Wednesday, December 2, 2015

1 சௌரமான முறை 2 சந்திரமான முறை.

பஞ்சாங்களில் வருடம் மற்றும் மாதங்கள் இரண்டு முற்றிலும் வேறுபட்ட முறைப்படி கணக்கிடப்படுகின்றன. 1 சௌரமான முறை 2 சந்திரமான முறை.
சௌரமான முறை
இம்முறை சூரியனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. இதிலும் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. 1 சௌர வருஷ முறை 2 சாயன வருஷ முறை
சௌர வருஷ முறை
சூரியனின் இய்க்கம் தொடங்குவது மேஷராசியின் முதல் நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிரவேசிக்கும் காலம் முடிவது மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதி. தொடக்கம் மற்றும் முடிவு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் வருடம் ஆகும் (Sidereal revolution of Earth round the Sun). ஒவ்வொரு இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் (சித்திரை முதல் பங்குனி வரை சௌர மாதம் ஆகும். சௌரமான முறையில் ஒரு வருடம் என்பது சராசரியாக 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளைக் கொண்டதாகும். பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: தமிழ் நாடு, பஞ்சாப், ஹரியானா, ஒரிசா, மேற்கு வங்கம்
சாயன வருஷ முறை
சூரியன் மேஷாயன விஷூவத்தில் பிரவேசித்து திரும்ப மேஷாயன விஷூவத்தை வந்தடையும் காலம சாயன வருஷம் என்று அழைக்கப்படுகிறது. (Tropical revolution of Earth round the சன்). சாயன வருஷம் என்பது 365 நாள், 14 நாடி, 32 வினாடிகளைக் கொண்டதாகும். பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: கேரளா (பஞ்சாங்கம்: கொல்லம் ஆண்டு

No comments:

Post a Comment