யாயனாய வித்மஹே –
கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்க்கா பிரச்சோதயாத்’
என்ற துர்கா காயத்ரியைப் பெண்கள் பக்தியோடு ஜபித்து வந்தால், கர்ப்பத்தில் உள்ள சிசு காப்பாற்றப்பட்டு, ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழி உண்டு என்கின்றன சாஸ்திரங்கள்.
கர்ப்ப ரக்ஷ£ம்பிகை ஸ்லோகம்:
ஹிமவத்யுத்தரே பார்ஸ்வே சுரதா நாம யக்ஷிணி
தஸ்யா ஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணிபவேது
ஹே சங்கர ஸ்மரஹப் பிரமதாதி நாதரி மன்னாத சாம்பசசிசூட
ஹரதிரிசூலின் சம்போக சுக பிரசவ கிருதபவமே
தயாளோ ஹேமாதவி வநேஸ பாலயமாம் நமஸ்தே!